07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 18, 2011

கலவை

என்னங்க சன்டேல ஜாலி மூடு இல்லாம இருக்கீங்களா....

கோபத்தை கோபமாக விரட்டுங்க..

வாங்க டீ சாபிட்டுக்கிட்டே சிப்ஸ் எடுத்துக்குங்க .... சாரி டிப்ஸ் எடுத்துக்குங்க..

ஒருவருக்கு தன் மீது சுயமாகவே வரும் கோபம் கால் பங்கு என்றால், மூன்றாம் நபரால் தூண்டப்பட்டு வருவது முக்கால் பங்கு கோபம். பகைமை சூழலுக்கு இடம் கொடுக்காமல், பிறர் தூண்டுதலுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

கோபம் வருகிற சூழல் ஏற்பட்டால், அந்த இடத்தை விட்டு நகர்வது சிறந்த வழி.

ஒருவர் கோபப்படுத்தும்போது, அந்த கணக்கில் நிகழந்த சம்பவத்தை உடனே மறந்து விடுங்கள். எப்போதோ ஒரு காலத்தில் அவர் நமக்கு ஏதாவது நன்மை செய்திருப்பாரோ.... அதை இப்போது நினைத்துப் பார்க்கலாம்.

தூங்கி எழுந்ததும் , இன்னைக்கு முழுக்க யார்கிட்டயும் நான் கோபப்பட மாட்டேன். என ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

என்னங்க...கோபம் இன்னும் போகலையா...
அப்ப இந்த காமெடிய படிங்க

ஆசிரியர் : "மற்றவர்களுக்குப் புரியாத மாதிரி பேசறவன் முட்டாள்!
மாணவன் : "புரியலை சார்"
****
மாணவன் : உன் வகுப்புல சுமாரா எத்தன பேர் படிக்கிறாங்க?
மாணவன் : எல்லாருமே சுமாரதான் படிப்போம்!

என்னங்க ...இன்னும் கோபம் தீரலையா.... இந்த காணொளிலிய பாருங்க...ஏற்கனவே பல முறை பார்த்திருப்பீங்க ..இருந்தாலும் இன்னொரு மொற பாருங்க.....



சரி வாங்க சிரிச்சுக்கிட்டே இன்றைய வலைச்சர அறிமுக பதிவர்களை சென்று சந்திக்கலாம்....

ஏதோ சமைத்து ... நமக்கு வேண்டா விருந்தாளிக்கு கொடுத்து ஓட வைப்போம்..

உண்மையில் சமையலை சிறப்பாக செய்வது என்பது எளிது அல்ல ... அதை எளிதாக செய்வது எப்படி என இவர்களிடம் கற்று நமக்கு பிடித்தமானவர்களுக்கு சமைத்து கொடுக்கலாம்... வாருங்கள்


என் சமையல் பக்கம் சகோ கீதா அவர்களின் வலைப்பூ http://kaathodupesava.blogspot.com/


welcome to mahi's space  சகோ mahi அவரிகளின் வலைப்பூ http://mahikitchen.blogspot.com/


ராதாஸ் கிச்சன் சகோ ராதாராணி அவர்களின் வலைப்பூ
http://radhaskitchen-1.blogspot.com/


சமையல் அட்டகாசங்கள் சகோ jaleela kamal அவர்களின் வலைப்பூ http://samaiyalattakaasam.blogspot.com/


என் சமையலறையில்  சகோ தெய்வசுகந்தி அவர்களின் வலைப்பூ http://suganthiskitchen.blogspot.com/


என் சமையல் அறையில் சகோ கீதா ஆக்சல் அவர்களின் வலைப்பூ http://geethaachalrecipe.blogspot.com/


vanathy's சகோ வாணி என்கிற வானதிஅவர்களின்
http://vanathys.blogspot.com/2011/07/blog-post_23.html

சமைத்து அசத்தலாம்  சகோ asiya omar அவர்களின் 
வலைப்பூ  http://asiyaomar.blogspot.com/
============================================

திருச்சிராப்பள்ளியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா.மரியாதைக்குரிய நமது அன்பர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது VAI. GOPALAKRISHNAN என்ற வலைப்பூவில் ஊரைச்சொல்லவா..பேரைசொல்லவா என்ற பதிவில் திருச்சிராப்பள்ளியைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்..வாருங்கள் திருச்சியை சுற்றி வருவோம்.


நண்டு @ நொரண்டு வலைப்பூவின் சொந்தகாரர் நம்ம சகோதரர் வழக்கறிஞர் ராஜசேகரன் அவர்கள் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை நம்மோடு பகிர்ந்து வருகிறார்...


இவர் பேர் கேட்டால் தான் மிரளுவார்கள்..ஆனால் நகைச்சுவை உணர்வுடன் சமூக சிந்தனைகளையும் அனுபவ நிகழ்வுகளையும் எழுதி வாங்க வாங்க நம்புங்கோ நானும் பதிவருங்க என அழைக்கிறார்..
நம்ம மாம்ஸ் காட்டான்


 நமது சகோ  அந்நியன் 2 வலைப்பூவிற்கு செல்வோம்
{ஒருறொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.(அல்குர்ஆன் 5:32)  .. } இந்த வலைப்பூவில் சமூக சிந்தனைகளையும், நகைச்சுவையும் நம்முடன் பகிர்ந்திருக்கிறார்.


நாட்டு நடப்புகளை சமூக சிந்தனைகளுடன் நம்மிடையே உரிமையுடன் பகிர்ந்து கொள்ளும் நம் சகோ பாரத் பாரதி அவர்களின் 

நட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்...... நிறைய வாசிப்பது புதிய இடங்களிற்குப் பிரயாணங்கள் செய்வதனால் புதிய அனுபவங்கள், பலதரப்பட்ட கலாச்சாரங்களை, மக்களை புரிந்துகொள்வது. மக்கள் சிந்தனையைத் தூண்டும் எழுத்து பேச்சு செயல் என அரசியல் முதல் சமையல்கட்டுவரை அனைத்துவிடயங்களும் சங்கமிக்கும் கலவையாக மசால மசாலா நம்ம அம்பலத்தார் அவர்கள் இருக்கிறார்


கணினி ,மென்பொருள், பிளாக் சம்பந்தமாக பதிவிடும் சகோ MANSU அவர்களின் கணினி மஞ்சம்


எந்த வித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை அதிகரிப்பது எப்படி ? என நம்ம கூதற்காற்று வலைப்பூவின் சொந்தகாரர் சகோதரர் மதுரன் அவர்கள் சொல்லியிருக்கிறார்...


 சமூக சிந்தனை கருத்துக்களையும்., பிளாக் சம்பந்தமாக தொழில் நுட்ப  பதிவுளும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சகோ சதீஸ் அவர்கள்... இவரது வலைப்பூ வைரை சதீஷ்


மனித நேயம் கொண்ட தமிழருக்காக அரவணைப்போம் என சமூக சிந்தனையுடன் பதிவிடும்
 சகோ ம.தி. சுதா அவர்களின் தளம் தான் மதியோடை.. 

எதை எழுத வேண்டும் எனபது தீர்மானிப்பது பதிவுலகமே என சொல்கிறார்...
யாதும் ஊரே வலைப்பூவின் சொந்தகாரர் சகோ raazi அவர்கள்...


பேரு ஐடியாமணி, அப்பா பேரு தங்கமணி, அம்மா பேரு முத்துமணி, அண்ணன் பேரு ரங்கமணி, தங்கச்சி பேரு ருக்குமணி! நாங்க எல்லாருமே மணியான ஆளுங்க! நோ மணி, நோ ஹனின்னு பாட்டு இருக்குதே! அது நம்மளப்பத்திதான்!  என்று லேட்டஸ்ட்டா வந்து பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கிறார்...
நம்ம ஐடியா மணி Dip.in.Mk,Blol,Msc,Frc,Rmkv,Bmw


.என்னை நன்றாக இறைவனன் படைத்தனன்; தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு என ... நம்ம சகோ ராஜா MVS அவர்கள்.. சொல்லியபடியே சிறப்பாக 
செய்கிறார்...


மண் மணம் கமழும் ஒரு சிற்றூர் இவரது பிறப்பிடம்.. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உகந்த நாயகன் குடிக்காடு இவரது சொந்த ஊர்..தற்பொழுது சென்னை மாநகரில் இருந்து கொண்டு பாடல்,சமூக சிந்தனைகள், நகைச்சுவை என பலவேற்பட்ட பதிவுகளை நம்முடன் பகிர்ந்து கோண்டிருக்கிறார்.. 
கரைசேரா அலை வலைப்பூவின் சொந்தகாரர் நம்ம சகோ அரசன் அவர்கள்.


 கிரிக்கெட் பற்றிய பதிவுகளை பாலாவின் பக்கங்கள் என்ற வலைப்பூவில் பட்டைய கிளப்பிய படி பகிர்ந்து வருகிறார் நமது சகோ பாலா அவர்கள்... வாருங்கள் பாராட்டலாம்.


நடிகர் சந்தானம் அவர்களைப் பற்றி REAL SANTHAANAM FANZ ஆகிய இவர் அகாதுகா அப்பாடக்க்ர்ஸ் என்ற வலைப்பூவில் நம்மோடு நகைச்சுவை உணர்வுடன் பதிவுகளை பகிர்ந்து கலக்கி வருகின்றார்..


எல்லா துரைகள் சம்பந்தமாக பதிவிட்டு கலக்கிகொண்டிருக்கிறார் 
நம்ம சகோ ஆகுலன். அவர்களின் ஆகுலன் கனவுகள்(A+) 


தாய் தமிழில் எழுதுவதை வரமாக வாய்க்கப்பெற்ற தமிழர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமைகொண்டு பதிவுகளை கிறுக்கல்கள் வலைப்பூவிற்கு உரிமையாளர் சகோ சே.குமார் அவர்கள் எழுதி வருகிறார்


சந்தித்ததும் சிந்தித்ததும் நம்மிடையே பகிர்ந்து வருகிறார்...venkatnagaraj வலைப்பூவில் சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்கள்.


வழித்துளிகள்:


''பெயரில் என்ன இருக்கிறது? ரோஜா என்று நாம் அழைப்பதை வேறு எந்தப் பெயரால் அழைத்தாலும் அது இனிமையாகத்தான் மனம் வீசும்"
                                                - ஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்களிலிருந்து...

உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு!

உன்னை உயர்த்தி பேசும்போது செவிடனாய் இரு!

தன் மீது விழும் ஒவ்வொரு அடியும் தன்னை ஒரு சிற்பம் ஆக்கும் என்று கல்லுக்கு தெரியாது.
=========================================================================

வாய்ப்பிற்கு நன்றி கூறி, வாழ்த்தியும், பின்னூட்டமிட்டும் உற்சாகப்படுத்திய உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தைச் சொல்லி இப்பணியிலிருந்து இன்றுடன் விடைபெறுகிறேன்.


நாளை முதல் புதிதாய் பொறுப்பேற்க இருக்கும் நண்பருக்கு அன்பு வாழ்த்துக்கள். 

78 comments:

  1. இந்த வாரம் முழுதும் எல்லாமே சிறந்த அறிமுகங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நிறைய அறிமுகங்கள்.. சிறந்த அறிமுகங்கள்... வித்தியாசமான படையலாக இன்றைய பதிவையும் சேர்த்து அனைத்தும் அருமை.. நன்றி...

    ReplyDelete
  3. நகைச்சுவையுடன் ஆரம்பித்து இனிமையான அறிமுகங்களை தந்ததற்கு நன்றி நண்பா! இந்த ஒரு வாரம் போனதே தெரியவில்லை..

    :) :) :)

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள் அனேகமாக எல்லா பதிவர்களுமே தெரிந்த முகங்கள் தான் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு நண்பரே..

    சரியாகச் சொன்னீர்கள்..
    கோபம் வந்தாள் சற்று வாயைக்கட்டி விலகி இருப்பது நலம்..
    கோபத்தினால் விளையும் சொல் விளைச்சல்கள்
    பெரும் கெடுதல்களை விளைவிக்கும்...
    நகைச்சுவையுடன் கோபத்தை போக்க முயற்சித்திருக்கிறீர்கள்.
    நல்ல முயற்சி..நீங்கள் கையாண்ட விதமும் அருமை.

    பல்சுவை வலைப்பூக்களையும் அதன் மலர்களையும்
    தொகுத்து கலவை மாலையாக கட்டியிருப்பது அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //திருச்சிராப்பள்ளியைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?

    மரியாதைக்குரிய நமது அன்பர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது VAI. GOPALAKRISHNAN என்ற வலைப்பூவில்

    “ஊரைச்சொல்லவா..
    பேரைச்சொல்லவா” என்ற பதிவில் திருச்சிராப்பள்ளியைப் பற்றி பகிர்ந்திருக்கிறார்..வாருங்கள் திருச்சியை சுற்றி வருவோம்.//

    உலகே மாயம்!

    மாய உலகத்தால் இன்று என்னையும் ’கலவை’யில் கலந்து விட்டது கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.

    செங்கற்பட்டு மாவட்டத்தில் ‘கலவை’ என்றொரு ஊரே உள்ளது. மிகவும் முக்கியமான முக்தி ஸ்தலம்.

    ஓரிரு முறை அங்குள்ள மிகவும் விசேஷமான அதிஷ்டானங்களுக்குச் சென்றுள்ளேன்.

    அப்போது அங்கு வருபவர்களுக்கெல்லாம் அருள கடாக்ஷகம் தரவும், இறைவனுடன் நாமும் கலந்து விட உதவவும் ஒரு மஹா பெரியவர் முகாமிட்டிருந்தார்கள்.

    “கலவை” என்ற இந்த உங்களின் தலைப்பையும், அதில் என்னையும் கலந்துள்ளதையும் பார்த்ததும், எனக்கு அந்த இனிமையான நாட்களே நினைவுக்கு வந்தது.

    மிக்க நன்றி. அன்புடன் vgk

    ReplyDelete
  7. கலக்கிட்டிங்க நண்பா!வாரம் முழுக்க பல அறிமுகங்கள்.தேர்ந்தெடுத்து தொகுதிருந்திர்கள்!முத்தாய்ப்பாய் அமைந்திருக்கிறது இன்றைய கலவை!
    வாரம் முழுக்க அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நல்ல பணி! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஒரு வாரத்தில் உலகை வலம் வந்து வலைச்சர வாசகர்களுக்கு பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி ஆசிரியப்பணியை ஓய்வு பெற்றுவிட்டீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. முதலில் ஒரு மன்னிப்பு முன்னர் போல இப்போ என்னால் இணையத்தில் சரிவர இணைய முடியாததால் அதிகமான பதிவுகளை தவற விடுகிறேன்.

    ReplyDelete
  12. எனது கண்ணோட்டத்தில் வலைச்சரத்தில் மட்டுமே சமூக பதிவுகளுக்கான சரியான அங்கிகாரம் பதிவர்களால் பதிவர்களுக்கு கிடைக்கிறது.

    இது இன்னும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

    மிக்க நன்றி சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

    ReplyDelete
  13. என்னையும் இந்த அறிமுகத்தில் சேர்த்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. எனது வலையையும் வலைச்சரத்தில் இணைத்தத்ற்க்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  15. சுவையான பதிவு, அதனூடே எம்மையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  16. அருமையான அறிமுகங்கள்!! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. எனது வலையையும் வலைச்சரத்தில் இணைத்ததற்க்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  18. அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி சகோ. மிக்க நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. சிறப்பான முன்னுரைகளுடன்
    வீடியோ படத்துடன்
    மாதா
    பிதா
    குரு
    தெய்வம்
    நட்பு
    கலவை
    என அருமையான வித்தியாசமான தலைப்புகளுடன் ஒரு வாரம் சூப்பரோ சூப்பர்

    இந்த கலவைகளில் என்னையும் சேர்த்து கொண்டது மிக்க மகிழ்சி/

    அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்த்துக்கள்.

    உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. வணக்கம் மாப்பிள வலைச்சரத்தில் என்னை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.. என்னுடன் சேர்ந்து அறிமுகமாய் இருக்கும் சக பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..  

    ReplyDelete
  21. கடும் காற்று மழை கூட்டும் கடும் நட்பும் பகை காட்டும் கல் மனம் அறியாது காண்போரை கை குளுக்கி கட்டி தழுவி என்னையும் இதில் இணைத்த நண்பர் ராஜேசுக்கு நன்றிகள்.

    நெல்லுக்கு பாயும் நீர்,பச்சை புல்லுக்கும் பாயுவது போல பல வகை தளங்களோடு என் தளத்தையும் இணைத்து அறிமுகப் படுத்தியதுக்கு நன்றிகள் ஆயிரம்.

    தூக்கம் கொள்ளாமல் நோக்கம் புறியாமல் அயாராது கண் விழித்து ஒரு வாரம் பொருப்பேற்று விடை பெரும் நண்பரே நீர் வாழ்க.

    இது மூன்றாவது அறிமுகம் என்றாலும்...

    பஞ்சனையில் தூங்காமல்
    நெஞ்சினிலே பாரம் வைத்து
    நடை பாதை ஓரங்களில் தூங்கி எழும்
    மனிதர்களையும் மதிதித்து எழுதுவதே என் நோக்கம்.

    இடை இடையே சிரிப்பும் சிக்கல் இல்லாத கருத்தும் இடுவதும் என் வழக்கம்.

    அறிமுகப் படுத்திய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

    மற்றும் தமிழ் மணம் ஓட்டும்.

    நன்றி ! ராஜேஷ் மற்றும் வலைச்சரம் அட்மினுக்கும்.

    ReplyDelete
  22. நட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்.

    அழகான அருமையாய் உற்சாகமான அறிமுகப் பதிவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. மாப்பிள என்னை வலைச்சரத்திலே இரண்டு தடவைகள் அறிமுகபடுத்தியுள்ளார்கள் முதல் தடவை ரமணி சார் இப்போது நீங்கள் உங்கள் இருவருக்குமே எனது  நன்றிகள்.. 

    நேரமின்மையால் புதிய பதிவுகள் இட முடியாதிருக்கின்றது.. மிக விரைவில் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  24. இன்று ஏனோ மனம் நிம்மதி இல்லாமல் வேதனையுடன் அழுகையுடனே வந்தேன் ராஜேஷ்...

    ஆனால் உங்கள் பகிர்வை படித்தப்பின் மனதை கொஞ்சம் ஆசுவசப்படுத்திக்கொண்டேன்....

    நல்லவைகளையே தேடி தேடி இத்தனை நாள் எங்களுடன் பகிர்ந்து எங்களையும் மகிழ்வித்து எங்க வீட்டுக்கு வந்து இத்தனை நாள் தங்கிருந்துட்டு சட்டுனு கிளம்புற மாதிரி அட அதுக்குள்ள ஒரு வாரம் ஆகிட்டுதா ...

    மனதில் அன்பை மட்டும் வைத்திருந்தால் போதும் உறவுகளும் நட்பும் நம்மை சூழ்ந்திருப்பர் எப்போதும்....என்று ஒவ்வொரு நாளும் புரியவைத்த பகிர்வு உங்களுடையதுப்பா....

    சிறப்பாக ஒவ்வொரு நாளும் பணியாற்றிய ராஜேஷுக்கு அன்பு வாழ்த்துகள்..

    அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்...

    அடுத்து பொறுப்பேற்கும் ஆசிரியருக்கு என் அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete
  25. வலைச்சரத்தில் கலக்கியதற்க்கு வாழ்த்துக்கள்...

    நான் இந்த வாரம் முழுக்க பதிவுலகம் வரமுடியால் இருந்தது...

    நன்றி

    ReplyDelete
  26. மாய உலகம் தங்கள் வாரம் செமையாகவும்,சுவாரசியமாகவும் இருந்தது. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. நல்ல அறிமுகங்கள். தங்கள் பணியினை செம்மையாக முடித்ததர்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. எனது வலையையும் வலைச்சரத்தின் மூலம் பல நண்பர்களுக்கு அறிமுகம் செய்ததற்க்கு மிக்க நன்றி நண்பா...

    ReplyDelete
  29. என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  30. சிறப்பு மிக்க வலைச்சரத்தில் எம்மை அறிமுகப்படுத்தி சிறப்பு செய்த உங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  31. வலைச்சரத்தில் உங்களது பணியை சிறப்பாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..

    ReplyDelete
  32. தமிழ்வாசி - Prakash said...
    இந்த வாரம் முழுதும் எல்லாமே சிறந்த அறிமுகங்கள். வாழ்த்துக்கள்//

    நன்றி நண்பா

    ReplyDelete
  33. suryajeeva said...
    நிறைய அறிமுகங்கள்.. சிறந்த அறிமுகங்கள்... வித்தியாசமான படையலாக இன்றைய பதிவையும் சேர்த்து அனைத்தும் அருமை.. நன்றி...//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. Abdul Basith said...
    நகைச்சுவையுடன் ஆரம்பித்து இனிமையான அறிமுகங்களை தந்ததற்கு நன்றி நண்பா! இந்த ஒரு வாரம் போனதே தெரியவில்லை..

    :) :) :)//

    மனம் கனிந்த நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. Lakshmi said...
    நல்ல அறிமுகங்கள் அனேகமாக எல்லா பதிவர்களுமே தெரிந்த முகங்கள் தான் அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

    நன்றி அம்மா

    ReplyDelete
  36. மகேந்திரன் said...
    தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு நண்பரே..

    சரியாகச் சொன்னீர்கள்..
    கோபம் வந்தாள் சற்று வாயைக்கட்டி விலகி இருப்பது நலம்..
    கோபத்தினால் விளையும் சொல் விளைச்சல்கள்
    பெரும் கெடுதல்களை விளைவிக்கும்...
    நகைச்சுவையுடன் கோபத்தை போக்க முயற்சித்திருக்கிறீர்கள்.
    நல்ல முயற்சி..நீங்கள் கையாண்ட விதமும் அருமை.

    பல்சுவை வலைப்பூக்களையும் அதன் மலர்களையும்
    தொகுத்து கலவை மாலையாக கட்டியிருப்பது அருமை.
    வாழ்த்துக்கள்.//

    மனம் கனிந்த நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. வை.கோபாலகிருஷ்ணன்
    உலகே மாயம்!

    மாய உலகத்தால் இன்று என்னையும் ’கலவை’யில் கலந்து விட்டது கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.

    செங்கற்பட்டு மாவட்டத்தில் ‘கலவை’ என்றொரு ஊரே உள்ளது. மிகவும் முக்கியமான முக்தி ஸ்தலம்.

    ஓரிரு முறை அங்குள்ள மிகவும் விசேஷமான அதிஷ்டானங்களுக்குச் சென்றுள்ளேன்.

    அப்போது அங்கு வருபவர்களுக்கெல்லாம் அருள கடாக்ஷகம் தரவும், இறைவனுடன் நாமும் கலந்து விட உதவவும் ஒரு மஹா பெரியவர் முகாமிட்டிருந்தார்கள்.

    “கலவை” என்ற இந்த உங்களின் தலைப்பையும், அதில் என்னையும் கலந்துள்ளதையும் பார்த்ததும், எனக்கு அந்த இனிமையான நாட்களே நினைவுக்கு வந்தது.

    மிக்க நன்றி. அன்புடன் vgk//

    வரவேற்கிறேன்..மிக்க நன்றி அன்பரே

    ReplyDelete
  38. கோகுல் said...
    கலக்கிட்டிங்க நண்பா!வாரம் முழுக்க பல அறிமுகங்கள்.தேர்ந்தெடுத்து தொகுதிருந்திர்கள்!முத்தாய்ப்பாய் அமைந்திருக்கிறது இன்றைய கலவை!
    வாரம் முழுக்க அசத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள்!//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  39. middleclassmadhavi said...
    நல்ல பணி! வாழ்த்துக்கள்//

    நன்றி மேடம்!

    ReplyDelete
  40. M.R said...
    அருமையான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

    நன்றி சகோ

    ReplyDelete
  41. சத்ரியன் said...
    ஒரு வாரத்தில் உலகை வலம் வந்து வலைச்சர வாசகர்களுக்கு பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி ஆசிரியப்பணியை ஓய்வு பெற்றுவிட்டீர்கள்.

    வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  42. ♔ம.தி.சுதா♔ said...
    முதலில் ஒரு மன்னிப்பு முன்னர் போல இப்போ என்னால் இணையத்தில் சரிவர இணைய முடியாததால் அதிகமான பதிவுகளை தவற விடுகிறேன்.//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  43. ♔ம.தி.சுதா♔ said...
    எனது கண்ணோட்டத்தில் வலைச்சரத்தில் மட்டுமே சமூக பதிவுகளுக்கான சரியான அங்கிகாரம் பதிவர்களால் பதிவர்களுக்கு கிடைக்கிறது.

    இது இன்னும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

    மிக்க நன்றி சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா//

    வரவேற்கிறேன் !மனம் கனிந்த நன்றி நண்பா

    ReplyDelete
  44. கணினி மஞ்சம் said...
    என்னையும் இந்த அறிமுகத்தில் சேர்த்தமைக்கு நன்றிகள்//

    வரேவேற்கிறேன்..வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  45. வைரை சதிஷ் said...
    எனது வலையையும் வலைச்சரத்தில் இணைத்தத்ற்க்கு நன்றி நண்பரே//

    வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  46. Real Santhanam Fanz said...
    சுவையான பதிவு, அதனூடே எம்மையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி...//

    வரவேற்கிறேன்.. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  47. தக்குடு said...
    அருமையான அறிமுகங்கள்!! வாழ்த்துக்கள்//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  48. நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    அறிமுகத்திற்கு மிக்க மகிழ்ச்சி சகோ. மிக்க நன்றி.
    வாழ்த்துக்கள்.//

    வரவேற்கிறேன்.. வாழ்த்துக்கள் சகோ நன்றி

    ReplyDelete
  49. Jaleela Kamal said...
    சிறப்பான முன்னுரைகளுடன்
    வீடியோ படத்துடன்
    மாதா
    பிதா
    குரு
    தெய்வம்
    நட்பு
    கலவை
    என அருமையான வித்தியாசமான தலைப்புகளுடன் ஒரு வாரம் சூப்பரோ சூப்பர்

    இந்த கலவைகளில் என்னையும் சேர்த்து கொண்டது மிக்க மகிழ்சி/

    அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்த்துக்கள்.

    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

    வரவேற்கிறேன்...தங்களின் முத்தான துவாக்கள் வலைப்பூவை தெய்வம் பதிவிலும் இணைத்திருக்கிறேன்.. வாழ்த்துக்கள்... நன்றி

    ReplyDelete
  50. காட்டான் said...
    வணக்கம் மாப்பிள வலைச்சரத்தில் என்னை அறிமுகபடுத்தியதற்கு நன்றி.. என்னுடன் சேர்ந்து அறிமுகமாய் இருக்கும் சக பதிவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..//

    வரவேற்கிறேன் மாம்ஸ்! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. அந்நியன் 2 said...
    கடும் காற்று மழை கூட்டும் கடும் நட்பும் பகை காட்டும் கல் மனம் அறியாது காண்போரை கை குளுக்கி கட்டி தழுவி என்னையும் இதில் இணைத்த நண்பர் ராஜேசுக்கு நன்றிகள்.
    தூக்கம் கொள்ளாமல் நோக்கம் புறியாமல் அயாராது கண் விழித்து ஒரு வாரம் பொருப்பேற்று விடை பெரும் நண்பரே நீர் வாழ்க.

    நன்றி ! ராஜேஷ் மற்றும் வலைச்சரம் அட்மினுக்கும்.


    வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் சகோ..நன்றி

    ReplyDelete
  52. என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி நண்பா..

    ஏனையவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  53. இராஜராஜேஸ்வரி said...
    நட்பிற்கு முகங்கள் முக்கியமில்லை. ஏதோ ஒரு கருத்தில் உடன்பாடிருந்தால் அல்லது ஒரு சிறுவிடயத்தில் எம்மிடயே சிறு புரிந்துணர்வு ஏற்பட்டால் அந்தச் சிறு புள்ளியொன்றே நம் நட்பின் ஆரம்பமாகட்டும். சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்கதோரு நம்மவர் சமுதாயம் நோக்கிய தேடலில்.

    அழகான அருமையாய் உற்சாகமான அறிமுகப் பதிவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    //

    மிக்க நன்றி மேடம்!

    ReplyDelete
  54. காட்டான் said...
    மாப்பிள என்னை வலைச்சரத்திலே இரண்டு தடவைகள் அறிமுகபடுத்தியுள்ளார்கள் முதல் தடவை ரமணி சார் இப்போது நீங்கள் உங்கள் இருவருக்குமே எனது நன்றிகள்..

    நேரமின்மையால் புதிய பதிவுகள் இட முடியாதிருக்கின்றது.. மிக விரைவில் ஒரு புதிய பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..

    காட்டான் குழ போட்டான்..//

    வரவேற்கிறேன் ....வாழ்த்துக்கள் நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  55. மஞ்சுபாஷிணி said...
    இன்று ஏனோ மனம் நிம்மதி இல்லாமல் வேதனையுடன் அழுகையுடனே வந்தேன் ராஜேஷ்...

    ஆனால் உங்கள் பகிர்வை படித்தப்பின் மனதை கொஞ்சம் ஆசுவசப்படுத்திக்கொண்டேன்....

    நல்லவைகளையே தேடி தேடி இத்தனை நாள் எங்களுடன் பகிர்ந்து எங்களையும் மகிழ்வித்து எங்க வீட்டுக்கு வந்து இத்தனை நாள் தங்கிருந்துட்டு சட்டுனு கிளம்புற மாதிரி அட அதுக்குள்ள ஒரு வாரம் ஆகிட்டுதா ...

    மனதில் அன்பை மட்டும் வைத்திருந்தால் போதும் உறவுகளும் நட்பும் நம்மை சூழ்ந்திருப்பர் எப்போதும்....என்று ஒவ்வொரு நாளும் புரியவைத்த பகிர்வு உங்களுடையதுப்பா....

    சிறப்பாக ஒவ்வொரு நாளும் பணியாற்றிய ராஜேஷுக்கு அன்பு வாழ்த்துகள்..

    அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்...

    அடுத்து பொறுப்பேற்கும் ஆசிரியருக்கு என் அன்பு வாழ்த்துகள்...//


    இதயம் கனிந்த நன்றிகள் மேடம்

    ReplyDelete
  56. # கவிதை வீதி # சௌந்தர் said...
    வலைச்சரத்தில் கலக்கியதற்க்கு வாழ்த்துக்கள்...

    நான் இந்த வாரம் முழுக்க பதிவுலகம் வரமுடியால் இருந்தது...

    நன்றி//

    வரவேற்கிறேன்! வாழ்த்துக்கள் நன்றி நண்பரே

    ReplyDelete
  57. asiya omar said...
    மாய உலகம் தங்கள் வாரம் செமையாகவும்,சுவாரசியமாகவும் இருந்தது. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.//

    வரவேற்கிறேன் மேடம்! வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  58. RAMVI said...
    நல்ல அறிமுகங்கள். தங்கள் பணியினை செம்மையாக முடித்ததர்க்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி மேடம்

    ReplyDelete
  59. ராஜா MVS said...
    எனது வலையையும் வலைச்சரத்தின் மூலம் பல நண்பர்களுக்கு அறிமுகம் செய்ததற்க்கு மிக்க நன்றி நண்பா...//


    வரவேற்கிறேன் நண்பா...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  60. பாலா said...
    என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே..//

    வரவேற்கிறேன்..வாழ்த்துக்கள் நன்றி நண்பரே!

    ReplyDelete
  61. சென்னை பித்தன் said...
    கலக்கல் வாரம்.//

    நன்றி அன்பரே!

    ReplyDelete
  62. பாரத்... பாரதி... said...
    சிறப்பு மிக்க வலைச்சரத்தில் எம்மை அறிமுகப்படுத்தி சிறப்பு செய்த உங்களுக்கு மிக்க நன்றி//

    வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  63. பாரத்... பாரதி... said...
    வலைச்சரத்தில் உங்களது பணியை சிறப்பாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..//

    மிக்க நன்றி நண்பா!

    ReplyDelete
  64. மதுரன் said...
    என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி நண்பா..

    ஏனையவர்களுக்கும் வாழ்த்துக்கள்//

    வரவேற்கிறேன்..வாழ்த்துக்கள் நன்றி நண்பரே

    ReplyDelete
  65. என்னையும் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி ராஜேஷ்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  66. சீனா அய்யா எளிதில் மறக்கமாட்டார்.சிறப்பான பணி.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி ராஜேஷ்

    ReplyDelete
  67. ராதா ராணி said...
    என்னையும் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்கு நன்றி ராஜேஷ்.வாழ்த்துக்கள்!//

    வாழ்த்துக்கு வலைச்சரம் சார்பாக நன்றி

    ReplyDelete
  68. shanmugavel said...
    சீனா அய்யா எளிதில் மறக்கமாட்டார்.சிறப்பான பணி.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி ராஜேஷ்//

    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  69. அறிமுகத்திற்கு நன்றி ..........
    தற்போது என்னால் அவளவாக பதிவு பக்கம் வர முடியவில்லை...என்னும் இரண்டு மதங்களுக்கு தான் பிறகு வந்து எல்லோர் பக்கமும் ஒரு சுத்து சுத்த வேண்டியது தான்.......

    ReplyDelete
  70. ஆகுலன் said...
    அறிமுகத்திற்கு நன்றி ..........
    தற்போது என்னால் அவளவாக பதிவு பக்கம் வர முடியவில்லை...என்னும் இரண்டு மதங்களுக்கு தான் பிறகு வந்து எல்லோர் பக்கமும் ஒரு சுத்து சுத்த வேண்டியது தான்.......//

    வரவேற்கிறேன் நன்றி...

    ReplyDelete
  71. என்னையும் இந்த வாரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே... மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
  72. சிலர் புதியவர்கள்.... சென்று படிக்கிறேன்...

    ReplyDelete
  73. கடந்த ஒரு வாரமாக நிறைய நிறைவான அறிமுகங்கள் செய்த சகோதரர் மாய உலகத்துக்கு வாழ்த்துக்கள்.
    சாம்பவான்களின் கலவைக்குள் சாமானியனான என்னையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி.
    கலவையாய் வந்த மற்ற நட்புக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  74. மிகவும் அழகா சொல்லி இருக்கீங்க .. அறிமுகங்கள் அனைத்தும் அருமை ..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  75. பிந்திய வணக்கங்கள் நண்பா,

    வலைச் சர வாரத்தினைச் சிறப்பாகச் செய்திருக்கிறீங்க.

    வாழ்த்துக்களும், நன்றிகளும்,

    நான் வீக்கெண்ட் பிசியாகியதால் வர முடியவில்லை
    மன்னிக்கவும்.

    ReplyDelete
  76. சூப்பர் அறிமுகங்கள். என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. காலம் தாழ்த்தியமைக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  77. என்னையும் ஒரு பதிவராக மதித்து மாயா உலகத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது