விடை பெறுகிறேன்!
வலைச்சரத்தில் எழுத சீனா அய்யா அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நான் ஒன்றும் பெரிய பதிவர் அல்ல. வலைப்பூ தொடங்கி ஒரு வருடம் கூட ஆகவில்லை. மேலும் பெரிதாக எதையும் இன்னும் எழுதவில்லை. ஆனால் பல்வேறு நல்ல விசயங்களை இத்தனை நாட்களில் இங்கே கற்றுக் கொண்டேன். ஏராளமான நண்பர்கள் கிடைத்துள்ளனர். ஒரே ஒரு மனக்குறை இப்போதெல்லாம் வேலைப்பளு, உடல்நிலை காரணமாக முன்போல் எல்லா வலைப்பூக்களையும் பார்வையிடவோ கருத்திடவோ முடியவில்லை என்பதுதான்.
வலைச்சரம் எழுத அழைத்ததே எனக்கு மிகவும் பெருமையாகவும் ஊக்கம் தரக்கூடியதாகவும் இருந்தது அதற்கு முதலில் வலைச்சர நிர்வாகத்தினர் அனைவருக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வலைச்சர வாரம் எனக்கு மிக இனிமையாக அமைந்தது. வலைப்பூக்கள் பலவற்றை புதிதாக அறிந்தேன். இன்னும் ஏராளமான வலைப்பூக்கள் உள்ளன. எல்லாவற்றையும் தொகுத்து போட முடியவில்லை.
எல்லோர் பின்னூட்டங்களுக்கும் பதில் போட முடியவில்லை. மன்னிக்கவும். இத்தனைப் பதிவுகளிலும் கருத்துரை வழங்கி என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும், பதிவர்களுக்கும் வலைப்பூக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லா பதிவர்களும் மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெற வாழ்த்தி வணங்குகிறேன்.
நன்றி வணக்கம்!
|
|