07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 30, 2011

செவ்வாய் முடிந்தும் இறைவன்

சுத்தம் சுகம் தரும், சரி சரி சோறு போடும். பரிசுத்த ஆவி. நாம் சுத்தமாக இல்லாவிட்டால் நம்மை இறைவனிடம் ஒப்புவித்தல் கூடாது என்போர் உளர். இதில் இறைவனை எப்படியெல்லாம் அணுகவேணும் எனும் முறைகள் உண்டு. ஆனால் இப்படியும் கேள்வி எழுப்பலாம் என எழுதிய கல்வெட்டு 2005 வருடத்தில் இருந்து வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரது பின்னூட்டங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். முகம் சுளிக்க வைக்கும் விசயங்களுக்குள் முகவரி தொலைத்து வாழும் மனிதர்கள் தான் நாம். வெளிப்படையாக எதுவும் பேசினால் அநாகரிகம் ஆகிவிடும். கனியிருப்ப காய் கவர்ந்தற்று என சொன்னாலும் காய் தான் கனியானது என்பதுதான் உண்மை. 

இந்த வலைப்பூ பற்றி நான் குறிப்பிடாமல் போனால் அது சரிவராது. எத்தனை விசயங்கள் அலசப்படுகின்றன. இறைவன் என்பவருக்கு எதற்கு அடையாளம்? ஆனால் அடையாளம் கொடுத்து சுருக்கி கொண்டோம். கடவுள் வாழ்த்து எழுதிய திருவள்ளுவர் சற்று யோசித்து இருக்கலாம். வாழ்த்து பாடினால் தான் கடவுள் ஏற்று கொள்வாரா? இல்லவே இல்லை. மேலும் பெயர்களை குறிப்பிடாமல் (இந்திரன், ஆதி) விட்டிருந்தால் எந்த கடவுள் எனும் பிரச்சினை வந்திருக்காது. இதோ ஒரு அலசல் கண்ணபிரான் பார்வையில்

இது ஒரு உலகின் புதிய கடவுள். மதம் சாராத இறைவன் ஒன்று இருந்தால் எத்தனை சுகமாக இருந்திருக்கும்? ஆனால் மதம் சார்ந்த இறைவன் என்பது மாற்ற இயலாத ஒன்றாகிப் போனது. இறைவன் எப்படியெல்லாம் ஒருவருக்கு தோன்றும் என மிகவும் அழகாகவே ஒரு சின்ன தொடர் ஒன்று இந்த வலைப்பூவில் உண்டு. 

அன்புதான் இறைவன் எனும் சொல் வழக்கு உண்டு. அதை புரிந்து கொள்ள சொல்லும் பல வலைப்பூக்கள் உண்டு. அதில் ஒன்றுதான் இது. 

உருவ வழிபாடு அவசியமா, அவசியம் இல்லை என்பதல்ல கேள்வி. எதற்கு வழிபாடு என்பதுதான் நாம் நம்மை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. சில பதிவுகளின் மூலம் பல விசயங்களை பகிர்ந்து கொண்ட சாதாரணமானவரின் வலைப்பூவில் இந்த உருவ வழிபாடு குறித்த சிந்தனை உண்டு. 

நிகழ்காலத்தில் சித்தர்கள் கூட இறைவனாக சித்தரிக்கப்படுகிறார்கள் என சொல்லப்படுகிறது. இந்த சித்தர்கள் பற்றிய ஒரு வலைப்பூ மிகவும் அருமை.  நூறு வயது வாழலாம் எனும் அறிவுரையை விட மிகவும் அதிகமாகவே சொல்லப்பட்டு இருக்கிறது. 

செவ்வாய் அன்று இறைவன் பற்றிய விசயம் இத்துடன் நிறைவுறுகிறது என சொன்னாலும் விடுபட்டு போன எத்தனையோ வலைப்பூக்கள் இருக்கிறது என்பதை நான் ஏன் மறுக்கப் போகிறேன்?!


4 comments:

 1. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. மிக்க நன்றி சித்ரா.

  மிக்க நன்றி நிஜாமுதீன்

  மிக்க நன்றி சசிகுமார்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது