07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 15, 2011

நகைச்சுவை தொகுப்பு 1


வலைப்பூக்களை பார்வையிடுபவர்களில் பெரும்பாலோனர் விரும்புவது நகைச்சுவைப் பதிவுகளே. இவை நம் இறுக்கத்தை குறைத்து மனதை லேசாக்குகின்றன. அப்படிப்பட்டவைகளில் 5 பதிவுகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

முதலில் சீரியசான பதிவுகளை எழுதி வந்த இவர் சிறிது இடைவெளிக்கு பிறகு நகைச்சுவையுடன் பதிவுகளை எழுதுகிறார். படிக்க படிக்க புன்னகை பூக்க வைக்கின்ற இவரது பதிவுகள். தன் பெயருக்கான காரணத்தை எவ்வளவு நகைச்சுவையாக சொல்கிறார் பாருங்கள்.

படிக்கும்போதே நல்லா சிரிச்சிகிட்டே படிக்கிற மாதிரியான பதிவுகள் எப்போதாவது காண்போம். அப்படிப்பட்டவைகளின் ஒன்று இப்பதிவு: உன்னைக் கொல்லாம விட மாட்டேன். இவரும் கலவையான விசயங்களை எழுதுகிறார், இவரின் நகைச்சுவைகளும் நன்றாக உள்ளன.


இவர் ஒரு டாக்டர். நல்ல கதை கவிதைகள் எல்லாம் எழுதுவார். இவரின் ஒரு பதிவு ரொம்ப சிரிச்சிகிட்டே படிச்சேன். இவர் எதைச் சொல்ல வந்தாரோ...ஆனால் செம காமெடியா இருந்தது பதிவு.

முழுக்க முழுக்க நகைச்சுவையான பதிவுகளை எழுதுபவர்களில் இவரும் ஒருவர். ஒரு எழுத்து தேர்வை எவ்வளவு நகைச்சுவயாக சொல்லியிருக்கிறார். இரு பாகங்களையும் படித்துப் பாருங்கள்.

கதை, கவிதை, விமர்சனங்கள், சமூகப் பதிவுகள் என சீரியசான பதிவுகள் எழுதி வந்தாலும் அவ்வப்போது இது போன்ற நகைச்சுவையான பதிவுகளையும் எழுதுவார். இப்பதிவை படியுங்கள் அப்பாவி கணவர்களின் நிலை தெரியும்.

நகைச்சுவை என்பதால் மட்டும் அதற்கு இரு பதிவுகள் வெளியிடுகிறேன். இன்னொன்றிலும் ஐந்து பதிவுகளை அறிமுகப்படுத்துகிறேன்.:-)

23 comments:

 1. காலை வணக்கங்கள் எஸ்.கே.. :))

  ReplyDelete
 2. பிரதீபா மட்டும் புதுசு அதை பார்க்கிறேன்

  ReplyDelete
 3. எல்லாமே சென்று படித்தேன்.... ரசிக்கத்தக்கது...
  நன்றி!

  ReplyDelete
 4. நச்சென்ற அறிமுகங்கள்..

  ReplyDelete
 5. சுவைகளுக்கென ஒரு கூட்டணி எனின்
  அதில் நகைச்சுவைக்கு ஒரு
  நாற்பது இடங்கள் தரவேண்டும்.

  யாரையும் எப்பொழுதும்
  எப்படியும் கவர்ந்திடும் இழுத்திடும் .
  கணமதில்
  காலையும் வாரிவிடும்

  சுவையாக எழுதலாம். ஆனால்,
  நகைச்சுவையாக எழுதுவது சிலருக்கே சாத்தியம்.
  அக்கலைக்கு ஒரு விலை இல்லை.
  அலை பெருகும் அக்கடலுக்கோர்
  எல்லை இல்லை.

  அக்கடலில் முழுகுவோம்.
  ஆனந்தமாவோம்.

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 6. வித்தியாசமான பதிவுகள் ஒவ்வொன்றும்....
  கலக்குங்க எஸ் கே... :)

  ReplyDelete
 7. அறிமுகப்படுத்தப்பட்ட யாரையுமே எனக்குத் தெரியல.. அறிமுகத்திற்கு நன்றிங்க எஸ்.கே..

  ReplyDelete
 8. படிச்சு
  சிரிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 9. படித்தேன்.. ரசித்தேன்..... ஹா.. ஹா.. ஹா..
  நல்ல அறிமுகங்கள் எஸ்.கே. நன்றி.

  ReplyDelete
 10. 'நச்'சென்ற அறிமுகங்கள்.

  ReplyDelete
 11. எஸ் கே டச்....

  அறிமுகங்களும் அறிமுகப்படுத்திய விதமும் கலக்கல் எஸ் கே

  ReplyDelete
 12. இது ரொம்ப ஓர வஞ்சனை!
  அஞ்சு பதிவர்களை அறிமுகப்படுத்தினீங்க சரி, ஆனா மூணு பேரு உள்ள படம் மட்டும்தான் போட்டுறிக்கீங்க. மிச்சம் ரெண்டு பேர் படங்கள் எங்கே?

  ReplyDelete
 13. //கக்கு - மாணிக்கம் said...
  இது ரொம்ப ஓர வஞ்சனை!
  அஞ்சு பதிவர்களை அறிமுகப்படுத்தினீங்க சரி, ஆனா மூணு பேரு உள்ள படம் மட்டும்தான் போட்டுறிக்கீங்க. மிச்சம் ரெண்டு பேர் படங்கள் எங்கே?//

  ஹே ஹே ஹே ஹே எங்கே எங்கே எங்கே எங்கே எங்கே.......???

  ReplyDelete
 14. @ வைகை said...
  வணக்கம். வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி!

  @ எல் கே said...
  ரொம்ப நன்றி சார்!

  @asiya omar said...
  மிக்க நன்றிங்க!

  @sury said...
  தாங்கள் நகைச்சுவைக்கு அளித்த விளக்கம் அருமை. வருகைக்கு நன்றிங்க!

  @பிரபு எம் said...
  மிக்க நன்றி நண்பரே!

  @பதிவுலகில் பாபு said...
  ரொம்ப நன்றி நண்பரே!

  @சமுத்ரா said...
  மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்!

  @Madhavan Srinivasagopalan said...
  ரொம்ப நன்றி ரசிச்சதுக்கும் சிரிச்சதுக்கும்!:-)

  @சே.குமார் said...
  ரொம்ப நன்றிங்க!

  @அருண் பிரசாத் said...
  உங்கள் ஊக்கத்திற்கு மிக்க மிக்க நன்றிங்க!

  @கக்கு - மாணிக்கம் said...
  சார் ஏன் சார் மாட்டி விடுறீங்க:-))))

  ரொம்ப நன்றி சார் வருகைக்கு!

  @ MANO நாஞ்சில் மனோ said...
  நீங்களுமா:-)))
  ரொம்ப நன்றி வருகைக்கு!

  ReplyDelete
 15. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி எஸ்.கே சார். நீங்க என் ப்ளொக் படிக்கறீங்கன்னு எனக்குத் தெரியாது. ரொம்ப சந்தோசமாக இருக்கு. என்னை அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி. மற்றவர்களுடைய பதிவுகளையும் வாசித்துக் கொண்டிருக்கும் போதே இங்கே பின்னூட்டமிடுகிறேன். பெயர் பதிவு உங்களுக்குப் பிடிச்சிருப்பதை இட்டு மகிழ்ச்சி.

  சீரியசான பதிவு எழுதற வயசு உனக்கில்லைன்னு நிறையப் பேர் திட்டின திட்டில் கொஞ்சம் லைட்டாக எழுத ட்ரை பண்ணுகிறேன். என்னுடையதில் கோவிந்த் மாமாவுடனான எனது உரையாடலே எனக்குப் பிடிச்ச நகைச்சுவை பதிவு. பார்ப்போம் எவ்வளவு தூரம் எழுத முடிகிறது என்று. படிச்சுப் பாருங்கள். கண்டிப்பாக பிடிக்கும்.

  திருப்பவும் நன்றி கூறி விடை பெறும்
  சுனாமி.

  ReplyDelete
 16. நகைச்சுவை அறிமுகங்கள் அருமை... தொடர்ந்து நல்ல நல்ல அறிமுகங்கள்... வாழ்த்துக்கள்.


  எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)

  ReplyDelete
 17. @ சுக்கு மாணிக்கம்,
  ஏனுங்க இந்த வில்லத்தனம். நானும் முதலில் இந்த படத்தைப் பார்த்த உடன் ஒரே சாக்காகிவிட்டேன். சரி மூணு பேரோட படம் தான் இருக்கு, நாம்ம படம் இன்னும் வரலேயேன்னு சந்தோசமாக இருந்தால். ஹி ஹி.

  ReplyDelete
 18. தக்குடு, கோபி சார் இரண்டு பேரையும் முதலே தெரியும். அவர்களுடைய பதிவுகளில் நீங்க தெரிவு செய்ய இரண்டுமே எனது பேவரிட்டும் கூட.

  ReplyDelete
 19. எனது நகைச்சுவைக்கு நல்லதொரு அங்கீகாரம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி எஸ்.கே.

  எனது நகைச்சுவை பதிவை ஸ்க்ரோலிய, ஸ்மைலிய அனைவருக்கும் நன்றிகள்.

  தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். மீண்டும் நன்றி !

  ReplyDelete
 20. தெய்வமே! டொட்ட டொய்ங்! தெய்ய்ய்ய்ய்ய்வமே!! ...:) லிங்கு குடுத்த நம்ப SK சாருக்கு தக்குடு அக்கவுண்ட்ல ஒரு டீ சொல்லுப்பா!! (அப்பிடியே SK சார் அக்கவுண்ட்ல தக்குடுவுக்கு ஒரு டீயும் 3 பஜ்ஜியும் சொல்லுப்பா!)....:))

  ReplyDelete
 21. எல்லாம கலகல அறிமுகங்கள் :-))

  ReplyDelete
 22. எஸ்.கே

  மிக்க நன்றியும் சந்தோஷமும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது