சில தொழிற்நுட்ப வலைப்பூக்கள்
➦➠ by:
எஸ்.கே
பல விதமான பதிவுகளை எழுதி வந்தபோதும் என்னை அடையாளம் காட்டியது தொழ்ற்நுட்ப பதிவுகளே! இங்கு பலர் எந்த வித பயிற்சி நிறுவனங்களுக்கு செல்லாமலேயே அனுபவத்தின் மூல பல தொழிற்நுட்ப விசயங்களை கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவற்றை மற்றவர்களுக்கு கற்றும் தருகிறார்கள். அப்படிப்பட்ட வலைப்பூக்களை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.
தொழிற்நுட்ப வலைப்பூக்கள்
எளிமையாக பல தொழிற்நுட்ப விசயங்களை சொல்பவர்களில் இவரும் ஒருவர். இவரின் தனிச்சிறப்பு புரோக்ராமிங் போன்ற நுட்பமான விசயங்களை கூட எளிய தமிழில் எளிமையாக சொல்லித் தருவதாகும். இவரின் ஜாவா புரோகிராம் அடிப்படைகள் - ஜாவா தொடர் மூலம் சிறப்பாக ஜாவா புரோமிங்கை எளிய முறையில் கற்கலாம். |
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பலவித எலக்ட்ரானிக் பொருட்கள் எப்படி செயல்படுகிறது என்பது போன்ற விசயங்கள் நமக்கு முழுமையாக தெரிவதில்லை. இவர் அப்படிப்பட்ட விசயங்களை புரியும்படியும் விரிவாகவும் விளக்கியுள்ளார். GPRS என்றால் என்ன? என்ற பதிவின் மூலம் அழகாக் ஜிபிஆர்எஸ் பற்றி விளக்குகிறார். WAP என்றால் என்ன? என்கிற பதிவில் செல்போனில் பயன்படுத்தும் வேப் பற்றி நன்றாக விவரித்துள்ளார். |
இவரும் ஏராளமான பயனுள்ள தகவல்களை அளிக்கிறார் உதாரணமாக Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..இவர் இது மட்டுமின்றி நகைச்சுவைகளையும் தனது தளத்தில் அளிக்கின்றார். |
சின்ன சின்ன தகவல்களாக பல உபயோகமான தொழிற்நுட்ப தகவல்களை அளிக்கின்றார் இவர்.ஏராளமான விசயங்கள் இவர் தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. நீங்கள் ஒரு வலைப்பூவில் எவ்வளவு நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என அறிய. தொழிற்நுட்ப தகவல்கள் மட்டுமின்றி Geetha's Womens Special மற்றும்News ஆகிய இரு வலைப்பூக்களில் சமூகம் மற்றும் மகளிர் தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். |
தொழிற்நுட்பம், சமூகம் போன்ற கலவையான பிரிவுகளில் எழுதி வரும் இவரின் இந்த தொழிற்நுட்ப பதிவு என்னை மிகவும் கவர்ந்தது.மூளையை வளர்க்கும் இணைய தேடல்.இவரின் இக்கட்டுரை [வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவோம் ] கூட நன்றாக இருந்தது. |
இவர் பெரும்பாலும் சமூகப் பதிவுகளே எழுதுபவர். இருப்பினும் இவரின் இரு தொழிற்நுட்ப பதிவுகள் மிகவும் பயனுள்ளதாகவும் புரியும்படியும் இருந்தன. தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது? மற்றும் இப்பதிவு அடுத்த தலைமுறை கட்டமைப்புகளை பற்றி நன்கு புரிய வைக்கின்றது *3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு |
இவரும் உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கை பிரபலப்படுத்த சுலபமான வழி போன்று பல சிறிய சிறிய தொழிற்நுட்ப தகவல்களை அளிக்கின்றார். தொழிற்நுட்ப தகவல்கள் மட்டுமின்றி சமூகம் விளையாட்டு சார்ந்த பதிவுகளும் படைப்புகளையும் கூட இங்கே காணலாம். இவர் பங்கு சந்தை பற்றி தனி வலைப்பூவில் எழுதி வந்தார் ஆனால் இடையில் அதைநிறுத்தி விட்டார். |
இதுவரை சிறிய தகவ்ல்களாக கிட்டதட்ட 150க்கும் மேற்பட்ட தகவல்களை எளிமையாக அளித்துள்ளார். ஜிமெயிலை பேக்அப் எடுக்க - IMAPSize, MS-WORD 2007-ல் Greeting Cards உருவாக்குவது எப்படி.. போன்று ஏராளமான தகவல்கள் இவர் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. |
இவரும் அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க மென்பொருள் FileASSASSIN, ஜாவா புரோகிராமிங்-மாணவர்களுக்கு உதவும் எளிய நிரல்கள் போன்று பல நல்ல தொழிற்நுட்ப தகவல்களை அளிக்கிறார்.இது தவிர Cute Stills, Hot Cinema Zoneபோன்ற சில வலைப்பூக்களையும் நடத்தி வருகிறார். |
இவர் ஒரு வெப் டிசைனர். வெப் டிசைனிங், இணையம் , இணையம் வழியே சம்பாதித்தல், வலைப்பூக்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதுகிறார். மறைமுக கேமராக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? , கணிணியில் வேலை செய்பவர்களுக்காக ஒரு 20-20மறைமுக கேமராக்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? போன்று பல விதமான பதிவுகளை எழுதி வருகிறார். |
இவர் தொழிற்நுட்பம், அறிவியல், சமூகம் , படைப்புகள் என பலவித தலைப்புகளில் எழுதுகிறார். இவரின் சார்பியல் விதி தொடர்பான அதே நேரம்.. அதே இடம் என்ற பதிவும் HTML பற்றிய தொடரும் என்னைக் கவர்ந்தவை ஆகும். இவர் சமீபகாலமாக எழுதவில்லை. மீண்டும் எழுத வருவார் என நம்புகிறேன். |
பெரும்பாலான தொழிற்நுட்ப பதிவுகள் விண்டோஸ் ஆபரேடிங் சிஸ்டத்த்திற்கு மட்டும் பொருத்தமானதாகவோ அல்லது அவற்றை சார்ந்தோ இருக்கும். ஆனால் முழுக்க முழுக்க லினக்ஸ்/உபுண்டு ஆபரேடிங் சிஸ்டம் தொடர்பான சில வலைப்பூக்களை இங்கே பட்டியலிடுகிறேன்.
|
|
|
அனைத்துமே அவசியமானது.. அறிமுகங்களுக்கு நன்றி எஸ்.கே..
ReplyDeleteநன்றி எஸ் கே. உங்கள் சிந்தனை வித்தியாசமான அவசியமான ஒன்று வாழ்த்துகள். பதிவர்களுக்கும் உங்களுக்கும்....
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteபதிவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள் எஸ்.கே !
ReplyDeleteஅறிமுகங்கள் - ஃபாண்ட் பிரச்னை இருக்கிறதா -ஒன்றுமே புரியவில்லையே - சரிபார்க்கவும் - லேபிள் எஸ்.கே என இடவும். அலைபேசியில் தொடர்பு கொள்க
ReplyDeleteவித்தியாசமான அறிமுகங்களுடன் களம் இறங்கியுள்ளீர்கள். பயனுள்ளவை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
What a coincidence! இன்று வெளியிட்ட, PASSWORD பற்றிய என் பதிவு இதோ: PASSWORD புதையல்! வாங்க... வாங்க... அள்ளிட்டுப் போங்க!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் வலைசரத்தில் கலக்குறீங்க வாழ்த்துக்கள்
ReplyDelete//கற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அவற்றை மற்றவர்களுக்கு கற்றும் தருகிறார்கள்.//
ReplyDeleteஅந்த மாதிரி குணம் இருப்பவர்கள்தான் உண்மையான பதிவர்கள். பெருபான்மையான பதிவர்களுக்கு, தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்கிற உணர்வு இருப்பதாகவே நினைக்கிறேன்.
தங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.
நல்ல அறிமுகங்கள். நன்றி.
என்றென்றும் நன்றியுடன் உங்கள் இரா.கதிர்வேல்
ReplyDeleteமிக பலனுள்ள பகிர்தல்,. thanks
ReplyDeleteவித்தியாசமான அறிமுக யுக்தி... அருமை.
ReplyDeleteஎனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!
பல உபயோகமான தொழில் நுட்ப பதிவுகளின்
ReplyDeleteஅறிமுகங்கள்! - நன்றி எஸ்.கே!
சமீபத்தில் உங்கள் அறிமுகம் எனக்கு கிடைத்தது பதிவுலகின் வழியாக, உங்கள் இன்னொரு முகம் தெரிந்தது இன்று கூடவே பல அறிமுகங்கள்.. வாழ்த்துக்கள். இனி உங்கள் தொழில்நுட்ப பதிவுகளை படிக்கவேண்டும், நன்றி..
ReplyDeleteநல்ல உதவியான பதிவு வழிகாட்டி மிக்க நன்றிகள்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.
சிறந்த அறிமுகங்கள் எஸ்.கே.. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு எனது வாழ்த்துக்கள்..
ReplyDeleteவைகை said...
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
VELU.G said...
சே.குமார் said...
ஹேமா said...
cheena (சீனா) said...
Dr.எம்.கே.முருகானந்தன் said...
மனம் திறந்து... (மதி) said...
ஆர்.கே.சதீஷ்குமார் said...
அமைதி அப்பா said...
இரா.கதிர்வேல் said...
jothi said...
தமிழ்வாசி - Prakash said...
NIZAMUDEEN said...
வசந்தா நடேசன் said...
♔ம.தி.சுதா♔ said...
பதிவுலகில் பாபு said...
அனைவருக்கும் மிக்க நன்றி!
மிக்க நன்றி!
ReplyDeleteதொடரட்டும் உங்கள் நற்பணி...
ReplyDeleteநன்றி தோழா!!!
என் வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே!
ReplyDeleteஅன்புடன்,
-ரவிச்சந்திரன்
நன்றி எஸ்.கே.
ReplyDeleteமற்ற தொகுப்புகளும் அருமை.
வலைச்சரம் போன்ற நல்ல வலைப்பூக்களை திரு.எஸ்.கே நீங்கள் நினைவுபடுத்தியிராவிட்டால் பயனடைந்திருக்க மாட்டேன். ஒரு பதிவர் மற்றொரு பதிவரையோ, பிடித்த கட்டுரையையோ அறிமுகப்படுத்துவது வரவேற்கப் படவேண்டிய ஒன்று. பின்னூட்டம் வழியே ஒரு நண்பர் சொல்லித்தான் தமிழிஷ் போன்ற திரட்டிகள் இருப்பது தெரியவந்தது. வலைச்சரத்தில் என் வலைப்பூவிற்கும் தொடுப்பு இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். வலைச்சரம் நிர்வாகிகள், வாசகர்கள், கட்டுரையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஅனைவரும் அறிய வேண்டியவர்கள் நன்றி எஸ்கே சார்
ReplyDeleteநன்றி எஸ் கே.
ReplyDeleteஎனது வலைப்பதிவையும் உங்கள் பதிவில் இணைத்து கொண்டதற்கு..
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.. என்பதற்கிணங்க தாங்கள் தொகுத்தளித்த விதம் மிகவும் அருமை.. தொகுக்கப்பட்ட வலைப்பூக்கள் ஒவ்வொன்றும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது..! நன்றி எஸ்.கே. சார்...!
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே...
ReplyDeleteஎனது வலைப்பதிவையும் மதித்து உங்கள் பதிவில் இணைத்து கொண்டதற்கு மிக்க நன்றி.