07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 8, 2015

காயத்ரி தேவி பொறுப்பில் இந்த வார வலைச்சரம்...!

வணக்கம் வலை நண்பர்களே....

இன்று முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த கிரேஸ் பிரதிபா அவர்கள் தமது ஆசிரியர் பொறுப்பை மிகுந்த ஆர்வமுடனும், பொறுப்புடனும், அனைவரும் பாராட்டும் படியாக செய்து முடித்துள்ளார். 

மகளிர் தினத்தை முன்னிட்டு அது பற்றிய வரலாறு செய்திகளை ஒவ்வொரு இடுகையிலும் பகிர்ந்து, அதோடு பதிவர்களையும் சிறப்பாக அறிமுகம் செய்து இந்த வார வலைச்சரத்தை சிறப்பாக முடித்துள்ளார்.  

அவர் தனது வலைச்சர வாரத்தில் ஏழு இடுகைகள் வரை எழுதி 220-க்கும் மேற்பட்ட மறுமொழிகளும்,  1120 பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளார்.

தனது வலைச்சர வாரத்தை அழகாக தொடுத்த கிரேஸ் பிரதிபா அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க "என்னில் உணர்ந்தவை" என்னும் வலைப்பூவை எழுதி வரும் சகோதரி காயத்ரி தேவி அவர்களை அழைக்கின்றேன். அவரைப் பற்றிய அறிமுகம் கேட்கையில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.
""நான் இப்போதைக்கு பி.ஹச்.டி ஸ்காலர், ஒரு வருசத்துல டாக்டர் ஆகிடுவேன்னு நம்புறேன். வீட்ல எனக்குன்னு ரூம்மேட்ஸ் இருக்காங்க, அவங்கள குருவிங்க, மீனுங்கன்னு சொன்னா கோபம் வரும், ஆல் மை செல்லம்ஸ்... ரொம்ப ஊர்சுத்துவேன், அதுக்கு பரிகாரமா இப்ப ரூமுக்குள்ள முடங்கிட்டேன். அப்பா, அம்மா ரெண்டுமே எனக்கு இப்போதைக்கு ஒரே ஆள் தான், கூட ஒரு போட்டியாளர் தம்பி... அன்பையும் அமைதியையும் விரும்புறவ, ஆனா ரொம்ப கோபக்காரி. எழுதுறது பிடிக்கும். அதுவும் நடைமுறை இயல்போட எழுத ரொம்ப பிடிக்கும்... சவாலான விஷயங்கள ஈசியா ஹாண்டில் பண்ணவும் பிடிக்கும். இப்போதைக்கு இவ்வளவு தான்...""

காயத்ரி தேவி அவர்களை வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் கிரேஸ் பிரதிபா...
நல்வாழ்த்துக்கள் காயத்ரி தேவி...

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....

17 comments:

  1. திருமதி. கிரேஸ் பிரபா அவர்களுக்கு நன்றி கூறி....
    திருமதி. காயத்ரி தேவி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. என்னண்ணே.... நீங்க பாட்டுக்கு என்னை திருமதி ஆகிட்டீங்க... பிரெண்ட்ஸ் எல்லாம் கிண்டல் பண்றாங்கண்ணே...

      Delete
    2. அய்யய்யோ தவறு நடந்து போச்சோ... சாரி, சரி அழிச்சிடலாம்னு நினைச்சேன் இருந்தாலும் திருமதியாக எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்.
      அதற்க்காக தமிழ் மணம் 3

      Delete
    3. ஹஹா... இதுக்காகவே உங்களுக்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ்

      Delete
  2. நன்றி பிரகாஷ்.
    வாழ்த்துகள் காயத்ரி தேவி

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் காயத்ரி தேவி,..!

    ReplyDelete
  4. சகோதரி காயத்ரி தேவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியப்பணியை சிறப்பாக நிறைவு செய்த கிரேஸ் பிரதிபாவுக்கு வாழ்த்துக்கள். இவ்வாரம் பொறுப்பேற்கும் காயத்ரிதேவிக்கு நல்வரவு.

    ReplyDelete
  6. இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. சிறப்பாக பணியை நிறைவு செய்த கிரேஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
    இவ்வாரம் பொறுப்பேற்கும் காயத்ரிதேவி அவர்களுக்கு நல்வரவு!..

    ReplyDelete
  8. கிரேஸ்க்கு வாழ்த்துக்கள்.
    காயத்ரி தேவிக்கு நல்வரவு....

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் காயத்ரி தேவி.

    ReplyDelete
  10. பணியைச் சிறப்பாக நிறைவு செய்த கிரேஸுக்கும் பொறுப்பேற்கும் காயத்ரி தேவிக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது