07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 19, 2011

வலைச்சர அறிமுகம்




வலைச்சர நிர்வாகி சீனா சாருக்கும் அதன் குழுவினருக்கும் முதற்கண் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டு. 

வலைச்சரத்தின் ஆசிரியராக இந்தவாரம் பொறுப்பேற்றிருக்கும் இராஜராஜேஸ்வரி பற்றி முதல் பதிவில் அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தால் இந்த பதிவு...

Free Animations

 பெரிய இனிய குடும்பத்தின் தலைவி.  மகன்கள் அம்மாவுக்கு கம்ப்யூட்டரை இயக்கத்தெரியவில்லை என்று கூற கணவரை அழைத்துக்கொண்டு கணிணி கற்க மையத்திற்குச் சென்றார். அங்கு ஒன்றும் சொல்லிதரவில்லை என மகன்களிடம் சொல்ல மகன்கள் கணிணி வெடிக்காது அம்மா துணிந்து முயற்சி செய்து நாம் தான் கற்கவேண்டும் என உற்சாகம் சொல்ல மெதுவாக மெயில் அனுப்ப சாட் செய்ய கற்று,

கடைக்குட்டி செல்லமகனும் மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்று ஹோம் சிக் என்று அவதிப்பட, தனியாக ஆஸ்திரேலியா சென்று மகனைப் பார்த்துவருமாறு குடும்பத்தினர் கிண்டலடித்தார்கள். 

நின்றால் பொதுக்கூட்டம், நடந்தால் ஊர்வலம் என்று எங்கும் தனியாகப் போய் பழக்கமில்லாத இவர் எங்கே சம்மதிக்கப் போகிறார் என்று சொல்ல, கிளம்ப விருப்பம் தெரிவித்ததை ஆச்சரியத்துடன் பார்த்து விசா எடுத்து ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தார்கள்.

அங்கே தினசரிப்பத்திரிகை படிக்க ஆன்லைனில் பார்த்தபோதுதான் வலையுலகம ஒன்று இருப்பது தெரிந்து படிக்க ஆரம்பித்து,

2011 ஜனவரி 21 ம் தேதி முதல் பதிவை எழுதினார்.. 200வது பதிவை விரைவில் எட்ட இருக்கிறார். மணிராஜ் என்னும் தமிழ் பதிவும் கிருஷ்ணா என்னும் ஆங்கிலப் பதிவும் நடத்துகிறார். 

பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்  கொள்ள, விருப்பப்பட்டவர்கள், தேவைப்பட்டவர்களுக்கு தெரியப் படுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். 

Kindly inform to those who require JOB.

jobmailservice@gmail.com


Providing JOB for educated, uneducated, experienced, fresher, male or female.

Only eligibility is they should be 18+ of age and of Indian nationality.

Thanks & regards

Animated Nature - Flowers

ஒரு அறிமுகப் பதிவர்தான். தன் பதிவுகளை தமிழ்மணத்திலோ வேறு திரட்டித்தளங்களிலோ இணைக்கத் தெரியாதவர். நலம் விரும்பிகள் தமிழ் மணத்தில் இணைக்கச் சொன்னார்கள்.  வழிமுறைகளைப் பின்பற்றியும் இணைக்க முடியவில்லை. டேஷ் போர்டிலும் பிளாக் பப்ளிஷ் ஆவதில்லை.எப்படியோ ஆத்மதிருப்திக்கு எழுதுகிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்.

மதுரைக்கே மல்லிகையை அறிமுகப்படுத்துவதா?
பிறந்தவீட்டின் பெருமையை உடன்பிறந்தானிடம் அளந்தமாதிரியாகவும், பத்துப்பிள்ளை பெற்றவளுக்கு தலைப் பிள்ளைக்காரி பத்தியம் சொன்ன கதையாகவும், பழ்ம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலிகளை முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் அரசறிய வீற்றிருந்த ஆலமரத்தை அடையாளம் காட்டுவதாகவும் வந்திருக்கிறார். பொறுத்தருள்க....
கற்றோர் நிறைந்த அவையில் அறிவிலி ஆரவாரதோடு உரைக்கும் கவியை புன்னகையோடு ஏளனமாக அங்கீகரிப்பதைப்போல் ஏற்றுக்கொள்க...

திரு. வை. கோபாலகிருஷணன் ஐயா அவர்கள் தான் தனக்கு வந்த வாய்ப்பை இப்போதுதான் நடக்க கற்ற குழந்தையின் நடை அழகைப் பாராட்டி ஒலிம்பிக்கில் ஓடவிட “பரிந்துரை” செய்தவர்.

சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன் என்று தன்னை சொல்லிக் கொள்வதிலிருந்தே சாதனையாளர் என்று உறுதிப்படுத்தலாம்.  தெளிந்தநடையும், அளவற்ற அனுபவ அறிவும் வாய்ந்தவர்.
கல்கி பத்திரிகை நடத்திய 12 வார தொடர் போட்டியொன்றில், தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு, இறுதியில் ஒட்டுமொத்த வெற்றியாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசும் பாராட்டும் பெற்றிருக்கிறார்.”
சென்னையிலிருந்து வெளிவரும் “நம் உரத்த சிந்தனை”  என்னும் தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு, இவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ”எங்கெங்கும்... எப்போதும்...  என்னோடு...” என்ற சிறுகதைத்தொகுப்பு நூலுக்கு  15/05/2011 அன்று சென்னையில் நடந்த விழாவில், முதல் பரிசினை பெற்றிருக்கிறார்..

 குறை ஒன்றும் இல்லை என்று பதிவிட்டு நாம் பட்ட சிரமம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று உணர வைத்து கண் திறந்தவர் லஷ்மி அம்மாதான். இந்த வலைச்சர ஆசிரியர் பணியையும் ஏற்றுக்கொள்ள உற்சாகமளித்த்வர்.

 எழுதிய பதிவுகளில் பிடித்தவை
  • சிங்கப்பூர் விமானநிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டிருந்த டிராவலேட்டர்களின் மூலம் எல்லா டெர்மினல்களுக்கும் சென்று பார்வையிட்ட பறக்கும் ரயில் பயணம் அலாதியானது. 
சிங்கப்பூரில் கிளி ஜோதிடம்

  • தனது மகனைப் பார்க்க அடிக்கடி கிளிக்குவது இந்தச்சுட்டியைத் தான்.. Griffith University
  • பணம் படைத்தவர்களால், அதிக உடல்பலம் படைத்தவர்களால் நல்லோர்கள் ஏமாற்றப்படுதலும் வதைபடுதலும் அதிகம் நடக்கிறது. அப்படி சக்தி இல்லாதவர்கள் தங்களுடைய குறைகளை தெய்வத்திடம் முறையிடுகிற கோயில்களில் மிக முக்கியமானது பிரத்யங்கரா தேவி கோயில்.
  • ஜூன் மூன்றாம் தேதிக்கான பதினாறு லட்சுமிகள் பதிவையும், மே 14ம் தேதிக்கான பிரத்யங்கராதேவி பதிவையும், ஜூன் 14ஆம் தேதி காபி பேஸ்ட் செய்து வெளியிட்டிருக்கிறார் >> GAYATHIRI
  • இன்னும் பல பதிவுகளை மணிக்கணகாகச்சிந்தித்துப் படங்கள தேடித்தேடிச் சேர்த்ததை நொடியில் காபி பேஸ்ட் செய்து வெளியிடும் GAYATHIRI பதிவரை வாழ்க வளமுடன் என வாழ்த்தலாம்.


என்று எல்லாமே பலமுறை படித்தாலும் சலிக்காத பதிவுகள் தாம்.

24 comments:

  1. வலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  2. வாழ்த்துகள்.எல்லாரையும்
    எப்பிடியும் ஒரு வாரத்துக்குச்
    சாமி கும்பிட வைக்கப்போறீங்க.
    அரோகரா !

    ReplyDelete
  3. //திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் தான் தனக்கு வந்த வாய்ப்பை, இப்போதுதான் நடக்க கற்ற குழந்தையின் நடை அழகைப் பாராட்டி, ஒலிம்பிக்கில் ஓடவிட சிபாரிசு செய்தவர்.//

    ’சிபாரிசு’ எல்லாம் இல்லை, மேடம்.

    தங்களுக்குள்ள தனித்திறமைகளை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டிடவும், அதற்கு சிறப்பான ஒரு அங்கீகாரம் கிடைக்கச்செய்யவும் விரும்பிய நான், என்னிடம் ஆலோசனை கேட்டபோது, தங்கள் பெயரை முன்மொழிந்து, வழிமொழிந்து பரிந்துரை செய்தேன். அவ்வளவே தான். பிறகு என் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்ததும் பெரு மகிழ்ச்சியடைந்தேன்.

    The Right Man for the Right Job என்பது போல நீங்கள் இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு மிகவும் பொருத்தமானவரே. உங்களால் எதையும் அழகாக, நேர்த்தியாக, விரைவாக, வித்யாசமாக, துடிப்புடன், ஆக்கபூர்வமாக, அமைதியாக, வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.

    “மெய் வருத்தம் பாரார்;
    பசி நோக்கார்’
    கண் துஞ்சார்;
    எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்;
    செவ்வி அருமையும் பாரார்;
    அவமதிப்பும் கொள்ளார்;
    கருமமே கண்ணாயினார்”

    என்பதற்கு எடுத்துக்காட்டு எங்கள்
    திருமதி: இராஜராஜேஸ்வரி அவர்கள்.

    தங்கள் பணி சிறப்பாக அமைய என் அன்பான வாழ்த்துக்கள். மனமார்ந்த ஆசிகள்.

    பிரியத்துடன்,
    vgk

    ReplyDelete
  4. எதையும் தன்
    ஆன்மீக பலத்தால் சாதிக்கும்
    நீங்கள் இங்கும் வெற்றி கோடி கட்டுவீர்கள் என எனக்கு நம்பிக்கை உண்டு
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் மேடம்

    ReplyDelete
  5. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. @S.Menaga said...

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  7. @வை.கோபாலகிருஷ்ணன் said//
    தங்கள் பணி சிறப்பாக அமைய என் அன்பான வாழ்த்துக்கள். மனமார்ந்த ஆசிகள்.//

    ஆசிகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம்ந்நிறைந்த நன்றிகள்.

    ReplyDelete
  8. @A.R.ராஜகோபாலன் said...//

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete
  9. உங்கள் பதிவுகள்தான் பெரும்பாலோனோர் காலையில் முதலில் படிக்கும் பதிவாக இருக்கும்.

    வாழ்த்துக்கள் மேடம்

    ReplyDelete
  10. @Rathnavel said...

    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//

    மனப்பூர்வ நன்றி.

    ReplyDelete
  11. @எல் கே said...//

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  12. @ஹேமா said...

    வாழ்த்துகள்.எல்லாரையும்
    எப்பிடியும் ஒரு வாரத்துக்குச்
    சாமி கும்பிட வைக்கப்போறீங்க.
    அரோகரா !//

    அதற்குத்தான் என் இரண்டு வலைப்பூக்கள் மலர்ந்துள்ளனவே. இங்கும் சாமி கும்பிடச்சொன்னால் சலித்துக்கொள்ளுவார்களே...
    வாழ்த்துக்க்ளுக்கு நன்றி.

    ReplyDelete
  13. வாழ்த்துகள். ஹேமா சொன்னது உண்மைதான்.

    மணிராஜ் உங்கள் சேவை மனப்பான்மைக்கு ஒரு பூங்கொத்து.

    ReplyDelete
  14. @ JOTHIG ஜோதிஜி said... //

    பூங்கொத்துக்கு நன்றி.

    ReplyDelete
  15. வாழ்த்துகள் மேடம்....உங்கள் புயல் பதிவுகள் இங்கும் சுழலட்டும்...

    ReplyDelete
  16. வருக வருக இராஜராஜேஸ்வரி - ஆன்மீகப் பதிவுகளை சுய அறிமுகத்தில் வெளியீட்டமை நன்று. நல்வாழ்த்துகள் - அடுத்த இடுகைகளீல் வழக்கம் போல் மற்ற பதிவர்களீன் இடுகைகளை அறிமுகம் செய்க. நட்புடன் சீனா

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் இராஜராஜேஸ்வரி..

    ReplyDelete
  18. விதி முறைகளில் குறிப்பிட்ட படி இவ்விடுகைக்கு லேபிள் இடுக

    ReplyDelete
  19. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    ஆரம்பமே அமர்க்களமா இருக்கு.
    தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி.

    ReplyDelete
  20. வாழ்த்துகள் மேடம்.

    ReplyDelete
  21. வலைச்சர ஆசிரியைக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  22. ஆசிரியப்பணி இனிதாய் தொடர்கிறது...

    ReplyDelete
  23. தங்களது ஆசிரியப் பணி இனிதே தொடங்கி இருக்கிறது... மேலும் வரும் நாட்களில் அமர்களமாக உங்கள் அறிமுகங்கள் வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்....

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  24. மனம் நிறைந்த வாழ்த்துகள் இராஜராஜேஸ்வரி. ஆலய தரிசன வாரமென்றே அறிவித்துவிடலாம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது