07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 9, 2011

கனவே நனவாக.. - மகளிர் சிறப்புச்சரம் - புதன்

அமைதிச்சாரல்:
பயணக்கட்டுரை, சமையல் குறிப்புகள், கவிதைகள், புகைப்படங்கள் என எல்லாவற்றிலும் கலக்கி வரும் பதிவுலக நம்பிக்கை நட்சத்திரம். இயல்பான நகைச்சுவை இவர் கட்டுரைகளெங்கும் இழையோடும். சமீபமாக அருமையான சிறுகதைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார். அவற்றில் ஒன்று,‘பொங்கல் மகிழ்ச்சி’[லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை]. கவிதை நேரமிது வலைப்பூவில் ‘முன்னேற்றம்’ பற்றி சொல்லியிருப்பதில் எனக்குப் பிடித்தமான சிலவரிகள்:
ஆசைக்கும் அறிவுக்குமான போட்டிக்களத்தில்
வாய்ப்புகள் ஜெயித்துவிட
விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்..
பெருங்கடலாயினும், குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக்கற்றுக்கொண்ட மீன்கள்.


‘சமைத்து அசத்தலாம்’ ஆசியா ஓமர்
பதிவுலகில் நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் விருதுகளின் ஊக்கத்தால் நிகழும் அற்புதத்துக்கு இவர் சிறந்த உதாரணம். நண்பர் அஹமது இர்ஷாத் கொடுத்த 'சிறந்த எழுத்தாளர்' விருதே தன்னைச் சிறுகதை முயற்சியில் இறங்க வைத்ததாகக் குறிப்பிடுகிறார். அப்படியாக இவர் எழுதிய முதல் சிறுகதை தமிழ்மணம் விருது 2010 மகளிர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று ஜொலிக்கிறது.
எம்மா: “அப்பப்ப கண்ணை திறந்து, எல்லாரும் இருக்காங்களான்னு பார்த்திட்டு கண்ணை மூடிக்கொள்ளுவார், இப்படியாய் ஒரு நாள் முழுவதும் கழிந்தது, சொந்தக்காரங்க எல்லாம் இந்த கிழவனுக்கு வேலை இல்லை,நல்ல திடமாக இருந்திட்டு எல்லாரையும் எங்கேயும் அசைய விடமாட்டேங்கிறார் பாரேன்னு ஒவ்வொருவராக அவரவர் வீடு செல்ல ஆரம்பித்து விட்டனர்..

தமிழ்மணம் விருது தந்திருக்கும் ஊக்கத்தால் மேலும் பல கதைகள் படைக்க வாழ்த்துவோம்.
***
சமையல் செய்முறைகளை ஒவ்வொரு பருவத்திலும் படமெடுத்து வழங்குவது இவரது தனிச் சிறப்பு. சமீபத்தில் தன் வலைப்பூவின் ‘ஒரு வருட நிறைவு’க்காக வழங்கிய இனிப்பு இங்கே.
***
மனநலம் உடல்நலம் குறைந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கும் பணியில் இருந்த அனுபவங்களை மூன்று பாகங்களாகப் பகிர்ந்து கொண்டுள்ளார் ‘சின்னஞ் சிறிய உலகம்’.
***
‘நினைவின் விளிம்பில்’ கவிநயா:
‘திண்ணை’, மற்றும் மாலனின் ‘திசைகள்’ இணைய இதழ்களில் எழுதி வந்தவர், இணையக் குழுமங்களில் தொடர்ந்து பின்னர் நம் ‘நினைவின் விளிம்பில்’ என்றும் நிற்கக் கூடிய படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் வாசிக்கக் கிடைக்கும் இவரது பதிவுகள் எனக்கு. ஒருசில துளிகளே அப்பதிவினில் கழித்திருந்தாலும், அன்றைக்கான தியானத்தை முடித்த நிறைவைத் தரும் பல படைப்புகள்.

ஜலதோஷமும் சந்தோஷமும்
:. “பாராட்டுவது சுலபமில்லைங்க, அதுவும் ஒரு கலைதான். ஒருத்தரைப் பாராட்டும் போது மனதார, உணர்ந்து, உண்மையா பாராட்டணும். அப்பதான் அது பாராட்டறவங்க, பாராட்டப்படறவங்க, இரண்டு பேருக்குமே உண்மையான சந்தோஷத்தைத் தரும்.

உங்களுக்கு எத்தனை அம்மா?
: “அன்பு செலுத்தறவங்களைப் பார்க்கும் போது பெற்ற அம்மாவோடு கூடவே எனக்கு மற்ற அம்மாஸும் இருக்காங்கன்னு தோணும்.

மறக்கத் தெரியுமா?:“நினைக்கத் தெரிந்த மனசுக்கு மறக்கவும் தெரியும். நாமதான் அதுக்கு சொல்லிக் குடுக்கறதில்லை!

கவிதைகள்: நம்பிக்கை, அமைதி, சரணாகதி.

சிறுகதைகள்: ரயில் பயணம், யாருக்குத் தெரியும்?

‘எண்ணிய முடிதல் வேண்டும்’ ஷைலஜா:
தேர்ந்த எழுத்தாளர். 230-கும் அதிகமான சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்களைப் படைத்த இவர் சிறந்த கட்டுரையாளரும். வானொலி மற்றும் (ராஜ்) தொலைக் காட்சிக்காக நாடகங்களும் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்றிருக்கிறார். விளம்பரங்களுக்குக் குரல் கொடுக்கிறார். சிறந்த இல்லத்தரசியாய் பரிமளித்தபடி பல ஆண்டுகளாக இடைவெளி விடாமல் எழுதி வருவது போற்றவும் நாம் கற்றுக் கொள்ளவும் வேண்டிய ஒன்று. பிற எழுத்தாளர்களின் படைப்புகளுடன் இரண்டு தொகுப்புகள் வந்திருப்பினும், சமீபத்தில் திரிசக்தி பதிப்பகம் இவரது ‘அவனும் இவனும்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

இவரது நகைச்சுவை உணர்வுக்குச் சிறந்த சான்றாக சக்கரைப்பொங்கல் சாப்பிடவந்தார் ஜனாதிபதி ஒபாமா!
***
அணை திறந்த வெள்ளமென இவர் பிறந்த ஸ்ரீரங்கத்துக் காவேரி துள்ளி வரும் அழகில் வார்த்தைகள் பெருக்கெடுத்து ஓட, சொல்லியிருக்கிறார் உருக்கமாய் இக்கவிதையிலே பெண்படும் பாட்டினை.., ஆத்தா ஒன் சீலதான்:.
ஆத்தா ஒன் சீலைதான்
காத்தாக அணைச்சிருக்கு
தறியிலே நெஞ்சது என்
உசுருலே பிணைஞ்சிருக்கு.
.......................
நாலெழுத்துப்படிச்சிருந்தா
நானும் தல நிமிந்து பேசிடுவேன்.
பயத்துல செத்துக்கிட்டு
பிடி சோறுக்கும் வழி இல்லாம்
பட்டினியில் கிடக்கும் என்னை
இடிபோல தாக்கிச்சி..
***
தசரா யானைகளின் அவஸ்தைகள் : “காட்டின் அமைதியான சூழ்நிலையில் மிருதுவான சாலைகளில் நடந்துபழக்கப்பட்ட யானைகள் தார்சாலையின் காலடியில் கண்ணாடிச்சில்லுகள் குத்தியெடுக்க சிரமப்பட்டு நடப்பது வேதனை. தினமும் 750 கிலோ எடை உள்ள தங்க முகப்படாமுடன் தலைமை யானை, பயிற்சிக்குச் செல்லவேண்டும்.” தாய்மையின் கருணையுடன் இதற்கான தீர்வையும் கோரிக்கையாய் வைத்துள்ளார் பதிவின் முடிவிலே பாருங்கள்.
***
‘என் வானம்’ அமுதா:
‘என் வானம்’ வந்த கதையை இவரே சொல்லியிருக்கிறார் இங்கு.

குழலினிது யாழினிது எனும் இழையில் தன் மகள்கள் நந்தினி, யாழினியுடனான தருணங்களைத் தாய்மையின் பூரிப்புடன் பகிர்ந்து வருகிறார். அவர்களில் தன்னையே கண்டெடுக்கும் சந்தோஷத்தை உணர்த்துகிறார் நமக்கும் அற்புதமாய் இங்கே, குழந்தைகளும், ஒரு கவளம் சோறும் , கதைகளும்: “கோபமும், பொறுமையின்மையும் மட்டுமே என் குணமோ என்று அறிவு என்னைச் சுட்ட கணங்களில் , உள்ளிருந்த அன்பு, பொறுமை என்ற உணர்ச்சிகளுடன் என் கற்பனை வளங்களையும் ஊற்றெடுக்கச் செய்தவர்கள் இவர்கள் தானே?

ஒரு கவளம் சோறு உள்செல்ல, உணவைப் பங்கிட்டுக் கொண்ட காகமும், குருவியும், அணிலும், பூனையும், நாயும், (ஒற்றைக் காலிழந்த கருப்பு நாயும்) உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளைத் தேடிச் சென்றுவிட்டன. அளந்து தண்ணீர் செலவழிக்கும் வேளையிலும் உனக்கு உணவு உள் செல்ல நீ கைகளால் அளைந்து விளையாடிய நீர் முகந்த கோப்பையும், தெறித்த நீர்த்துளிகளின் நினைவு இப்பொழுதும் மனதைக் குளிர்விக்கின்றது.

சமீபத்தில் குழந்தைகளுடன் இவர் ஆமை நடை சென்ற அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. ஆமை நடை செல்ல ஆசையா?, சுட்டிகளுடன் ஒரு டர்ட்டில் வாக்.

நூற்று நாற்பது எழுத்து நவீன இலக்கியம் ட்வீட்ஸிலும் அசத்துகிறார் பாருங்களேன்இங்கே.

வாழ்க்கையின் வலிகளை, மனிதரின் மறுபக்கங்களை எளிய வரிகளில் சொல்லிக் கடந்து விடுகிற இவர் கவிதைகள் வாசிப்பவர் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்கள் அளப்பரியது.

உறுத்தல், கேள்விகள், ஊரில் வீடு, மனம், பாடம் என இவர் வானத்தில் மிளிரும் கவி நட்சத்திரங்கள் அத்தனையும் பிரகாசம்! நம்பிக்கை நூற்று நம் காயங்கள் அனைத்தையும் வருடி, மருந்தாகி, மறக்கவும் வைக்கும் இவரது அழகிய வரிகளுடனேயே இந்த மகளிர் சிறப்புச்சரத்தை நிறைவு செய்கிறேன்:
“அன்பைக் கொட்டி
உறவை வளர்த்தேன்
வெட்டிச் சென்றன
சொற்கள்

விலகி நின்று
புன்னகை செய்தேன்
காயம் வடுவாக...

ஆசையை நூற்று
கனவுகள் நெய்தேன்
கிழித்துச் சென்றது...
காலம்

நம்பிக்கை நூற்று
நனவை நெய்தேன்
கனவே நனவாக...

***

42 comments:

 1. கலக்கல் அறிமுகங்கள்..... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. அறிமுகத்துக்கு நன்றி ராமலஷ்மி.. உங்கள் அன்பில் நெகிழ்ந்துவிட்டேன் :-)

  அறிமுகப்படுத்தப்பட்ட தோழியருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. கலக்கல் அறிமுகங்கள்..... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!//

  ரிப்பீட்டு

  ReplyDelete
 4. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. அற்புதமான அறிமுகங்கள்

  சாம்பிள்கள் படிக்கவே நெகிழ்ச்சியா இருக்கு

  ReplyDelete
 6. என்னை இத்தனை சிறப்பாக அறிமுகப்படுத்திய ராமலஷ்மிக்கு எங்ஙனம் என் மகிழ்ச்சியை தெரிவிப்பேன், புது உற்சாகத்தை தந்து மீண்டும் நிறைய எழுத தூண்டுகிறது.நான் பெற்ற பரிசுகளை விட பெரிய பரிசு இது தான்.நன்றி என்ற ஒற்றை சொல் போதாதே!

  ReplyDelete
 7. சிறப்பான அறிமுகங்கள், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

  ReplyDelete
 9. "கனவே நனவாக... மிகவும் விரிவாக அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. அசத்தல் அறிமுகங்கள் யாவருக்கும் என் வாழ்த்துகள்....

  ReplyDelete
 11. சிறப்பான அறிமுகங்கள் அக்கா.

  அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அறிமுகம் அருமை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. எனக்குப் பிடித்த கவிதைகள் மீண்டும் வாசிக்கும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி அக்கா

  ReplyDelete
 14. அறிமுகங்கள் நன்று. சிலர், எனக்குப் புதியவர்களே. நன்றி.

  ReplyDelete
 15. அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. மேலும் மேலும் அறிமுகங்கள். புதுமுகங்களாகக் காட்டுகிறீர்கள். அறிந்த முகங்களையே. எல்லோருடைய பதிவுகளையும் படிக்க நேரம் தான் போதவில்லை ராமலக்ஷ்மி:)

  ReplyDelete
 17. அருமையான அறிமுகங்கள்.
  அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 19. தெரிந்த அறிந்த ஆனால் நிறைவான அறிமுகங்கள் !

  ReplyDelete
 20. சில தெரிந்த, சில தெரியாத அறிமுகங்கள்...

  ReplyDelete
 21. வலைச்சரத்தில் ஒரு விகிபீடியா

  ReplyDelete
 22. Chitra said...
  //கலக்கல் அறிமுகங்கள்..... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!//

  நன்றி சித்ரா:)!

  ReplyDelete
 23. அமைதிச்சாரல் said...
  //அறிமுகத்துக்கு நன்றி ராமலஷ்மி.. உங்கள் அன்பில் நெகிழ்ந்துவிட்டேன் :-)

  அறிமுகப்படுத்தப்பட்ட தோழியருக்கும் வாழ்த்துகள்.//

  அறிமுகம் செய்ய வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி சாரல். நன்றி.

  ReplyDelete
 24. March 9, 2011 11:41:00 AM GMT+05:30
  புதுகைத் தென்றல் said...
  //கலக்கல் அறிமுகங்கள்..... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!//

  ரிப்பீட்டு//

  நன்றி தென்றல்:)!

  ReplyDelete
 25. சே.குமார் said...
  //அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி குமார்.

  ReplyDelete
 26. மோகன் குமார் said...
  //அற்புதமான அறிமுகங்கள்

  சாம்பிள்கள் படிக்கவே நெகிழ்ச்சியா இருக்கு//

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 27. asiya omar said...

  //சிறப்பான அறிமுகங்கள், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.//

  //என்னை இத்தனை சிறப்பாக அறிமுகப்படுத்திய ராமலஷ்மிக்கு எங்ஙனம் என் மகிழ்ச்சியை தெரிவிப்பேன், புது உற்சாகத்தை தந்து மீண்டும் நிறைய எழுத தூண்டுகிறது.நான் பெற்ற பரிசுகளை விட பெரிய பரிசு இது தான்.நன்றி என்ற ஒற்றை சொல் போதாதே!//

  நன்றி ஆசியா. தொடர்ந்து எழுதுங்கள்!!

  ReplyDelete
 28. சசிகுமார் said...
  //அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.//

  ஆம் சசிகுமார். மிக்க நன்றி.

  ReplyDelete
 29. மாதேவி said...
  //"கனவே நனவாக... மிகவும் விரிவாக அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி மாதேவி.

  ReplyDelete
 30. MANO நாஞ்சில் மனோ said...
  //அசத்தல் அறிமுகங்கள் யாவருக்கும் என் வாழ்த்துகள்....//

  நன்றி மனோ.

  ReplyDelete
 31. சுந்தரா said...
  //சிறப்பான அறிமுகங்கள் அக்கா.

  அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.//

  நன்றி சுந்தரா.

  ReplyDelete
 32. ஸாதிகா said...
  //அறிமுகம் அருமை.வாழ்த்துக்கள்.//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 33. அமைதி அப்பா said...
  //அறிமுகங்கள் நன்று. சிலர், எனக்குப் புதியவர்களே. நன்றி.//

  நல்லது அமைதி அப்பா, நன்றி.

  ReplyDelete
 34. ஹுஸைனம்மா said...
  //அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துகள்.//

  நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 35. வல்லிசிம்ஹன் said...
  //மேலும் மேலும் அறிமுகங்கள். புதுமுகங்களாகக் காட்டுகிறீர்கள். அறிந்த முகங்களையே, எல்லோருடைய பதிவுகளையும் படிக்க நேரம் தான் போதவில்லை ராமலக்ஷ்மி:)//

  ஆயினும் நேரத்தை ஏற்படுத்திக் கொண்டு இங்கு அறிமுகப்படுத்தப் பட்ட பல பதிவுகளை வாசித்து பின்னூட்டமும் இட்டிருக்கிறீர்கள், மிக்க நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 36. அம்பிகா said...
  //அருமையான அறிமுகங்கள்.
  அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி அம்பிகா.

  ReplyDelete
 37. அஹமது இர்ஷாத் said...
  //அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)//

  நன்றி இர்ஷாத்:)!

  ReplyDelete
 38. ஹேமா said...
  //தெரிந்த அறிந்த ஆனால் நிறைவான அறிமுகங்கள் !//

  மிக்க நன்றி ஹேமா.

  ReplyDelete
 39. ஸ்ரீராம். said...
  //சில தெரிந்த, சில தெரியாத அறிமுகங்கள்...//

  நல்லது ஸ்ரீராம், நன்றி.

  ReplyDelete
 40. goma said...
  //வலைச்சரத்தில் ஒரு விகிபீடியா//

  நன்றி கோமா:)!

  ReplyDelete
 41. அறிமுகம் அருமை.வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது