07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 5, 2012

கதை பேசி விடை பெறுகிறேன்....



கதைகள் பல பேசி விளையாடிய பால்ய பருவத்தை யாரும் மறந்து இருக்க மாட்டோம்,அது போல வலையில் கதை பேசி, பகடி செய்து விளையாடிய நண்பர்களை என்னாளும் மறந்திட மாட்டோம்,சும்மா நத்தை போல் சுருண்டு நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்தி கொள்ளாமல் இருக்கும் நல்ல எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இங்கே யாருக்கும் தெரியாத முத்துகளாய் சிதறி கிடக்கிறார்கள், ஆழ்கடலில் புதையுண்டு கிடக்கும் நல் முத்துகளை தேடியெடுக்கும் பணி சிறப்புற செய்து இருப்பேன் என நம்புகிறேன், முத்துகள் தேடியபோது நிறைய நண்பர்களின் தளங்கள் பல வருடங்களாக எழுதாமல் தூசியுடன் கிடக்கிறது, தான் இணையத்தில் தான் இருந்த ஒரு தடத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள். என் வலையும் ஒரு நாள் அதுபோல் புதையுண்டு போகலாம், ஆனால் வலைசரம் அதை தோண்டியெடுக்கும் என்பது உண்மை, இன்றுடன் என் பணி நிறைவுறப் போகிறது, நிறைவு நாளில் நகைசுவையாக எழுதலாம் என்று இருந்தேன் ஆனால்! மாயஉலகம் ராஜேஷ் அவர்களின் மறைவு காரணமாக அதை நிராகரித்து விட்டேன்.

நிரூபனின் நாற்றில்  மாயஉலகம் வலைதளத்தின் உரிமையாளர் ராஜேஷ் நம்மை விட்டு சென்ற செய்தி படித்ததும் ஏற்பட்ட துயரம் இன்னும் மறையவில்லை, அவர் எழுத்துகளில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார், அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் கூற வார்த்தைகள் எதுவும் இல்லை, அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வலைசரம் நிர்வாகிகள்,ஆசிரியர்கள் சார்பாகவும்,மற்றும் வலையுலக நண்பர்கள் சார்பாகவும் பிராத்திக்கிறோம்.

நண்பர்கள் பக்கம்


அட்ராசக்க சிபி செந்தில்குமார், ஏங்க இப்படி படத்தை போடுறிங்க? என்றால் எனக்கு எதுவும் தெரியாது கூகுல்காரன்தான் கொடுத்தான் என சொல்லும் அப்பாவி!

விக்கியுலகம் விக்கிகுமார், பக்கி,தக்காளி, என பல பெயரால் அழைக்கப்படும் வலையுலக அன்பு மாமன்.இப்ப குடும்பநண்பர் ஆனவர்.

வலையுலக குழந்தை தமிழ்பேரண்ட்ஸ்  சம்பத்குமார் அங்க சண்டை நடக்கிறது என்றால் ஒரு மாதத்திக்கு அந்த பக்கம் போக மாட்டார்,  நான் யாருக்காவது எதிர் கருத்து போடும் போது என்னை திட்டும் என் ஆருயிர் நண்பர்.

மச்சி,மாப்ளை,தம்பி,என பலவிதமாக நான் அழைக்கும் என் ஆருயிர் நண்பன் நாற்று நிரூபன்..எழுத்துகளில் இருக்கும் அதே கோபம் பேச்சிலும்..,அடிக்கடி ரேடியோ ஜாக்கிமாதிரி பேசி கலாய்ப்பவர். ரேடியோ ஜாக்கியாக வரவேண்டும் என லட்சியம் உள்ளவர்,அப்துல்ஹமீது மாதிரி தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ்வாசி பல கதைகள் கூறி நம்மை மகிழவைக்கும்,சிரிக்கவைக்கும்,சில சமயம் கண்ணீர் வரவழைக்கும் சிறுகதைகள், தொழில் நுட்பம் எழுதும் பிரகாஷ் என் தொழில்நுட்ப குரு. என் தளத்தை அடிக்கடி டிங்கரிங், பட்டி பார்க்கும் பொறியாளர்.

வணக்கம் மக்கா என அருவாள போடும், நம்ம நாஞ்சில்மனோ ஆளு பழக குழந்தை மாதிரி, ஆனா டெரர் ஆளுங்க...

ஆபிசர் சங்கரலிங்கம் அவர்கள், பழக எளிமையானவர்,மிக அன்பாக பேசுபவர்,நல்ல மனிதர் ஆனால் சேட்ல செம ஓட்டு ஓட்டுவார் விக்கியையும் மனோவையும்..

நாய்நக்ஸ் நக்கீரன் ஜீனியர்விகடன் மாணவநிருபராக இருந்தவர், கழுகில் இவர் எழுதிய பல கட்டுரைகள் மிகச்சிறந்தது..அப்ப அப்ப அவர் தளத்தில் கும்மியடிப்பார்.

நம்ம பன்னிக்குட்டி அண்ணன் சேட்ல பேசியிருக்கிறேன், அதே பேவரிட் கவுண்டர் ஸ்டைல்ல கலாய்ப்பார்.

மின்னல்வரிகள் மூலம் நம்மை மகிழ வைக்கும் கணேஷ் அவர்கள். அவரும் ஒரு லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் என கேள்விப்பட்டேன்.

மருத்துவம் பார்க்கும் மருத்துவ கவிஞர் மயிலன் அவரின் வலையில் எழுதுவதை நிறுத்தியது எனக்கு பேரதிர்ச்சி! போன் சுவிச் ஆப்....நண்பா ஏன் இந்த முடிவு!?

ஆனந்தவிகடனை புரட்டி கொண்டிருந்த போது சங்கவியின் தளத்தை அறிமுகப்படுத்தியிருந்ததைப் பார்த்தேன், கணினியில் விளையாட்டாய் தேடிய போது படித்தது, பிறகு தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருந்த போது ஜாக்கிசேகர் தளத்தை பார்க்க நேர்ந்தது, இரண்டு தளத்தையும் புக்மார்க்கில் வைத்து படித்து கொண்டிருந்தேன், ஜாக்கியின் எழுத்தில் இருக்கும் எதார்த்தம்தான் அனைவரையும் மயக்குகிறது....

அப்படியே கேபிள்சங்கர் அவர் தளத்திக்கும் போக நேர்ந்தது, அவர் சினிமாவைபற்றி எழுதுவதை விரும்பி படித்துகொண்டு இருக்கிறேன்,இனி அவர் புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு சிவா மூலம் வருகிறது.

கே.ஆர்.பி செந்தில் எங்கே செல்லும் பாதை இவர் எழுத்துகளில் இருக்கும் நெருப்புப்பொறி,ஆனால் நேரில் அமைதியான தோற்றம்,

மெட்ராஸ்பவன் சிவக்குமார் காமெடி புயல்! பேச்சிலும் அப்படியே எனக்கு பொழுது போகலைன்னா போன் போட்டிருவேன், இதுக்காக என்னை போன்ல திட்டபோகிறார்.

ஆருர்மூனா செந்தில் என் இனிய நண்பர், திருவள்ளுவர் மாதிரி படத்தை வலையில் வைத்துவிட்டு குழந்தைமாதிரி இருக்கிறார் நேரில்.

இவர்கள் என்னோடு என் அலைவரிசையில் வந்தவர்கள்
இன்னும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களையெல்லாம் கூறினால் பதிவு நீளமாகிவிடும் என்பதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்,சில நண்பர்களை நான் மறந்து இருக்கலாம் மன்னிக்கவும் அனைவருக்கும் நன்றிகள்! கருத்துரையிட்ட அனைத்து நண்பர்களுக்கும், என்னை வலைசர ஆசிரியராக தேர்ந்தெடுத்த சீனா ஐய்யா அவர்களுக்கும்
நன்றி..நன்றி...நன்றி.

அன்புடன் நெகிழ்ச்சியுடன்....

வீடுசுரேஸ்குமார்

என் தள முகவரி http://www.artveedu.com


12 comments:

  1. வணக்கம் நண்பரே,
    இன்றைய சரத்தில் ஜொலிக்கும் அனைவரும்
    பதிவுலக சித்தர்கள்.
    சிறு உளியால் அழகுச் சிலை வடிக்கும்
    அற்புதச் சிற்பிகள்.
    அவர்களுக்கும் வலைச்சரத்தை அழகாக
    தொடுத்து முடித்த தங்களுக்கும் என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    நண்பர் மாய உலகம் ராஜேஷ் அவர்களின்
    இழப்பை இன்னும் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

    ReplyDelete
  2. இவ்வாரம் முழுவதும் சிறப்பாக ஆசிரியப் பணியாற்றியமைக்கு வாழ்த்துகள்..வாரம் முழுவதும் அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. அட பாவி....ஜூனியர் விகடன் பேரை ...கெடுத்துட்டீரே...!!!
    :)
    :)
    :)
    நன்றி தலைவா..

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்..சுரேஷ்..

    ReplyDelete
  5. நீங்கள் கேள்விப்பட்டது சரிதான் சுரேஷ்! நான் MAGAZINE LAYOUT ARTIST ஆகத்தான் வேறு வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்து வருகிறேன். உங்கள் மனதில் நானும் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இவ்வார அறிமுகங்களை சிறப்பாகச் செய்தீர்கள். ஒரு வாரம் போனதே தெரிய‌வில்லை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

    வீடு சுரேஷ் இந்த வாரம் அருமையான பகிர்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி....

    ReplyDelete
  7. தோழர் மாயா மறைவு துக்ககரமான விஷயம்.....


    அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்....

    ReplyDelete
  8. வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்பாக செய்துமுடித்ததற்கு வாழ்த்துகள். இன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். மாய உலகம் ராஜேஷ் அவர்களுக்கு அஞ்ச்லிகள்.

    ReplyDelete
  9. அசிரியருக்கு வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  10. அன்பின் சுரேஷ் குமார் - பதிவர்களை அறிமுகப் படுத்தியது சரி - அவர்களின் சிறந்த பதிவுகளை அறிமுகப் படுத்த வேண்டாமா ? நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  11. அன்பின் சுரேஷ் குமார் - பதிவர்களை அறிமுகப் படுத்தியது சரி - அவர்களின் சிறந்த பதிவுகளை அறிமுகப் படுத்த வேண்டாமா ? நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  12. Congrats for the efforts Suresh!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது