07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 3, 2014

சிந்தனையில் வெளிச்சத்தை தரும் வெள்ளியென சமூகச் சிந்தனைப்பூக்களால் அலங்கரிக்கின்றேன்....இன்றைய வெள்ளியை

 அக்டோபர் -3  உலக வசிப்பிட தினம் இன்று  .

                            நாம் வாழும் பூமியை எவ்வாறு வைத்துள்ளோம் என்று நினைவுறுத்தும் நாள் இன்று.  அழகு சாதனப்பொருட்களால் வீட்டை அலங்கரிக்கும் நாம் ...பூமியை அலங்கரிக்கும் இயற்கை அழிவதை அலட்சியப்படுத்துவது ஏன்...?விஞ்ஞான வளர்ச்சி மனிதர்களுக்கு பல வசதிகளைத்தந்திருக்கலாம் ஆனால் இயற்கைக்கு...!

தென் அமெரிக்காவின் பழங்குடியினத்தலைவர் சியாத்தல் வாஷிங்டனின் பிரசிடென்ட் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்...

                 ”என் பூமியை விற்க சொல்கின்றீர்கள் நான் எவ்வாறு பூமியை விற்க முடியும்?இங்கு ஓடும் ஆற்றின் முணுமுணுப்பு என் மூதாதையர்களின் குரல்...இங்குள்ள விலங்குகள்,பறவைகள்,மலர்கள்...எங்கள் குழந்தைகளின் சகோதர,சகோதரிகள்..இந்த பூமி நமக்கு சொந்தமல்ல..நாம் தான் பூமிக்கு சொந்தம்...நாம் பூமியில் ஒரு பகுதி தான்...இதையும் மீறி நீங்கள் இந்த பூமியை அபகரித்தால்..நாங்கள் எங்கள் குழந்தைகட்கு கற்றுக்கொடுத்ததை..நீங்கள் உங்கள் குழந்தைகட்கு...கற்றுக்கொடுங்கள்.”

எத்தனை உண்மையான வரிகள்..இந்த பூமியை நம் குழந்தைகட்கு நேசிக்க,பாதுக்காக்க கற்றுக்கொடுத்துள்ளோமா..!யோசிக்க வேண்டிய விசயம்..
விளைநிலங்களையெல்லாம் வீடாக்கி விட்டு பெரியார் கூறியது போல உணவிற்கு பதிலாய் குப்பியில் அடைக்கப்பட்ட உணவை உண்ணப்போகின்றோமோ?                     


                                வெள்ளிக்கிழமை என்றாலே குழந்தைகட்கும் ,பணி புரிபவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நாள். ஏன் என்று உங்களுக்கே தெரியும்..அப்பாடி வாரத்தின் கடைசி நாள் என்று காலையிலிருந்தே உற்சாகம் தொற்றிக்கொள்ளும்..இன்று ஒரு நாள் தானம்மா போவேன் ஸ்கூலுக்கு அப்றம் ட்டூ டேஸ் லீவு தானே..குழந்தைகளின் கவலையில் அம்மாக்களுக்கு இன்னும் 2 நாள் இதுங்கள எப்படி சமாளிக்கிறதுன்னு கவலை எழும்...

விடுமுறைவிட்டு  7 நாட்களாயிற்று குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணரும் பெற்றோர்கள், ஏன் குழந்தைகட்கு நல்ல  புத்தகங்களை அறிமுகம் செய்ய மறுக்கின்றனர்.?..புத்தகங்களின் உலகில் அவர்கள் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டால் ...வேறென்ன வேண்டும்...

                                       வீட்டுக்கவலைகளை ஒதுக்கி சமூகத்திற்காக கவலைப்படுபவர்கள் அரிதாகிக்கொண்டுள்ளனர்....அவர்களை அடையாளம் காட்டும் பகுதியாக இன்றைய வலைப்பூக்களின் தொகுப்பு திகழ்கின்றது...

 நாம் விதைப்பதைத் தான் அறுவடை செய்யப்போகின்றோம்... ஏன் நல்லவற்றையே விதைக்கக் கூடாது....?



*     இவர் என்ன தீர்க்கதரிசியா.....நூற்று முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே எத்தகைய தொலைநோக்கு சிந்தனை....நம்பமுடியவில்லை..அப்போதே தந்தியில்லாக்கருவி மூலம் முகம் பார்த்து பேசும் நாள் வருமென்று கூறியுள்ளார்....இவரே தமிழ் நாட்டு சாக்ரடீஸ் என பெயர் பெற்றவர்....இவரைப்பற்றிய கட்டுரையாக கவிஞரும்,பட்டிமன்றபேச்சாளரும் புதுகையில் இணையத்தில் தமிழ் வளரக் காரணமாயிருந்தவரும் என் சகோதரருமானவரின் கட்டுரை இது

   *          வாழும் மனிதரை உலகிற்கு அடையாளம் காட்டும் பதிவு...குறைவான பதிவுகளாயிருப்பினும் செறிவான கட்டுரைகளை உள்ளடக்கியது இது


*பாரதரத்னா விருது


 விருது பெறுவது மகிழ்வான ஒன்று..அதுவும் பாரத ரத்னா விருது பெற்றவர்களை அறிந்து கொள்ள ஒருவாய்ப்பாய் சகோதரர் பாண்டியனின் கட்டுரை இது

*இன்றைய அரசியல் குறித்த பதிவாய் தீர்க்கமான அலசலுடன்


*

எல்லோரிடமும் உண்மையாக இருப்பவன் என உண்மையானவனாக அறிமுகமாகும் இந்த சகோதரரின் மனம் கனக்கச் செய்யும் கட்டுரை இது



* தமிழ் குறித்து இவர்தானே பேச முடியும். தமிழா நீ பேசுவது தமிழா என சாடுகின்றார் மதிப்பிற்குரிய கவிஞர் பாரதிதாசன் அய்யா. அவர்களின் பதிவாய்



*

எல்லாவற்றிலும் சாதித்து விட்டோம் என பெருமையடைவது தவறென சுட்டிக்காட்டும் பதிவு இது

*


”ஆசிரியர் ஜெகதீசன்தான் இதையும் சொல்வார். “ஒரு சமூகத்துல ஆசிரியர்கள்தான் எல்லா விதத்துலேயும் உயர்ந்தபட்ச பீடத்துல வைக்கப்படணும். உயர்ந்த பட்ச தகுதிகளோட உள்ளவங்களை அரசாங்கம் தேடித் தேடி ஆசிரியப் பணிக்கு எடுக்கணும். ஏன்னா, ஒரு தப்பான ஆள் மருத்துவரா தேர்ந்தெடுக்கப்பட்டா, சில உயிர்கள் காலியாகும். ஒரு தப்பான ஆள் பொறியாளரா தேர்ந் தெடுக்கப்பட்டா, பல கட்டிடங்கள் காலியாகும். ஆனா, ஒரு தப்பான ஆள் ஆசிரியராகிட்டா பல தலைமுறைகள் பாதிக்கப்படும்.”என கூறும்எழுத்தாளர் சமஸின் கல்வி குறித்த பதிவாய்



*உடல்நலம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் முத்துசிதறல்களாய்




*

”சுந்தரி அக்காவிலிருந்து சுகனோ வரையில், பெண்கள் தான் உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள் என்று எனக்கு உணர்த்திய பயணம். வேறு எதற்காக இல்லாவிட்டாலும் எனது குழந்தைகளின் அமைதியான எதிர்காலத்திற்காக இந்த போராட்டத்தை தொடர வேண்டும் என்று நினைவுறுத்திய பயணம் அது”.  ஒட்டு மொத்த உலகமும் பாதுக்காக்கப்படவேண்டாமா என வேதனைப்படும் பூவுலகு நண்பர்களின் கட்டுரை

சமூக சார்ந்த சிந்தனைகளைத்  தொகுத்துள்ளேன்.நிச்சயம் பயனுள்ள வலைப்பதிவுகள் தான் என்பதை நீங்கள் தான் கூறவேண்டும்..

நன்றி...நாளை சந்திப்போமா...!

25 comments:

  1. இந்த பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி. கூகிளில் அந்த படங்களை பார்த்து மனது மிகவும் கனத்து போனது.

    எங்களுக்கு இந்த வாரம் இரு நாட்கள் மட்டும் விடுமுறை இல்லை, மூன்று நாட்கள் (திங்கட்கிழமையும்) விடுமுறை தான். அதேபோல் பள்ளிக்குழந்தைகளுக்கு சென்ற வாரமும், இந்த வாரமும் விடுமுறை வாரங்கள் (மூன்றாம் பருவ விடுமுறை). நீங்கள் சொல்வது போல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம். இங்கு, பள்ளி பருவ விடுமுறை நாட்களில் நூல்கங்களில் குழந்தைகளுக்கென கிராஃப்ட் வேலைப்பாடுகள் என்று நிறைய சொல்லித்தருவார்கள்.

    இன்று அறிமுகம் ஆன மற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துக்கள் நண்பரே...

      Delete
  2. மிகவும் நன்றி .உங்கள் கட்டுரை மனதை பாதித்தது...வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ஆஹா! சொக்கன் சார் சொல்லித்தான் எங்கள் வலைத்தளம் வலைச்சரத்தில் என்று புரிந்தது! மிக்க மிக்க ந்னறி! சகோதரி!
    சொக்கன் நண்பரும் உள்ளார், பாண்டியன் தம்பி இருக்கிறார். ஆஹா நம்ம சீனு, சமஸ்..எல்லோருக்கும், மற்ற அறிமுகங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

    அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள்!

    மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..நன்றி சகோ...

      Delete
    2. வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துக்கள் நண்பர் & நண்பி.

      Delete
    3. மிக்க நன்றி சகோ...

      Delete
  4. வணக்கம்
    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ...

      Delete
  5. உங்கள் தேர்வுகள் இப்போது இங்கும்
    https://www.facebook.com/malartharu

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் சகோ நன்றி....

      Delete
  6. நல்ல பதிவுகளின் அணிவகுப்பு அருமை சகோதரி.

    ReplyDelete
  7. வணக்கம் தோழி!

    சீர்திருத்தம் காப்போர் சிறந்த பதிவுகள்!
    வேர்தான் அவர்களென்று மே!

    நல்ல தலைப்பில் இன்றைய அறிமுகங்கள். மிகச் சிறப்பு!
    அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  8. வணக்கம்!

    என்னை ஒருபொருட்டாய் எண்ணி இசைத்துள்ளார்!
    அன்னைத் தமிழின் அருள்என்பேன்! - பொன்னை
    உளங்கொண்ட கீதா! உரைக்கின்றேன் நன்றி!
    வளங்கண்டு வாழ்க மகிழ்ந்து!

    தமிழ்மணம் 4

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா..
      சூரியனுக்கு அறிமுகம் தேவையாமோ.....இருந்தாலும் எனக்கு பிடித்த பதிவாய் இருக்கும் தமிழை விட மனமில்லை ..வருகைக்கு மிக்க நன்றி...

      Delete
  9. மிகச் சிறப்பான அறிமுகங்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. சிறந்த விழிப்புணர்வூட்டும் பதிவுகள் அறிமுகம் ,,,
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..மனம் நிறைந்த நன்றி.

      Delete
  11. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார் நன்றி.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது