07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 9, 2008

குபுக் குபுக் பதிவுகள்

பணம் என்கிற விஷயம் ஆட்டிப்படைத்த பிறகு பொருளீட்டுவதற்கான காரணிகளைத் தேடி போய்விட்டது வாழ்க்கை. இந்த டென்ஷன் உலகில் சிரிப்பு என்பது, சேனல்களில் காண்பிக்கப்படும் காமெடிக்குள் அடங்கிவிட்டது. இதனால்தான் பார்த்த காமெடியையே தினமும் பார்த்தாலும் அலுப்புத்தட்டாமல் இருக்கிறது.
அந்த வகையில் வலைப்பதிவில் காமெடியும் நக்கலும் பஞ்சமில்லாமல் பரவிகிடக்கிறது. கடினமான வார்த்தைகளைக் கொண்டு எழுதப்படுகிற கட்டுரைகளும் கவிதைகளும் எழுதுபவனின் இறுக்கமான மன உணர்வுகளையே வெளிப்படுத்துகிறது. அப்படியான சூழலில் காமெடியை கையாளுவதும் எழுதுவதும் தனி கலைதான்.

டுபுக்குவின் பதிவில் கிடைக்கும் அனைத்துப் பதிவும் விழுந்து சிரிக்கவும், சிரித்து ரசிக்கவும் முற்படுகின்றன. நடந்த சம்பவங்களை கொஞ்சம் அதீத கற்பனை கொண்டு எழுதினாலும், அதில் யதார்த்தம் மீறாமல் அவரால் செய்யப்படுகின்ற கட்டுரைகள், அவரது நகைச்சுவை உணர்வை காட்டுகின்றன. உதாரணத்துக்கு இது.

அபி அப்பாவின் காமெடிக்குள் விழுந்து விழுந்து சிரித்த பதிவு இது. அவரின் சிதம்பரத்துக்குப் போன அப்பா(டா) சாமி காமெடிக்கு நூறு சதவிகித கியாரண்டி.

எந்த ஒரு விஷயத்தையும் கலாய்க்கவும் நக்கலடிக்கவும் தெரிந்த குசும்பன் பாராட்டுக்குரியவர். அவரது இந்த கலை எனக்கிருந்தால் நான் என்ன எழுதுவேன் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். இவரது இந்த கார்ட்டூன் குசும்பு , வலைப்பதிவின் சுவாரஸ்யம். இதே போல இலவச கொத்தனாரின் இந்தப் பதிவும்.

லக்கி லுக்கின் இந்த பதிவு நக்கலோ நக்கல்.

5 comments:

 1. நானும் டுபுக்கு, அபி அப்பா, குசும்பன் தொடர்ந்து படிப்பேன். அதுவும் குசும்பன்.! மனுசன் நின்னு ஆடுவாரு (ஆனா என்ன, நம்ம அய்யனார இஷ்டத்துக் கலாய்ப்பார், அது ஒண்ணுதான் draw back) :). பயங்கர டைமிங் சென்ஸ் உடையவர் எனத் தோன்றும்.

  கவிதை, சினிமா எல்லாம் ஆச்சு, அப்ப நாளைக்குச் சிறுகதைகளா.? (மாட்டி விட்டுட்டேனா.?) :)

  ReplyDelete
 2. அண்ணாத்தே புதுசா லிங்க் குடுங்க நீங்க குடுத்திருக்கற மூணு பேருமே வலைப்பூ உலகில ரொம்பா பேமஸ்.

  எனக்கும் இந்த மூணு பேர் பதிவும் மிகவும் விருப்பம்.

  ReplyDelete
 3. //கவிதை, சினிமா எல்லாம் ஆச்சு, அப்ப நாளைக்குச் சிறுகதைகளா.? (மாட்டி விட்டுட்டேனா.?) :)//

  சுந்தர்ஜி என்ன இது?

  ReplyDelete
 4. //அண்ணாத்தே புதுசா லிங்க் குடுங்க//

  எங்க போய் தேடறது.

  ReplyDelete
 5. //ஜ்யோவ்ராம் சுந்தர் said...
  மனுசன் நின்னு ஆடுவாரு (ஆனா என்ன, நம்ம அய்யனார இஷ்டத்துக் கலாய்ப்பார், அது ஒண்ணுதான் draw back) :). பயங்கர டைமிங் சென்ஸ் உடையவர் எனத் தோன்றும்.///

  எல்லோரும் இப்ப என்ன அய்யனாரை கலாய்ப்பது இல்லை என்று கேட்கிறார்கள் ஜ்யோவ்ராம்:(

  **********************
  மங்களூர் சிவா said...
  அண்ணாத்தே புதுசா லிங்க் குடுங்க நீங்க குடுத்திருக்கற மூணு பேருமே வலைப்பூ உலகில ரொம்பா பேமஸ்.///

  சிவா மற்ற இருவர்கள்தான் அப்படி நாம எல்லா சில்வண்டுகள் , இப்படி எல்லாம் பொய்சொல்லபிடாது:)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது