07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 24, 2015

என்னைத்தைச் சொல்ல ஏதிலி )))))

தமிழ் எழுத்து என்ற  வலையுலக உறவுகளுக்கு   உலகமேடை போல தளம் கொடுக்கும் வலைச்சரம்  வாரம் ஒரு ஆசிரியர் என்ற ஒப்பற்ற பதவியை கொடுத்து பொன்னாடை போர்க்கின்றது. அந்த பொன்னாடையை இரண்டாவது தடவையும் இனிதே  தனிமரம் எனக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பை தந்த புதுவைவேலுவுக்கும், ஆசிரியர் சீனா ஐயாவுக்கும், உதவி ஆசிரியர் தமிழ்வாசிக்கும் நன்றிகள் சொல்லிய வண்ணம்  வலையுறவுகளுக்கு வண்ணத்தமிழ் !


அது என்ன வண்ணத்தமிழ் என்றால் தமிழுக்குத்தான் அதிக உவமை, உவமானம் என்று அணிகள் ஆயிரம் இருக்கு என்று எங்கோ வானொலியில் கேட்டது ஞாபகம் தாலாட்டுது ! என்னைப்பற்றி என்ன சொல்ல முன்னம் சொல்லியது இங்கே[[[ .http://blogintamil.blogspot.fr/2013/04/blog-post_8.html.

 ஏதிலி எனக்கு
என்றும் எங்கும் இல்லை முகவரி!
என்றாலும் பாரிசில்  இருந்து
என் உணர்வுகளையும்
எழுதார்வத்தையும்  தனிமரம் 
என்னும் வலையில்  காதலர்கள்/காதலிகள்
எழுதும் மரக்குறிப்பு 
என்றும் 80 போலத்தான் இந்த
ஏழையும் ஏதிலியும்  உருகின்றேன்!


ஏனோ என்னையும் தமிழ் அன்னை வயலில்
ஏர்பிடிக்கும் ஒரு சால் காட்டும் வழிப்போக்கன் போல
என்னையும் அழைக்குது வலைச்சரம் !!
என்னும் ஒரு
எல்லாவாசமும் வீசும் மலர்மேடை 
எனக்கும் தகுதியுண்டா ?,,என்ன தகுதி
என்று என்னையே எண்ணிப்பார்க்கின்றேன்?!!


,,தனிமரம் வலையில் கடந்த 5 வருடங்கள் தொடர்ந்து எழுத்துபிழைகளுடன் ஏதோ தொடர்களில் வாழ்கின்றேன் .இதுவரை   மலையகத்தில் முகம் தொலைந்தவன், நொந்து போகும் ஓர் இதயம், உருகும் பிரெஞ்சுக்காதலி, என் உயிரே என்னில் இருந்து  விலகும் நொடி, தாலியோடு தனிமரம் போல தவிக்கின்றேன் , விழியில் வலி தந்தவனே தொடர்களில்  4 மின்நூல் வடிவம் கண்டு இருப்பது சந்தோஸம்.7வது  தொடர்  இப்போது எழுதிக்கொண்டே/கொன்றே[[  இருக்கின்றேன் முகம் காண ஆசையுடன் 


.இப்போது என்னிடம் ஐபோன் இல்லாத நிலையில் அதிகம் முன்னர் போல இணையத்துடன் இணைய முடியவில்லை என்றாலும் மீண்டும் வருவேன் விரைவில்!

என் வலையில் எல்லாம் நான் விரும்பி எழுதும் பதிவுகள்  பல அதில் எழுத்துப்பிழை என்ற  குறைகள்   இருந்தாலும் !

என் தனிமை, கோபம் , சந்தோஷம், ஆசை , கனவு ,  தேடல் எல்லாம் தனிமரம் வலையில் செதுக்கின்றேன் வெட்டியாக வலையில் இருந்து !!  காரணம்  வரலாறு பலரும் அறியட்டும் என்று!  எனக்கு எப்போதும் மொய்க்கு மொய் பிடிக்காது வலையுலகில்!!

  என்னை திமிர் மிடித்தவன் என்று ஈழத்துப்பதிவர்கள்  சிலர் முன்னர் பிரிந்து போய் எதிக்கட்சி வசை போல உள்குத்து போட்டாளும் தனிமரம்2015 லும்  இன்னும் இருக்கின்றேன்  வலையில் !!

இது ஆணவம் இல்லை .அகங்காரம் இல்லை .எனக்கு முகவரியே தனிமரம் வலைதான்!சொந்த செலவில் சூனியம் போல 

எனக்கு அதிகம் பாடல் பிடிக்கும் இலங்கை வானொலியோடு வாழ்ந்த கடைசித்தலைமுறையில் நானும் ஒருவன்!

 மூத்த அறிவிப்பாளினி  என் மதிப்புக்கு உரிய வானொலி வழிகாட்டி என் அம்மா போல என்னைச்செதுக்கிய ஊடக நெஞ்சுக்கு அஞ்சலிப்பகிர்வு  இது- http://www.thanimaram.org/2012/03/blog-post_24.html

 அண்ணாவும் தங்கையும் வலையில் சேர்ந்தாவாத்துக்கூட்டம் என்றும், ஒரே கும்மியும் என்று யார் கண்பட்டதோ என் தங்கையுடன் இப்போது வலையில், முகநூலில், தனிமெயிலில் தொடர்பு இல்லாத நிலை என்றாலும் என் தங்கை வாத்து அல்லவா வருவாள் நம்பிக்கையுடன் http://www.thanimaram.org/2012/09/blog-post_19.html -

கவிதை பிடிக்கும் அதில் சினேஹா மீது ஒரு ஈர்ப்பு என்று இப்படியும் ஒரு ஜல்சா[[http://www.thanimaram.org/2012/09/blog-post_27.html

 கதை எழுதி ஆசிரியர் பீடம் தரம் இல்லை என்று நிராகரித்தாலும் இருக்கவே இருக்கு தனிமரம் வலை இனி என் வாழ்வில் யார் விரும்பி அழைத்தாலும் கதை எழுத தனிமரம் தயார் இல்லை என்று வித்தை காட்டியது இது ! தரம் இல்லையா என்று நான் அறியேன்[[http://www.thanimaram.org/2014/11/blog-post_29.html.

 பாடல்கள் தான் என்னை கவிதை . தொடர்கதை எழுத தூண்டுகின்றது ஆனாலும் ஆன்மீகம் என்னை சபரிமலை வரை இழுத்துச்செல்லுகின்றது . ஏதோ வழிப்போக்கன் இந்த காதலிக்கு அதிகம் நன்றி சொல்லக்கடமை இருக்கு  வலையில் அதிக நட்பை பெற்றுத்தந்த இரண்டாவது தொடர்.


எதுகை மோனை என்னை
எழுத மறுத்தாலும்
ஏதிலியின் முதுகு எதுக்கும்
என்றும் வளையாது என்ற திமிர்
எப்போதும் தொலையாது!
என்பதை என் மரத்தில் கீறி  எழுதிய
என் நண்பனை என்றும் மறக்காத
ஏழை நண்பனோடு மலைகளில்
என் வலைப்பயணம் என்றும் தொடரும்!!!

என்றும் நட்புடன் தனிமரம் நேசன்
என் விருப்பம்  இது-



என் தேடல்கள் தொடரும் அடுத்த பகிர்வாக!...


52 comments:

  1. அதிகாலை வேலை அதனால் இன்று நேரத்துடன் கடை திறந்தாச்சு மூத்தவர்கள் சிரமத்துக்கு மன்னிக்கவும் அன்புடன் தனிமரம்.

    ReplyDelete
  2. அன்புள்ள அய்யா,

    வணக்கம். வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்கும் நேசமுள்ளவருக்கு பாசமுள்ளவனின் வாழ்த்துகள். அறிமுகம் பார்த்தேன். அசத்தல்.

    ‘தனிமரம்’ தோப்பாகாது என்றாலும் தோப்பில் உள்ளதெல்லால் தனிமரம்தான்’
    -படித்த ஞாபகம்.

    பணி சிறக்க வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete

  3. இந்தவாரம் வலைச்சரம் ஆசிரியர் பணி பொறுப்பேற்க வரும் சகோதரர் ‘தனிமரம்’ தியாகராஜா சிவநேசன் அவர்களை வருக! வருக! என வரவேற்கிறேன்.

    “ பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
    இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை “

    என்று பாடுகின்றார் பட்டினத்தார். எனவே கூட்டி கழித்துப் பார்த்தால், இவ்வுலகில் அனைவருமே ஏதிலிகள் தாம்.

    ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  4. இதுவரை தங்களை அறியேன். இனி தங்கள் வலைப்பூ சென்று பார்க்கிறேன். ஆசிரிய பணி சிறக்க வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  5. இந்த வார வலைச்சர ஆசிரியராக,இரண்டாம் முறை பொறுப்பேற்றிருக்கும் தங்களை வரவேற்று, தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  6. Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  7. தனிமரம் என்றாலும் நல்லதொரு கனிமரம்!..

    அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  8. எனக்கு அதிகம் பாடல் பிடிக்கும் அட! என்னைப்போல் ஒருவர் என்று நினைக்க வைத்த அறிமுகம் வாழ்த்துகள்! கலக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  9. வணக்கம் நேசன்!.. ஓ!.. இந்த வாரம் வலைச்சரம் அலங்கரிக்கும் பணி
    தங்கள் கரங்களிலா! மிக்க சந்தோஷம்!
    தொடருங்கள் சகோதரரே!

    தொடருகிறேன் நானும்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  10. எனக்கு வலைச்சரமும் புதுசு!! தனிமரமும் புதுசு உங்கள் எழுத்துகளை படிக்க ஆவலாக உள்ளேன் நன்றிகளும் வாழ்த்துகளும்

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  11. அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள். தொடர்ந்து வாசிப்பேன். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  12. சுவையான அறிமுகம்! தொடர்கிறேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  13. மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  14. வாருங்கள் நண்பரே,
    வலைச்சர ஆசிரியரப் பணிக்கு வாழ்த்துக்கள். வரும் ஏழு நாட்களும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    ராஜேஸ்வரி சண்முகம் பற்றிய பதிவு இலங்கை வானொலி கேட்ட அன்றைய காலத்துக்கே அழைத்துச்சென்றது. என்னை மிகவும் கவர்ந்த அறிவிப்பாளர்.
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  15. நண்பர் தனிமரம் நேசன் அவர்களால் இவ்வாரம் வலைச்சரம் அலங்கரிக்கப்படும் என்பதில் சந்தோஷமே... வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  16. வலைச்சரத்தில் இவ்வார ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள் நேசன் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  17. வணக்கம் தனிமரம்,
    வருக வருக,,,,,,, வலைச்சரத்தில் தாங்கள் சரம் தொடுக்க வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  18. வருக வருக! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  19. வாங்க நேசன்.கலக்கலான ஒரு வாரம் வருது! வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  20. அறிமுகதில் என்னஒருதன்னடக்கம்வாழ்த்துக்கள்சகோ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  21. சுய அறிமுகம் சுருககமாகவும் சுவாரஸ்யமாகவும்!


    தொடர்வோம், இறைநாட்டப்படி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  22. இந்த வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  23. பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  24. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் தமிழுலகம் சேர்ந்தவர் நீங்கள் ஏதிலி என்று குறைபடுவது சரியில்லை என்றே நினைக்கிறேன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  25. வருக நேசன் . உங்கள் எழுத்து தனித் தன்மை வாய்ந்தது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உங்கள் வலையையை வாசித்து வருகிறேன். புலம் பெயர்ந்தவர்கள் சோகம்,ஆற்றாமை நேசம்,நதபு என பலவிதமான உணர்வுகளைக் கொண்ட களம் தனிமரம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சந்தோஷமாக இருக்கு அண்ணாச்சி அடிக்கடி என் வலையை வாசிப்பவர் என்று பல பதிவில் கேட்கும் போது !வாழ்த்துக்கு நன்றி முரளி அண்ணாச்சி!

      Delete
  26. நேசன் தாங்களும் அம்மா ராஜேஸ்வரி சண்முகம் அவர்களால் செதுக்கப்பட்டவரா?!!!! நான் அவரது மடியில் விளையாடி, அவருடன் பழகி அவருக்கு எதிர் வீட்டில் வாழ்ந்தவள்....இலங்கையில்...மிக்க மகிழ்ச்சி..---கீதா

    துளசி, கீதா : வாழ்த்துகள் நேசன்....

    ReplyDelete
    Replies
    1. அவர் எனக்கு ஒரு ஊடகத்தில் குரு போல இருந்தார் ஆனாலும் என் பொருளாதார தேடல் இன்னொரு கடல் தாண்டி ஓட வழிவகுத்தது! ஆனாலும் இன்னும் அவர் நேசிப்பு குறையவில்லை.நீங்க கொடுத்து வச்ச மகராசி அம்மா பாசமே தனிச்சுகம்! நானோ ஒரு ஏதிலி இப்ப புலம்பெயர் தேசத்தில் கீதா! ]வலையில் பொதுவில் படிக்காதவன் தனிமரம். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

      Delete
  27. வலைத்தள ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பக்கம் புதிது இன்று இணைத்துள்ளேன். இனி படிக்கிறேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது