07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 5, 2014

கதம்பமென வலைப்பூக்களின் வாசமனைத்தையும் ஒரு சேர அளிக்கும் கலக்கல் ஞாயிறு....


 
இன்று ஞாயிற்று கிழமை....ஏழாம் நாள்-மனம் நிறைந்த நன்றிகளுடன்..

வாங்க வாங்க ....


மாலையில் நம்ம முத்துநிலவன்  அண்ணாவின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழாக்கு வந்துடுவீங்கத்தானே




காலைல ஜாலியா எங்காவது  போலாம்னு ஆசை வந்தது...எங்க போலாம்னு   கரந்தை ஜெயக்குமார் அண்ணன் கிட்ட கேட்டேன் பிள்ளை பிடிக்க போலாம் வர்றீகளான்னு கேட்டதும் இதேதுடா வம்பா போச்சு ...அப்றம் வர்றேன் அண்ணான்னு ஒரே ஓட்டம் ....



மூச்சு வாங்க... நம்ம முனைவர் ஜம்புலிங்கம் அய்யாவ பேரூந்து நிலையத்தில் பார்த்தேன் எங்க அய்யான்னு கேட்டதுக்கு வாங்க சோழ நாட்டில் பௌத்த சுவடத் தேடி குழுமூர் போலாமான்னு? கேட்க போலாமேன்னு குழுமூருக்கு போனா ...அட புத்தர் சிலை..! பாத்துட்டு அங்கிருந்து எங்கடா போறதுன்னு யோசிச்சப்ப....


வாங்க வாங்க மெட்ராஸ் படம் பாக்க போலாம்னு நம்ம ஜாக்கி சேகர் சகோ கூப்பிட்டாங்க . சினிமா பாத்தே ரொம்ப நாளாச்சேன்னு படத்த பார்த்துட்டோம்ல.

.நவராத்திரியேதும் கொலு பாக்க வான்னா... சினிமாக்கா போறீங்கன்னு தோழி இராஜேஸ்வரி முறைக்க, இதோ வந்துட்டேன்னு  ஓடினா தரணிபோற்றும் பத்து தசாவதாரங்கள  பற்றி சொன்னத கேட்டுகிட்டே ஓகே சகோ வர்றேன்னு கிளம்ப...



ஒரு கவிதை கேட்டது   “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை .ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கு இல்லைனு”அட நம்ம கந்தர்வன் சாரோட கவிதையாச்சென்னு எட்டிப்பார்த்தா நான் சாதாரணமானவள் இல்லை சதா ரணமானவள்னு ஒரு அலுப்பான பதில்..பரவால்லமா..இதுவும் கடந்து போகும்னு ஒரு தத்துவத்த சொல்லிட்டு கிளம்பினேன்..



வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக பரபரப்பாக இருக்கும் தமிழ்வாசி பிரகாஷ் சகோவை வழியில் பார்க்க...லீவுல உங்க குழந்தைகளை இசைக்கத்துக்க சொல்லுங்கன்னார்...இவரே சொன்ன பின் மறுக்க முடியுமா சொல்றேன்னுட்டேன்ல..அப்றம் அக்டோபர் 26 சந்திப்புல கேப்பாகல்ல...ஆமா எல்லோரும்மதுரை வலைப்பதிவர் விழாக்கு வர பதிந்து விட்டீங்கத்தானே..



மாற வேண்டும் மனித மனங்கள்னு ஒரு குரல் யாருன்னு திரும்புனா நம்ம பெருநாழி தமிழய்யா என்னாச்சு? கோவமே பட மாட்டாரேன்னு கேட்டா ...அவர் சொன்னது நியாயம்னு தோணுச்சு ...பரவால்ல சார் விடுங்கன்னுட்டு...கிளம்புனா



 நம்ம மாலதி தோழி...என்ன கைபேசியிலேயே இருக்கன்னு....ஒரு பார்வையோட.. டீச்சர்ல...அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க..பேசி முடிச்சிட்டு  செல்போன  கைப்பைல வெச்சுட்டேன்ல..நம்ம நல்லதுக்குதானே சொல்றாகன்னு.


இத பாத்துகிட்டே வந்த நம்ம யாழ்பாவாணனன் சார் ..டீச்சர் சொன்னா உடனே கேட்க மாட்டீகளோ ..பட்டு தெளிந்த பின் தெரியும் னாகளே பாக்கனும்...ஆத்தாடி எங்கேர்ந்து கிளம்பினாக எல்லாரும்னு தோணுச்சு..



இப்ப அப்படிதான் தோணும் வயது ஏற ஏற எல்லாம் உணருவீங்கன்னு ஒரு குரல் பாத்தா திடீர்னு அருணா செல்வம் ...இங்க பார்றான்னு.... ஆணீயே பிடுங்க வேண்டாம்னு ஓடி வந்துட்டேன்ல...

ஓடி வரும் போது இவங்களுக்கெல்லாம் ஒரு வணக்கம் சொல்லிட்டு வந்தேனே..


*என்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்கின்   டவுட்ட..கேளுங்களேன்...


*நம்ம பொன் .க .அய்யாவோட மணிமன்றத்தின் பொன்விழா வ பாத்தீங்களா...

*இவங்களுக்கு இரண்டாவது பிறந்த நாளாம்ல சொல்லவே இல்ல ஜோக்காளி 



*சகோ  பிஸியா இருக்காங்க தீபாவளி கவிதை போட்டியில...



அப்றமென்ன மாலையில் எல்லோரும் புதுக்கோட்டை மாபெரும் விழாக்கு கிளம்பிட்டீங்கத்தானே...



                                                    அப்பாடி ஏழு நாட்கள் ஓடியதே தெரியல...முதலில் பயத்துடன் தான் வலைச்சரம் கோர்க்க ஆரம்பித்தேன்..தடங்கல் இல்லாமல் முடிக்கனுமே என்ற அச்சம் தான்.அப்படியும் ஒரு நாள் கலங்க வைத்தது...எழுதிய பதிவுகள் அனைத்தும் நொடியில் அழிய..என்ன செய்வதென தெரியாமல் ஊரிலிருந்த தங்கை மைதிலியிடம் கேட்க ,அச்சச்சோ ..அக்கா மீண்டும் எழுதத்தான் வேணும்கா என்றவுடன் சோர்ந்து ஒரு நிமிடம் அமர்ந்து, பின் நம்மால முடியாதது யாராலும் முடியாது ,என்ற தன்னம்பிக்கையில் கிடுகிடுன்னு எழுதிட்டேன்ல.

அப்றம் ஒரு கவலை..! கருத்து சொல்ல எல்லோரும் வரணுமேன்னு.ஏன்னா...என் வலைப்பூவில் பதிவுகள் போடுவதோடு சரி..மற்றவர்களின் பதிவுகளை பார்க்க நேரம் ஒதுக்க முடிவதில்லை..அது எவ்வளவு தவறென்பதை உணர்கின்றேன்...

எத்தனை விசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதை நாம் கவனியாமல் இருந்துள்ளோம் என்பதை உணர வைத்தது இந்த வாரம்...மலைக்க வைத்தன நண்பர்கள்,சகோதர,சகோதரிகளின் வலைப்பூக்கள்....

ஆனா என் கவலையெல்லாம் தீர்த்து விட்டனர் அனைவரும் ..என் பிழை பொறுத்து ...இவ வரலன்னா என்ன நாம போய் கருத்து சொல்வோம்னு வந்த பெரிய மனம் படைத்த நண்பர்களுக்கும் ,சகோதர சகோதரிகளுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..இனி நான் கருத்து சொல்ல முந்திக்கணும்ல.

நன்றியுடன்


வரட்டுமா..மனம் நிறைந்த நன்றி....சீனா அய்யா மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோருக்கும்..உங்களுக்கும்.. !!!



38 comments:

  1. முத்து நிலவன் ஐயா அவர்களின் புத்தக வெளியீட்டிற்கு அவசியம் வருகிறேன் சகோதரியாரே
    படங்களுடன் பதிவு அருமை
    என்னையும் அறிமுகப் படுத்தியது கண்டு மகிழ்ந்தேன் சகோதரியாரே
    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க ..மிக்க நன்றி..த,ம.விற்கு

      Delete
  2. ”தரணிபோற்றும் பத்து தசாவதாரங்கள”

    மிகவும் பயனுள்ள அறிமுகம். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சார்.

      Delete
  3. அசர வைக்கும் பணி சகோதரி...
    வாழ்த்துக்கள் ...
    தம இரண்டு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ...மிக்க நன்றி சகோ...

      Delete
  4. ஜோக்காளியை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி !
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சார்

      Delete
  5. நவராத்திரி சமயத்தில் கொலுவுக்கு வந்து பங்கேற்றுக்கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி..
    மனம் நிறைந்த நன்றிகள்.!

    ReplyDelete
  6. உண்மைதான்!.. ஏழு நாட்கள் ஓடியதே தெரியலை..
    சிறப்பாக பணி செய்தமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்..
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மிக்க நன்றி சார்..

      Delete
  7. வாழ்த்துக்கள்

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    அழகாக பேச்சு நடையில் இன்று அமர்க்களம்.

    நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா..

      Delete
  8. அக்கா கிளம்புற அன்னைக்கு காமெடிஇல பட்டைய கிளபிடீங்க போங்க:)) சூப்பரோஓஓ சூப்பர்! சிறப்பான பணி அக்கா !! வாழ்த்துகள்:)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..மைதிலி..மிக்க நன்றிம்மா...மாலை சந்திப்போம்...

      Delete
  9. கதம்ப மணமாகக் காற்றில் பரவப்
    பதமாக இட்டீர் படைத்து!

    இன்றைய அறிமுகத்திலும் அருமையான தளங்கள் கீதா!
    அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ஒருவாரம் உருண்டு போனதே தெரியவில்லை!
    மிகச் சிறப்பான பல தளங்களை நீங்கள் அறிமுகம் செய்தீர்கள்!
    மீண்டும் உங்களை வலைப்பூவில் சந்திப்போம்!

    அரும் பணியாற்றிப் பெரும் நிறைவோடு
    விடைபெறும் உங்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்மா..உண்மை தான் ஒரு வாரம் போனதே தெரியவில்லை...நிறைய புதி நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்..நன்றிம்மா..

      Delete
  10. நீங்கள் வலைச்சரம் பொறுப்பேற்று ஏழு நாட்கள் ஓடியதே தெரியவில்லை. நன்றி மீண்டும் வருக!

    இன்று ( 05.10.14) மாலை புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் ஆசிரியர் கவிஞர் நா. முத்துநிலவன் அவர்களது நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறேன்.

    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்...மிக்க நன்றி...மாலை சந்திப்போம்...

      Delete
  11. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்கின்றேன். தங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கம் என்னை தொடர்ந்து களப்பணி மேற்கொள்ளவும், எழுதவும் வைக்கிறது. குடும்பத்துடன் இன்று காசி செல்வதால், திரு முத்துநிலவன் அவர்களின் விழாவில் கலந்துகொள்ள இயலாநிலை. பிறிதொரு நிகழ்வில் சந்திப்போம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா,நலமாக சென்று வாருங்கள் உங்கள் அனுபவங்களை கேட்க ஆவலாக உள்ளது...மிக்க நன்றி அய்யா.

      Delete
  12. வணக்கம்

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல... சிறப்பாக தங்களின் பணியை செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள் சந்திப்போம் வலைப்பக்கம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ...தொடர்ந்த உங்களின் ஊக்கமே மேலும் எழுத தூண்டியது...நன்றி.

      Delete
  13. // அப்படியும் ஒரு நாள் கலங்க வைத்தது...எழுதிய பதிவுகள் அனைத்தும் நொடியில் அழிய..என்ன செய்வதென தெரியாமல் ஊரிலிருந்த தங்கை மைதிலியிடம் கேட்க ,அச்சச்சோ ..அக்கா மீண்டும் எழுதத்தான் வேணும்கா என்றவுடன் சோர்ந்து ஒரு நிமிடம் அமர்ந்து, பின் நம்மால முடியாதது யாராலும் முடியாது ,என்ற தன்னம்பிக்கையில் கிடுகிடுன்னு எழுதிட்டேன்ல. //

    இதே மாதிரியான அனுபவம், கருத்துரைகளை எழுதும்போது எனக்கும் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. எனவே நான் அன்றிலிருந்து எப்போதும் எழுதும் எந்த பதிவினையும், கருத்துரைகளையும் MICROSOFT WORD – இல் டைப் செய்து கொண்டு COPY AND PASTE முறையில் வெளியிடுவதுதான் வழக்கம். இதனால் சலிப்பு ஏற்படுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்.

      Delete
  14. நிறைவு நாளையும் அருமையாக முடித்தீர்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ

      Delete
  15. பல்சுவைப் பதிவர்களின் அறிமுகம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  16. நீங்க எது செய்தாலும் நல்லதுதான் செய்வீங்க..நல்லாத்தான் செய்வீங்க.. இந்த வலைச்சர பதிவு எனக்கு ஒண்ணும் புரியாவிட்டாலும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . முகநூல் நண்பர்.. K.Thiagarajan, Sirkali.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .ஆஹா என் மேல் நீங்கள் வைத்துள்ள மதிப்புக்கு நன்றி...

      Delete
  17. வணக்கம் தோழி.

    இரண்டு நாட்களாக வீட்டில் இல்லை.
    உங்களின் சரத்தில் என்னையும் சேர்த்து மாலையாக்கியமைக்கு மிக்க நன்றி.

    மற்ற அனைத்து அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நன்றிம்மா

      Delete
  18. எனது கணினி பழுதாகையால் உடனடியாகப் பதிவிட வரமுடியாமைக்கு மன்னிக்கவும். எனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
    சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்..மிக்க நன்றி..

      Delete
  19. ஆஹா எனக்கு தெரியாமல் போயிற்று தோழி பதிவர் திருவிழா எப்போ என்று பார்க்க வந்தேன். அதனால் தான் இதனை கண்டேன். வித்தியாசமாக காமெடி கலந்து பதிவர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். அருமை அருமை வாழ்த்துக்கள் தோழி ...!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது