07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 25, 2008

பதிவு சூப்பருங்கோ இருங்க படிச்சிட்டுவரேன்!!!

வலைச்சரத்தையே இப்படியும் அப்படியுமா புரட்டி எடுத்துட்டாங்க துளசி.. ..
முதல் பதிவில் இருந்து எல்லா பதிவையும் படிச்சு ஆராய்ந்து அதற்கு ஒரு விமர்சனம் சொல்லவேண்டுமென்றால் நல்ல பொறுமை வேண்டும். வலைச்சரத்தில் இதுவரை எழுதிய ஆசிரியர்கள் எல்லாவருக்கும் பாராட்டும் வாழ்த்துகளும் என்று விருந்து சாப்பாடும் போட்டு மன நிறைவு தந்தார். நேற்றுப்பூத்த மூளப்பாளையம் பதிவு வரை இன்முகமாய் வரவேற்று சரத்திலும் இணைத்துவிட்டார்.
50 வது வாரத்தையும் ஆண்டு நிறைவையும் கொண்டாடி மகிழும் நேரத்தில் புகைப்படக்கலை தளம் போன்ற புது முயற்சிகள் புது பதிவர்களுக்கு எப்படி ஆர்வத்தை அளித்து அழைத்துவருகின்றன என்கிற துளசியின் வரிகள் நம்பிக்கை அளிக்கின்றன.
நன்றி துளசி .

-------------------------------------------------------------------------------------எப்பவும் பதிவு வந்தவுடன் புள்ளி , சம்பந்தா சம்பந்தம் இல்லாத பின்னூட்டம் ,, பதிவு சூப்பருங்கோ இருங்க படிச்சிட்டு வரேன்னு சொல்லும் அபி அப்பா தாங்க இந்த வாரம் .. இல்ல இல்ல சத்தியமா நான் படிச்சுதான் பின்னூட்டம் போட்டேன்னு சொல்றார் . .. வாங்க எப்படி நிரூபிக்கறார்ன்னு பார்ப்போம்.. நகைச்சுவை என்றாலே நினைவுக்கு வரும் பதிவர்களில் அபி அப்பாவின் பதிவும் ஒன்று.நம் வலைச்சரமும் கூட கலகலப்பாக இவ்வாரம் களைகட்டும் என நினைக்கிறேன்.

10 comments:

 1. தலைபு சூப்பருங்கோ, இருங்க படிச்சுட்டு வர்ரேன்:-))

  ReplyDelete
 2. அடங்கொய்யாலே........
  நீங்களா (கைதி எண்) 51?

  கலக்குங்க. ஊக்கு குத்திற மாட்டீங்கதானே?:-))))))

  ReplyDelete
 3. //துளசி கோபால் said...

  அடங்கொய்யாலே........
  நீங்களா (கைதி எண்) 51? //
  சூப்பரா இருக்கே இது

  ReplyDelete
 4. // அபி அப்பா said...
  தலைபு சூப்பருங்கோ, இருங்க படிச்சுட்டு வர்ரேன்:-))//
  வாங்க அபி அப்பா! படிக்காம லிங்க மட்டும் கொடுக்காதீங்க!

  ReplyDelete
 5. அண்ணே வாங்க !!

  நாங்களும் திருப்பி செய்வோம்!!!!

  ReplyDelete
 6. //
  துளசி கோபால் said...
  அடங்கொய்யாலே........
  நீங்களா (கைதி எண்) 51?
  //

  ஜூப்பர் ஜூப்பர்

  ReplyDelete
 7. வாங்க வாங்க அபி அப்பா - அபிபாப்பா கிட்டே அனுமதி வாங்கிட்டுத்தானே வந்தீக - வரவேற்கிறேன்

  ReplyDelete
 8. ஆமாம் ரீச்சர் ஆமாம் நானேத்தான்! ஊக்கு வைக்க வருகிறேன்:-))

  சீனா சார் பாப்பாகிட்டே பர்மிஷன் கேட்டா "முதல்ல பதிவ படிச்சுட்டு பின்னூட்டம் போடுங்கப்பான்னு சொன்னாலும் சொல்லும். ஏன்னா மார்க் கம்மியா வாங்கினா பிராக்ரஸ் ரிப்போர்ட் அவங்க அம்மாகிட்ட போகாது நேரா என் கிட்டதான் வரும். சர்ர்ர்ர்ர்ர்ன்னு கையெழுத்து போட்டுட்டு "பதிவு சூப்பர்"ன்னு சொல்லுவேன்னு அதுக்கு நல்லா தெரியும்:-))

  ReplyDelete
 9. வாங்க ரீச்சர்! உங்க அளவு முடியாட்டியும் ஓரளவு தொடுக்க பார்க்கிறேன்:-))

  ReplyDelete
 10. ஆஹா.. தலை(வலி இல்ல)யா இந்த வாரம்? :)))
  வாழ்த்துக்கள் தலை(வலி இல்லை) :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது