07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 13, 2011

அணில் சுமந்த கற்களாய்.. நன்றியுடன்.. வலைச்சரம் ஞாயிறு

நிறைவுப் பதிவில் நிற்க வருகிறார்கள் அனுபவத்திலும் வயதிலும் நம்மில் மூத்த இப்பதிவர்கள்:

ஜெய்வாபாய் ஈசுவரன்

இந்திய அளவில் 7300 மாணவிகள் படிக்கும் மாபெரும் பள்ளியாக, பல்வேறு சாதனைகளைப் படைத்து, பெண்கல்விக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வரும் “திருப்பூர் ஜெய்வாபாய் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின்” விஸ்வரூப வளர்ச்சிக்கு இவரின் பங்களிப்பு அசாத்தியமானது. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வலராக இப்பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்ததினத்தை ‘உலக மாணவர் தினமாகக் கொண்டாடுவோம்’ எனப் பதிவிட்டவரின் இடுகையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு சம்பவம் மிகவும் நெகிழ்வுக்குரியது: “இந்தாருங்கள் பணம்...என் கம்மலை அடமானம் வைத்து கொண்டுவந்துள்ளேன்!.. நான் படிக்கவில்லை..எனது கிராமத்தை விட்டு(ஆண்டிபாளையம்) திருப்பூரை விட்டுச் சென்றதில்லை..ஆனால் என்மகள் டெல்லியைப் பார்க்க வேண்டும்.. தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும்..இதற்கும் மேலாக இப்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு மாணவர்கள் என்றால் பிரியம் என்கிறார்கள். மாணவர்கள் முன்னேற வழிகாட்டுகிறார் என்று கூறுகிறார்கள்!.அவர் வீட்டிற்கும் அழைத்துச் சென்று அவரையும் காட்டுங்கள்..என்னால் முடியாததை என் மகள் காண வேண்டும்

இந்த ஏழைப் பெண்ணின் தாய்மைக்கு எது ஈடாகும்? முழு விவரம் அறிய பதிவுக்கே செல்லுங்கள்.


அமைதி அப்பா
நாட்டிலும் உலகிலும் அமைதியே நிலவ வேண்டும் என விரும்பிப் பெயர் வைத்த இவரது மகன் ‘அமைதி விரும்பி’ சட்டம் படித்து வருகிறார். சமூக அக்கறையுடனான பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

வாழும் கடவுள்...! எனப் பாராட்டுகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு கிருஷ்ண ராஜ் அவர்களை:“செய்தித்தாள்கள் வழியாக அறியவரும், பண வசதி இல்லாததால்,படிப்பைத் தொடரமுடியாத பல ஏழை மாணவிகளுக்கு கல்வியைத் தொடர தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார். அதில் பலர் பொறியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பெறுகிறார்கள். இவர் ஆசிரியராகப் பணிபுரிந்தக் காலத்திலிருந்தே ஏழை மாணவர்களுக்கு சாப்பாடு, நோட்டு, சீருடை என்று வாங்கி கொடுத்து வந்திருக்கிறார்.

உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கவனத்திற்கு!, அக்கறையுடன் வழங்குகிறார் ஆலோசனைகளை.
‘வெடிவால்’ சகாதேவன்
நேரிலோ இணையத்திலோ பார்த்தது, ரசித்தது, மற்றவருக்குப் பயனாகும் தகவல்கள் என அனைத்தையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து வருபவர். வரலாற்றை நினைவு கூர்ந்து இடும் பதிவுகளும் சிறப்பானவை ஹே ராம்;

பொது வாழ்க்கை அது ஒரு உத்தியோகம் போலவும், பதவி, அதிகாரம்தான் முக்கியம்’:“அதிகாரம்தான் முக்கியம் என்று நினைப்பதால் அடிப்படை சேவை ஒதுக்கப் படுகிறது;

அக்டோபர் 2 அன்று சாஸ்திரியை மறக்கலாமோ?: “ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததால் தார்மீக பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார்...அங்கீகரித்த பிரதமர், பார்லிமெண்டில் இதை சாஸ்திரியின் பொறுப்பு குறைவு என்பதல்ல, பதவியில் இருப்பவர்களுக்கு, இது ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று சொன்னாராம்.

இன்றைய கால கட்டத்தில் அரங்கேறி வரும் அரசியல் நாடகங்களைக் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் நாம், இத்தகைய தலைவர்களும் இருந்தார்கள் நம் நாட்டில் என பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
அணில் சுமந்த கற்களாய்..
வரவர் வாசிப்பில், நினைவில் நின்ற பதிவுகளைப் பகிர்வதன் மூலமாக சிறந்த இடுகைகள் ஆவணப்படுத்தப் படுகிற ஒரு தளமாகவும், அதைப் படைத்தவர்களை அறியாதவர் அறிந்திட உதவும் ஒரு பாலமாகவும் திகழ்ந்து வருகிறது வலைச்சரம். தினம் தினம் நீளும் அப்பாலத்துக்கு, இராமருக்கு உதவிய அணிலைப் போல ஏழுகற்களை எடுத்து வைத்துள்ளேன்.

என் வலைவாசிப்பில் ரசித்தவரின் பட்டியலில் வெகுசிலரை மட்டுமே சொல்ல இயன்றதற்கு நேரமின்மை மட்டுமே காரணம். விரிவாகச் செய்ய நினைத்ததில், ஒருநாளைக்கு பத்து பதினைந்து பதிவர்கள் எனத் திட்டமிட்டிருந்ததை செயல்படுத்த இயலவில்லை.

என் வாசிப்பு வட்டதுள் வந்த புதியவர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் என்றாலும்.. மேலும் பலரையும், பிரமிக்க வைத்த இடுகைகளைத் தந்த பதிவர்கள் எத்தனையோ பேரினையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பினை சீனா சாரிடம் கேட்டுப் பெற்று இங்கே பகிர்ந்திட முயன்றிடுவேன்.

பல நல்ல இடுகைகளை உங்கள் முன் வைத்த மன நிறைவுடனும், சில பதிவர்களை இதன் மூலமாக ‘அறிய வந்திருப்பதாகவும் இனித் தொடருவதாகவும்’ வந்திருக்கும் பின்னூட்டங்களால் கிடைத்த திருப்தியுடனும், வாய்ப்பளித்த சீனா சாருக்கும், வரவேற்றுப் பதிவிட்ட முத்துலெட்சுமிக்கும், என்னை இதுகாலமும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய கீழ்வரும் அத்தனை நண்பர்களுக்கும்
தமிழ் பிரியன்,கோகுலன்,ஆயில்யன், கவிஞர் N.சுரேஷ், நானானி, ரம்யா தேவி, அமுதா, ஞானசேகரன், தேனம்மை , ஈரோடு கதிர், ரிஷான் ஷெரீஃப், கோமா , ப்ரியமுடன் வசந்த் , சேட்டைக்காரன் , வித்யா , நீச்சல் காரன் , மோகன் குமார்
[அறிமுகமான பதிவுகளின் இணைப்புடனே தொகுத்திருப்பதில்,
எவர் பெயரேனும் விடுபட்டிருப்பின் அது என் கவனக்குறைவே, மன்னியுங்கள்.]

ஒருவாரமும் பதிவுகளைப் படித்துக் கருத்து கூறியவருக்கும்

என் மனமார்ந்த நன்றி!
***

45 comments:

 1. இனிய , பயனுள்ள தொகுப்பு!
  மன நிறைவு கொண்டேன்!
  ...1...

  ReplyDelete
 2. பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


  எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

  ReplyDelete
 3. எல்லா பதிவருக்கும் உங்களுக்கும் என் அன்பின் வாழ்த்துகள்....

  ReplyDelete
 4. அணில் சுமந்த கற்களாய் --- ஒவ்வொன்றும் வைரக்கல். வலைச்சரத்தின் இந்த வாரப் பதிவுகளும் வைரங்களே!
  வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. இந்த வாரம் மிக வித்யாசமாய் இருந்தது. தங்களின் சமூக அக்கறை அனைத்து பதிவுகளிலும் தெரிந்தது. வாழ்த்துகள்

  ReplyDelete
 6. இன்றும் மிக சிறப்பான அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அனுபவத்திலும் வயதிலும் நம்மில் மூத்த பதிவர்களை அரிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 7. சிறப்பான அறிமுகங்கள் அக்கா.

  மொத்தத்தில் ஒருவாரத்தில் நிறைய பேரைப்பற்றித் தெரிந்துகொள்ளமுடிந்தது.

  நன்றிகள்!

  ReplyDelete
 8. இன்றுவரை நான் அறிந்தவரை,யாரும் செய்யாத,[என்னையும் சேர்த்து] ஒரு நன்றி நவிலல்
  வலைச்சரத்தில் உங்களை அறிமுகப்படுத்தியவர்களையெல்லாம் மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி விட்டீர்கள்.

  ReplyDelete
 9. ஆசிரியர் பணியை சிறப்பாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்..

  ReplyDelete
 10. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. ஜெய்வாபாய் ஈசுவரன் அவர்களுக்கு எமது வந்தனங்கள்..

  ReplyDelete
 12. NIZAMUDEEN said...
  //இனிய , பயனுள்ள தொகுப்பு!
  மன நிறைவு கொண்டேன்!
  ...1...//

  மிக்க நன்றி Nizamudeen.

  ReplyDelete
 13. தமிழ்வாசி - Prakash said...
  //பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

  வருகைக்கு நன்றி ப்ரகாஷ்.

  ReplyDelete
 14. MANO நாஞ்சில் மனோ said...
  //எல்லா பதிவருக்கும் உங்களுக்கும் என் அன்பின் வாழ்த்துகள்....//

  நன்றி மனோ.

  ReplyDelete
 15. engalblog said...
  //அணில் சுமந்த கற்களாய் --- ஒவ்வொன்றும் வைரக்கல். வலைச்சரத்தின் இந்த வாரப் பதிவுகளும் வைரங்களே!
  வாழ்த்துகள்!//

  மகிழ்ச்சியும் நன்றியும் எங்கள் ப்ளாக்!!

  ReplyDelete
 16. மோகன் குமார் said...
  //இந்த வாரம் மிக வித்யாசமாய் இருந்தது. தங்களின் சமூக அக்கறை அனைத்து பதிவுகளிலும் தெரிந்தது. வாழ்த்துகள்//

  தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 17. asiya omar said...
  //இன்றும் மிக சிறப்பான அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அனுபவத்திலும் வயதிலும் நம்மில் மூத்த பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.//

  மிக்க நன்றி ஆசியா, ஆர்வத்துடன் பல பதிவர்களை வாசித்துக் கருத்துக்களைப் பகிர்ந்ததற்கும்.

  ReplyDelete
 18. சுந்தரா said...
  //சிறப்பான அறிமுகங்கள் அக்கா.

  மொத்தத்தில் ஒருவாரத்தில் நிறைய பேரைப்பற்றித் தெரிந்துகொள்ளமுடிந்தது.

  நன்றிகள்!//

  மகிழ்ச்சி சுந்தரா.

  ReplyDelete
 19. goma said...
  //இன்றுவரை நான் அறிந்தவரை,யாரும் செய்யாத,[என்னையும் சேர்த்து] ஒரு நன்றி நவிலல்
  வலைச்சரத்தில் உங்களை அறிமுகப்படுத்தியவர்களையெல்லாம் மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி விட்டீர்கள்.//

  மிக்க நன்றி கோமா.

  ReplyDelete
 20. பாரத்... பாரதி... said...
  //ஆசிரியர் பணியை சிறப்பாக நிறைவு செய்தமைக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்..
  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்கள்..
  ஜெய்வாபாய் ஈசுவரன் அவர்களுக்கு எமது வந்தனங்கள்..//

  மிக்க நன்றி பாரதி.

  ReplyDelete
 21. நல்ல தகவல்கள், பொழுது போக்கு, நற்கல்வி, நற்சிந்தனைகள், என பல அம்சங்களையும் கருத்தில் கொண்டு நல்ல தொகுப்பை வழங்கிய ராமலக்ஷ்மிக்கும் வலைச்சரத்திற்கும் நன்றிகளும் பாராட்டுகளும்...

  ReplyDelete
 22. @குமரி எஸ்.நீலகண்டன்,

  மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

  ReplyDelete
 23. ந‌ல்ல‌ ப‌கிர்வுக‌ளுக்கு ந‌ன்றி

  ReplyDelete
 24. அக்கா...திருப்தியான வாரமாய் அமைந்தது.பாராட்டுக்கள் !

  ReplyDelete
 25. நல்ல முறையில், நல்ல அறிமுகங்களுடன் சிறப்பாகச் செய்தீர்கள்.

  ReplyDelete
 26. அறிமுகங்கள் அனைத்தும் நன்று.
  என்னை அறிமுகம் செய்தமைக்கும் நன்றி.

  //பலரையும், பிரமிக்க வைத்த இடுகைகளைத் தந்த பதிவர்கள் எத்தனையோ பேரினையும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு வாய்ப்பினை சீனா சாரிடம் கேட்டுப் பெற்று இங்கே பகிர்ந்திட முயன்றிடுவேன்//

  நிச்சயமாக நீங்கள் செய்ய வேண்டும். சீனா சார் வாய்ப்பு வழங்குவார் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 27. jothi said...
  //ந‌ல்ல‌ ப‌கிர்வுக‌ளுக்கு ந‌ன்றி//

  மிக்க நன்றி ஜோதி.

  ReplyDelete
 28. ஹேமா said...
  //அக்கா...திருப்தியான வாரமாய் அமைந்தது.பாராட்டுக்கள் !//

  மிக்க நன்றி ஹேமா:)!

  ReplyDelete
 29. அமைதிச்சாரல் said...
  //நிறைவான வாரம்.//

  நன்றி அமைதிச்சாரல்.

  ReplyDelete
 30. ஸ்ரீராம். said...
  //நல்ல முறையில், நல்ல அறிமுகங்களுடன் சிறப்பாகச் செய்தீர்கள்.//

  அமைதிச்சாரலுக்கும் உங்களுக்கும் நன்றி, அறிமுகமான பல பதிவர்களை வாசித்துக் கருத்துக்கள் தெரிவித்திருப்பதற்கும்.

  ReplyDelete
 31. நீங்கள் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த விமர்சகரும்கூட. நல்ல பதிவுகளை எல்லோரும் படிக்க வேண்டும் என்று அவற்றை தேடி வாரம் முழுதும் அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி. நேற்று மட்டும் எனக்கு நான்கு பின்னூட்டங்கள்.

  சகாதேவன்

  ReplyDelete
 32. நிறைவான அறிமுகங்கள்

  ReplyDelete
 33. சகோதரிக்கு வணக்கத்துடன் நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்..ஒரு நகராட்சிப்பள்ளியை ஒரு தனியார் பள்ளிக்கு இணையாக மாற்ற முடியுமா..எனக்கனவு கண்டு ஒரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்றே நினைக்கிறேன்..எனது அனுபவங்களை எழுதச்சொல்லி ஒரு சில கல்வியாளர்களின் தூண்டுதலின் பேரில் பதியத்துவங்கினேன்..இடையில் கொஞ்சம் மனச்சோர்வு..இன்று உங்கள் பதிவு கண்டு மனச்சோர்வு நீங்கிவிட்டது... நன்றி சகோதரி..

  ReplyDelete
 34. சூப்பர்...சூப்பர்...சூப்பர்!!!!
  நல்ல உழைப்பு, அதற்கேற்ற மதிப்பு.
  வாழ்க.

  ReplyDelete
 35. சகாதேவன் said...
  //நீங்கள் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த விமர்சகரும்கூட. நல்ல பதிவுகளை எல்லோரும் படிக்க வேண்டும் என்று அவற்றை தேடி வாரம் முழுதும் அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி. நேற்று மட்டும் எனக்கு நான்கு பின்னூட்டங்கள்.//

  மகிழ்ச்சியும் நன்றியும்:)!

  ReplyDelete
 36. சி.பி.செந்தில்குமார் said...
  //வாழ்த்துக்கள் மேடம்//

  மிக்க நன்றி செந்தில்குமார்.

  ReplyDelete
 37. VELU.G said...
  //நிறைவான அறிமுகங்கள்//

  மிக்க மகிழ்ச்சி. நன்றி வேலு. ஜி.

  ReplyDelete
 38. ESWARAN.A said...
  //சகோதரிக்கு வணக்கத்துடன் நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்..ஒரு நகராட்சிப்பள்ளியை ஒரு தனியார் பள்ளிக்கு இணையாக மாற்ற முடியுமா..எனக்கனவு கண்டு ஒரளவு வெற்றி பெற்றுள்ளேன் என்றே நினைக்கிறேன்..//

  பிரமிக்கத்தகு வெற்றி. மற்ற பள்ளிகளுக்கு முன் உதாரணமும்.

  //எனது அனுபவங்களை எழுதச்சொல்லி ஒரு சில கல்வியாளர்களின் தூண்டுதலின் பேரில் பதியத்துவங்கினேன்..இடையில் கொஞ்சம் மனச்சோர்வு..இன்று உங்கள் பதிவு கண்டு மனச்சோர்வு நீங்கிவிட்டது... நன்றி சகோதரி..//

  அவசியம் செய்யுங்கள்.
  அதனால் நிச்சயம் மற்றவர் பயனுறுவர். நன்றியும் வணக்கங்களும்.

  ReplyDelete
 39. நானானி said...
  //சூப்பர்...சூப்பர்...சூப்பர்!!!!
  நல்ல உழைப்பு, அதற்கேற்ற மதிப்பு.
  வாழ்க.//

  நன்றி நன்றி:)!

  ReplyDelete
 40. ராமலக்ஷ்மி, நான் ஊரில் இல்லாத காரணத்தால் நீங்கள் அறிமுகபடுத்தியவர்களை எல்லாம் இப்போதுப் படித்து வருகிறேன்.

  நல்ல உழைப்பு, கொடுத்தபொறுப்பை அழகாய் சர சரமாய் தொடுத்து விட்டீர்கள்.
  மறுபடியும் வந்து நிறைவாய் வலைச்சரபணியை சிறப்பாக செய்வீர்கள்.
  வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 41. @ கோமதி அரசு,

  அனைத்தையும் வாசித்தமைக்கும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது