07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 31, 2011

கிட்டவே கிட்டாத புதன்

'பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது' இதுதான் மூதாதையார்கள் சொல்லித் தந்த பாடம். பூமியில் தாதுப் பொருட்கள் ஒரு அளவுக்குள் கொட்டி கிடப்பதை கண்டு கொண்டார்கள். எப்படியாவது அந்த பொன்தனை தோண்டி எடுத்துவிட முடியும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அதே வேளையில் வானத்தை பார்த்தார்கள். அப்பொழுதெல்லாம் பூமிதான் மையம், மற்ற கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன என்கிற ஒரு அறிவுணர்வு இருந்தாலும் நம் மூதாதையர்கள் சூரியனை மையமாகவும், முதன்மையாகவும் வைத்து இருந்தார்கள் என்பது ஒரு உண்மையான விசயம். அப்படி வைத்திருந்தபோதுதான் புதன் என்கிற கோளானது சூரியனுக்கு அருகில் இருப்பதாலும், வெப்பத்தில் தகதகத்து கொண்டிருப்பதாலும் புதன் கிடைக்கவே கிடைக்காது என்பதுதான் அவர்களின் ஒரு அறிவு. வெள்ளி என்றால் ஒரு நட்சத்திரம் என பொருள்படும். வெள்ளி மிகவும் வெப்பமான கோள் என்பதால்தான் அப்படி ஒரு பெயர் எனவும் கொள்ளலாம். அப்படித்தான் சில நேரங்களில் பெரும் பொக்கிசங்கள் நமக்கு கிடைக்காமலே போய்விடுகின்றன. அப்படிப்பட்ட அறிய பொக்கிசங்கள் பற்றிய அருமையான தொடரை எழுதிவரும் நண்பர் ரத்தினகிரி அவர்களின் அண்டத்தின் அற்புதங்கள் மிகவும் குறிப்பிட தகுந்தவை. 

நேற்றைய பொழுது இந்தியா மட்டுமல்ல பெரும்பாலான நாடுகளில் வாழும் இந்தியர்கள் கிரிக்கெட் விளையாட்டில் மூழ்கி இருந்த நேரம் எனலாம். வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொள்ளலாம். விளையாட்டுகள் மட்டுமல்ல பல்வேறு திறன் படைத்த ஏ ஆர் ஆர் அண்ணன் எழுதும் ஒவ்வொரு விசயமும் மிகவும் சுவாரஸ்யமானவை

சில நேரங்களில் இவர்கள் எல்லாம் எதற்கு எழுத மறுத்து ஒதுங்கி விடுகிறார்கள் என நினைக்கும் போது வருத்தம் மேலிடத்தான் செய்யும், ஆனால் அதுதான் அவர்களின் நிலை என பார்க்கும்போது அதற்கான விசயத்தை அறிந்து கொள்ள இயலும். அப்படித்தான் மிகவும் அட்டகாசமான ஒரு பதிவு ஒன்று உண்டு. பத்மஜா தோழியின் பகவத் கீதை. நண்பர் மோகனின் மணல் சிந்தனை. நண்பர் மகுடதீபனின் எண்ணக் கலாபங்கள், மற்றும் சாவா கலை நெறி. 

நண்பர்கள் என்றால் ஒவ்வொரு நிலையிலும் வருவார்கள், போவார்கள் என்பதல்ல. எப்பொழுதும் இருப்பவர்கள் நண்பர்கள் என்கிற பாதையை காண்பித்த மன்னைகோசை அவர்களின் அழகிய பதிவு இது. அவர் இப்போது நம்முடன் இல்லை. எழுதுகிறோம் என்பதற்காக எழுதாமல் எப்படியெல்லாம் எழுதவேண்டும் என்கிற பாதையை காண்பிக்கும் அத்தனை அழகிய சொல்லாடலை விவரிக்கும் பாங்கு. ஜலசயனன் எனும் இவரது பெயரை தேடி இவரது எழுத்தை படித்தால் தமிழ் மணக்கும். 

தனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்வதில் இருக்கும் சந்தோசம் எதுவும் இல்லை. தன்னிடம் பல விசயங்களை கேட்பவர்களுக்கு உதவியதால் அதை எழுதினால் என்ன என எழுதிய கலை மிகவும் பாராட்டுக்குரியது. நம்மை பற்றி நமக்கு என்ன தெரியும் என்கிறார் இவர் தான் நிஷா. 

இவர் வலைப்பூவிற்கு வருவதற்கு முன்னரே எனக்கு பழக்கம். இவரது தமிழ் அத்தனை அருமை. இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் தமிழ் பெற்றுக் கொள்ளும் பெருமை. சுந்தரா சகோதரியின் எண்ணங்களை அவரது வலைப்பூவில் சென்று காணலாம், இங்கும் காணலாம்.  கவிதை பற்றி மேலும் அறிந்து கொள்ள பல கவி சித்தர்களை அங்கே காணலாம். 

இத்துடன் நிறுத்துவதில்லை இந்த கிடைக்கவே கிடைக்காத புதன். வலைப்பூவில் என்னை ஒருமுறை அல்ல பலமுறை யோசிக்க வைத்த கிட்டவே கிட்டாத வலைப்பதிவர்களை நான் குறிப்பிடாமல் போனால் அது புதனுக்கு மட்டுமல்ல எனக்கும் அழகல்ல. விரைவில் அடுத்த பகுதி வரும். 


4 comments:

 1. ஆமாம்... பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது... நல்ல அறிமுகங்கள் நண்பரே....


  எனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ

  ReplyDelete
 2. \\கிட்டவே கிட்டாத வலைப்பதிவர்களை நான் குறிப்பிடாமல் போனால் அது புதனுக்கு மட்டுமல்ல எனக்கும் அழகல்ல.\\

  உண்மைதான்....

  ReplyDelete
 3. அருமையான அறிமுகங்கள் ....வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. மிக்க நன்றி தமிழ்வாசி

  மிக்க நன்றி சிவா

  மிக்க நன்றி சித்ரா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது