07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, November 14, 2014

சாலையோர உணவகங்கள்



ஒவ்வொரு பயணத்தின் போதும் பயணம் செய்பவர்கள் அனைவருக்குமே இருக்கும் பொதுவான பிரச்சனை உணவு – அதிலும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கான பிரச்சனை.  நாம் விரும்பும் உணவும், அதுவும் நமது உடலுக்குக் கேடு விளைவிக்காத உணவும் கிடைப்பது பல இடங்களில் கடினம் தான்.  தென்னிந்தியர்கள் வட இந்தியா வரும் போது இங்கேயும் நமது பாரம்பரிய உணவுகளைத் தேடுவார்கள். ஒரு சில இடங்களில் கிடைத்தாலும், வாயில் வைக்க முடியாத அளவிற்குத் தான் இருக்கும்.

தில்லியிலிருந்து உத்திரப் பிரதேசம், சண்டிகர் போன்ற இடங்களுக்குப் பயணிக்கும்போது, எனது நைனிதால் பயணக்கட்டுரையில் சொன்ன “[g]கஜ்ரோலா தாண்டிவிட்டால் நெடுஞ்சாலை உணவகங்கள், அதுவும் நல்ல உணவகங்கள், ஹிந்தியில் சொல்வது போல “நா கி [b]பராபர் ஹே!அதாவது இல்லையென்றே சொல்லலாம்! பேருந்துகளில் செல்லும்போது அந்த ஓட்டுனர்கள் நிறுத்தும் உணவகத்தினைப் பார்க்கும்போது வயிற்றைக் குமட்டிக்கொண்டு வரும்! அத்தனை “சுத்தமாகஇருக்கும்!

நமது ஊரிலும் நெடுஞ்சாலை உணவகங்கள் அத்தனை சிறப்பாக இல்லை.  சமீபத்தில் சில உணவகங்கள் ஆரம்பித்திருந்தாலும், மோட்டல் என்று அழைக்கப்படும் உணவகங்களில் அதிகமான பைசா வசூலித்தாலும், தரம் என்பதை எதிர்பார்க்க முடிவதில்லை – எப்போதாவது வரும் வாடிக்கையாளர் தானே என்பதால் எதையோ சமைத்து எப்படியோ சமைத்து வழங்கி விடுகிறார்கள்.  அவர்களிடம் எதுவும் பேசிடவும் முடியாது. பல சமயங்களில் இங்கே தகராறுகள் நடப்பதை நாம் பார்ப்பதுண்டு.

இவ்விதமான அனுபவங்களை பல முறை பெற்ற எனக்கு, குஜராத் மாநிலத்தில் நெடுஞ்சாலை உணவகங்களில் சாப்பிட்ட அனுபவம் மிகவும் இனிமையான ஒன்றாக அமைந்து விட்டது. ஐந்து நாட்கள் பயணித்ததில் பல முறை இவ்வுணவகங்களில் சாப்பிட வேண்டியிருந்தது. நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, சுத்தமான சூழலில், அருமையான குஜராத்தி உணவும் தருகிறார்கள் என்பதைப் பார்த்த போது இரண்டு மூன்று கவளங்கள் அதிகமாகவே, பயமின்றி உண்ண முடிந்தது.    

உணவகம் நல்ல உணவினைத் தருவது மட்டுமின்றி, ஆங்கிலத்தில் சொல்வது போல நல்ல Ambience உடன் அமைந்திருப்பது மனதுக்கு திருப்தி தரும் விஷயம். இதனை நமது ஊர் நெடுஞ்சாலை ஓர உணவகங்கள் எப்போது தான் புரிந்து கொள்ளுமோ!  மனதுக்கு இதமாய் மெல்லிய இசை தவழ்ந்து உங்கள் செவிக்கு உணவு தர, அருமையான சூழலில் நல்ல உணவு உண்பதும், ஒரு அனுபவம் தான்.  இங்கே இருந்த நாட்களில் இப்படி பல உணவகங்களில் உணவு உட்கொண்டாலும், “[g]கிரிராஜ் உணவகம்எனும் உணவகம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. 

அதன் சிறப்பும், அந்த அனுபவமும் பிறிதொரு சமயத்தில் எனது பக்கத்தில் பதிவிடுகிறேன்!

இங்கே என்னுடைய வலைச்சர வாரத்தின் ஐந்தாம் நாளான இன்றைய அறிமுகங்களை இப்போது பார்க்கலாம்!

16.   வலைப்பூ:  தேவதைத் தூது

மகேந்திரன் திரு என்பவரின் வலைப்பூ இது.  தனக்கான அறிமுகத்தினை இப்படிச் சொல்கிறார் இவர் –

தேவதை..

கேட்ட மாத்திரத்தில் நம்மில் சிலரை நம் குழந்தை பருவத்திற்கும், பலரை தங்கள் காதல் காலங்களுக்கும் தூக்கிச் செல்லும் மந்திரச்சொல்

விரல் சூப்பியும், விரல் பற்றியும் நடந்த காலங்களில் சொல்லப்பட்ட சில கதைகளின் வாயிலாய் என் மனம் என்னும் மந்திர ஜாடிக்குள் புகுந்து விட்ட ஒரு அற்புத அருவம் தான் தேவதை..!!

என் மனதிற்குள் அமர்ந்துகொண்டு எனக்கும் உங்களுக்கும் அவள் சொல்லும் தூதுகளைக் கொண்டு சேர்க்கும் தூதுவனாய் மட்டும் இந்த தேவதைத்தோழன்

அறிமுகப் பதிவு: சில.....

நேற்றைய தனிமையின் பாதையில்,
கிளைகளற்ற மரமொன்றை சந்திக்க நேர்ந்தது.

நீயும் என் போன்றா?”, என்றெண்ணி
நான் கலங்கும் வேளையில்
தனக்கு வேர்கள் இருப்பதாய்க் கூறி
சன்னமாய் சிரிக்கத் துவங்கிற்று மரம்

17.   வலைப்பூ:  பலகை

கிருத்திகா தரன் மார்ச் 2013 மாதம் வலைப்பூவில் எழுத ஆரம்பித்த இவர் இதுவரை 69 பதிவுகள் எழுதி இருக்கிறார்.  கட்டுரை, கல்வி பற்றிய பதிவுகள் இங்கே உண்டு.  பாருங்களேன்!

அறிமுகப் பதிவு: தாயம் – ஆடுகளம்

பலவிதங்களில் விளையாடும் தாயத்தை ஒருமுறை குழந்தைகளோடு அமர்ந்து விளையாடி பார்த்தால் டெக்னாலஜி, வளர்ச்சி என்று கூறிக்கொண்டு நாம் எதை இழந்து இருக்கிறோம் என்ற அருமை புரியவரும். சிறு, சிறு சந்தோஷங்களில் ஒளிந்து இருக்கிறது வாழ்க்கை. பழங்கால விளையாட்டுகள் மேலே வந்தால் வருவது விளையாட்டுகள் மட்டுமல்ல...நம் வாழ்கையின் சந்தோஷங்களும்.

18.   வலைப்பூ: ஏகாந்தன்

சென்ற வருடத்தின் டிசம்பர் மாதத்தில் வலைப்பூவில் எழுத ஆரம்பித்திருக்கிறார் ஏகாந்தன். இந்த ஒரு வருடத்திற்குள் 100 பதிவுகளுக்கு மேல் எழுதி இருக்கிறார் ஏகாந்தன். அவரது ஒரு பதிவு மட்டும் இங்கே பார்க்கலாம்!
 
அறிமுகப் பதிவு: மரத்தின் கீதம்

அடர்ந்து பரந்த விருக்ஷத்தின்
அடியில் விழுந்து கிடந்தது அந்தக் கிளை
துண்டிக்கப்பட்டு விழுந்தபின்னும் தன்
துணையால்தான் மரம் நிற்கிறது
வாழ்கிறது என நினைத்துவைத்தது
காற்று வெயில் நாளெல்லாம் அலைக்கழிக்க
காய்ந்து காய்ந்து விறகாகிப்போனது
இருந்தும் மரத்தை நோக்கும்போதெல்லாம்
நானிருக்கும் தைரியத்தில்தான் நீ இருக்கிறாய்
என்பதாக நினைத்துக் கர்வப்பட்டுக் கொண்டது
விறகு பொறுக்கும் சிறுவன் ஒருநாள் தென்பட
விதிர்விதிர்த்தது வியர்த்தது கிளைக்கு.....

19.   வலைப்பூ:  மனவெளி

மோகன்ராஜ் – B.Tech [IT] படித்து மென்பொருள் வேலையில் இருக்கும் இவர் இந்த வருடம் தான் பதிவுகள் எழுத ஆரம்பித்து இருக்கிறார் என்றாலும் இதுவரை 200 பதிவுகளுக்கும் மேல் எழுதி இருக்கிறார் – கவிதைகள் – மிகச் சிறியதாய் இவரது பக்கத்தில் நிறையவே காணக்கிடைக்கிறது. மணமாகாதவன் அறை என்ற இவரது கவிதையை இங்கே பார்க்கலாம்!

அறிமுகப் பதிவு: மணமாகாதவன் அறை

மிக நீண்ட பிரயத்தன தேடலின் முடிவில்
எங்கேனும் ஒளிந்திருந்து வெளிப்படக்கூடும்
ஒன்றிரண்டு துவைத்த சட்டைகள்
மணமாகாதவனின் அறையில்

20.   வலைப்பூ: ஊர்க்குருவி

இவரது அறிமுகத்தில் தன்னைப் பற்றிச் சொல்லி இருப்பதை இங்கே கொடுக்கிறேன் - இலங்கையில் தொலைக்காட்சி பத்திரிகையில் ஊடகராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றினேன் சில காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறி இப்போது வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன் திருக்குமரன் கவிதைகள்,விழுங்கப்பட்ட விதைகள் என்ற கவிதைத் தொகுப்புகளும், சேதுக்கால்வாய்த் திட்டம் (ராணுவ,அரசியல்,பொருளாதார, சூழலியல் நோக்கு)எனும் ஆய்வுநூலும் என்னுடைய படைப்புக்களாக வெளிவந்திருக்கின்றன.

அறிமுகப் பதிவு: கண்ணம்மா

எந்தை நிலம் நீயெனக்கு
ஏங்கும் மனம் நானுனக்கு
வந்த வழி நீயெனக்கு
வரும் விடியல் நானுனக்கு
எந்தநிலை தோன்றிடினும்
என்னுளெழும் வீரியமே
சொந்த மண்ணின் வாழ்கனவே
சுதந்திரமே கண்ணம்மா

என்ன நண்பர்களே, இன்றைய தலைப்பு சொல்லும் விஷயத்தினையும், இன்றைய அறிமுகப் பதிவுகளையும் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நாளை மீண்டும் வேறு சில பதிவர்களின் பதிவுகளோடும், குஜராத் பற்றிய வேறு சில செய்திகளோடும் உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 



எனது பக்கத்தில் இன்றைய பதிவு: ஃப்ரூட் சாலட் – 114 Fighter Pilot – அழகு நிலையம் – சொல்லாயோ... - அதையும் படிக்கலாமே!
 


33 comments:

  1. நமது ஊரில் கூட இப்போதெல்லாம் நல்ல மோட்டல்கள் வந்திருக்கின்றன. முன்னர் போலில்லை.

    நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
    Replies
    1. த்ங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. ஆஹா! நண்பர் வெங்கட் ஜியின் வலைச்சர தொடுத்தலாம் இவ்வாரம். இன்றுதான் காண முடிந்தது! அருமையான பதிவு! ஆம்! பிரயாணங்களின் போது உணவு என்பது கஷ்டமாகிவிடுவ்தென்பது உண்மையே! சிறிய பிரயாணம் என்றால், வீட்டிலிருந்து கொண்டுவந்து விட முடிகின்றது! ஆனால் வெளியூர் பலநாட்கள் பிரயாணம் சுற்றுலாப் பயணம் என்றால் தாங்கள் சொல்லுவது போலத்தான்! நல்ல பதிவு!

    அறியாத தளங்கள்! மிக்க நன்றி வெங்கட் ஜி! அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. த்ங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!.

      பல முறை இப்படிப் பயணங்கள் செல்லும்போது உணவிற்காக திண்டாடும் நபர்களைப் பார்த்ததுண்டு.... என்னைப் பொறுத்த வரை எந்த ஊருக்குச் செல்கிறோமோ அந்த ஊரின் உணவினைச் சாப்பிடுவது வழக்கம்.

      Delete
  3. அனைத்தும் புதிய தளங்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      Delete
  4. நெடுஞ்சாலைப் பயணங்களின் போது - ஏற்படும் சோதனையை விவரித்த விதம் அருமை..
    அத்துடன் இன்றைய தொகுப்பும் அருமை..
    அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      Delete
  5. அனுபவத்தை பகிர்ந்த விதம் அருமை நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      Delete
  6. இன்றைய வலைச்சர மலர்கள் மணத்தன! அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      Delete
  7. புதியதளங்கள் இன்றும் பகிர்வு நன்றி இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      Delete
  8. சென்னைப்பயணங்கள் இந்த சாப்பாட்டு விடயத்தில் அதிக தொந்தரவுதான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பரே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      Delete
  9. இன்று இடம்பெற்றவர்களில் ஏகாந்தன் அவர்கள் மட்டும் தெரிந்தவர்.

    மற்றவர்கள் புதியவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    மனதுக்கு இதமாய் மெல்லிய இசை தவழ்ந்து உங்கள் செவிக்கு உணவு தர, அருமையான சூழலில் நல்ல உணவு உண்பதும், ஒரு அனுபவம் தான். //

    அது நல்ல அனுபவம்தான்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      Delete
  10. பயணம் செய்ய நேரிட்டால் வீட்டிலிருந்தோ ,நல்ல உணவகத்தில் எடுத்துசென்றால் பிரச்சனையில்லை.ரயிலில் கொடுக்கும் தரம்கெட்ட உணவைவிட ரோட்டுக் கடைகள் பரவாயில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

      Delete
  11. குஜராத்தின் நெடுஞ்சாலை உணவகங்களைப் பற்றிய தங்களின் பதிவு மகிழ்ச்சியளிக்கிறது. சுத்தம் இருந்தால்தானே அடுத்தமுறை தைரியமாக அங்கே போக முடியும்.

    இன்றைய பதிவர்களின் அறிமுகமும் அசத்தலாக உள்ளது. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      Delete
  12. குஜராத்தில் நெடுஞ்சாலையில் உள்ள சுத்தமான உணவகங்கள் போல் நம்மூர் உணவகங்கள் மாறும் நாள் எப்போது வரும்?
    அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      Delete
  13. சாலை ஒர உணவகங்கள் பெரும்பாலும்
    என்ன முழுவதுமே
    சாக்கடைகளுக்கு பக்கத்திலே தெருக்கள் சங்கமிக்கும் இடங்களிலே
    இருக்கின்றன.
    இவற்றில் சுண்டல், ஜாங்கிரி, ஆம வடை, பேல் பூரி, சமோசா, போன்ற சமாச்சாரங்கள் சிறுவர்கள் மற்றுமின்றி அலுவலக மேலாளர்களையும் தனது சிலவின்மை, அருகாமையினால் கவருகின்றன.
    இவற்றில் போடப்படும் யூஸ் அண்ட் த்ரோ தட்டுகள், வாட்டர் கப்புகள் சாக்கடைகளை அடைத்து
    மழை காலத்தில் தெருக்கள் அடித்துக்கொள்கின்றன.

    ஈக்கள் கொசுக்கள், இவற்றிடையே உண்ணவும் வேண்டுமா ?

    வளசரவாக்கம் தெரு ஒர கடைகளை நீங்கள் மட்டுமல்ல, கார்ப்பொரேஷன் சுகாதார அலுவலர்கள் என்று தான் கவனிப்பார்களோ தெரியவில்லை.


    ReplyDelete
    Replies
    1. பல சாலையோர உணவகங்கள் முகம் சுளிக்க வைப்பவையாகவே இருக்கின்றன!

      இயற்கையின் எழிலில் நடக்கலாம் வாங்க!
      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

      Delete
  14. சாலையோர உணவகங்கள் என்ற தலைப்பில்
    சுவையான எழுத்து நடையில்
    சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்


    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      Delete
  15. அன்புள்ள நண்பரே !


    தங்கள் வலைச்சரம் படிப்பதற்க்கு நன்றாக உள்ளது. தங்கள் வலைச்சரத்தை தினசரி பார்ப்பதற்க்கும் வலைச்சரத்தை பின் தொடரவும் தங்களது LAYOUT SETTING ல் ADD A GADGET ல் google+padge சேர்க்க வேண்டுகிறேன்.

    நன்றி
    சித்தையன் சிவக்குமார்.




    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்தையன் சிவக்குமார்.

      Delete
  16. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஷோக் குமார்.

    ReplyDelete
  17. புதியவர்களின் வலைத்தளங்களுக்கு சென்று வருகிறேன். தேடித்தேடி அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது