07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 23, 2012

சென்று வருக ஜலீலா கமால் - பொறுப்பேற்க வருக வா.மணிகண்டன் 


அன்பின் சக பதிவர்களே 

இன்றுடம் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஜலீலா கமால் தான் ஏற்ற பொறுப்பினை முழு மனது மற்றும் ஈடுபாட்டுடன் நிறைவேற்றி, மன நிறைவுடன் மகிழ்ச்சியாக நம்மிடம் இருந்து விடைபெறுகிறார். 

இவர் இட்ட பதிவுகள் : 008

அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 124

சுய அறிமுகப் பதிவுகள் உள்ளிட்ட - அறிமுகப் படுத்தப்பட்ட பதிவுகள் : 184 

பெற்ற மறு மொழிகள் : 156

184 பதிவுகளையும் அவற்றை எழுதிய 124 பதிவர்களையும் கடும் உழைப்பினால் அறிமுகப் படுத்திய ஜலீலா கமால் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் வா.மணீகண்டன். 

இவரது சொந்த ஊர்  ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திற்கு அருகில் உள்ள கரட்டடிபாளையம் என்னும் சிற்றூர். தற்பொழுது பெங்களூர் வாசம்.

நவீன கவிதைகள், கவிதை சார்ந்த உரையாடல்கள், விமர்சனங்கள் என தொடர்ந்து பங்குபெறுவதும் சிறுகதைகள் எழுதுவதும் தற்போதைய அடையாளங்கள். கல்கி வார இதழில் தொடராக வெளிவரும் 'ரோபோஜாலம்' எழுதிக் கொண்டிருப்பது இன்னொரு அடையாளம்.
 ”கண்ணாடியில் நகரும் வெயில்” என்ற கவிதைத் தொகுப்பும், “சைபர் சாத்தான்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியிருக்கின்றன. இரண்டும் உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடு.

அடுத்த கவிதைத் தொகுப்பான "என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி" காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரவிருக்கிறது.

இவர் நிசப்தம் என்ற தளத்தில் 2005 பிப்ரவரி முதல் எழுதி வருகிறார். இது வரை 408 பதிவுகள் பல்வேறு தலைப்புகளில் எழுதி இருக்கிறார். 

வா.மணிகண்டனை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் ஜலீலா கமால்

நல்வாழ்த்துகள் வா.மணிகண்டன் 

நட்புடன் சீனா 


8 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வாழ்த்துகள் வா.மணிகண்டன் தங்கள் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்த்துகள்.
    .
    வேதா. இலங்காதிலகம்.(கோவைகவி)
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  6. பலப்பல தளங்களை அறிமுகப்படுத்திய ஜலீலா கமால் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    வா.மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது