07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 21, 2015

இமை திறக்கிறேன்...ஐந்தாம் நாளை

சன்னிதிப்பூக்களை தரிசனம் செய்து மொழியணைத்த விழித் தோழமைகளுக்கு மனநன்றி கூறி


இமை திறக்கிறேன்...ஐந்தாம் நாளை...இன்னும் சில நந்தவனப் பூக்கள்யேந்தி நடை பயில

பல் நலம் பயிலும் மொழிகளில் இன்று நாம் அறிந்துகொள்ளப்போகும் மேலாண்மைத் துறை


செயற்கை பல் பொருத்தும் துறை பற்றிய தளம்

நிரந்தர பற்கள்.....விழுந்தால்
சொத்தையால் பிடுங்கும் நிலை வந்தால்
பல் சுற்றுப்புற எலும்பு சதைப்பகுதி பாதிப்படைவதால்

வயதின் காரணமாக பற்கள் அனைத்தும் விழும் போதும்

பேச்சு தெளிவுற அமைவதற்கும்..உண்ணும் உணவுகள் அரைபடுவதற்கும்..முகத்தோற்றம் பொலிவு பெருவதற்கும்
தாடை எலும்புகள் தேய்மானம் அடையாமல் ....உமிழ்நீர் சுரப்பு அற்றுப் போகாமல்..
ஆதலால் தொடரும் நோய்கள் தொடராமல் காப்பதற்கும் இத்துறை மிகவும் பயண்படும்


முதுமையிலும்..முத்தான ..சத்தான சிரிப்பைவழங்கி முக அழகூட்டும் துறை

*********************************************************************************
நந்தவனப்பூக்களில் ..முதலாய் நம் விழி நுழைந்து மணக்க காத்திருக்கும் மலர்.....


பூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்
..என்றுதன் அடையாளமிட்டு இதழ்விரித்த இதயச்சாரல்


சமூக ஆர்வலாய் தன்னை செதுக்கி......தமிழ்குடில் எனும் வாசகர்கள் வட்டம் வளர்த்து
தாய்மொழித்தொண்டாற்றும் பெருமகனாரின் இவ்விதயச்சாரல்
துள்ளும் மொழியின் உதிரச்சாரல்......

இறையாண்மையாய்..

இவர் தொடுக்கும் கேள்வி பதில்களான..மனக்குமுறல்....ஓர் மாபெரும் மனித இனம் அழிய
அருகிருந்தும்...அமைதியாய் ..செய்வதறியாது கைகட்டிய கோழைகளாகவே    இருக்கிறோமே ..என்று
நம் மீதே நமக்கு வெறுப்பு வரும் அளவுக்கு..யோசிப்பு... பதற வைக்கும் பதிவு...
எதுவாகினும்..நில பிரச்சனையிலேயா இழந்தோம்..ஓர் நீள்பெரும் மக்கள் கூட்டத்தை

பதவிக்கும் ஆசைக்குமா..பங்கிட்டோம் நம் மான உதிரங்களை...
இறைவனாய் எழுந்தவனை பழிகொடுத்தோம்..இறையாண்மை..என உரக்ககூவி ...விஷம் வைத்து

நினைத்தால் தூக்கம் வராத கொடுமையை..நீள்பெரும் துயரத்தை..மொழிஎடுத்து பொங்கியுள்ளதில் விழிக்கிறார்
தமிழ் காதலன்..தமிழன் எனும் அவமான உணர்வில்..அலறலாய்


மொழிக்காற்றில் முதலில் புயல் ஒன்று கண்டோம்..தென்றலும் உண்டுதானே

காதலன் இங்கு சொல்கிறார் தன் காத்திருப்பு
மலர் இதழ் கண் திறக்க ....கொடியில் குடியிருக்கும் வண்ணத்துப்பூச்சியாய்...
தவிப்பு மொழியிலும்...எழில் வளைந்து தன் நிலை சொல்லும் வளமை....மொழிச் சுழிவு..என்னே வளநயம்

நல்லிரவில் மெல்ல இதழ் திறக்கும் மலரை ...எட்டி சுவாசமணைத்து விழி அசைக்காமல் பார்த்திருக்கும் நேச உணர்வை விதைத்து செல்கிறது..இவர்தம் மொழியாடல்

கன்னித்தமிழே என் அழகியென ..செம்மொழி காதலிக்கும் வரம் பெற்ற..இத் தமிழ் காதலன்
பக்கம் சென்று பதியன் செய்யுங்கள் உங்கள் வருகையை...

*********************************************************************************
வற்றாநதியாய்..தன்னை..நீரோட்டம் பரப்பி....காற்றில் ஈரமொழி எழுதும் வல்லமை பெற்ற...


தம்பி கார்த்திக் புகழேந்தியின் கவின் நதி வலைப்பூ தான் பிறந்த மண்மொழி எடுத்து எழுத்தாடுவது
இவர்தம் புகழ் ஈரம்


ராசாதி ராசா குதிரை மேல் அமர்ந்து ஆட்சிசெய்ததையும்.....
சாமக்கோடாங்கி கோணிப்பையோடு வந்து பிடிச்சுட்டு போவாங்கிற பயமுறுத்தலையும்....கதையாய் சொன்ன பரம்பரைய தொலைத்து.....


எந்திர வாழ்வுக்குள் ஒரு மெசினாய் ஓடிக்கொண்டிருக்கும் காலசக்கரத்தில்...
இவர் போன்ற கதை சொல்லிகள்..வாழ்வை இலகுவாய்....வாழும் வாய்மொழியாய்...உணர்வெடுத்து ...வாழ்ந்த மனிதர் தைத்து சொல்லும் போது....
பெளர்ணமி மொட்டைமாடி தென்றல் அமர்ந்து ...முழங்கால் கட்டி ஆடிக் கொண்டே அசைந்த பிரியமாய் கேட்கிறது மனம்
லைட்ஸ் ஆப் சொல்லி ...வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்...
கண்ணாடிச் சட்டத்திற்குள் வாழும் ..ராமசாமி நாடாரை.....நம் கண் இமைக்குள் கண்ணீராய்
இளகுகிறது.....நெகிழும் மனம்


வரலாற்று தேடல்களின் வளமான பிரியம் இவரென்று....சொல்லும் இனிய பதிவு....
இவர்தேடி ருசியணைத்து தம் மொழியில்....மனம் செரித்த


கடாரம் கொண்டான் : கடாரமும் தமிழகமும் - டத்தோ .வீ. நடராஜன்...
இவரின் விமர்ச்சனப் பிரியங்கள் வாசிக்கும் போதே....வசித்து வருகிறது...


சோழசாம்ராஜ்ய வளமைகளை

வற்றாநதியை....கொஞ்சம் அள்ளி..கமண்டலம் அடைத்துள்ளேன்....சொல்மொழியாய்..சென்று நீராடி
நாணலாடுகள் நதிக்கரையோரம் தோழமைகளே

*********************************************************************************

ஆராவமுத பூவாய் அடுத்து எடுத்து தொடுக்கும் பூ ....வாசிப்பு பூ வசியமிருக்கும் வலைப்பூ

பேச்சை தொழிலணைத்து ..ஆசையாய் எழுத்து கட்டி மொழித் துயிலுறங்கும்
திருமதி உமா மோகனின் ....குரலாய்உயிரும் மெய்யும் முதலெழுத்தாய் எடுத்து தொடுத்து கட்டியுள்ளார்...உயிராடும் ஆசைகளை எழுத்தாய்

அழகுப் பிள்ளை மொழியில்..அரவம் சொல்லும் நெளி வாழ்வில் தான்
எத்தனை தத்துவ அர்த்தங்கள்.....பயமில்லா குழந்தையாய் தான் பார்க்கிறோம்..கழுத்து சுற்றி காலமாய் வலம் வரும் விடங்களை


அர்த்த பொதிவுகள் ஆயிரம் நிறைந்த சொல்லாடல் தழுவும் நிதர்சன வலிமை...அரவம்

எழுத்து மயிலிறகு கொண்டு பறக்க வானம் தேடும் பறவைசிறகடிப்பே இணையக் கடைதோகையில்லா பெண்மயில் பலவற்றுக்கு பறக்க வானம் தரும் சுதந்திர இறகை .இவர் தன் மொழியில்

எளிமை விரித்தாட வைத்தது,,கூட்டிக்கொண்டு வருகிறது கூடவே....மழைத்தூறல் கூதலை

இருதுளிச் சாரல் என் விழிமேகம் வீசி செல்ல 


டார்வின் படிக்காத குருவியாய் புத்தகமிட்டு தம் மொழி சேகரித்த ..
இந்த வானொலி..வரவேற்பு குரல் வலை சென்றி மொழி சிக்குங்கள் தோழமைகளே 

*********************************************************************************


தமிழ் மண ..நந்தவன செழுமையில்....களக் கட்டுரையாய்....இதழில் எழுதிய கவிதை புத்தகமெடுத்து கருத்தணைக்க வருவது..நண்பர் சதீஷின்

சங்கம் வளர்த்த தமிழ்ச்சொல்லேடு அணைக்கும் ......சங்கவிசெவியுணவாய்...ருசியுணவு சொல்லி இவர் பந்திபரிமாறும்...விருந்தோம்பல் சாடல்...கல்யாணச்சோறு

நலமற்ற நாகரீக. பந்திமுறையை....துவர்ப்பு மொழி சொல்லி இவர் பரிமாறும் பாரம்பரியம்
தமிழனின் வாழ்வியல் தளவாட உறைவிடங்களை ....போஷனமாய் ..போஷிக்கிறது

பயன் மொழிகள் பல சொல்லும் பலமொழிகளை ..
இவர் செப்போடு சேகரித்த விதம் கிராமிய கிழவி சொலவடைப் பேச்சுக்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது

அப்பத்தாக்களோடும் தாத்தாக்களோடும்...நெட்டி முறித்து கொட்டாவி விட்டு காற்றில் கரையும் மொழிக்குள் தான்
எப்படி ஒளிந்துள்ளது.....ஓர் கிளைபரப்பும் ஆலம் மனித வாழ்வு
களிக்காட்டு ராசன்..எங்க அய்யன் கி.ரா வை கணநேரத்தில் நினைவில் கொண்டு வந்து நிறுத்தி...கிழம் மொழி குசும்புகள் ரசனை ப்ரியமாடவைக்கிறது...

தெளிந்த நீரோடையாய்...தேடி தேடி சேகரித்த கூழாங்கல் கூட்டுப் பிரியமே..
இவரின் சந்தனஜவ்வாது...சங்கவி வலைப்பூ

சென்று மணம் பெற்று...மனச்சுகந்தம் நிறையுங்கள் தோழமைகளே

நந்தவனப் பூக்கள் ..நால்வரின் ..வலைப்பூ தொடுத்து..தங்களோடு சேர்ந்து நானும் நல் மணம் பெற்று ....நிறைந்து நின்று விடைபெறுகிறேன்..சுவாச வாசம் ஏந்தி


நாளை சந்திப்போம்....இன்னும் சில சீதனப் பூக்களுடன்......

24 comments:

 1. இன்றைய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தொடர் வருகைக்கு நன்றி.

   Delete
 2. தெளிந்த நீரோடை...
  தேடித் தேடி சேகரித்த நந்தவனப் பூக்கள்!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி!!

   Delete
 3. அருமை!

  இன்றும் மூன்று மலர்கள்
  அறிமுகம்...
  நமது வலைச்சரத்தில்!

  அறிமுகமே...
  அவ்வலைப் பக்கங்களின்
  அரியதொரு ஆய்வாக...

  மூவரும்
  பன்முகச் சிந்தனையாளர்கள்..
  புரிகிறது!

  மனிதக் கல்லில்
  மனிதம் சிலை வடிக்கப்
  புறப்பட்ட உளிகள்...
  தெரிகிறது!

  மனிதப் பயிர் வளர்க்க
  எழுத்து ஏர்பிடித்த
  சொல்லேருழவர்கள்...
  அதுவும் புரிகிறது!

  மூவருக்கும்
  நல்வாழ்த்துக்கள்!

  அறிமுகம் செய்துள்ள
  கவிஞருக்கும்
  நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி! அன்பின் நன்றி!!

   Delete
 4. ஒவ்வொரு முறையும் புதிய அறிமுகங்கள். அவர்களது தளங்களைச் சென்று பார்த்தேன். நன்றி. நாளை சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி!,தொடர் வருகைக்கு நன்றி!

   Delete
 5. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
  எனது நண்பனும் கவிஞனுமான தமிழ்காதலனின் இதயச்சாரல் அறிமுகத்துக்கு நன்றி.
  சமூக ஆர்வலனாய் காயத்ரி அக்காவுடன் இணைந்து தமிழ்க்குடில் நடத்துவதாலே அவன் தனது வலைப்பூவில் வாசம் செய்வதில்லை....
  மீண்டும் தனது கவிப்பயணத்தை அங்கும் தொடர இந்த அறிமுகம் உந்துதலாக இருக்கட்டும்...
  மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துகளுக்கு அன்பின் நன்றி!!

   Delete
 6. சில தளங்கள் புதியவை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி! தொடர் வருகைக்கு நன்றி!!

   Delete
 7. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்! ஒருவரைத் தவிர மற்றவர்கள் எனக்கு புதியவர்கள். அவர்களது வலைப்பக்கத்திற்கும் செல்ல இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி! தொடர் வருகைக்கு நன்றி!!

   Delete
 8. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 9. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 10. பதிவர்களுக்கு
  நல்வாழ்த்துகள்!!!

  .

  ReplyDelete
 11. அருமையான தொகுப்பு டா. இன்றைய அறிமுகப்பூக்களுக்கு என் வாழ்த்துகள்

  ReplyDelete
 12. அனைவருக்கும் என் வாழ்த்துகள் டாக்டர்

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி ! அன்பின் நன்றி ஆசானே !!

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது