07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 23, 2015

"விடைபெற்று செல்கிறார் Dr. சுந்தரி கதிர், மடை திறந்த வெள்ளமாய் வருகிறார் தனிமரம் நேசன்."


இணையவழியே இதய உணர்வுகளை பகிரும் அன்பு தோழமைகளாகிய நம்மையெல்லாம், அன்பினிய அரும்பூக்களே என்றழைத்து, வலைப் பூவுலகின் வாசமிகுந்த வண்ணப் பூக்களை அள்ளியெடுத்து, வலைச்சரமாய் தொடுத்து வாரம் முழுவதும் வசந்தத்தை,  வாசமிகு பதிவுகளை, நமக்கெல்லாம் நல்கியபடி விடைபெற்று செல்கிறார் Dr .சுந்தரி கதிர் அவர்கள்.

இலக்கிய செழுமை இவரிடம் ஏகோபித்து இருப்பதை இவரது தனி சிறப்பு எழுத்து நடை பறைசாற்றியதை நாமறிவோம்.

அனைவரும் அறிய வேண்டிய அற்புத பதிவர்களை அடையாளம் காட்டி சென்றமைக்காக....

 Dr .சுந்தரி கதிர்  அவர்களுக்கு வலைச்சரம் குழு நன்றி கலந்த பாராட்டுக்களை வழங்குகிறது.


வலைச்சரத்தில் இவரது சிறப்பினை சீர்த்தூக்கிப் பார்க்கும் நன்மதிப்பு பட்டியல் இதோ!


Dr .சுந்தரி கதிர்  உங்களிடமிருந்து,

250 க்கும் மேற்பட்ட மறுமொழிகளும்,

 28- தமிழ் மணம் வாக்குகளையும்,

1610- க்கும்மேற்பட்ட பக்கப்பார்வைகளும் இதுவரையில் பெற்றுள்ளார்.

மருத்துவ மகத்துவத்தோடுஇலக்கிய இன்பத்தையும் ஒருசேர வழங்கிய Dr .சுந்தரி கதிர் அவர்களை நன்றி பாராட்டி, வாழ்த்தி வழியனுப்புவதில் 'வலைச்சரக் குழு'  மகிழ்ச்சியடைகிறது.


நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு, வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க.... நண்பர்   திரு. தியாகராஜா சிவநேசன் அவர்கள்  விருப்பம் தெரிவித்து முன்வந்துள்ளார்.

/http://www.thanimaram.org/
வலைத்தளம்:  தனிமரம்
இணைய முகவரி :  stsivanesan@gmail.com

இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக அவரை "வருக... வருக..." என  அழைத்து ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில்வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

இவரை பற்றிய அறிமுக உரையை இவரே தருகிறார் இதோ !

"என்னைப்பற்றி என்ன சொல்ல ஏதிலி எனக்கு
என்றும் எங்கும் இல்லை முகவரி!
என்றாலும் என் உணர்வுகளையும்
எழுதார்வத்தையும்  தனிமரம்
என்னும் வலையில்  காதலர்கள்/காதலிகள்
எழுதும் மரக்குறிப்பு
என்றும் 80 போலத்தான் இந்த
ஏழையும் ஏதிலியும்  உருகின்றேன்!
ஏனோ என்னையும் தமிழ் அன்னை வயலில்
ஏறுபிடிக்கும் ஒரு சால் காட்டும் வழிப்போக்கன் போல
என்னையும் அழைக்குது வலைச்சரம் !!
என்னும் ஒரு
எல்லாவாசமும் வீசும் மலர்மேடை
எனக்கும் தகுதியுண்டா ?,,என்ன தகுதி
என்று என்னையே என்னிப்பார்க்கின்றேன்?,,
என்றும்
அன்புடன் தனிமரம் நேசன்."

வலைச்சரம் அறிந்த வகையில், இவர் தற்பொழுது பிரான்ஸ் தேசத்தில் எர்மோன் எபோன் என்னுமிடத்தில் வசித்து வருகிறார். இவர் 2014 
ஜனவரி -லிருந்து தனிமரம் என்னும் வலைப்பூவை  ஆரம்பித்து சிறப்புற எழுதி வருகிறார்.
தனிமரமும் தோப்பாகலாம் தோள் கொடுத்தால் " என்னும் இவரது வாசகம் முற்றுலும் முழுமை பெறுவதற்கு நாமும் தோள் கொடுப்போம் தோழருக்கு!
 தனிமரம் தியாகராஜா சிவநேசன் அவர்களை,
இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியராக  "வருக... வருக..." என அழைத்து ஆசிரியர் பொறுப்பில் அமர்த்துவதில், வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.

நல்வாழ்த்துகள் Dr .சுந்தரி கதிர் 
நல்வாழ்த்துகள் தியாகராஜா சிவநேசன்

நட்புடன்,
புதுவைவேலு

21 comments:

 1. டாக்டர் திருமதி. சுந்தரி கதிர் அவர்களுக்கு நல்வாழ்த்துகளும்...
  நண்பர் திரு. தனிமரம் அவர்களுக்கு சிவப்பு கம்பளமும்...
  நட்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. கண்கொத்தி கண்ணா!
   இவ்வளவு எனர்ஜி எப்படி கில்லர்ஜி!!!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
  2. மிக்க மகிழ்ச்சி. அன்பின் நன்றி!

   Delete
 2. நன்றியும்! வரவேற்பும்!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 3. வலைச்சர ஆசிரியராய் சிறப்பாய் செயல்பட்ட சகோதரி சுந்தரி கதிருக்கும்...
  கலக்க காத்திருக்கும் நண்பர் தனிமரம் நேசனுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வண்ணமலர் சரம் தொடுக்க சொல்லி வலைப்பூக்கள் எடுத்து முன் வைத்து ..தமிழ்மணம் ஆசானமிட்டு சாசனமிட அழைக்க....

  இளைப்பாற மொழி மடி அமர்ந்து..இடைவிடாத பணியோடி பகலிரவு விழித்த விழி இமையணைக்கும் எனக்கு..முடியுமா என்றே அச்சம் மேலிட

  தோழி மீரா நம்பிக்கையிட.....தொடர ஆரம்பித்தேன்முகநூல் கவிதையணைக்க கொஞ்சம் கழலதினம் மூவர்...நால்வர் என்று ...

  மும்மூன்று பதிவர்கள் தேடி படித்து விழிப்பார்வை விமர்ச்சனமிட

  என் நாளின் மூன்று மணி நேரங்களை அமைதியாக ஆட்கொண்டபோதும்....தித்திக்க திகட்டி உண்டு மரித்தேன்...என்மொழி மடியில்இது ஓர் பெரும் சுவாச தேடலாய் அமைந்தது

  எனக்குநேரமில்லாமல்..தவறவிட்ட பதிவுகளை..பலரின் பக்கம் சென்று வாசித்து இன்பம் பெறஅமரஆயுள் தேன் துளி தந்தாள் என் அன்னைத்தமிழ்புதுவித தேடல் அனுபவமாய் அமைந்த இவ் ஆசிரிய பணி....அறிந்ததும் தெறிந்ததும்...நெகிழ்ந்து நான் நேசிக்கும் என் தாய்மொழி...எடுப்போர் எடுக்க வளைஞ்சு நெளியும் பிள்ளையாய்எப்ப்டி இப்படி புதுச்சொல் ஆயிரம் கொட்டி ஆனந்தமாடுகிறாள் என்றேஉருகி தொழுது உயிர் வணங்குகிறேன் உன்னதமொழியேபிறக்கும் பிறவிதோறும் ..உன் மடிப்பிள்ளையாகவே என்றும் நான் தழவ வரம் வேண்டும் அரும் பூ தொடுக்க ...

  அரும் பணி தந்தஅவைக்கழைத்த தமிழ் மணம்...தரணிஎங்கும் தன் மணம்வீசி திகழட்டும் எட்டுத்திக்கும்வாசித்து கருத்திட்டு வளமைஊக்குவித்ததமிழ் ரசிகர்களே...

  தமிழ் மணத்தின் மிகப் பெரும் பலம்அஃதில் நானும் ஒருத்தி என்பதில் என்றும் ஆயுள் பெருமிதம்

  ReplyDelete
 5. சிறப்பாக ஆசிரியப்பணியை நிறைவு செய்த திருமதி. சுந்தரி கதிர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வாரம் பொறுப்பேற்கும் திரு. தனிமரம் அவர்களுக்கு இனிய வரவேற்புகள். தமிழ்மணம்+1

  ReplyDelete
 6. .

  சிறப்புற செய்திட்ட (ஆசிரியப்) பணிக்காக,
  பாராட்டுகள் டாக்டர் சுந்தரி கதிர் அவர்களுக்கு!

  பணி செய்ய வரும் தனிமரம் நேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்...!!!

  ReplyDelete
 7. மிகவும் அருமையாக தொகுத்து வழங்கி எம்மையும் இணைத்து வாசம் தந்து சென்ற தென்றலாய் உங்கள் பணி அமைந்தது.. வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றியும் மா.. வாழ்க வளமுடன் என்றென்றும்...

  ReplyDelete
 8. புதிய ஆசிரியரின் வரவுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் கீதா ரவி

   Delete
 9. அழகாக கவிதையாக தொகுத்து வழங்கிய சுந்தரி கதிர் அவர்களுக்கு நன்றிகள்! புதிதாக பொறுபேற்க இருக்கும் நண்பர் தனிமரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் செந்தில்குமார் சார்!

   Delete
  2. அன்பின் நன்றி!!

   Delete
 10. சென்றவாரம் வலைச்சரம் ஆசிரியர் பணியை சிறப்பாகச் செய்து விடைபெற்றுச் செல்லும் டாக்டர் சுந்தரி கதிர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். இந்தவாரம் வலைச்சரம் ஆசிரியர் பணி பொறுப்பேற்க வரும் சகோதரர் ‘தனிமரம்’ தியாகராஜா சிவநேசன் அவர்களை வருக! வருக! என வரவேற்கிறேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது