வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - நான்காம் நாள்
➦➠ by:
மஞ்சு பாஷிணி
நேற்று என் மகன் இபானின் நண்பனுடைய அம்மா என்னை அலைபேசியில் அழைத்தார்கள். எப்போதாவது அழைத்தால் ஒரு மணி நேரத்துக்கு குறைவாக பேசுவதை நிறுத்துவதில்லை. பெண்கள் என்றாலே இப்படித்தான். ஒரு மணி நேரத்துக்கு பேச அப்படி என்ன தான் இருக்கோ என்று நினைக்கிறீர்கள் தானே? கண்டிப்பாக யார் தலையையும் உருட்டும் பேச்சு இல்லை. மிக மிக பொதுவான பேச்சு தான்.
பழைய காலத்தில் வீடு கட்டும்போதே திண்ணை வைத்து கட்டுவார்களாம். ஆமாம் எங்கள் வீடும் இரண்டு பக்கமும் விஸ்தாரமான திண்ணையோடு இருந்ததை பார்த்திருக்கிறேன். பாட்டி அதிகாலை எழுந்து வந்து வாசல் தெளித்து விட்டு திண்ணையில் யாராவது படுத்திருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். பழைய காலத்தில் அதாவது நம் தாத்தா பாட்டி காலத்தில் கூட்டுக்குடும்பம் வெகுவாக போற்றப்பட்டது.. எது செய்தாலும் வீட்டில் மூத்தோரின் அனுமதியை வேண்டியப்பின்னரே அதை நடைமுறை படுத்தும் நிலை இருந்தது.
எல்லோரும் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவார்கள். வளரும் குழந்தைகள் பாட்டி சொல்லும் கதைகளை கேட்டுக்கொண்டே தாத்தாவுடன் விளையாடிக்கொண்டே அப்பாவின் ஆகிருதியை தானும் பெற சின்ன வயதிலிருந்தே அப்பாவை ஹீரோவாக நினைத்து அப்பாவை போலவே படித்து நன்றாக முன்னுக்கு வருவது போலவே அப்பா பெரியவர்களுக்கு தரும் மரியாதையை பார்த்து பிள்ளைகளும் கற்று, அம்மாவின் மென்மையை, தாய்மையை, பாசத்துடன் சமைத்து பரிமாறும் உணவை உண்டு மகிழ்ந்து, உற்றார் உறவினரோடு சந்தோஷமாய் விருந்து கொண்டாடி விளையாடி மகிழ்ந்து கல்வி கற்கும்போதே தாத்தா பாட்டி அம்மா அப்பா அத்தை மாமா சித்தப்பா சித்தி அக்கா தங்கை அண்ணா தம்பி என்று கூட்டுக்குடும்பத்தில் வளரும் பிள்ளை பிற்காலத்தில் நல்ல ஒரு குடிமகனாக நாட்டுக்கும் நல்ல ஒரு பிள்ளையாக வீட்டுக்கும் உருவாகும்.
இப்ப இருப்பது போல் முதியோர் இல்லங்கள் தென்படாது. டிவியில் சீரியல் ஓடிக்கொண்டிருந்தாலும் பார்ப்பதற்கு ஆள் இருக்காது. இதெல்லாம் பழைய காலம்.. இப்போது??? கூட்டுக்குடும்பமாக வாழ வீடும் பெரியதாய் வேண்டும், பரந்த மனசும் வேண்டும். வாடகைக்கு அவ்வளவு பெரிய வீடு கிடைக்காதே. ஒரு அறை, ஒரு சமையலறை காமன் பாத்ரூம் இப்படி தானே இருக்கிறது. அம்மா அப்பா பாரமாகிவிடுகிறார்கள். பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேலைக்கு ஆள் வைத்தால் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு போவோர் இருப்பாரோ என்ற அவநம்பிக்கையிலும் இவ்ளோ சம்பளம் கொடுத்து வேலைக்கு வேற ஆள் வைக்கணுமா? வயதான அம்மா அப்பா இதற்கு அவசியப்படுகிறார்கள்.
ந்யூக்ளியர் ஃபேமிலி, பிரவேசி வேண்டுவோர் எக்ஸ்ட்ரா சொந்தங்களை அவஸ்தையாக நினைக்கிறார்கள். வயதானோர் வீட்டில் இருந்தால் அவர்களுடன் உட்கார்ந்து பேச டைம் இருப்பதில்லை யாருக்கும்.. எல்லோரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடவும் நேரம் இருப்பதில்லை. அப்ப என்ன தான் செய்வாங்க?? தொலைக்காட்சி இவர்களின் சமயங்களை அழகாக ஆட்கொள்கிறது. சீரியல்கள் எல்லாம் இவர்களுடைய தோழமைகள் ஆகிவிடுகிறார்கள். வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும் ஆண்கள் உடலும் உள்ளமும் அயற்சியாக இருக்க அதை போக்கும் உத்வேகத்துடன் வலை, முகநூல் என்று மேய்வார்கள்.
வீட்டில் இருக்கும் வயதானோர், வேலைக்கு செல்லாத பெண்கள், தங்கள் பொழுதைப்போக்க தொலைக்காட்சியை நாடுகின்றனர். அம்மா அப்பா இப்படி அவர்கள் வேலையில் பிசியாக இருக்கும்போது பிள்ளைகள் சொல்ல நினைப்பதை, பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களை, தோழமைகளைப்பற்றி எதுவும் சொல்ல ஆள் கிடைக்காமல் வீடியோ கேம்ஸில் மூழ்கி விடுகிறார்கள். அப்போது உடலுக்கு உடற்பயிற்சியைப்போல் விளையாட்டு இருந்தது. இப்போது வீடியோ கேம்ஸ் போதுமாக இருக்கிறது.
எல்லோர் வீட்டிலும் இப்படி நடப்பதாக நான் சொல்ல வரவில்லை. ஆனால் பொதுவாக இப்படி நடக்கிறது. உண்மை. விருந்தினர் வீட்டுக்கு வந்தால் டிவியில் சீரியல் ஓடிக்கொண்டே இருக்கும். சீரியலில் இருந்து கண்களை அகற்றாமல் வாங்க என்று சொல்வார்கள். இந்நிலை மாறுமா? எல்லோருக்கும் வேலை படிப்பு என்று அவசரமாய் பறந்துக்கொண்டு இருப்பதால் வாரத்துக்கு ஒரு முறை எல்லோரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டு கதை பேசுவோம்.
வயதானோரிடம் அவர்கள் வாழ்க்கையை சொல்ல சொல்லி கேட்டு அந்த அனுபவத்தை நமக்கு பாடமாக எடுத்துக்கொண்டு பிள்ளைகளுடன் உட்கார்ந்து அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு, பிள்ளைகளை வீடியோ கேம்ஸ் விளையாடுவதை குறைக்கச்சொல்லி வெளியே விளையாட அனுப்பி சுறுசுறுப்பாக்கி, வயதில் மூத்தோரிடம் மரியாதையுடன் பிள்ளைகளை பழகவும் பேசவும் பிள்ளைகளை பழக்கி, நல்லதை சொல்லிக்கொடுப்போம். வலிமையுடன் தோல்வியை எதிர்க்கொள்ள சொல்லிக்கொடுப்போம், பிரச்சனைகளை கண்டு மிரண்டு பின் வாங்காமல் அதை சரி செய்யும் முயற்சியில் நம்பிக்கையுடன் முனையச்சொல்வோம்.. இப்படி பேச ஆரம்பித்து ஒரு மணி நேரம் போவதே தெரியாம பேசிக்கொண்டு இருந்தோம். அதை தான் இன்று இங்கு எழுதி இருக்கிறேன் நண்பர்களே..
போதும்மா தாயே.. வரும்போதெல்லாம் இவ்ளோ நீளத்துக்கு அறிவுரையா அடுக்கிக்கிட்டு போறியே.. நாங்க எவ்ளோ நல்ல பிள்ளைகள்.. நீ அட்வைஸ் பண்றதை நிறுத்திட்டு பதிவர்களை அறிமுகப்படுத்த தொடங்குமா என்று எல்லோரும் உரக்க சொல்வது கேட்கிறதுப்பா.. ரைட்டு போலாமா?
மனம் கவர் பதிவர்கள் – நான்காம் நாள்
1. சேட்டைக்காரன்
எழுத்துகளில் ஹாஸ்யத்தை கலந்து எழுதுவதில் வித்தகர் இவர். இவர் எழுத்தை வாசித்த பலர் இவரை சந்திக்கவேண்டும் எப்படியாவது என்று நினைத்திருக்கின்றனர். அனாயசமாக எழுதிவிடுவார் அற்புதமாய்.
கிட்டாமணியை வெட்டென மற
2. gmb writes
உள்ளத்து உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும் என்ற எழுத்துகளுக்கு சொந்தக்காரர். வாழ்க்கையை ரசனையுடன் வாழ்கிறார் என்பதற்கு சாட்சி இவர் எழுத்துகள்.
அடி மேல் அடி அடித்தால்
3. killergee
300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து , மரித்திருக்கவேண்டும் என்றும் இந்த சமூக மானிடனை காணும் அவா இல்லை என்னும் எழுத்துக்கு சொந்தமானவர். வித்தியாசமான எழுத்து, வித்தியாசமான சிந்தனைக்கு சொந்தக்காரர்.
காயல்பட்டிணம், கயல்விழி & காயாம்பு
4. கட்டபொம்மன்
ஜனரஞ்சகமான எழுத்துகளுக்கு சொந்தக்காரர். ரசனையுடன் எழுதுவார்.
அறிமுக நாயகன்
5. கற்றலும் கேட்டலும்
நிறைகுடம்... இலக்கியம், ஆன்மீகம், கதை, கவிதை எல்லாவற்றிலும் முதன்மை. இவர் எழுத்துகள் நிறைய நான் முன்பே வாசித்திருக்கிறேன். இவருடைய படைப்புகள் பல இணையங்களிலும் வந்திருக்கிறது. சிறப்பு பெற்றிருக்கிறது.
பிரமி
6. மாதவன்
இவரின் எழுத்துகள் நகைச்சுவையோடு அனுபவங்கள் பலதை எழுதி இருக்கிறார். சுவாரஸ்யமாக இருக்கிறது இவருடைய எழுத்துகள் வாசிக்க.
மன்னை மைந்தர்களில் ஒருவர்.
காலேஜு டேஸ்ல நடந்தது
7. தீராத விளையாட்டுப்பிள்ளை
இந்த தீராத விளையாட்டுப்பிள்ளையின் எழுத்துகள் மிக அற்புதமாக இருக்கிறது. பல திறமைகள் கொண்ட இவரின் தற்போதைய சாதனை என்று குறிப்பிடுவதே ப்ளாக் எழுதுவது தான். எழுத்துகள் வசப்படுகிறது இவர் கைக்கு. நாம் இவர் எழுத்துக்கு வசப்படுகிறோம்.
மன்னார்குடி டேஸ் : ஜீவா துரை
8. நோக்கும் இடமெல்லாம் நாமன்றி
துணிச்சலான சமூக சிந்தனை எழுத்துகளுக்கு சொந்தக்காரர். ஆசிரியர். இவரின் எழுத்துகள் நேர்மையாகவும் தவறை தைரியமாக தட்டிக்கேட்கும் விதமாகவும் இருக்கும்.
தேர்வல்ல மதிப்பீடே தேவை
9. வளரும் கவிதை
தமிழ் மீது தீரா பற்று கொண்டவர். இவர் எழுத்துகளில் இடம்பெறா தலைப்பே இருக்க முடியாது. பிறர் படைப்புகள் பிடித்ததை தன் பாணியில் விமர்சனம் எழுதி அழகாக தன் வலைப்பக்கம் போடுவார்.
முகநூல் வலைப்பூவை அழிக்கிறதா?
10. திடங்கொண்டு போராடு
இவர் உலகம் எழுத்துகளால் நிறைந்திருக்கிறது. எழுத்துகளாலேயே நிறைந்திருக்கட்டும் என்ற வள்ளல் எழுத்துக்கு சொந்தக்காரர்.
ரியல் எஸ்டேட் மிருகமும் - வண்டலூர் ஜூவும்
11. தூரிகையின் தூறல்
அட்டகாசமான எழுத்துக்கு சொந்தக்காரர். பலருக்கும் உதவிய எழுத்துகள் இவருடையது. நாவல்கள் எழுதி இருக்கிறார். குட்டி கவிதைகள் எழுதி இருக்கிறார். குறும்படமும் இயக்கி இருக்கிறார்.
திருமணத்தை தள்ளி வைத்துக்கொள்ளலாம்
12. ஸ்கூல் பையன்
இவரின் எழுத்துகள் எப்போதுமே ரசிக்கும்படியாக இருக்கும். இவர் எழுதும் எந்த ஒரு பதிவும் நகைச்சுவையும் ரசனையும் கலந்ததாக இருக்கும்.
டியர் எம்.டி.எஸ்
13. தளிர்
தளிர் நடையிடும் இவருடைய எண்ணங்கள் எழுத்தோவியங்கள் ஆகும் என்ற எழுத்துகள் நிறைந்த வலைக்கு சொந்தக்காரர்.
சிகரெட்டுக்கு தடையும் முதல் எச்சரிக்கையும்
14. ரூபனின் எழுத்துப்படைப்புகள்
இவரின் எழுத்துகள் கவிதைகள் சங்கமமாக, மிகப்பெரிய கவிதைப்போட்டி ஒன்றை நடத்தி அதை வெற்றிகரமாக முடித்தார். இவருடைய எழுத்துகள் சங்கமத்திலிருந்து ஒரு துளி பார்ப்போம்.
நேரில் பேசும் தெய்வங்கள்
15. இளையநிலா
தமிழ் மீது தீராப்பற்று கொண்ட எழுத்தர். சமீபத்தில் நடந்த ஒரு கவிதைப்போட்டியில் முதல் பரிசுப்பெற்ற கவிஞர்.
பூக்கூடை உள்ளே
16. சிவகுமாரன் கவிதைகள்
வெண்பாவும் எழுதுவார். தெம்மாங்கு தெள்ளுத்தமிழிலும் எழுதுவார். சமீபத்தில் நடந்த கவிதைப்போட்டியில் கலந்துக்கொண்டு பரிசும் பெற்றார்.
பூத்துக்குலுங்குதய்யா
17. கவிஞர் கி.பாரதிதாசன் கவிதைகள்
கவிதைகள் கடல் போல் பிரவாகமாய் இருக்கும் இவர் வலைதளத்தில். தமிழ்ப்பற்று மிக்கவர். இலக்கணமும் இலக்கியமும் இவர் எழுத்தின் வசீகரம்.
ஓங்கி அளந்த உத்தமன் பேர் பாடி
18. இதயம் பேசுகிறது
இவரின் எழுத்துகள் மிக ஆழ்ந்தவை. அழுத்தமானவை.. உருக்கமானவை. நகைச்சுவை மிக்கது.. கோபத்தில் கூட இவர் எழுத்துகள் பேசும்.
மஞ்சப்பை
19. eraeravi
இந்த எழுத்தரை அறியாதவர் இருந்திருக்கமுடியாது. தேன் மதுர தமிழ் கிரேஸ் எழுதிய துளிர் விடும் விதைகள் கதைக்கு இவர் எழுதிய விமர்சனம் மிக அருமை.
துளிர் விடும் விதைகள் விமர்சனம்
20. வரலாற்று சுவடுகள்
அழுத்தமான சுவடுகளை பதிக்கும் பல பதிவுகள் இவர் வலைதளத்தில் நான் வாசித்திருக்கிறேன்.
சுற்றுப்புற சூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்
ரோட்டில் நடந்து செல்லும்போது எதிர்ப்படுவோரைப்பார்த்து சின்ன புன்னகைத்தீற்றல் நம் முகத்தில் மலர்ந்தால் எதிர் வருவோர் ஒரு நொடி குழப்பமாகி பின்னர் தயக்கத்துடன் அவர் முகத்திலும் நம் புன்னகைத்தீற்றல் தொற்றிக்கொள்ளும். தெரிந்தவரை கண்டால் மட்டும் தான் நம் முகத்தில் புன்னகை மலருமா என்ன? அறியாதவர் என்றாலும் பஸ்ஸில் நம் அடுத்து உட்காருவோர், ட்ரெயினில் நம் அடுத்து உட்காருவோர், பஸ் ஸ்டாண்டில் நம் அடுத்து நிற்போர், இப்படி பலபேரை நாம் பார்க்கும் சந்தர்ப்பத்தில், ஒரு சின்ன புன்னகை நம் நாளை மட்டுமா? எதிர் வருவோர் நாளையும் அழகாய் மலரவைக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? இறைவன் நமக்கே நமக்கென்று கொடுத்த இந்த அழகான புன்னகையை தயக்கமின்றி பகிரலாமே.. சௌந்தர்யமாக விடியட்டும் இன்றைய நாள் எல்லோருக்கும்...
நாளை மீண்டும் மனம் கவர் பதிவர்களோடு சந்திக்கிறேன் நண்பர்களே.
அன்பு நன்றிகள் வணக்கம் !!!

.jpg)

.jpg)

.jpg)
.jpg)