07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 10, 2015

வலைச்சரத்தில் எனது முதல் நாள்வலைச்சர நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

நானும் வலைச்சர ஆசிரியனாக ஆவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. சரியாய் ஒன்றரை மாதத்திற்கு முன்பு நண்பர் புதுவை வேலு அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வலைச்சர ஆசிரியராக ஒரு வாரம் பணியாற்றுவதற்கான தகவல் அது.

அப்போதுதான் புதிதாக வெளிவரும் நாளிதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றிருந்தேன். மூச்சுவிடக் கூட நேரமில்லை. பணிகள் சுமையாய் அழுத்திக் கொண்டிருந்த காலம். வலைச்சர வாய்ப்பையும் விட மனமில்லை. முடிந்தவரை தள்ளிப்போடுங்கள். கட்டாயமாக செய்கிறேன், என்றேன்.

தள்ளிப் போட்ட நாளும் வந்துவிட்டது. இனியும் கடத்த முடியாது என்ற நிலை.. இப்போதும் அதே வேலைப்பளு கொஞ்சம் கூட குறையாமல் அப்படியே தான் இருக்கிறது. அதனால், இரவுநேர தூக்கத்தை தியாகம் செய்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். சொற்பிழையோ, பொருட்பிழையோ, வாக்கியப் பிழையோ இருந்தால் தயவுசெய்து பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!

எத்தனை துயர்ப்பட்டாலும் நண்பர்களை சந்திக்கும் போது தனி மகிழ்ச்சி பிறக்கத்தானே செய்கிறது. அதனால் வலைச்சரத்திற்கு வந்துவிட்டேன். எனக்கு இந்த வாய்ப்பை நல்கிய நண்பர் புதுவை வேலு அவர்களுக்கும்,  ஐயா சீனா அவர்களுக்கும், நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

இனி என்னைப் பற்றி...

என்னைப் பற்றி பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை.
மதுரையில் பிறந்து, கடவுளின் சொந்த பூமியான கேரளாவில் குழந்தைப் பருவத்தை கழித்து, அதன்பின் சங்ககிரி, சேலம், ஈரோடு ஆகிய இடங்களில் பள்ளிப் படிப்பை முடித்து, பின் மீண்டும் கல்லூரிப் படிப்புக்கு மதுரை வந்து சேர்ந்தேன். அப்போதிருந்து வாழ்க்கை மதுரையில்தான் உருண்டோடுகிறது.

சொந்த தொழிலில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று ஆரம்பித்து, கையை சுட்டுக்கொண்டவர்களில் நானும் ஒருவன். அதன்பின் பத்திரிகையில் நுழைந்து பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்போதுதான் துயரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கின்றன.

சரி, என் சோகத்தை சொல்லி உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

சொந்தத் தொழில் இருந்து பத்திரிகை துறைக்கு வந்த கதையை மட்டும் சொல்லிவிடுகிறேன். அதை ஒரு விபத்து என்று தான் சொல்ல வேண்டும்.

நிர்கதியாய் நின்று கொண்டிருந்த எனக்கு 'தினத்தந்தி'யில் பகுதி நேர நிருபர்கள் தேவை என்று வந்திருந்த விளம்பரம் பெரும் நம்பிக்கையை கொடுத்தது. உடனே விண்ணப்பித்தேன். அழைப்பும் வந்தது.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், நான் அதுவரை தினத்தந்தியை படித்ததே இல்லை. நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் 'தினமணி' வாங்கினார்கள். அதன்பின் 'தினமலர்'. ஆக தினத்தந்திக்கும் எனக்குமான பாந்தம் வெகு தொலைவில் இருந்தது.

அப்போதெல்லாம் பகுதி நேர நிருபர்களை கிராமங்களிலும் சிறிய நகரங்களிலும் மட்டும்தான் பணியில் அமர்த்துவார்கள். மதுரை போன்ற பெருநகரங்களுக்கு முழுநேர நிருபர்கள் மட்டுமே இருப்பார்கள். முதன்முதலாக மதுரை மாநகருக்கு பகுதிநேர நிருபராக என்னை நியமித்தார்கள்.

எழுத்தை வைத்து வேலையை கொடுத்துவிட்டார்கள். ஆனால், செய்தியை எங்கிருந்து எப்படி சேகரிக்க வேண்டும்? அதற்கு என்ன வழிமுறை என்ற எந்த விவரமும் எனக்கு தெரியவில்லை.

எனக்கு மூன்று காவல் நிலையங்களை ஒதுக்கியிருந்தார்கள். அதிலிருந்து எந்த தகவல் கிடைத்தாலும் செய்திதான். அதனால், நாள் தவறாமல் காவல் நிலையங்களுக்கு சென்று வந்தேன். ஒன்றல்ல, இரண்டல்ல, பத்து நாட்கள் சென்றன. மூன்று நிலையங்களிலும் ஒரு எப்.ஐ.ஆர். கூட பதிவாகவில்லை. இப்படியே போனால் நம்மை வேலையைவிட்டு தூக்கிவிடுவார்கள். செய்தி சேகரிக்க நமக்கு தெரியவில்லை. தெரிந்ததை செய்தால் என்ன என்று யோசித்தேன். 

அதற்கு முன்பே சில பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியிருந்தேன். அதேபாணியை 'தினத்தந்தி'க்கும் கடைப்பிடித்தேன். முதல் கட்டுரையாக பூம்புகாரில் இருந்து மதுரை நோக்கி வந்த கோவலன் கண்ணகி வைகை ஆற்றைக் கடந்து மதுரைக்குள் நுழைந்த இடம், கண்ணகியை விட்டுச் சென்ற இடம், கோவலன் பிடிப்பட்ட இடம், கோவலனை கொன்ற இடம், அவனது தலை புதைக்கப் பட்ட இடம் என்று ஒவ்வொரு இடத்தையும் புகைப்படத்துடன் கூடிய நீண்ட கட்டுரையாக எழுதினேன். கிட்டத்தட்ட அனைத்து பதிப்புகளிலும் அந்தக் கட்டுரை வந்தது. 

அதற்கடுத்து காந்தியை எழுதினேன். காந்தி ஐந்து முறை மதுரைக்கு வந்திருக்கிறார். அவர் எளிய உடைக்கு மாறிய இடமும் மதுரைதான், எனது சத்தியாகிரகம் தோற்றுப்போனது என்று அவர் மனம் நொந்த இடமும் மதுரைதான். அவர் சென்ற இடத்தையும் பேசிய பேச்சுக்களையும் எழுதினேன். அது தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் அவர்களிடமிருந்தே பாராட்டைப் பெற்றுத்தந்தது. 

ஒரு மாநகருக்கு மட்டுமே நிருபராக நியமிக்கப்பட்ட என் நிலை மதுரை பதிப்பு செல்லும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் எங்கு வேண்டுமானாலும் சென்று கட்டுரை எழுதலாம் என்ற நிலைக்கு உயர்த்தியது. அப்போது தினத்தந்திக்கு கட்டுரைகள் எழுதுவதற்கான ஆட்கள் தேவையாக இருந்தார்கள். அதனால் நான் செய்தி பக்கமே போகாத நிருபராக இல்லை, கட்டுரையாளராக உயர்வு பெற்றேன்.

தினமும் எதாவது ஒரு தகவலை சொல்லலாமே என்பதற்காக 'தினம் ஒரு தகவல்' என்ற பகுதியை தினத்தந்தியில் தொடங்கினேன். முதலில் மதுரைப் பதிப்பில் மட்டும் ஒரு மாதம் வெளிவந்தது. அதன்பின் அனைத்துப் பதிப்புகளிலும் 12 வருடங்களாக தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட தகவல்களை எழுதியுள்ளேன். அவற்றில் சில தகவல்கள் புத்தகமாக வெளிவர இருக்கிறது. 

மிக நீண்ட பதிவாகிவிட்டது என்று நினைக்கிறேன். இன்னொரு சந்தர்ப்பத்தில் மீதியை எழுதுகிறேன். 

senthilmsp.blogspot.com


இதுதான் எனது வலைப்பூ. என்னை சிலருக்குத் தெரியும். பலருக்கு தெரியாது. 20 வருடங்களாக நான் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை சேமித்து வைக்கும் நோக்கத்துடனே இந்த வலைப்பூவை தொடங்கினேன். இதில் பலவித சுவைகள் இருக்கும் என்பதற்காகவே 'கூட்டாஞ்சோறு' என்று பெயர் வைத்தேன். அதில் சில சுவைகள் இங்கே: 


ஆன்மிகம் 

எனக்கு ஆன்மிகத்தில் பெரிதாக ஈடுபாடு கிடையாது. 2002-ம் ஆண்டு தினத்தந்தியில் 'உங்களுக்காக தினமும் அரைப்பக்கம் ஒதுக்குகிறேன். அதில் ஆன்மிகத்தைப் பற்றி எழுதுங்கள். நாம் ஆன்மிக செய்திகளை தருவதில்லை என்று வாசகர்கள் கூறுகிறார்கள்' என்று எனது ஆசிரியர் என்னிடம் சொன்னபோது ஆன்மிகத்தைப் பற்றி எனக்கு 'அ'னா, 'ஆ'வன்னா கூட தெரியாது. 

ஆனால், தினமும் அரைப்பக்கம் தருவது சாதாரண விஷயமல்ல. கோவில் கோவிலாக அலைந்தேன். பெரிய கோவில்களைவிட சின்னஞ்சிறிய கோவில்களைப் பற்றி நிறைய எழுதினேன். கிராமத்து தெய்வங்களை எழுதினேன். தினமும் கோவில்களில் பரிவட்டம், மாலை மரியாதை. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இந்த ஆன்மிகப்பணி தொடர்ந்தது. அந்த ஒரு வருடமும் வீட்டில் தேங்காயே வாங்கியதில்லை. 

http://senthilmsp.blogspot.com/2015/05/blog-post_2.html


http://senthilmsp.blogspot.com/2014/12/blog-post_27.html

-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-


சித்தர் அற்புதம் 

இதுவும் அப்படித்தான் திடீரென்று வாய்த்தது. சென்னை தினத்தந்தியில் இருந்து நண்பர் முருகானந்தம் 'சித்தர்களைப் பற்றி ஒரு தொடர் எழுதுங்களேன்.' என்றார். அகத்தியர், போகர் என்று சில சித்தர்களைப் பற்றி அறிந்திருந்த எனக்கு அது ஒரு சவாலான வேலை. சித்தர்களைப் பற்றி நிறைய தேடினேன். பலரிடம் விளக்கம் கேட்டேன். அவற்றையெல்லாம் தொகுத்து 'சித்தர் அற்புதம்' என்ற தொடர் எழுதினேன். இது 2010-ல் வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் 'வெள்ளிமலர்' இணைப்பில் ஒரு வருடம் வெளிவந்தது.

http://senthilmsp.blogspot.com/2015/01/blog-post_29.html


http://senthilmsp.blogspot.com/2014/11/blog-post_17.html

-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-


பயணம் 

எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இதைப் பற்றி 'ஹாலிடே நியூஸ்' பத்திரிகையில் அதிகமாக எழுதியிருக்கிறேன். அதில் பாதாமி சென்று வந்த அனுபவம் பசுமையாக எப்போதும் நினைவில் இருக்கிறது. 

http://senthilmsp.blogspot.com/2015/03/blog-post_9.html


http://senthilmsp.blogspot.com/2015/03/blog-post_29.html

-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-


மனிதர்கள் 

பலவகையான மனிதர்களை சந்தித்து அவர்களைப் பற்றி எழுதும் பகுதி இது. பெண்களின் மாதவிடாய் பிரச்னையை தீர்ப்பதற்காக தந்து உடலில் ரத்தம் நிறைந்த பையைக் கட்டிக்கொண்ட அபூர்வ மனிதர். 

http://senthilmsp.blogspot.com/2014/11/blog-post_19.html


http://senthilmsp.blogspot.com/2014/11/blog-post_61.html


http://senthilmsp.blogspot.com/2015/03/blog-post_88.html

-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-


சுற்றுலா 

உலகம் பல விசித்திரமான இடங்களை கொண்டது. அதைப் பற்றி சொல்லும் பகுதி இது. 

http://senthilmsp.blogspot.com/2014/11/blog-post_21.html

http://senthilmsp.blogspot.com/2015/01/blog-post.html

-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-


விவசாயம் 

மிக உன்னதமான தொழிலை செய்து வரும் விவசாயிகளை அறிமுகப்படுத்துவதே இந்த பகுதியின் நோக்கம். அமெரிக்க ஜனாதிபதியே இவரை தேடி வந்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமா..!

http://senthilmsp.blogspot.com/2015/05/blog-post_29.html


http://senthilmsp.blogspot.com/2015/02/blog-post_19.html


http://senthilmsp.blogspot.com/2015/02/blog-post_23.html

-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-


சினிமா 

நவீன வாழ்வியலில் மனிதனின் மிக முக்கிய பங்காக மாறியிருக்கும் சினிமாவைப் பற்றி அபூர்வ செய்திகள். 

http://senthilmsp.blogspot.com/2015/05/blog-post_13.html

http://senthilmsp.blogspot.com/2015/04/blog-post_24.html

-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-

அதிகமாக சுயபுராணம்  பாடிவிட்டது போல் தெரிகிறது. முதல் நாள் அறிமுகம் என்பதால் வேறு வழியில்லை. நாளை நமது நண்பர்களின் பதிவுகளோடு சந்திப்போம். 

நன்றி,

அன்புடன், 

எஸ்.பி.செந்தில்குமார் 

*****


88 comments:

 1. வணக்கம் வாருங்கள் நண்பர் கூட்டாஞ்சோறு புகழ் செந்தில்குமார் அவர்களே!
  சிறக்கட்டும் உமது பணி!
  சிறகடித்து பறந்து வந்து கூட்டாஞ்சோறினை கூடி நின்று மகிழ்ந்து உண்ண காத்திருக்கிறோம். அருசுவை ஆவி மணக்கச் செய்கிறது. மதுரை மல்லிகையின் வாசத்தையும் கடந்து!
  வாழ்த்துகள்
  நன்றி நண்பரே!

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. ஆஹா, கவிதையிலே வரவேற்பு 'பா' வழங்கிவிட்டீர்கள். பிரமாதம் நண்பரே! வாழ்த்துக்களுக்கு நன்றி!

   Delete
 2. //அந்த ஒரு வருடமும் வீட்டில் தேங்காயே வாங்கியதில்லை. //

  தினத்தந்தியில் ஏதாவது சம்பளம் கொடுத்தார்களா? இல்லை வெறும் தேங்காய்மூடிக் கச்சேரிதானா?

  ReplyDelete
  Replies
  1. தேங்காய் மூடியை கோவிலிலும், சம்பளத்தை தந்தியிலும் கொடுத்தார்கள் அய்யா!

   Delete
 3. அறிமுகம் ஜோராக இருக்கிறது. தொடருங்கள். என் பின்னூட்டங்களைக் கண்டு பயந்து விடவேண்டாம். கோயமுத்தூர் பாணி. அப்படித்தான் இருக்கும்.

  எனக்கு ஒரு சி.பி.செந்தில்குமாரைத் தெரியும். இப்போது இன்னோரு எஸ்.பி. செந்தில்குமாரையும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் நையாண்டித்தனமான பதிவுகளும் கருத்துரைகளும் பதிவுலகில் மிகவும் பிரசித்தமாயிற்றே, அப்படியிருக்க நான் எதற்கு பயப்பட வேண்டும். தங்கள் வருகையும் பாராட்டுக் கருத்துமே எனது பாக்கியம். மிக்க நன்றி அய்யா!

   தொடர்ந்து சந்திப்போம்!

   Delete
 4. சுய அறிமுகம்... தங்களைப் பற்றி சில தெரியாதவைகளை அறிந்து கொள்ள முடிந்தது...

  அசத்துங்க...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே!

   Delete
 5. உங்களைப் பற்றிய அறிமுகம் நன்று. தாங்கள் பதிவர்களை அறிமுப்படுத்திய விதமும் அருமையாக உள்ளது. ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா! தங்களைப் போன்ற ஆய்வாளர்களிடம் இருந்து வாழ்த்துப் பெறுவதே பெரும்பேறு

   Delete
 6. இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியினை ஏற்று நடத்த இருக்கும் திரு S.P.செந்தில்குமார் அவர்களே! தங்களை வருக வருக என வரவேற்று தங்கள் பணியினை செம்மையாய் செய்திட வாழ்த்துகிறேன்! தங்களின் அறிமுகம் மூலம் அறியாதன அறிந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்தும் வரவேற்பும் எனக்கு உற்சாகமூட்டுகிறது. முடிந்த வரை சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறேன் அய்யா!.

   Delete
 7. இத்தனை சாதித்திருக்கிறீர்களே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இது சாதனையல்ல நண்பரே! வேலையை கொஞ்சம் இஷ்டப்பட்டு செய்ததால் கிடைத்தது.

   Delete
 8. வருக.. வருக..

  அருமையான செய்திகளுடன் - இனிய பதிவு!..

  நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!

   Delete
 9. பிறகு வருகிறேன் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. காத்திருக்கிறேன்...!

   Delete
 10. அருமையான சுய அறிமுகம். பாராட்டுகள். உங்கள் சாதனைகள் மேலும் தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் பாராட்டும் வாழ்த்தும் எனக்கு ஊக்கமளிக்கிறது.

   Delete
 11. வாழ்த்துகள்... உங்கள் சாதனைகள் மேலும் தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

   Delete
 12. தளம் திறக்க அதிக நேரம் ஆகிறது... (waiting for tamilmanam.net) காரணம் தமிழ்மணம் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நம் தளத்தில் சரி செய்யலாம்... வாசகர்களுக்கு பதிவை வாசிக்க, கருத்துரை இட உதவும்...

  வழிமுறை : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html

  ReplyDelete
  Replies
  1. நான் எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனை என்றிருந்தேன். நெட்வொர்க்கில் எனபது நீங்கள் சொல்லிய பிறகுதான் தெரிகிறது. தகவலுக்கு நன்றி நண்பரே!

   Delete
  2. இப்போது வேலை செய்கிறது... submitted and voted...

   +1

   நன்றி...

   Delete
 13. வாங்க நண்பரே! வணக்கம்! வலைப்பூ வழியாக உங்களைச் சந்தித்து சில நாட்கள் ஆகிவிட்டது....மிக அழகான சுய அறிமுகம்...தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கின்றீர்கள் என்று அறிய முடிகின்றது...அட கேரளாவிலா குழந்தைப் பருவம்?!!! எந்தப் பகுதியோ?
  விடுபட்ட பதிவுகளை இங்கு குறித்துக் கொண்டோம்...வாசிப்பதற்கு.....

  அந்த ஒரு வருடமும் வீட்டில் தேங்காயே வாங்கியதில்லை. // ஹஹஹஹ் அப்போ பழமும் வாங்கியிருக்க மாட்டீர்களே! ஹஹஹ்

  வாழ்த்துகள் கலக்குங்கள் நண்பரே! நீங்கள் செய்வீர்கள் இந்த ப் பணியை மிக அருமையாக....

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே, நான்கு வயது வரை கேரளாவில் எர்ணாகுளம், பாலக்காடு, போத்தனூர் ஆகிய இடங்களில் ரயில்வே காலனியில் குடியிருந்தோம். இன்னொரு தகவல் நான் முதன் முதலாக பேசிய மொழி தமிழல்ல. மலையாளம். 5 வயதுக்குப் பின்தான் தமிழ் பேசினேன். அதற்காக இப்போது மலையாளம் தெரியுமா என்று கேட்டுவிடாதீர்கள். சுத்தமாக தெரியாது.

   Delete
  2. அட! பரவாயில்லை.. மலையாளம் எளிதுதான் நண்பரே!

   Delete
 14. சோதனைகளை கடக்காமல் சாதனையாளராக முடியாது என்பதை நிருபித்திருக்கிறீர்கள் நிருபரே..வாழ்த்துகள்.
  4.000த்துக்கும் மேல்.... அப்பப்பா..
  தங்களை எனக்கும் தெரியும் என்பதே எனக்கொரு சாதனையாக இருக்கிறதுஹஹஹ.
  வலைச்சரத்தை தங்கள் பாணியில் கலக்குங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ, ஆனால் சாதனையைவிட சோதனை அதிகம் என்பதுதான் கசப்பான உண்மை.

   Delete
 15. வணக்கம் !
  மதுரை மண்ணின் மகத்துவங்கள்
  ..........மனதில் நிறைந்த செந்திகுமார்
  புதுமைத் தமிழில் வலைப்பூவைப்
  .........பூத்துக் குலுங்கச் செய்திடுவார்
  மதுவைக் குடித்து மகிழ்ந்திருக்கும்
  ........வண்டின் மனத்தைப் போல்நாங்கள்
  இதுநாள் வரையில் கொள்'இன்பம்
  .......... இன்னும் தொடர வைத்திடுவார் !

  வாரும் மதுரை மாமனிதா
  ...........வாரப் பொறுப்பை ஏற்றவுடன்
  ஏரும் மண்ணில் கவி'எழுதி
  ..........ஏழை வாழ்வை நிறைத்தார்ப்போல்
  தாரும் இனிய அறிமுகங்கள்
  ...........தங்கத் தமிழில் முடிசூடி
  பேரும் புகழும் கொள்வலையின்
  ..........பெருமை பொங்கத் தினம்பாடி !

  சொந்தக் கதையின் சுவடுகளில்
  .........சுட்டுப் போன காலங்கள்
  எந்தப் பெரிய மனிதனுக்கும்
  .........இருக்கும் இறைவன் தீர்ப்புத்தான்
  மந்த நிலையை மாற்றிவிடும்
  ........மறத்தல் என்னும் உணர்வுகளால்
  பொந்துத் தேனாய் மனம்மாறப்
  ........பொலியும் இன்பம் தன்னாலே !

  தங்கள் ஆசிரியப் பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்  தங்கள் இனிய பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பரே,
   வலைச்சரத்தில் ஒரு கவிதைச்சரம் தொடுத்துவிட்டீர்கள். மிக்க நன்றி. தங்களின் வாழ்த்துக் கவிதை எப்போதும் என் நினைவில் இருக்கும்.

   Delete
 16. தொடர்ந்து வலைச்சரம் வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். இந்தவாரம் - வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  (காலையில் இருந்து தமிழ்மணத்தில் தொழில் நுட்ப பிரச்சினை. தளம் திறக்கவே இல்லை. கூடவே ஓட்டுப்பட்டையை அதில் இணைத்த வலைப்பதிவர்களுக்கும் பிரச்சினை. எனவே தாமதம்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

   Delete
 17. வாழ்த்துக்கள் நண்பரே! தினத்தந்தியில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு! தொடருங்கள் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வலைச்சரத்திற்கு சிறப்பு சேர்த்தது நண்பரே!

   Delete
 18. உங்களின் நீண்ட அனுபவம் இன்னும் தொடர வாழ்த்துக்கள். கூட்டாஞ்சோறு எப்போதும் பிடிக்கும் சகோ! பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கு பிடித்தவிதமாக கூட்டாஞ்சோறு இருப்பதில் மகிழ்ச்சி சகோ!

   Delete
 19. ஆன்மீகம் பற்றி அதிகம் அறியாதவரே ஆன்மீகம் பற்றி எழுதி தளம் அமைத்துக் கொண்டது ஒரு irony. நிறையச் சுட்டிகள் கொடுத்திருக்கிறீர்கள். படித்துப் பார்க்க வேண்டு ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அதை முரண்பாடு என்று சொல்லமுடியாது, அய்யா! சரியான தகவல்களை திரட்டிவிட்டால் போதும். அதற்கு மேதமை வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பது எனது தாழ்மையான எண்ணம்.

   Delete
 20. வலைச்சர ஆசிரியப்பணி ஏற்ற‌தற்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

  தாங்கள் இணைத்திருந்த அனைத்துப்பதிவுகளுக்கும் போய் வந்தேன். பிரமித்து நின்றேன். நான்கு மதங்களுக்கான புனித இடமும்
  எதிர்காலத்தில் உலகின் மிகப்பெரிய கோவிலாக உருவாகவிருக்கும் விராட் நாராயண மந்திர் பற்றிய தகவல்களும் ஓம் ஆஷ்ரம் கோவிலின் பிரமிக்க வைக்கும் கலைநயம் கொண்ட தூண்களும், விரிந்தவன் சந்த்ரோதய மந்திரும் 84 முத்திரைகள் கொண்ட நடராஜர் சிலையும் பிரமிக்க வைக்கின்றன.

  உங்கள் ஆசிரியப்பணியின் அனைத்துப்பதிவுகளுமே இப்படி பிரமிக்கத்தக்கதாய் அழகாய் அமையும் என்று எதிர்பார்க்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் நல்வாழ்த்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. பதிவுகளுக்கு சென்று படித்து கருத்திட்டது மேலும் மகிழ்ச்சியை தருகிறது. தொடர்ந்து வாருங்கள். கருத்து தாருங்கள்!
   நன்றி சகோ!

   Delete
 21. அட நீங்கள் நம்ம ஊர்க்காரரா வாழ்த்துக்கள். உங்கள் பதிவின் நேர்த்தியை கண்டு வியந்து இருக்கிறேன். இப்போது அல்லவா தெரிகிறது... உங்களின் பத்திரிக்கை துறை அனுபவம்தான் இதற்கு பின்புலம் என்று... பாராட்டுக்கள் நண்பரே...... உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க வளமுடன்

  ReplyDelete
  Replies
  1. ஆமா, எல்லாம் ஒரே ஊர்தான். மதுரைத் தமிழனே! எனது பதிவுகள் நேர்த்தியாக இருப்பதாக சொன்னதற்கும் நன்றி நண்பரே!

   Delete
 22. வணக்கம் நண்பரே அசத்துங்கள் சுயபுராணம் அதிகமாக எழுதியிருந்தாலும் அபூர்வமான நல்ல விடயங்களைத்தான் எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள் தொடர்கிறேன் தினமும்.

  ReplyDelete
  Replies
  1. அசத்துங்கள் என்று சொல்லும்போதே கூடவே பயமும் வந்துவிடுகிறது. அதற்கான நேரம் தற்போது எனக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. வருகைக்கு நன்றி நண்பரே!

   Delete
 23. ungalin pathivukal mattum vasithirukkiren. ungal patri indruthaan therinthu konden sir. aarampame addakaasam:)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தொடர் வருகைக்கு நன்றி மகேஷ்!

   Delete
 24. உங்கள் தளத்துக்கு வந்திருக்கிறேன் என்றாலும், உங்களைப்பற்றி இன்றுதான் அறிந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் எனது தள வருகைக்கும் நன்றி நண்பரே!

   Delete
 25. தங்களின் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
  அயரா உழைப்பிற்குச் சொந்தக்காரராக அல்லவா இருக்கிறீர்கள்
  வாழ்த்தக்கள் நண்பரே
  தொடருங்கள்
  தொடர்கிறேன்
  தம ’+1

  ReplyDelete
  Replies
  1. அயராத உழைப்பு அல்ல, விரும்பிய உழைப்பு நண்பரே, தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

   Delete
 26. சுய அறிமுகம் பிரமாதமாயிருக்கிறது. உங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. எழுத்துலகில் நிறைய சாதித்திருக்கிறீர்கள். நீங்கள் கொடுத்திருக்கும் சில இணைப்புக்களை வாசித்துப் பின் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன், வலைச்சர ஆசிரியர் பொறுப்பை இனிதே நிறைவேற்ற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நான் அப்படி ஒன்றும் பெரிதாக சாதித்துவிட வில்லை சகோ! தங்கள் வருகைக்கு நன்றி!

   Delete
 27. அசத்தலான துவக்கம்.
  ஆரம்பமே பல புதிய தகவல்களுடன் அறிய தந்தமைக்கு நன்றி
  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி நண்பரே!

   Delete
 28. அறிமுகமே அசத்தல்..வாழ்த்துகள்

  ReplyDelete
 29. பத்திரிகை வாயிலாக பல சாதனைகள் புரிந்துள்ளீர்கள்;
  மகிழ்ச்சி!
  தங்கள் தொகுப்பு நூலை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
  வலைச்சித்திலும் சுவையான பதிவுகள் தர வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. சாதனை என்பதெல்லாம் பெரிய விஷயம் நண்பரே! எனது புத்தகம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. தங்கள் வருகைக்கு நன்றி!

   Delete
 30. தினத்தந்தி மும்பையிலும் கிடைக்கிறது. அதன் வாயிலாக சாதனை புரிந்ததை உங்கள் எழுத்திலும் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. எங்கோ பார்த்தோமில்லை என்றும் பார்க்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்மா!
   84 வயதில் புதிதாக ஒரு வலைப்பூ தொடங்கி, அதை நடத்தும் தங்களின் ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது. தங்களின் ஆசியோடு மேலும் தொடர்கிறேன் அம்மா!

   Delete
 31. அன்புள்ள அய்யா,

  தங்களைப் பற்றியும் - மதுரை - 'தினம் ஒரு தகவல்' என்ற பகுதியை தினத்தந்தியில் தொடங்கி - தினத்தந்தியில் தங்களின் பணியினையும் விவரித்து - படங்களுடன் - முதல் நாளில் அறிமுகம் அருமையாக அனைவரும் அறியத்தந்ததற்கு மகிழ்ச்சி.

  நன்றி.
  த.ம. 8.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது அய்யா! வருகைக்கும் நன்றி!

   Delete
 32. எதுவுமே தெரியாமல் பணியில் சேர்ந்தேன் என்றீர்கள் எவருமே செய்யமுடியாத அளவு சாதித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே!

   Delete
 33. எதுவுமே தெரியாமல் பணியில் சேர்ந்தேன் என்றீர்கள் எவருமே செய்யமுடியாத அளவு சாதித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே!

   Delete
 34. தங்களைப் பற்றிய சுய விவரங்களை அறிந்துகொண்டேன்.... மிக சுவாரஸ்யம்.... நானும் தினத்தந்தி படிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் தினமலர் படித்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நாள் தான். அது போரடித்துவிட, ஆங்கில நாளிதழ்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்தேன். இந்து தமிழ் நாளிதழ் வெளியானதிலிருந்து இந்து மட்டுமே படிக்கிறேன்....

  ஒரு வாரம் வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் எழுத்தும் எனக்கு மிக மிக பிடிக்கும். தமிழ் இந்துவும் பிடிக்கும். வருகைக்கு நன்றி நண்பரே!

   Delete
 35. சுய அறிமுகம் அசத்தல் தான். எல்லாப் பதிவுகளும் கட்டாயம் பார்க்க வேண்டியவை போல் தெரிகிறது. பார்க்கலாம். ஆனால் எல்லாம் பார்க்க நேரம் நிறைய ஒதுக்க வேண்டியுள்ளதே பார்க்கலாம். ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. கட்டாயம் பதிவுகளை படித்து கருத்திடுங்கள். வருகைக்கு நன்றி சகோ!

   Delete
 36. வணக்கம்...
  மதுரையில் இருந்து கொண்டு இன்று தான் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது... மகிழ்ச்சி.... உங்களது அலைபேசி எண் நண்பர் யாதவன் நம்பியிடம் இருக்கும் என நினைக்கிறேன்.. வாங்கிக் கொள்கிறேன்.. நன்றி..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்,
   வாருங்கள் நண்பரே,
   தாங்களும் மதுரைதான் என்பதை டிடி அவர்கள் சொல்லித்தான் தெரியும். கூடிய விரைவில் நேரில் சிந்திப்போம்.
   வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி!

   Delete
 37. நீங்களும் மதுரைதானா ,இது வரையில் சந்தித்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை ,சந்திப்போம்!
  தொடர்ந்து அசத்துங்க :)

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பரே,
   தாங்களும் மதுரைதானா..?! கூடிய விரைவில் நேரில் சிந்திப்போம், பகவான்ஜி.
   வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி!

   Delete
 38. வணக்கம் சகோ,
  தங்கள் பதிவுகள் படிக்கும் போதே நினைத்தேன்,,,,,,
  அருமையாக இருக்கு சுய புராணம்,
  வலைச்சரம் தங்கள் பாணியில் இனி பிரகாசிக்கட்டும்,
  வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ!

   Delete
 39. உங்களைப் பற்றீச் சொல்லிக்கொள்ள நிறையவே இருக்கிறது . கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் பற்றிக்கொண்டது சாதனைதான் . கூட்டாஞ்சோறு பற்றி இன்றுதான் தெரிந்தது . நேரம் இருக்கும்போது வாசிப்பேன் .

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வரவே எனது பாக்கியம். எனது பதிவையும் படித்து கருத்திட்டால் இன்னமும் மகிழ்வேன். மிக்க நன்றி அய்யா!

   Delete
 40. வாருங்கள்! வாழ்த்துகள்! சென்ற வருடம் இதே வாரத்தில்தான் நானும் வலைச்சர ஆசிரியர் பணி ஏற்றிருந்தேன்! அது ஒரு நல்லனுபவம்தான்! ஒரு எழுத்தாளனாக உருவாக நடைபாதையும் ராஜபாட்டைதான்! எனது தந்தையும் ரயில் வேலைதான்! உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்! கூட்டாஞ்சோறு சுவைபார்த்துவிட்டு எழுதுகிறேன்! அன்புடன் ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அறிமுகம் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது. எனது வலைதளத்துக்கும் தொடர்ந்து வாருங்கள் நண்பரே! நானும் வருகிறேன்

   Delete
 41. தொடக்கமே அருமை! வாழ்த்துகள்!

  ReplyDelete
 42. arimuga nayaganaga valaichara aasiraraga thagali santhipadil makelche.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது