07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 17, 2012

இதெல்லாம் என்ன பெருமையா?... கடம....


அன்பிற்குரிய வலைச்சர நண்பர்களே,


எப்படி ஒரு வாரம் ஓடியதென்று தெரியவில்லை...ஏழு பதிவுகள், பதிமூன்று பதிவர்கள் என்று எனக்கு நானே வரையறுத்துக்கொண்ட எல்லைக்குள்ளேயே லாவகமாக பயணித்து முடித்துவிட்டேன்...சீனா ஐயா, "பொறுப்பை ஏற்கிறீர்களா?" என்று மின்னஞ்சல் அனுப்பிய நாளிலேயே, எத்தனை பதிவு, யார் யாரெல்லாம் அறிமுகம் செய்ய வேண்டும், அவர்கள் தளத்தில் இருந்து என்னென்ன பதிவுகளை முன்நிறுத்தவேண்டும் அனைத்தையும் shortlist செய்துவிட்டேன்... இந்த ஏழு பதிவுகளுக்கான rough draftஉம் சென்ற வாரமே எழுதிவைத்தாகிவிட்டது...தினமும் கொஞ்சம் edit செய்தால் பிரசுரம்...


"தினமும் இரண்டுதானா?" என்று சீனா ஐயா முதல் நாளே வருத்தப்பட்டார்..முன்னவர்கள் போலவே நிறைய அறிமுகங்கள் செய்யுமாறும் அறிவுறுத்தினார்..தீர்க்கமாய் 'இதுதான்,இப்படிதான்' என்று முடிவு செய்து வந்ததால் மாற்றி கொள்ள இயலவில்லை..ஐயா அவர்கள் மன்னிக்கவும்.. இருந்தும் வலைச்சரத்தின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்ட ஆத்மதிருப்தி இருக்கிறது எனக்கு..அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொருவரும் அங்கீகரிக்க பட்டார்கள்..சும்மாவெல்லாம் சொல்லவில்லை...இன்று காலை அறிமுகம் செய்யப்பட்டவர்களைத் தவிர அனைவருமே குறைந்தது பத்து புதிய followerகளைப் பெற்றுள்ளார்கள்...இதைவிட எனக்கு என்ன பெரிய பேரானந்தம் இருக்கபோகிறது?


நண்பர் ஒருவர் இன்றைய என் வலைச்சர பதிவில் இவ்வாறாக கமெண்ட் போட்டிருந்தார்...


//இப்படித் தங்களுக்குப் பழக்கமான வலகளை மட்டும் அறிமுகப் படுத்துவதானால் பிரிவு பிரிவாக, குழு குழுவாகத்தான் வலையுலகம் இருக்கும். இது என் கருத்து//


அதற்கு அங்கே பதில் எழுதியிருந்தாலும், அதே ஐயம் மற்றவர் சிலருக்கும் இருக்குமாயின்...அந்த பதிலை இங்கேயும் எழுதுகிறேன்...


//எனக்கு பழக்கமான வலைகளை மட்டும்தான் அறிமுகபடுத்தி இருக்கிறேன் என்று குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்.. பதிவுலக பிரிவினைக்கு இது வித்து என்றும் கூறியுள்ளீர்கள்.. இது என்ன வேடிக்கை..? எனக்கு தெரிந்தவர்களைதான் நான் அறிமுகபடுத்த முடியும்...கிட்டத்தட்ட ஒரு வருடமாக நான் படித்ததை,இரசித்ததை,வியந்ததைதான் இங்கே அறிமுகம் செய்துள்ளேன்.. ஓரிரண்டு பதிவுகளைத் தவிர எல்லாமே நான் ஏற்கனவே வாசித்தவை..அவர்கள் தளத்தில் அவற்றைத் தேடி எடுப்பதில் தான் எனக்கு சிரமம் இருந்தது...அவ்வாறாக அனைத்தும் மனதில் அறையப்பட்ட பதிவுகள்..வலைச்சரத்தில் ஆசிரியராய் இருக்கும் காரணத்திற்கு, ஆங்கங்கே நுனிப்புல் மேய்ந்து வந்தெல்லாம் என்னால் அறிமுகம் செய்ய முடியாது..தவிர, இது குழுவிற்குள் முடியும் கூத்து என்று எப்படி சொல்ல முடியும்..? நானே இங்கே அறிமுகம்தான்..எனக்கு தெரிந்தவர்களை தெரியாதவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்..//


இந்த வாரம் வலைச்சரம் எனக்கும் ஒரு சில நல்ல அறிமுகங்களை காட்டி கொடுத்துள்ளது...பின்னூட்டங்களில் இருந்து...குறிப்பாக ஜீ, வரலாற்று சுவடுகள், தென்றல்-சசிகலா, அவர்களின் சில பதிவுகள் வாசித்தேன்..நல்லா இருந்தது... பின்தொடரவும் ஆரம்பித்துள்ளேன்...இன்னும் சிலரது வலைத்தளங்களை புக்மார்க் செய்துவைத்துள்ளேன்..வாசிக்கணும்...


குழுமம் தாண்டிய அறிமுகங்கள், புது நண்பர்கள் என்று என்னவெல்லாம் setpoint ஆக வைத்து உள்ளே வந்தேனோ..அத்தனையும் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் வெளியேறுகிறேன்.. பதிவர்கள் அனைவருக்கும் அவ்வபோது சில breakpoint கிடைக்கும்...அதிலிருந்து ஒரு புது உத்வேகம் பெறப்படும்.. எனக்கும் அப்படியான நிகழ்வுகள் இருந்தன...

  • பிலாசபி பிரபாகரன் என் தளத்தில் முதல் பதிவுலக நண்பராய் இணைந்தது..
  • 2011 ஆண்டு இறுதியில் ராஜபாட்டை-ராஜா சார் ஒரு தொடர் பதிவு எழுத அழைத்தது
  • நிரூபனின் நாற்று தளத்தில் அம்பலத்தார் செய்து வைத்த அறிமுகம்/விமர்சனம்
  • என் விகடனில் எனது வலைத்தளம் பிரசுரமானது
  • இந்த வரிசையில் வந்துள்ள இப்போதைய வலைச்சர ஆசிரியர் பணி...

இப்படி ஒவ்வொன்றும் அப்போதைக்கான ஒரு தூண்டுகோலாய் அமைந்தது...அதே போலத்தான் நான் அறிமுகபடுத்தியிருக்கும் பதிவர்களுக்கு இந்த அறிமுகம் அப்படியான ஒரு breakpoint ஆக இருக்கவேண்டுமென விரும்பினேன்...இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பொறுப்பளித்த சீனா ஐயாவிற்கும், தமிழ்வாசிக்கும் மற்றும் ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து விடைபெறுகிறேன்..






ஒரு சுகமான அனுபவம்...அதனால் இங்கே ஒரு பெருமூச்சு...


என்றும் நன்றியுடன்...சி.மயிலன்




16 comments:

  1. எங்களுக்கும் இந்த வாரம் நிச்சயம் புதுவித உணர்வையே தந்தது சகோ... அதோடு அந்த மறுமொழிக்கு நீங்கள் பதில் அளித்த விதமும் சரியாய் தோன்றுகிறது... பதிவுலகம் மிகப்பெரிய ஆழ்கடல், இந்த கடலில் திரும்பிய பக்கமெல்லாம் நல் முத்துக்கள் குவிந்துகிடக்க, நம் பார்வைக்கு கிடைத்தவையைக்கொண்டே விருந்தளிக்கமுடியும்... மிக நிறைவாய் இந்த ஒரு வார பணியை செய்தி முடித்த நிம்மதி பெருமூச்சில் பதிவை நிறைவு செய்திருக்கிறீர்கள், வாழ்த்துகள் :)

    ReplyDelete
  2. பதிவுலகில் வலைச்சர ஆசிரியர் என்பது நல்லதொரு பயணம் மயிலன்.....

    தாங்கள் வழிவகுத்த பாதையில் வெற்றி கண்டு விட்டீர்கள்.

    தங்களின் சில இடுகைகளை தொடர இயலவில்லை......

    மேலும் தாங்கள் பதிவுலகில் சிறந்ததொரு பயணங்கள் மேற்கொள்ள வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ரேவா said...
    //எங்களுக்கும் இந்த வாரம் நிச்சயம் புதுவித உணர்வையே தந்தது சகோ... அதோடு அந்த மறுமொழிக்கு நீங்கள் பதில் அளித்த விதமும் சரியாய் தோன்றுகிறது...//

    நன்றி ரேவா...கருத்தினை ஆமொத்தித்தமைக்கு மிக்க நன்றி..

    தமிழால் இணைந்திருப்போம்...

    ReplyDelete
  4. தமிழ்வாசி பிரகாஷ் said...
    //பதிவுலகில் வலைச்சர ஆசிரியர் என்பது நல்லதொரு பயணம் மயிலன்.....
    தாங்கள் வழிவகுத்த பாதையில் வெற்றி கண்டு விட்டீர்கள்.
    தங்களின் சில இடுகைகளை தொடர இயலவில்லை......
    மேலும் தாங்கள் பதிவுலகில் சிறந்ததொரு பயணங்கள் மேற்கொள்ள வாழ்த்துக்கள்.//

    ஓவர் formality ஒடம்புக்கு ஆகாது பாஸ்..:) நீங்க இந்த மாதிரி பின்னூட்டம் போட்டா உங்க பேர யாரோ misuse பண்றாங்கன்னு தோணுது...ஹி ஹி..

    ReplyDelete
  5. மயிலன் said...
    தமிழ்வாசி பிரகாஷ் said...
    //பதிவுலகில் வலைச்சர ஆசிரியர் என்பது நல்லதொரு பயணம் மயிலன்.....
    தாங்கள் வழிவகுத்த பாதையில் வெற்றி கண்டு விட்டீர்கள்.
    தங்களின் சில இடுகைகளை தொடர இயலவில்லை......
    மேலும் தாங்கள் பதிவுலகில் சிறந்ததொரு பயணங்கள் மேற்கொள்ள வாழ்த்துக்கள்.//

    ஓவர் formality ஒடம்புக்கு ஆகாது பாஸ்..:) நீங்க இந்த மாதிரி பின்னூட்டம் போட்டா உங்க பேர யாரோ misuse பண்றாங்கன்னு தோணுது...ஹி ஹி..//////

    நீங்கள் பார்மாலிட்டியாகவும் எடுத்துக்குங்க... பார்மலாகவும் எடுத்துக்கங்க......... என் பின்னூட்டம் பற்றி எனக்கு தெரியும்.

    ReplyDelete
  6. ஐயோ..நண்பரே ...
    உங்கள் கமெண்ட் வழக்கு முறை தமிழில்தான் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன்..
    இப்படி இங்கே தூய தமிழில் பார்த்ததால்தான் அப்படி சொன்னேன்...
    தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்..

    ReplyDelete
  7. மயிலன் said...
    ஐயோ..நண்பரே ...
    உங்கள் கமெண்ட் வழக்கு முறை தமிழில்தான் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன்..
    இப்படி இங்கே தூய தமிழில் பார்த்ததால்தான் அப்படி சொன்னேன்...
    தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்..//////

    தவறாக கொள்ளவில்லை மயிலன்.... நீங்க டெம்ப்ளேட் கமென்ட் என எடுதுக்கிட்டிங்கன்னு நெனச்சேன்... ஹா.. ஹா... அதான் அர்த்தம்.....

    ReplyDelete
  8. நம்மால் அனைத்து பதிவுகளுக்கும் போகமுடியாது..அதற்கான நேரமும் கிடைக்காது! ஓரிரு பதிவுகளை, பதிவர்களை வலைச்சரத்தில் திரட்டிகளில் கண்டுபிடித்தால் உண்டு, நாம் விரும்பியோ, விரும்பாமலோ, ஒரு குழு உருவாவது தவிர்க்க முடியாதது....!நம்முடைய ரசனைக்கு ஒத்த குணமுடையவர்களின் பதிவுகளுக்கு தவறாமல் கமெண்ட் போடுவது உண்டு! ஆனால் நமக்கு கமெண்ட் போடுபவர்களின் பதிவுகளுக்கு சிலநேரம் போக இயலுவதில்லை....அதனால் வருத்தம் கூட வரலாம் ஆனால் முடிந்த அளவு பதிவர்கள் நல்ல பதிவர்களின் தேடலை விரிவுபடுத்துவது நன்று!

    சிறப்பான வலைச்சரப் பணி வாழ்த்துகள் மயிலன்!

    ReplyDelete
  9. நீ(ங்கள்) ஒரு முடிவு எடுத்தால் மாறமாட்டே என தெரியும் ... அதே வகையில் குறைவான ஆனால் நிறைவான அறிமுகங்கள் ...

    ReplyDelete
  10. புதுமையாக சிறப்பாக உங்கள் பணியைச் செய்து முடித்தீர்கள் மயிலன். இனிவரும் சரங்களிலும் இது ஒரு புது ட்ரெண்டாக வந்தால் நலம். ஓரிரண்டு நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களும் நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளை வாசித்துவிட்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  11. தங்களைப் போலவே மனதில் தோன்றுவதை நானும் எழுதுபவள் தான் இங்கு ஒளிவு மறைவு இல்லை .தங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. பணி தொடர நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  12. ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை தேடியே பதிவுலகில் நுழைகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வலைச்சர அங்கீகாரம் புது உத்வேகத்தை தருகிறது என்றால் மிகையில்லை என்றாலும் நிறைய பதிவர்களை மொத்தமாக அறிமுகப்படுத்தும் போது நிச்சயம் கண்டுகொள்ளாமல் போவதற்கு 80% வீதத்திற்கும் மேல் வாய்ப்புகள் உள்ளது.

    நீங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து பதிவர்களுக்கும் அந்த குறை நீங்கி வலைச்சரத்தை பின்தொடர்பவர்களின் மொத்த கவனத்தையும் அவர்கள் மேல் திருப்பி அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களின் மனதில் புதிய உத்வேகத்தை எற்படுத்திவிட்டீர்கள் என்று சத்தம் போட்டே சொல்லலாம்.

    இப்படிப்பட்ட நல்ல அங்கீகாரத்திற்க்குத்தான் ஒவ்வொரு நல்ல பதிவர்களும் வேண்டி தவம் இருக்கிறார்கள்.

    வாழ்த்துக்கள் மயிலன் சார்.!

    ReplyDelete
  13. ஏன்யா இப்படி பேரை எல்லாம் போட்டு கலாய்க்குறீங்க...

    ReplyDelete
  14. மயிலன் ..
    நீங்கள் அறிமுகப்படுத்திய விதத்தில் ஒரு நேர்மையும் உண்மையும் இருந்தது. நீங்கள் ரசித்ததை எடுகோள் காட்டி அறிமுகப்படுத்தியது இன்னமும் சிறப்பு ... தொடர்வோம்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது