07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 4, 2007

உன்னால் முடியும் தம்பி தம்பி!



சிந்தாநதி இந்தப்பொறுப்பைத் தரும் போதே ஒரு வேண்டுகோளையும் வைத்தார். அது ஒலிப்பதிவுகள் குறித்தும் ஒரு இடுகை கண்டிப்பாக இடவேண்டுமென்று. ஏனெனில் அது நீங்கள் சார்ந்ததுறை என ஒரு சொட்டும் வைத்தார். எனக்கு என்னமோ அது குட்டு மாதிரியே தெரிஞ்தது. இது குறித்து என் எண்ணங்களை எழுத முன் பலதடவைகள் யோசித்தேன். எழுதலாமா கூடாதென்றுதான். பின் சரி எல்லோரும் நம் நண்பர்கள்தானே..எதுவும் தவறாக எண்ணமாட்டார்கள் என்பதால் எழுதுகின்றேன். ஆனால் இதை ஒரு பொதுப்பார்வையாகவே வைக்கின்றேன்.

இணையத்தின் இன்றைய சிறப்பே, எல்லாவகை ஊடகப் பகுப்புக்களையும், இதற்குள் உள்ளடக்க முடிவதுதான். இந்தச்சிறப்பை நாம் இன்னமும் சரியாக உள்வாங்கவில்லை என்றே கருதுகின்றேன். ஏதோ ஒரு பதிவு எழுதிவிடுவோம் என்பதோடு முடிந்து போகிறது எங்களில் பலரது எண்ணச்செயற்பாடு. இதையும் தாண்டி இப்போது சில ஒலிப்பதிவு முயற்சிகள் நடந்தேறியுள்ளன. ஆனால் அவற்றின் போக்கு என்னவோ எனக்கு அது திருப்தி தருவதாக இல்லை.
என் சிறுவயதுமுதல் வானொலி மீதான ஈடுபாடும், அதிலே பலகாலம் பங்காற்றிய அனுபவங்களும், இணையப்பரப்பில், அத்தகைய ஒரு வாய்ப்பினைக் கண்டபோது அதைப்பின்பற்றத் தூண்டியது. அந்த ஆர்வத்தில் தொடங்கியதுதான் “இணையத்தில் இன்பத் தமிழ் “. இதன் தயாரிப்புக்காக நான் எடுத்துக்கொள்ளும் நேரமும் தேடலும் சற்று அதிகம்தான். ஆனாலும், அதை அவ்விதமே செய்ய வேண்டுமென்பதில் குறியாகவே இருக்கின்றேன். அப்படியிருந்தும், எனது எல்லா நிகழ்ச்சிப்பதிவுகளும், எனக்குத் திருப்தியாக அமைந்துவிடுவதில்லை.

நான் சென்று வாசிக்கும், பார்க்கும், கேட்கும், எந்தவொரு ஊடகத்திலிருந்தும் ஏதாவது ஒன்று என்னை ஒழுங்கமைக்க உதவுவதாக இருக்க வேண்டும் என்பதும், அதேபோல் என்பதிவுக்கு வரும் ஒருவருக்கு நானும் அப்படியே ஏதாவது வழங்குவதாக இருக்கவேண்டுமென்றும் விரும்புகின்றேன். அதனாலேதான் அனுபவங்களால் கற்றுக்கொண்ட, மற்றவர்கள் பலர் அதிகம் அறிந்திராத, என்தேசத்து வாழ்வியலையே அதிகம் பிரசவிக்கின்றன என் படைப்புக்கள். பலரும் உலாவரும் ஒரு ஊடகத்தில், நம்மால் படைக்கப்படும் ஒரு படைப்பு, அந்தப்படைப்பிற்குரிய பயன்பாட்டினைச் சரியாகத் தராதவிடத்து அதன் பெறுமதி கேள்விக்குரியதாகிவிடுகிறது. சிலவேளைகளில் கேலிக்குரியதாகவும் ஆகிவிடுகிறது.

நகைச்சுவை ஒரு இதமான ரசனை. அதனூடு பல செய்திகளை யாரும் வலிக்காத வண்ணம் சொல்லிவிட முடியும். நிதர்சனத்தின் தயாரிப்பில் வந்த ஒரு குறும்படத்தில் (பெயர் ஞாபகத்தில் இல்லை) ஒரு காட்சி. ஒரு வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் குளிர்சாதனப்பெட்டியை திறந்து, தான் மாற்ற வேண்டிய ஆடைகளை அதனுள்ளிருந்து ஒருவர் எடுப்பார். பார்வையாளர்கள் ஒரு கணம் சிரிப்பார்கள் ஆனால் மறுகணத்தில் அந்தச்சிரிப்பு மாறி, அதனுள்ளிருக்கும் துயரின் வலியை உணர்வார்கள். இப்படிப் பல சொல்லலாம்.

நாம் சார்ந்த சமுகத்திற்கு மேம்பாடான கருத்துக்களைத் தரக் கூடிய ஒரு ஊடகத்தில், நகைச்சுவை என்பதாக நமக்குள் பேசிக்கொள்வதையெல்லாம் அரங்கேற்றிக் கொள்வது ஆரோக்கியமானதாக எண்ணமுடியவில்லை. அதிலும் அவ்வாறான படைப்புக்களை ஆற்றுபவர்கள் மிகநல்ல திறமைசாலிகளாக இருந்தும், இப்படி இயங்குவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. “ எந்நேரமும் சிரீயஸாக இல்லாமல் இடைக்கிடை இப்படியும் இருக்கத்தானே வேண்டும்.. “ என்பவர்களுக்கு, இருங்கள் தப்பில்லை. அதற்குள்ளும் ஒரு தார்மீகத்தை தருவதற்கு முயற்சியுங்கள் என்பதே என் வாதம். சிரித்திரன் சிவஞானசுந்தரம் அவர்களின் கொள்கை வாசகம் “ சிரிப்பே சீவியம் “ .அவரது வாழ்வும் அத்தகையதே. அதற்காக அவரது படைப்புக்கள் அத்தனையும், ஏதோ ஒரு செய்தி சொல்லி நிற்கவில்லையா. அதனூடாகவே அவர் ஒரு சமூகப் போராளியாக அறியப்படவில்லையா?. இப்படியெல்லாம் எழுதுவதால் ஏதோ நான் சிரிக்கத் தெரியாத ஆளென்று மட்டும் எண்ணிவிடாதீர்கள்.


இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால், வலைப்பதிவுலகில் ஒலிப்பதிவுகள் என்பது ஆரம்ப நிலையில் இருக்கும் இவ்வேளையில், அச்சுப்புத்தகங்கள் ஒலிப்புத்தங்களாகவும் உருவாக்கம் பெற்று வரும் இவ்வேளையில், உங்கள் குறுகிய முயற்சிகள் பிழையான முன்னுதாரணங்களாகப் போய்விடக் கூடாதெனும் ஆதங்கத்திலும் தான் இதைச்சொல்லவிழைந்தேன்.

காலங்கடத்தும் வாழுங்கலைஞராக, கலைஞனின் படைப்பாக, நீங்களும், உங்கள் படைப்புக்களும் வாழவேண்டுமெனும் ஆசையால் எழுதுகின்றேன். பின்னூட்டங்களின் வருகைக்குச் சிரிப்புத் தோரணங்கட்டுபவர்களாக இருக்காதீர்கள். உங்கள் சிறப்புக்கும் சிரிப்புக்கும் மற்றவர்கள் தோரணங்கட்டும்படியா ஆகிடுங்கள் என்றே சொல்கின்றேன். அது சுகமானதாகத் தோற்றம் தரலாம், ஆனால் ஒரு கட்டத்தின் பின் அவை உங்களுக்கே அலுத்துப்போகலாம். அல்லது அதற்குமேல் போகமுடியாதவாறும் போய்விடலாம். கூட்டத்தினர் கைதட்டலுக்கு ஆடும் வேடம்கட்டிய கோமாளியா? அல்லது ஒரு கூட்டத்தின் மேம்பாட்டிற்கான போராளியா? எதுவாக இருக்கப்போகின்றீர்கள் என்பது இறுதியில் உங்களுக்கானதே.


அன்மையில் நான் ரசித்த ஒரு ஒலிப்பதிவை இங்கே கேளுங்கள். இதுபோலல்ல, இதற்கு மேலாகவும் உங்களால் படைக்க முடியும். அந்தத்திறன் உங்களிடமெல்லாம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொண்டதால் சொல்கின்றேன் உன்னால் முடியும் தம்பி!தம்பி!.

8 comments:

  1. மலை,
    நல்ல பதிவு.

    /* இணையத்தின் இன்றைய சிறப்பே, எல்லாவகை ஊடகப் பகுப்புக்களையும், இதற்குள் உள்ளடக்க முடிவதுதான். */

    உண்மை. சரியாகச் சொன்னீர்கள்.

    /*இந்தச்சிறப்பை நாம் இன்னமும் சரியாக உள்வாங்கவில்லை என்றே கருதுகின்றேன்.*/

    உண்மை. என் நிலைப்பாடும் இதேதான்.

    நல்ல அலசல். மிக்க நன்றி.

    ReplyDelete
  2. //உன்னால் முடியும் தம்பி தம்பி!//

    ஏன் ரண்டு தம்பி.. ?
    மூண்டு தம்பியும் ஒரு தங்கச்சியும் எண்டு வரவேணும்.

    ReplyDelete
  3. நா.கண்ணன் அவர்களின் ஒலிப்பதிவை கேட்டேன்.நல்லதொரு ஒலிப்பதிவு

    ReplyDelete
  4. //மூண்டு தம்பியும் ஒரு தங்கச்சியும் எண்டு வரவேணும்.//

    அது சறி...குறள் பதுவு இனிமாளுகு சறியா நள்ளதா போடுங்க

    ReplyDelete
  5. மலைனாடான்,

    சொல்ல வேண்டும் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தைச் சொல்லி உள்ளீர்கள்.ஏன் வலைப்பதி கிறோம் என்னும் எனது பதிவிலும் இதே சாரப்படவே எழுதி இருந்தேன்.அந்தப் பதிவுக்கு வந்த சில காரசாரமான பின்னூட்டங்களால், மீண்டும் இதைச் சொல்வதா என்று விட்டு விட்டேன்.சிலர் தங்களின் நேரத்தையும்,திறமைகளையும் ஒரு நோக்கமற்று ,பின்னூட்டங்களுக்காகவும், ஒரு நிமிடப் பிரபலத்திற்காகவும் வீணடிப்பதாகவே படுகிறது.

    தம்பிகளா கொஞ்சம் யோசியுங்க? எழுதுங்க, பேசுங்க.

    ReplyDelete
  6. உங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றி.

    ReplyDelete
  7. வெற்றி!
    உங்கள் கருத்துக்கு நன்றி

    சயந்தன்!
    உங்கள் கணக்குப் பிழை.:)

    சின்னக்குட்டி!
    நா.கண்ணன் நீண்டகாலமாக பல ஒலிபத்திகளை சிறப்பாக இட்டு வருபவர். அறிந்திருப்பீர்கள்தானே?

    ReplyDelete
  8. அனானி!
    உங்கள் எழுத்தைப்பார்த்தால், ஏதோ உள்நோக்கில் உள் நுழைந்தவர் போல் தெரிகிறது. அப்படியாயின் மன்னிக்கவும். இது ஒரு பொதுநோக்கில் எழுதப்பட்ட விடயம். இதை எழுத முன்னர் வேண்டியவர்களோடு விவாதித்துவிட்டே எழுதினேன். புரிதல் என்பது எங்கள் நட்பு வட்டத்தில் நன்றாகவே இருக்கிறது. நன்றி.

    அற்புதன்!
    எங்கள் வலையுலக நண்பர்களில், குறிப்பாக ஈழத்துநண்பர்கள் பலரிடமும் உங்கள் ஆதங்கம் உள்விரவி நிற்கிறது. ஆனாலும் எமையெல்லாம் சில களைப்புக்கள் சலிப்படையச் செய்து விடுவதால், சல்லிசான சந்தோசங்களுக்குள் சரண் புகுந்துவிடுகின்றோம். இதிலிருந்து மீள அடிக்கடி நாமே நாம்மீதான மீள்வாசிப்புக்களைச் செய்வோம். செய்ய முடியும். ஏனெனில் எரிகின்ற தேசத்திலிருந்து எழுந்து வந்தவர் நாங்கள்.
    தங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி.

    சோமி!
    "உன்னை நானறிவேன்..:)"
    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது