07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 25, 2010

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் நிறைவு பெறும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஜோதிஜி, ஏற்ற பொறுப்பினைப் பொறுப்புடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து மன மகிழ்வுடன் விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ இருநூற்று எண்பதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அனைத்துத் தளங்களையும் தேடிப் பிடித்து, அலசி ஆய்ந்து, நல்ல இடுகைகளை, நல்ல முறையில், நல்ல கருத்துகளுடன் அறிமுகம் செய்தது பாராட்டுக்குரியது. பெரும்பாலான வாசகர்கள் சுட்டப்பட்ட இடுகைகளுக்குச் சென்று படித்ததாகவும் அறிகிறேன்.

இவரது இடுகைகளை தினந்தோறும் செய்தி ஓடையின் வாயிலாகப் படிக்கும் பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிகிறேன்.

அன்பின் ஜோதிஜி - நன்றிகலந்த நல்வாழ்த்துகளுடன், வலைச்சரக் குழுவினரின் சார்பினில் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் - நன்றி ஜோதிஜி

நாளை சூலை 26ம் நாள் துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் புலவன் புலிகேசி என்ற தளத்தில் எழுதி வரும் நண்பர் முருகவேல். இவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்தவர். கணினித் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்பொழுது சென்னையில் பணி புரிகிறார். 23ம் புலிகேசி படத்தினைக் கண்டு களித்து நகைச்சுவையாக தனது தளத்திற்குப் பெயர் வைத்தவர். ஆனால், இவரது இடுகைகளில் நகைச்சுவை என்பது சற்றே கம்மிதான்.

நண்பரை வருக வருக - தங்கள் வரவு நல்வரவாகுக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் புலவன் புலிகேசி
நட்புடன் சீனா

10 comments:

  1. சோதனை மருமொழி

    ReplyDelete
  2. மிக குறுகிய காலத்தில் சரியான பாதையில் பயணித்து இடுகை என்பதை முறையாக பயண்படுத்தும் முருகவேல் ஏற்கும் ஆசிரியர் பொறுப்புக்கு என் இனிய பாராட்டுக்கள்.

    நன்றி சீனா அவர்களே.

    வருக முருகவேல்.

    ReplyDelete
  3. என்னை ஆசிரியர் பொறுப்பேர்க்க அழைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. என் பணியை என்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன். நன்றி ஜோதிஜி. உங்களீன் பணியை சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் முருகவேல்!!!

    ReplyDelete
  5. வாருங்கள் முருகவேல்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நண்பர் ஜோதிகணேசனுக்கு அடுத்து‍ சமூக சிந்தனை அதிகமுள்ள தோழர் முருகவேல் ஆசிரியர் பணிக்கு -வாழ்த்துக்கள். வலைதளம் மூலம் பலரை பல விபரங்களில் தெளிவுபடுத்த தேசத்தை தனியார் மய, தாராளமய, உலகமய அபாயம் குறித்து பதிவுகள் மேற்கொண்டுவரும் பல நண்பர்களின் தளம் இவர் மூலம் அறிமுகம் ஆகும் என காத்திருக்கும் - தோழமையுள்ள -சித்திரகுப்தன்

    ReplyDelete
  7. வாழ்த்துக்களும் நன்றியும் ஜோதிகணேசனுக்கு...

    வாருங்கள் தோழர் புலிகேசி (முருகவேல்) அவர்களே...
    வலைச்சரம் சிறக்க வாழ்த்துக்கள்...

    யாரங்கே... தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்... வருகிறார் நம் புலிகேசி.

    ReplyDelete
  8. வாழ்த்துக்களும் நன்றியும் ஜோதிகணேசனுக்கு...

    வாருங்கள் தோழர் புலிகேசி (முருகவேல்) அவர்களே...
    வலைச்சரம் சிறக்க வாழ்த்துக்கள்...

    யாரங்கே... தாரை தப்பட்டைகள் முழங்கட்டும்... வருகிறார் நம் புலிகேசி.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் முருகவேல்!!!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் தோழர் புலிகேசி (முருகவேல்) அவர்களே...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது