07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 27, 2011

வருக வருக வெ.இராதாகிருஷ்ணன் !

அன்பின் பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஈரோட்டினைச் சார்ந்த ராஜா ஜெய்சிங் - சில எதிர் பாராத காரணங்களினால் தொடர்ந்து எழுத இயலவில்லை. இரு இடுகைகள் மட்டும் இட்டு பல நல்ல கவிஞர்களை அறிமுகம் செய்த பின்னர் - தொடர இயலவில்லை. அவருக்கு இன்னுமொரு வாய்ப்பு - அவரது திறமையினை வெளிப்படுத்த அளிக்கப்படும் என உறுதி கூறுகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ள அருமை நண்பர் வெ.இராதாகிருஷ்ணனை வருக வருக ! ஏற்ற பொறுப்பினை சிறப்பாக நிறைவேற்றுக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இவர் 1975ம் ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலத் துலுக்கன் குளம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். அக்கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியும், மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது வரையும், அருப்புக்கோட்டையில் உள்ள மேல் நிலைப்பள்ளையில் பன்னிரண்டாவது வரையிலும் கல்வி பயின்றவர். பின்னர் உத்தங்குடி கே.எம் மருந்தாக்கியல் கல்லூரியில் இளநிலை மருந்தாக்கியல் பட்டமும். கல்கத்தா ஜதாவ்பூர் பல்கலைக் கழகத்தில் முதுநிலை மருந்தாக்கியல் பட்டமும் பெற்றவர். பின்னர் இலண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரியில் ஆரய்ச்சி பட்டம் பெற்றவர். கடந்த எட்டு ஆண்டுகளாக, அக்கல்லூரியில் உள்ள நுரையீரல் தொடர்பான் பிரிவில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறார். இவ்வாராய்ச்சிகள் தொடர்பாக பல கட்டுரைகள் வெளியீடிருக்கிறார்.

இவர் சமூக நலனில் அக்கறை கொண்டவர். சிறு வயதில் இருந்தே கதை, கட்டுரை, பேச்சுப் போட்டி என தமிழில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.
இதுவரை நுனிப்புல் பாகம் 1 என்ற நாவலையும், வெறும் வார்த்தைகள் என்னும் கவிதைத் தொகுப்பினையும், தொலைக்கப்பட்ட தேடல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பினையும் வெளியிட்டு இருக்கிறார்.

இவரது வலைப்பூவான அதீதக் கனவுகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட இடுகைகள் எழுதி இருக்கிறார்.

அருமை நண்பர் வெ.இராதாகிருஷ்ணனை மறுபடியும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

நல்வாழ்த்துகள் வெ.இராதாகிருஷ்ணன்
நட்புடன் சீனா12 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வாருங்கள் ராதாக்ருஷ்ணன்

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் நண்பர் இராதாகிருஷ்ணன்;
  வந்து சிறப்புற பணி செய்யுங்கள்.
  ...3...

  ReplyDelete
 4. ஆவலுடன் எதிர் பார்க்கிரோம் :-)

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் இராதாகிருஷ்ணன்!

  ReplyDelete
 6. வெல்கம் சார்

  ReplyDelete
 7. சிறப்பான முறையில் பணியினை செய்து முடிக்க, மனமார்ந்த வாழ்த்துக்கள், நண்பரே..

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் இராதாகிருஷ்ணன்.

  ReplyDelete
 9. வருக வணக்கம்.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் இராதாகிருஷ்ணன்!

  ReplyDelete
 12. அறிமுகத்திற்கு மிக்க நன்றி சீனா ஐயா.

  மிக்க நன்றி எல்.கே

  மிக்க நன்றி நிஜாமுதீன்

  மிக்க நன்றி ஜெய்லானி

  மிக்க நன்றி ராம்சாமி.

  மிக்க நன்றி பார்வையாளன்.

  மிக்க நன்றி மாதவன்

  மிக்க நன்றி ஜெஸ்வந்தி

  மிக்க நன்றி ஜோதிஜி

  மிக்க நன்றி ஆஸியா ஒமர்,

  மிக்க நன்றி சே.குமார்

  இன்றைய தின பதிவு விரைவில். :)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது