07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 26, 2014

வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - மூன்றாம் நாள்

குளிர் காலை அன்பு வணக்கங்கள் நண்பர்களே !!



கோபம் வரும்போது காச் மூச் என்று குழந்தைகளிடமோ அல்லது நம் கோபம் எங்கு செல்லுபடி ஆகிறதோ அங்கு கத்திவிடுகிறோம். அதே கோபம் நம் மேலாளரிடமோ அல்லது நம்மை விட வயது மூத்தவர்களிடமோ அல்லது நாம் அதிகம் மதிக்கும் நேசிக்கும் நபரிடமோ நம் கோபம் செல்லுபடியாவதில்லை. ஏனெனில் நாம் கோபத்தை அவர்களிடம் காண்பிக்க தயங்குகிறோம். ஏன்?? நம் கோபம் அவர் மனதை காயப்படுத்திவிடுமோ என்று பயப்படுகிறோம்.

இது ஒருப்பக்கம். அதே சமயம் உரிமை இருக்கும் இடத்தில் கோபமும் வெகு இயல்பாய் வந்துவிடுகிறது.  மூன்றாம் நபரிடம் ஏற்படும் கோபத்தை நாம் வார்த்தைகளை கட்டுப்படுத்தி மௌனமாக இருந்துவிடுகிறோம். அலுவலகத்தில் மேலாளரோ அல்லது உடன் பணி புரிபவரோ ஏதாவது நம் மனம் வருந்தும்படி கோபப்பட்டால் பதிலுக்கு கோபத்தை காட்ட இயலாமல் அதை அதோடு விடவும் செய்யாமல் மன வருத்தத்தோடு பத்திரமாக அந்த கோபத்தை கட்டுச்சோறாக கட்டி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறோம்.

அங்கே விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளை மீதோ அல்லது சீரியல் பார்த்துக்கொண்டு அக்கடா என்று உட்கார்ந்திருக்கும் அம்மா அப்பா மீதோ, அல்லது சமையலறையில் பாத்திரத்தை உருட்டிக்கொண்டிருக்கும் மனைவி மீதோ, அல்லது வீடு துடைக்க, சாமான் கழுவ வந்திருக்கும் வேலையாள் மீதோ சிந்தாமல் சிதறாமல் பத்திரமாக கட்டி கொண்டு வந்த கோபத்தை அப்படியே அபிஷேகம் செய்துவிடுகிறோம்.  நம் மீது காட்டப்பட்ட கோபத்தின் வீரியத்தை தாங்க இயலாமல் பெற்றதை திரும்ப வார்த்தைகளாக  கொட்ட இயலாமல் அந்த இயலாமையை நம்மை விட இயலாமையால் இருப்போரிடம் கொட்டிவிடுகிறோம். இது சரியா தவறா?

நம்மை எல்லோர் முன்பும் கோபமாக கத்தும்போது நாம் அவமானமாக உணர்வது போல தானே நாம் நம் கோபத்தை பிறர் மீது காட்டும்போது அவர்களும் இப்படி அவஸ்தை படுவார்கள்? இதை மனசுல வெச்சுக்கோங்க.. கோபம் வந்தால் கொட்டிடுங்க. அதுக்காக மனசுல வெச்சு புழுங்கவோ வருத்தப்படவோ கூடாது.

வரும் கோபம் நியாயமானதாக இருந்தாலும் சரி அதே கோபத்துடன் உடனே வார்த்தைகளை உதிர்க்காமல், ரெண்டே நிமிஷம் பொறுத்து அதன் பின் கோபத்தை காட்டுங்க. கோபத்தின் உக்கிரம் கொஞ்சம் குறைஞ்சிருக்கும். இன்னும் ரெண்டு நிமிஷம் பொறுத்தால், அட நாம் இப்படி கோபப்படுவது சரியா? பொறுமையா சொல்லலாமே என்று நினைக்கத்தோன்றும்.. இன்னும் ரெண்டு நிமிஷம் பொறுத்தால், அட இதுக்கெல்லாம் கோபம் எதுக்கு? நல்லவிதமாவே சொல்லுவோம்.  யார் தான் தவறு செய்யலை? யார் தான் பர்ஃபெக்ட் இங்கே? கோபம் எதுக்கு இதுக்கு அப்படின்னு நம்ம மனசே நம்மை தட்டிக்கொடுத்து கூலாக்கிவிடும்..

முயற்சித்து பார்த்துவிடுவோமா?

அட எங்களுக்கு இப்படி எல்லாம் சொல்றீங்களே நீங்க எப்படி அப்படின்னு என்னை கேட்க நினைக்கறீங்க தானே? :)  மனித இயல்புப்பா இது மனித இயல்பு... நாம ஒரு நல்லதை சொன்னால், உடனே அட நீங்க இதெல்லாம் தாண்டாமயா வந்திருப்பீங்க? அப்டின்னு கேட்ருவீங்களே.. நானும் பயங்கர கோபக்காரி தான் அதெல்லாம் முன்பு.. இப்ப அப்படி கிடையாது.

வயது ஆக ஆக மனசும் பண்படவேண்டும் தானே? கோபமும் கட்டுக்குள் வரவேண்டும் தானே? தவறுகளை பொறுமையாக கையாளலாம் தானே? சரி செய்ய முடியாதது என்று எதுவுமே இல்லை முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் போதும்.

நான் கோபப்படனும்னு நினைத்தாலும் கோபம் வரமாட்டேன்கிறது இப்பொழுது.  எனக்கு துன்பம் தருகிறவர்களை கூட மன்னிக்கும் பக்குவம் வந்துவிட்டது.

உடல்நலம் நன்றாக இருக்கும் கோபத்தை குறைத்துக்கொண்டால்.

க்ளாஸ் எடுத்தது போதும் தாயே. பதிவர்களை அறிமுகப்படுத்தும்மா என்று முணுமுணுப்பது கேட்கிறது. சரி சரி...

இன்றைய அறிமுகங்கள் - மூன்றாம் நாள்

இன்றைய அறிமுகங்களின் வலைதளங்கள் முகநூல் வழியாக பெற்றது.

1. தமிழ்த் தேன் சுவை தேன்
30 வருஷமாக பத்திரிகை துறையின் சாதனையாளர். சிவ வாசகம் இவர் எழுதி வெளியிட்டுள்ள அற்புத நூல். இதுவரை 8 நூல்கள் எழுதி இருக்கார்.பெரியபுராணம் புதுக்கவிதை நடையில் அருள் தொண்டர் அறுபத்துமூவர்... சிலபத்திகாரம் புகார் காண்டம் செம்மொழிச் சிலம்பு எனும் நூலாக...நடைமுறை இதழியல்.. பத்திரிகை துறைக்கு வரத்துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் சிறந்த கையேடு.

2. நந்தலாலா,காம்
அற்புதமான பல கவிஞர்களின் படைப்புகளை பார்த்து நான் பிரமித்த ஒரு அருமையான வலைதளம்.
மௌனத்தின் தண்டனை

3. வைகறை வைகறை
காலத்தடங்களை அழுத்தமாய் பதிக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
பாட்டியென்றொரு பூட்டப்பட்ட கதவு

4. உணர்வுகள்
மன உணர்வுகளை  கவிதை வரிகளாக்கி குழந்தையாய் தவழவிடுவார் எழுத்துகளில் நம்மை வரிகளில் நெக்குருக வைப்பார்..
மனதுக்கு பிடித்தவர்களிடம்

5. இரவின் புன்னகை
இரவின் அடர்த்தியில் இவரின் எழுத்துகளே புன்னகையாய். இவரின் எண்ணம், தேடல் எல்லாமே எழுத்துகளாய்..
உதிரும் நான்

6. ஓர் அழகிய கவிதை.... காதல் !!!
கவிப்பித்தனான இவர் எழுத்துகளில் காதல் கூட அழகிய அஹிம்சையான கவிதை என்று சொல்கிறார்..
அஹிம்சையாள்

7. கரந்தை ஜெயக்குமார்
எழுத்து சாதனையே இவருடைய வலைதளம்... கணிதமேதை இராமானுஜம் பற்றி அறியாதோர் வாசிக்க எளிய வரிகளில் அற்புதமாக தொடராய் எழுதி பிரமிக்க வைத்தவர். இவர் எழுத்துகள் வாசிக்காமல் நகரவே இயலாது. அத்தனை அருமையான பொக்கிஷங்கள் அடங்கிய வலைதளம்.
சிம்பனி

8. கே.பி,ஜனா
இரண்டே வரிகளில் தமிழாக்கம் செய்து அதை அர்த்தமுள்ள கவிதையாக மாற்றிவிடும் வல்லமை படைத்த எழுத்துகள் இவருடையது.
நல்லதா நாலு வார்த்தை

9. வீரா
ஒரு படம் பார்க்கும்போது அதன் நுணுக்கங்கள் படம் எடுத்த விதம் எல்லாமே விமர்சனமாக இவர் எழுத்தில் மிளிரும்.. மேடை நாடகம் பார்த்துவிட்டு வந்து அந்த நாடகத்தில் பங்கேற்றவரின் நடிப்புத்திறமையில் இருந்து நாடகம் எடுத்த விதம் என்று ஒவ்வொன்றையும் சிலாகித்து எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
மீசை - குறும்படம் பற்றி

10. இனியவை கூறல்
எளியோன் எனைப்பற்றி இயம்ப ஏதுமில்லை என்று சொல்லும் இவர் எழுத்துகள் அசாத்திய விஷயங்களை சொல்லி செல்கிறது. அறிவியல் சார்ந்த விஷயங்களும், கதைகளும் கவிதைகளும் அழகாய் பகிர்கிறது.
கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை விரும்புகின்றன?

11. அன்பின் அர்த்தங்கள்
உணர்வுகள் எழுத்துகளாகி கவிதையானது இவர் வலைப்பூவில்.
நீயாகத் தான் வாழ்ந்தேன்

12. ஒருத்தியின் பார்வையில்
இவர் எண்ணங்களில் தோன்றியவை எல்லாம் எழுத்தாக மாறி வசீகரிக்கிறது.
முகப்புத்தகம்

13. மலர்ஸ் கிச்சன்
சுவையான சத்தான சமையல் குறிப்பை தந்திருக்கிறார் இவர் தளத்தில்.
முடக்கத்தான் கீரை தோசை

14. சங்கவி
நான் ஒரு எழுத்தாளனுமல்ல கவிஞனுமல்ல என்று இவர் தன்னைத்தானே சொன்னாலும்  இவர் எழுத்து சோபிக்கத்தான் செய்கிறது. மனதில் தோன்றியதை நேர்மையாக பகிரும் எழுத்து இவருடையது.
” குடி குடியைக்கெடுக்கும் ” இது யாருடைய தவறு?

15. வர்த்தகம் மற்றும் சேமிப்பு
இந்த பக்கத்தில் வர்த்தகம் மற்றும் சேமிப்பு பற்றிய அனைத்து தொகுப்புகளையும் மிக அழகாக எழுதி இருக்கிறார்.
பிள்ளைகளின் உயர் கல்வி திருமணம், கடன் வாங்காமல் திட்டமிடுவது எப்படி?

16. அந்தரத் தோட்டம்
எண்ணங்களின் வண்ணத்தோட்டம் இவரின் அந்தரத் தோட்டத்தில்..
சில ஆமைக்குஞ்சுகளும் அநாமதேய கனவுகளும்

17. எண்ணச்சிதறல்கள்
குட்டி குட்டி கவிதைகள் நிறைந்த அழகிய வலைப்பூ.
குட்டி கவிதைகள்

18. விழுதுகள்
உள்ளத்தேடல்களும்  தேடி பிடித்தவைகளும் உலக தேடல்களுக்காக சிறு பங்களிப்பு என்று சொல்லி பகிர்ந்தவை முகநூலில் மலர்ந்தவை.
விழுதுகளில் ஒரு துளி இங்கே

19. மௌனத்தின் சப்தங்கள்
இந்த சந்தோஷ விரும்பியின் அழகிய எண்ணச்சிதறல்கள் மௌனத்திலும் கவிதையின் சப்தங்களாக இனிமையாக வரிகளில்..
எனக்காகவே

20. எல்லாப்புகழும் இறைவனுக்கே
இவர் எழுதிய நோன்பின் நினைவலைகளை வாசித்து பாருங்கள். அற்புதமான பகிர்வு இது.  எழுத்துகளில் ஆத்மார்த்தம். சமையல் குறிப்புகளில் சுவையும் ரசனையும் ஒருங்கே தென்படும்.
நோன்பு நினைவலைகள்

ஒவ்வொரு நாளும் நல்லபடியாகவே விடியவேண்டும் என்று தான் பிரார்த்திக்கிறோம். அன்றைய நாள் முழுக்க நல்லதே நடக்கவேண்டும் என்றும் விரும்புகிறோம். உறங்கப்போகுமுன் கண்மூடி யோசித்து பார்க்கவேண்டும் அன்றைய நாளில் நாம் செய்த நல்லவை என்னென்னவென்று... இப்படி ஒவ்வொரு நாளும் யோசிக்க ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக ஒவ்வொரு நாளுமே நமக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே நல்லபடியாகவே விடியும்... நல்லதே நடக்கும்...

மீண்டும் மனம் கவர் பதிவர்களோடு நாளை சந்திக்கிறேன் நண்பர்களே.

அன்பு நன்றிகள் வணக்கம் !!!





44 comments:

  1. கரந்தையார், நந்தலாலா-வைகைறை போல ஓரிருவர்தான் எனக்குத் தெரிந்தவர்கள். அறிமுகமில்லாதிருந்த மற்ற பலரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார் :)

      Delete
  2. :) Successful third day ...... Congrats.

    The BABY at the bottom is so Cute & Beautiful ! :)

    All the Best .... Manju

    - GOPU

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா :)

      Delete
  3. //ஒவ்வொரு நாளும் நல்லபடியாகவே விடியவேண்டும் என்று தான் பிரார்த்திக்கிறோம். அன்றைய நாள் முழுக்க நல்லதே நடக்கவேண்டும் என்றும் விரும்புகிறோம். உறங்கப்போகுமுன் கண்மூடி யோசித்து பார்க்கவேண்டும் அன்றைய நாளில் நாம் செய்த நல்லவை என்னென்னவென்று... இப்படி ஒவ்வொரு நாளும் யோசிக்க ஆரம்பித்துவிட்டால் கண்டிப்பாக ஒவ்வொரு நாளுமே நமக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே நல்லபடியாகவே விடியும்... நல்லதே நடக்கும்...//

    ATHE...ATHE ...... T H A T H A A S T H U ! :)))))

    ReplyDelete
  4. உடல்நலம் நன்றாக இருக்கும் கோபத்தை குறைத்துக்கொண்டால்.
    சிறப்பான ஆலோசனை.

    அருமையான
    அறிமுகங்களுக்கு
    வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. //உடல்நலம் நன்றாக இருக்கும் கோபத்தை குறைத்துக்கொண்டால்......//

      :) Chosen & Highlighted a Very OPT sentence !!!!!! :)

      புத்திசாலி !

      Delete
  5. கோபத்தைக்குறைத்தால் ஜென்நிலை வந்துவிடும் போல))))))))))))))))))))))))))))! இன்றைய அறிமுகங்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)

      Delete
  6. கோபம் தான் மனிதனுக்கு சத்ரு...

    நல்ல கருத்துகளுடன் கூடிய அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா வெங்கட் நாகராஜ் :)

      Delete
  7. அருமையான ஒரு கருத்துடன் இன்றைய அறிமுகங்கள் அசத்தின. அறிமுகமான ஓரிருவரைத் தவிர நிறையத் தளங்கள் புதிதாக இருந்தது சிறப்பு. இதுல என்ன வேடிக்கைன்னா அவங்க எனக்கு முகநூல்ல அறிமுகமாகியிருந்தாலும் ப்ளாக் வெச்சிருக்காங்கன்னு தெரியாது. இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். (இதமாதிரி என் ப்ளாக் தெரியாம நிறையப் பேர் முகநூல்ல இருக்கலாம்ல..?) அறிமுகம் பெற்ற அனைவருக்கும் மகிழ்வான நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அதானே கணேஷா :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)

      Delete
  8. அருமையான தொகுப்பு... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபாலன் சார் :)

      Delete
  9. என்னை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார் :)

      Delete
  10. அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார் :)

      Delete
  11. மனதில் பதியும் வண்ணம் இனிய கருத்துகளுடன் இன்றைய அறிமுகங்களின் தொகுப்பு!..
    அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா துரை செல்வராஜு :)

      Delete
  12. கோபத்தைப் பற்றி அருமையாச் சொல்லீட்டீங்க.... ஏகப்பட்ட அறிமுகங்கள் ... கொஞ்சம் பேர் எனக்கும் தெரிந்தவர்கள் என்பதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹை எழில் :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)

      Delete
  13. சினம் தவிர்த்தல் பழகினால் நல்லது உடம்புக்கு.
    அருமையான கருத்தை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    இன்றைய இடம் பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    குழந்தை அழகு.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)

      Delete
  14. வலைச்சர ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    கோபத்தை குறைத்தால் தான் நல்லது. ஒரு சிலரை அறிந்திருப்பதில் மகிழ்ச்சி.

    பாப்பா செம க்யூட்டாக இருக்கா....:)

    ReplyDelete
    Replies
    1. ண்மைதான் மஞ்சுமா. சினம் ஆற்றவேண்டிய விஷயம்.வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் எடுக்கமுடியுமா. நீங்கள் கொடுத்திருக்கும் சிலதளங்கள் அறியாதவை. போய்ப் படிக்கிறேன் அன்பு மஞ்சு வாழ்த்துகள்.

      Delete
    2. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஆதிவெங்கட் & வல்லிம்மா :) பாப்பா படம் கூகுளில் சுட்டது :)

      Delete
  15. கதம்ப உணர்வுகளினாலே கதம்பமாய் வலைப்பூக்களை கோர்த்து தொடுத்த வலைச்சரம் சிறப்பு! மூன்று நாட்களாய் படித்தும் இணையம் வேகம் குறைந்தமையால் கருத்திட முடியவில்லை! தொடருங்கள் தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சுரேஷ் :)

      Delete
  16. கோபப் படுவதால் நம் உடம்புக்கே கெடுதல் என்ற உணர்வு இருந்தாழ்க் கோபப்படும் குணம் கொஞ்சமாவது குறையும்!

    இன்றைய பதிவில் மிளிரும் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)

      Delete
  17. இன்றைய அறிமுகங்கள் இனிய நண்பரே கரந்தையார் உள்பட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜீ :)

      Delete
  18. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஸ்ரீராம் & கில்லர் ஜீ.. :)

    ReplyDelete
  19. அழகிய பதிவு அக்கா . நிறைய புது தளங்களின் அறிமுகம் கிடைத்தது . இதற்குத் தான் முகநூலில் வலைப்பூவின். சுட்டி கேட்டீர்களா. மஞ்சு அக்கா போலவே பதிவுகளும் அறிமுகப்படுத்திய விதமும் மிக அருமை, இனிமை . என் வலைப்பூவையும் இச்சரத்தில் கோர்த்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஹேமா :)

      Delete
  20. தெரிந்த தெரியாத அறிமுகங்கள்.. சுவாரசியமாய் இருக்கிறது இன்றைய வலைச்சரம்

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரிஷபா :)

      Delete
  21. சில அறிந்த முகங்கள் பல புதிய முகங்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் குமார் :)

      Delete
  22. ரௌத்திரம் பழகுவது தவறா.?

    ReplyDelete
    Replies
    1. ரௌத்திரம் எனக்கு சிரமம் சார் :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார் :)

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது