07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 11, 2011

பேசும் எழுத்துக்கள் - வலைச்சரம் வெள்ளி

உழவனின் “நெற்குவியல்”
உழவுக் குடும்பத்தில் பிறந்து, வயல்வெளியில் சுற்றித் திரிந்து, மாடுகன்றுகளோடும் தலையசைக்கும் நாற்றுகளோடும் பழகிச் சிலிர்த்து, கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் நேசமெனும் உரத்தில் மரமாகி, காலத்தின் கட்டாயத்தில் பட்டணத்தில் நடப்பட்டவர். 'உழந்தும் உழவே தலை’ என வாழ முடியாத ஏக்கத்தை ஓரளவேனும் ஈடு செய்ய, குற்ற உணர்வை சற்றேனும் போக்கிக் கொள்ள ‘உழவன்’ என்ற பெயரில் எழுதி வந்தாலும் ‘உழத் தவறியவன்’ என நேர்மையாகத் தனை விளித்துக் கொள்கிறார் வலைப்பூவின் முகப்பினிலே. கிராமத்து நினைவுகளாய் எங்க ஊரு பொங்கலு.

வளர்ந்து வரும் இளங்கவிஞர். இணைய இதழ்களிலும், ஆனந்த விகடன், கல்கி பத்திரிகைகளிலும் இவர் கவிதைகள் வெளியாகி வருகின்றன. எளிமையான வார்த்தைகளில் அழுத்தமான கவிதைகள் என்பது இவரது சிறப்பு. மனதில் நின்ற பல கவிதைகளில் ஒன்றிலிருந்து..
“..பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்
யாரோ கொண்டுவந்த உணவை
யாரோ சாப்பிடுகிறார்களா இல்லை
இவ்வளவு பேரும் ஒரே குடும்பத்தார்களா
புரியவில்லை வியந்தேன்
சாப்பிட்டு முடித்த ஒருவன்
தண்ணீர் கூட குடிக்காமல்
எங்கோ ஓடுகிறான்.


ஆவல் அதிகரிக்கிறதா? மீதி வரிகளுக்கு, சாரை சாரையாய்..

மகள் அகமதி இவருக்குத் தந்த கவிதைகள் யாவுமே ரசனைக்குரிய நிறைமதியாய்.., மன்னிக்கவும் [இன்றைய ஆனந்த விகடனில்..].

உரையாடல் போட்டிக்காக இவர் எழுதிய (சின்னஞ்)சிறுகதை ‘பசி’ பலரால் பேசப்பட்ட ஒன்று.

அனுபவக் கட்டுரைகள், அரசியல் அலசல்களோடு நையாண்டியும் நன்றாக வரும்:‘ஆ...ராசா வர்றான்… செம்ப எடுத்து உள்ள வை

சுற்றுப்புற சூழலில் இவர் காட்டிய அக்கறை புதிய தலைமுறையில் சிறப்புக் கவனத்துடன் பிரசுரமானது.

உழவனின் வயல் வெளியில் அறுவடைக்குக் காத்திருக்கின்ற செழிப்பான கவிக் கதிர்களை தொகுப்பாக்க எந்த பதிப்பகம் முந்திக் கொள்ளப் போகிறதோ, அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!


நீலகண்டனின் எழுத்துக்கள்
பத்திரிகை, இணைய இதழ்களில் எழுதுபவர் என்றாலும், மிகச் சமீபமாக ஒருமாத காலத்துக்குள்ளாகதான் இவர் எழுத்துக்கள் எனக்குப் பரிச்சயம். பத்திரிகையில் வந்த அருமையான ஒரு கவிதையால் பெயர் கவனத்தில் நிற்க, மறுநாள் இணையத்தில் தற்செயலாக அதே பெயர் தென்பட, நுழைந்தேன் இவர் தளத்துள். பேசட்டும் அவர் எழுத்தே.‘அப்பாவின் குடை’யிலிருந்து சில வரிகள்:
சரி செய்ய முடியுமா என்று
குடைக்காரனிடம் கேட்டேன்.
சரி செய்து விடலாம்
என்றவன் சரி செய்து
கொண்டே அப்பா
எப்படி இருக்கிறார் என்றான்.
அப்பாவைக் காப்பாற்ற
முடியவில்லை என்றேன்
வருத்தத்துடன்.
அப்படியா....அதான்
அப்பாவைக் காணவில்லை...
என்றவன் சரி செய்த
குடையை விரித்தான்.
விரித்த கருங்குடைக்குள்
அப்பாவிற்கே உரிய
சிரிப்பு மழை
இடி முழக்கமாய்.....


அப்பாவின் குரல் மட்டுமா, விரியும் இவரது ஒவ்வொரு கவிக்குடைக்குள்ளும் இடிமுழக்கங்கள்தாம். மனிதர்களைப் பற்றியதான அவதானிப்பு இந்தக் கவிதையில் வியக்க வைக்கிறது, சுயநலத்தின் சுற்றுப்பாதை. இவரது ‘எழுத்தின் சாரம்இப்பதிவின் கடைசிப் பத்திக்கும் சாரம்.

மத நல்லிணக்கம், மனித நேயம், மரங்களின் மேலான பாசம் எல்லாம் பேசும் சிறுகதை ‘இந்த வேம்புகள் கசப்பதில்லை’:"உலகத்திலே உயிர்களுக்குள்ளே எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எல்லா உயிர்களையும் எல்லாரும் நேசிக்கணும்... ஏதோ ஒரு சக்தி நம்மள நம்ம நடைமுறைகளைக் கட்டுப்படுத்திக்கிட்டிருக்கு. அதை நம்பறவங்க நம்பலாம். அதைக் கடவுளா எடுத்துக்கலாம். அதை வெவ்வேறு பெயரிலே அவங்கவங்க விருப்பத்துக்குப் பிடிச்சமாதிரி வேண்டிக்கலாம். அடுத்தவங்க நம்பிக்கைகளை மதிக்கறதுதான் உண்மையான தன்னம்பிக்கை. உலகத்திலே எல்லோரும் எல்லோரையும் நேசிக்கணும். யாருக்கும் எந்த சுயநலமும் இருக்கக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் இன்னொருத்தரை அன்பு செலுத்தறதுங்கறது லட்சிய வெறியா இருக்கணும். உயர்வு தாழ்வு இல்லாம எல்லாத்துக்கும் உதவி பண்ணனும்."
‘வீடு திரும்பல்’ மோகன் குமார்
சட்ட வல்லுநர். அன்றாட நடப்புகளை வாரம் ஒருமுறை வானவில்லாகத் தொகுத்து வழங்குகிறார். வாசிப்பில் அறிந்தவற்றையும் தன் சொந்த அனுபவத்தில் உணர்ந்தவற்றையும் மற்றவரும் பயன்பெற ‘வாங்க முன்னேறிப் பார்க்கலாம்’ [அனைத்துப் பாகங்களும் இந்த இழையில்] எனத் தொடராக எழுதி வந்துள்ளார். தொடர்ந்து எடுத்துச் செல்வார் என எதிர்பார்ப்போம்.

ஒரு குழுவாக செயல்பட்டு செய்து வரும் சமூக சேவைகளை சமீபத்தில்தான் வலைப்பூவில் பகிர்ந்து கொண்டுள்ளார்: அரசுப் பள்ளியில் ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி: “அருள் பேசி முடித்து விட்டு சென்றதும் நான் உடனே கை குடுத்து பாராட்ட போக, நான் வருவது தெரியாமல் அவன் போய் கொண்டே இருந்தான். அவன் பின்னால் நான் சென்று கொண்டே இருக்க, அவன் பாட்டுக்கு நடக்க, பள்ளியே " ஓஒ ..அருள் " என்று அலறியது. அருள் முதுகில் தட்டி கூப்பிட்டு கட்டி பிடித்து நான் பாராட்ட மாணவர்களுக்கு அவர்களை பாராட்டியது போல் மகிழ்ச்சி ஆரவாரம்..” இது போன்ற பகிர்வுகள் மற்றவருக்குத் தூண்டுதலாக அமையும் என்பது ஒருபுறமிருக்க, அவரது முயற்சிகளுக்குத் தோள் கொடுக்கவும், தேவையில் இருப்பவருக்கு உதவிக் கரம் நீட்டவும் பலரும் முன் வந்திருப்பது நெகிழ்வுக்குரியது.

தொலைக்காட்சி கலந்துரையாடல்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுபவர். அவ்வப்போது கவிதைகளையும் பகிர்ந்து கொள்ளுகிறார், சுயம்.
எங்கள் ப்ளாக்
ஐந்து பேர் குழுவாக எழுதி வருகிறார்கள். இது 'உங்கள் ப்ளாக்' என அவ்வப்போது போட்டிகள், கேள்விகளை முன் வைக்கிறார்கள். வாசகர்களும் ‘ஆம், நம்ம ப்ளாக்’ என உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்கள். 87 வாரங்களாக, ஞாயிறு தோறும் வித்தியாசமான, ரசனைக்குரிய புகைப்படம் ஒன்றைத் தெரிவு செய்து, தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். சமீபத்தில் ஸ்ரீராம் எழுதிய நாய்மனம்-1, நாய்மனம்-2 : “நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மெல்ல மறந்து போகும் என்று எண்ணியிருந்ததும் நடக்கவில்லை. தண்ணீர் என்றாலே ப்ரௌனிக்கு பயம் குளிக்க வரமாட்டேன் என்று அடம் பிடித்து தரையைத் தேய்த்துக் கொண்டே வருவாள். ஆனால் குளிக்கும்போது சமர்த்தாக இருப்பாள். தண்ணீர்க் குவளை அல்லது பாட்டிலை அவள் கண்ணில் காட்டினால் போதும் சென்று ஓரமாகப் பதுங்கி விடுவாள். அப்படிப் பட்டவள் அடித்துப் பெய்யும் மழையில் என்ன செய்கிறாளோ என்று மனைவி கவலைப் பட்டாள்.
‘மனசு’ சே.குமார்
தேசம் விட்டு தேசம் சென்றாலும் 'மனசு' மொத்தத்தையும் பிறந்த வளர்ந்த கிராமத்திலேயே விட்டு வைத்திருப்பவர்.கிராமத்து நினைவுகளாய், தீபாவளியும் பட்டாசும்..!, மழைக்காலம்:. “சிறுவயதில் மழைக்காலம் என்றாலே சந்தோஷம்தான்... அதற்கு காரணம் நிறைய.... காலையில் பேய் மழை பெய்தால் பள்ளிக்கு செல்ல வேண்டாம், மதியம் மழை வருவது போலிருந்தால் புத்தகப்பையை பள்ளியில் வைத்துவிட்டு கிராமத்துப் பிள்ளைகள் என்ற முறையில் பள்ளி விடும் முன்னே வீடு திரும்பலாம், மழை பெய்து விட்டபின் லேசான தூரலில் நனைந்து கொண்டே வந்து இரவு முழுவதும் தும்மி காலையில் பள்ளி செல்வதை தவிர்க்கலாம்... இப்படி நிறைய...பள்ளியில் இருந்து வரும்போது வழியெங்கும் நீர் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நீரில் ஆட்டம் போடுவதுடன் புத்தகப்பையும் இருக்காதல்லவா... ஓடும் நீரின் குறுக்கே அணை கட்டி, செங்கல் கற்களை வைத்து பாலம் போல் கட்டி விளையாடி வீடு வந்து சேர நேரமாகும். இதில் இரண்டு குழுக்களாய் பிரிந்து பாலம் கட்டி தண்ணீரை பாலத்தின் அடியில் இருந்து மேலே வருவது போல் செய்வதில் போட்டி வேறு.

கிராமத்தில் வாழ்ந்த காலக்கட்டத்தை இவர் சிறுகதைகளாய் தொடர்ந்து பதிவு செய்து வரும் விதம் பாராட்டுக்குரியது: கருத்தபசு, அப்பா சேர்.
‘எண்ணங்கள் இனியவை’ ஜீவ்ஸ்
இவரை புகைப்பட வல்லுநராக மட்டுமே ஒருசிலர் அறிந்திருக்கின்றனர் என்பதை கவிதை கதைகளை தன் வலைப்பூவில் பதியும் போது ‘அட இதெல்லாம் கூட எழுதுவீர்களா?’ என்று வரும் பின்னூட்டங்கள் நிரூபிக்கும். மரத்தடி குழுமத்தில் கவிதைகள், வெண்பாக்கள், சிறுகதைகள் என மின்னியவர். 2006-ல் ஆரம்பித்த வலைப்பூவுக்குச் சரியாக ஐந்தாண்டுகள் நிறைவுற்றிருக்க, மொத்தம் 74 இடுகைகளே. எழுதும் படைப்புகளை குழுமங்களிலும், இப்போது கூகுள் buzz-லும் பகிர்வதோடு நிறுத்தி விடுகிறார். வலைப்பூ என்பது ஒருவரது படைப்புகளுக்கான சேமிப்பிடம் என்பதை உணர்ந்து, சமீபத்தில் அதீதம் இதழில் நல்ல வரவேற்பைப் பெற்ற சக்கிரவியூகம் பாகம்:1 , பாகம்:2 சிறுகதை உட்பட, விட்டுப்போனவைகளை தொடர்ந்து வலைப்பூவில் பதிய அழைக்கிறேன் இவரை. சிறுகதைகள்: உறவுகள், ஒரு மெளனத்தில் அலறல்:
அன்று உத்தரையின்
கருக் கொல்ல எய்தது
ஓர் அஸ்திரம்தான்.
இன்று எங்களின் உயிர் கொள்ள
எய்யப்படும் அஸ்திரங்கள் தாம்
எண்ணற்றவை.
” கருப்பையின் உள்ளிருக்கும் பெண்சிசுவின் கதறல்!

கவிதைக்கு, தவறுகள்.

[கோரிக்கையை ஏற்று உடனடியாக செயல்பட்டிருக்கும் ஜீவ்ஸுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்:)!]

‘திரும்பி வாங்க!’
ருமையான பதிவுகளைத் தந்து கொண்டிருந்த பலர் இப்போது நீண்ட விடுப்பில். ஆதங்கத்துடன் விடுக்கிறேன் அவர்களுக்கு அழைப்பு. அமித்து அம்மா, புதுவண்டு [தாய்மைக்காக எடுத்த விடுப்பு. வாசகர்களை வாடவிடாமல் ஆரம்பியுங்களேன் அமித்து தம்பியைப் பற்றியும், நாதனின் தங்கையைப் பற்றியுமான அப்டேட்ஸுடன்:)!], அனுஜன்யா, சதங்கா [சகலகலா வல்லவராக சமையல், சித்திரம் உட்பட கதை, கவிதைகளில் அசத்தியவர்];தமிழ் பிரியன் கதை எழுதும் ஆர்வம் இருக்கு, திறமை இருக்கு, ஆனா முயற்சி இல்லை:)!; ஜெஸ்வந்தி[மிகச்சிறந்த சிறுகதையாளர், என் பிரிய பபிதா பாகம் 1; பாகம் 2.].

எவரும் எதற்காகவும் எழுதுவதை விட்டு விடாதீர்கள். என் நூறாவது பதிவில் நான் வைத்த கோரிக்கை:“இடைவெளிகள் தவிர்க்க முடியாது போனாலும் எழுதுவதை முழுவதுமாய் நிறுத்தி விடாது இருப்போம். நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம். மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம். ஊக்கம் எனும் உரத்தினால் ஆக்கங்களும் பகிர்வுகளும் பதிவுகளாய் மலரட்டும். வலைப்பூ வனம் செழிக்கட்டும்.

மீண்டும் எனக்கு நானே உரக்கச் சொல்லிக் கொள்கிறேன், உங்களுக்கும் கேட்கட்டுமென்றுதான், எஸ்.நீலகண்டனின் எழுத்தின்சாரம் கவிதையிலிருந்து..,
“எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள்”
***

55 comments:

 1. /“எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள்”/
  எம் எண்ணமும் அதுவே!

  ReplyDelete
 2. நல்ல அறிமுகங்கள் அக்கா.

  //மீண்டும் எனக்கு நானே உரக்க சொல்லிக் கொள்கிறேன், உங்களுக்கும் கேட்கட்டுமென்றுதான்//

  நல்லாவே கேக்குது அக்கா :))

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு. மிக அழகாகத் தொகுத்து இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 4. எல்லாரையும் (ஒருவர் தவிர) படித்து வருவதால், இந்த அறிமுகங்களைப் பார்த்ததும் ஒரு இசைவான புன்முறுவல் வருகிறது. வாழ்த்துகள்.

  அமித்து அம்மாவை நானும் ரொம்ப மிஸ் பண்றேன்னு சொல்லுங்க. :-))))

  ReplyDelete
 5. //“எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள்”//

  அழகான வரிகளும் அறிமுகங்களும்..

  ReplyDelete
 6. சிறந்த தெரிவுகள். தெரிவுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. /“எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள்”/
  அருமையான பகிர்வு. மிக அழகாகத் தொகுத்து இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 8. உங்கள் எழுத்தால் என் எழுத்துக்களை நிறைய நண்பர்கள் அறிய முடிந்ததை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி. நன்றிகள் ராமலக்ஷ்மிக்கும் வலைச்சரம் இதழுக்கும்...

  ReplyDelete
 9. எல்லோரையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆவல் அழகாக தெரிகிறது.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. திறமை மிக்கவர்களின் அறிமுகங்கள்.நன்றி அக்கா.

  ”பிடிக்கிறது எழுத.
  நேரம்தான் தள்ளி நிற்கிறது.”

  ReplyDelete
 11. நல்ல அறிமுகங்கள் . ஆர்வமூட்டும் எழுத்துக்கு நன்றி

  ReplyDelete
 12. உயிரோட்டமாய் எழுத்துக்களை வெளிப்படுத்தும் அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. அன்புடன் அருணா said...
  ***/“எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள்”/
  எம் எண்ணமும் அதுவே!***

  நல்வார்த்தைகள்! நன்றி அருணா:)!

  ReplyDelete
 14. சுசி said...
  ***/நல்ல அறிமுகங்கள் அக்கா.

  //மீண்டும் எனக்கு நானே உரக்க சொல்லிக் கொள்கிறேன், உங்களுக்கும் கேட்கட்டுமென்றுதான்//

  நல்லாவே கேக்குது அக்கா :))/***

  நல்லது சுசி, நன்றி:))!

  ReplyDelete
 15. அமுதா said...
  //அருமையான பகிர்வு. மிக அழகாகத் தொகுத்து இருக்கிறீர்கள்.//

  மிக்க நன்றி அமுதா.

  ReplyDelete
 16. ஹுஸைனம்மா said...
  //எல்லாரையும் (ஒருவர் தவிர) படித்து வருவதால், இந்த அறிமுகங்களைப் பார்த்ததும் ஒரு இசைவான புன்முறுவல் வருகிறது. வாழ்த்துகள்.

  அமித்து அம்மாவை நானும் ரொம்ப மிஸ் பண்றேன்னு சொல்லுங்க. :-))))//

  நன்றி ஹுஸைனம்மா, சொல்லிடலாம்:)!

  ReplyDelete
 17. அமைதிச்சாரல் said...
  ***//“எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள்”//

  அழகான வரிகளும் அறிமுகங்களும்../***

  மிக்க நன்றி சாரல்!!

  ReplyDelete
 18. தமிழ் உதயம் said...
  //சிறந்த தெரிவுகள். தெரிவுக்கு வாழ்த்துகள்.//

  மிக்க நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 19. அம்பிகா said...
  ***/“எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள்”/
  அருமையான பகிர்வு. மிக அழகாகத் தொகுத்து இருக்கிறீர்கள்./***

  மிக்க நன்றி அம்பிகா.

  ReplyDelete
 20. குமரி எஸ். நீலகண்டன் said...
  //உங்கள் எழுத்தால் என் எழுத்துக்களை நிறைய நண்பர்கள் அறிய முடிந்ததை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி. நன்றிகள் ராமலக்ஷ்மிக்கும் வலைச்சரம் இதழுக்கும்...//

  நல்ல எழுத்தை அறிமுகம் செய்ய வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி. மிக்க நன்றி நீலகண்டன்.

  ReplyDelete
 21. goma said...
  //எல்லோரையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆவல் அழகாக தெரிகிறது.
  வாழ்த்துக்கள்//

  மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 22. ஹேமா said...
  //திறமை மிக்கவர்களின் அறிமுகங்கள்.நன்றி அக்கா.

  பிடிக்கிறது எழுத.
  நேரம்தான் தள்ளி நிற்கிறது.”//

  அதையும் வளைத்துப் பிடிப்போம், வாங்க:)! நன்றி ஹேமா.

  ReplyDelete
 23. பார்வையாளன் said...
  //நல்ல அறிமுகங்கள் . ஆர்வமூட்டும் எழுத்துக்கு நன்றி//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பார்வையாளன்.

  ReplyDelete
 24. asiya omar said...
  //உயிரோட்டமாய் எழுத்துக்களை வெளிப்படுத்தும் அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி ஆசியா:)!

  ReplyDelete
 25. “இடைவெளிகள் தவிர்க்க முடியாது போனாலும் எழுதுவதை முழுவதுமாய் நிறுத்தி விடாது இருப்போம். நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம். மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம். ஊக்கம் எனும் உரத்தினால் ஆக்கங்களும் பகிர்வுகளும் பதிவுகளாய் மலரட்டும். வலைப்பூ வனம் செழிக்கட்டும்.”//

  மனதார வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 26. எங்கள் ப்ளாக் அறிமுகத்துக்கு நன்றி. அறிமுகப் படுத்தப் பட்ட மற்றவர்களுடனும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

  ReplyDelete
 27. @ புதுகைத் தென்றல்,

  மிக்க நன்றி தென்றல்.

  ReplyDelete
 28. ஸ்ரீராம். said...
  //எங்கள் ப்ளாக் அறிமுகத்துக்கு நன்றி. அறிமுகப் படுத்தப் பட்ட மற்றவர்களுடனும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.//

  நன்றி ஸ்ரீராம்:)!

  ReplyDelete
 29. Migavum magizhchi. Nandri

  (Travelling & no Tamil font. Please bear with it)

  ReplyDelete
 30. @ மோகன் குமார்,

  நன்றி:)!

  ReplyDelete
 31. கோரிக்கையை ஏற்று உடனடியாக செயல்பட்டிருக்கும் ஜீவ்ஸுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்:)!

  ReplyDelete
 32. நல்ல அறிமுகங்கள். குறிப்பாக பிளாக்கை ஆரம்பித்துவிட்டு, நான் எழுதியதை நானே படித்துக் கொண்டிருந்த வேளையில் என்னுடைய எழுத்துக்களைப் படித்து பின்னூட்டம் எழுதி என்னை தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிப்பவர்களில் முதன்மையானவர்
  ‘வீடு திரும்பல்’ மோகன் குமார் சார் என்பதை இங்கு நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  //மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம்.//

  இரண்டு நாட்களுக்கு முன்பு, நானும் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். இப்பொழுது தங்கள் வார்த்தைகளில்.
  நன்றி.

  ReplyDelete
 33. அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். அதற்குள் நீண்ட விடுப்பில் இருக்கும் எனக்கும் தந்த அழைப்பு மனதைத் தொட்டது தோழி.
  எழுதாவிட்டாலும் மற்றவர்கள் எழுதுவதைப் படிக்காமல் விடவில்லை நான். விரைவில் எழுத்துடன் சந்திக்கிறேன்.நன்றி

  ReplyDelete
 34. மிக அருமையான விரிவான பகிர்வு ராமலெக்ஷ்மி..:))

  ReplyDelete
 35. ”வலைப்பூ வனம் செழிக்கட்டும்.”

  ReplyDelete
 36. அமைதி அப்பா said...
  //நல்ல அறிமுகங்கள். குறிப்பாக பிளாக்கை ஆரம்பித்துவிட்டு, நான் எழுதியதை நானே படித்துக் கொண்டிருந்த வேளையில் என்னுடைய எழுத்துக்களைப் படித்து பின்னூட்டம் எழுதி என்னை தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிப்பவர்களில் முதன்மையானவர்
  ‘வீடு திரும்பல்’ மோகன் குமார் சார் என்பதை இங்கு நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  //மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம்.//

  இரண்டு நாட்களுக்கு முன்பு, நானும் இப்படி ஒரு முடிவு எடுத்தேன். இப்பொழுது தங்கள் வார்த்தைகளில்.
  நன்றி.//

  மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.

  ReplyDelete
 37. T.V.ராதாகிருஷ்ணன் said...
  //நல்ல அறிமுகங்கள்.//

  நன்றி டிவிஆர் சார்.

  ReplyDelete
 38. ஜெஸ்வந்தி - Jeswanthy said...
  //அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள். அதற்குள் நீண்ட விடுப்பில் இருக்கும் எனக்கும் தந்த அழைப்பு மனதைத் தொட்டது தோழி.
  எழுதாவிட்டாலும் மற்றவர்கள் எழுதுவதைப் படிக்காமல் விடவில்லை நான். விரைவில் எழுத்துடன் சந்திக்கிறேன்.நன்றி//

  மகிழ்ச்சி ஜெஸ்வந்தி. தங்கள் எழுத்துக்காகக் காத்திருக்கிறோம்:)! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 39. தேனம்மை லெக்ஷ்மணன் said...
  //மிக அருமையான விரிவான பகிர்வு ராமலெக்ஷ்மி..:))//

  நன்றி தேனம்மை:)!

  ReplyDelete
 40. மாதேவி said...
  //”வலைப்பூ வனம் செழிக்கட்டும்.”//

  ஆம் மாதேவி, மிக்க நன்றி:)!

  ReplyDelete
 41. அழைப்பு விடுத்தமைக்கு நன்றி ராம் மேடம் :)-

  எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள் // எனக்கே எனக்குன்னு சொன்னா மாதிரி இருக்கு இந்த வரிகள்

  மீண்டும் எழுதவே விரும்புகிறேன், ஆனால் சூழல், தொடர்ச்சியான வேலைகள் கட்டிப்போட்டுவிடுகின்றன. முயற்சிக்கிறேன்.

  ஹூசைனம்மா உங்கள் அன்புக்கு மிகவும் நன்றிப்பா :)-

  ReplyDelete
 42. Ennaiyum Arimugam seiththarkku nanri akka.... arimugangal anaivarukkum vazhththukkal...

  ReplyDelete
 43. அறிமுகங்களோடு அழைப்பும் சேர்த்து அருமையான பதிவு அக்கா.

  அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 44. அமிர்தவர்ஷினி அம்மா said...
  //அழைப்பு விடுத்தமைக்கு நன்றி ராம் மேடம் :)-

  எழுதுவது பிடிக்குமென்றால் எழுதிக் கொண்டே இருங்கள் // எனக்கே எனக்குன்னு சொன்னா மாதிரி இருக்கு இந்த வரிகள்

  மீண்டும் எழுதவே விரும்புகிறேன், ஆனால் சூழல், தொடர்ச்சியான வேலைகள் கட்டிப்போட்டுவிடுகின்றன. முயற்சிக்கிறேன்.//

  இந்த வார்த்தைகளே போதும், விரைவில் எழுதுவீர்கள் எனும் நம்பிக்கையைத் தருகிறது. நன்றி அமித்து அம்மா:)!

  //ஹூசைனம்மா உங்கள் அன்புக்கு மிகவும் நன்றிப்பா :)//

  ஹுஸைனம்மா, கேட்டுச்சா:)?

  ReplyDelete
 45. சே.குமார் said...
  //Ennaiyum Arimugam seiththarkku nanri akka.... arimugangal anaivarukkum vazhththukkal...//

  நல்லது குமார். தொடர்ந்து எழுதுங்கள். உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்:)! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 46. சுந்தரா said...
  //அறிமுகங்களோடு அழைப்பும் சேர்த்து அருமையான பதிவு அக்கா.

  அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!//

  அவர்கள் திரும்பி வந்தால் நமக்கெல்லாம் மகிழ்ச்சி அல்லவா:)? மிக்க நன்றி சுந்தரா!

  ReplyDelete
 47. அன்பின் ராமலக்‌ஷ்மி,

  நலமா? :)

  அழைப்பிற்கும், வண்டை நினைவு கொண்டமைக்கும் நன்றி :).

  சீனா ஸார் சொல்லி இங்கு வந்தேன் :P.

  என் முயற்சி தொடரும் என நானும் நம்புகிறேன் :D.

  ReplyDelete
 48. @ NewBee,

  மிக்க நன்றி புதுவண்டு. முயற்சி தொடரட்டும். காத்திருக்கிறோம் அனைவரும். வாழ்த்துக்கள்:)!

  ReplyDelete
 49. சகோ, எழுதணும்னு ஆசை மட்டுமே இருக்கு. உந்துதல், கற்பனை எதுவும் இப்ப இல்லை. நாம எழுதுறது முதல்ல நமக்கு பிடிக்கணும் இல்ல :). ஆரோக்கியமற்ற பின்னூட்டங்களை எதிர்கொள்ளும் மனநிலை இல்லாததும் ஒரு குறை. மொத்தத்தில் ஒரு நல்ல வாசகனாக முதலில் இருப்போம்னு நிம்மதியா இருக்கேன்.

  நீங்க தொடர்ந்து வெளுத்துக் கட்டுவதில் ரொம்பவே பெருமிதம் எனக்கு. இன்னும் இன்னும் ..... சாதனை புரிய வாழ்த்துகள்.

  உங்கள் அன்புக்கு ......... எப்பவும் போல நன்றி மட்டுமே சொல்ல முடியுது.

  அனுஜன்யா

  ReplyDelete
 50. அனுஜன்யா said...
  //எழுதணும்னு ஆசை மட்டுமே இருக்கு.//

  அதுவே எழுத வைக்கும். மிக்க நன்றி அனுஜன்யா:)!

  ReplyDelete
 51. அழைப்பிற்கு மிக்க நன்றி அக்கா. தாமத்திற்கு மன்னிக்கவும். ப்ளாக் பக்கம் வர கொஞ்சம் ஹோம்வொர்க் செய்ய வேண்டும். அலுவல்... இன்ன பிற....

  //மீண்டும் எழுதவே விரும்புகிறேன், ஆனால் சூழல், தொடர்ச்சியான வேலைகள் கட்டிப்போட்டுவிடுகின்றன. முயற்சிக்கிறேன்.
  //

  அமித்து அம்மாவின் பதிலுக்கு ரிப்பீட்டேய்...

  வலைச்சரத்தை சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 52. @ சதங்கா,

  அமித்து அம்மாவை வழிமொழிந்து நீங்களும் முயன்றிடுவதாக அறிவித்திருப்பதில் மகிழ்ச்சி:)! நன்றி.

  ReplyDelete
 53. @ சதங்கா,

  அமித்து அம்மாவை வழிமொழிந்து நீங்களும் முயன்றிடுவதாக அறிவித்திருப்பதில் மகிழ்ச்சி:)! வாழ்த்துக்களுக்கு நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது