07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 19, 2014

[DH]தண்டவத் பரிக்ரமா



நேற்றைய வலைச்சரத்தில் [B]ப்ரஜ் பரிக்ரமா பற்றிப் பார்த்தோம் இந்த சௌராசி கோஸ் பரிக்ரமா செய்ய முடியாதவர்கள் இதனைத் தனித்தனியாக பிரித்து விருந்தாவன் பரிக்ரமா, கோவர்த்தன் பரிக்ரமா என தங்களுக்கு இருக்கும் நேரத்தினைப் பொறுத்து மாற்றிக் கொள்கிறார்கள். பரிக்ரமா மார்க்[G]என அழைக்கப்படும் பரிக்ரமா பாதையில் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களையும் நீங்கள் காண முடியும். இதைத் தவிர வேறு சிலர் செய்யும் பரிக்ரமாவினையும் பார்க்க முடியும். அது தான் [DH]தண்டவத் பரிக்ரமா.

 படம்: இணையத்திலிருந்து....

பரிக்ரமா பாதையில் நடந்து செல்லும் போது காலணிகள் இல்லாது தான் செல்வார்கள். கிருஷ்ணரின் பாதம் பட்ட இடங்களில் தங்களது காலணிகள் படக்கூடாது என்ற எண்ணமே இதற்குக் காரணம். ஒவ்வொரு அடியிலும் கிருஷ்ணரின் பொற்பாதங்கள் தடம் பதித்திருக்கலாம் என்பதால் முழு பாதையையும் நமஸ்கரித்தபடியே – அதாவது ஒரு முறை நமஸ்கரித்து மீண்டும் எழுந்து மீண்டும் நமஸ்கரித்து இப்படியே தொடர்ந்து செல்வது சிலரது வழக்கம்.  இப்படி நமஸ்கரித்தபடியே செல்லும் பரிக்ரமாவினைத் தான் [DH]தண்டவத் பரிக்ரமா என்று அழைக்கிறார்கள்.

இதுவே கடினமான ஒரு விஷயம் – விருந்தாவன் பரிக்ரமா சுமார் 12 கிலோ மீட்டர் – முழு தொலைவினையும் நமஸ்கரித்து, எழுந்து மீண்டும் நமஸ்கரித்து எனச் செய்தால் எத்தனை கடினமாக இருக்கும் என்பதை யோசிக்கும்போதே நமக்கு பயமாக இருக்கும் – ஆனாலும் இங்கே இருப்பவர்கள் சர்வ சாதாரணமாக இப்படிச் செய்வதை பார்க்க முடியும். இதையே கடினம் என நாம் நினைக்கும் அதே வேளையில் ஒரு சிலர் இன்னும் கடினமான முறையில் பரிக்ரமா செய்வார்கள்.

 படம்: இணையத்திலிருந்து....

சில சாதுக்கள் பக்கத்தில் ஒரு கற்குவியலோடு அமர்ந்திருப்பதைப் பார்க்க முடியும் – அக்குவியலில் மொத்தமாக 108 கற்கள் இருக்கும்.  மொத்த பரிக்ரமா பாதையையும் இவர்கள் கடக்க பல நாட்கள் ஆகும் – ஏனெனில் அவர்கள் பரிக்ரமா செய்யும் முறை அத்தனை கடினமானது – [DH]தண்டவத் பரிக்ரமாவில் ஒவ்வொரு நமஸ்காரம் என்றால் – இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் 108 நமஸ்காரம்! அதனை கணக்கில் வைத்துக் கொள்ளத் தான் அந்த 108 கற்கள்.  கால் பக்கத்தில் 108 கற்களை வைத்து ஒரு நமஸ்காரம் முடித்தவுடன் அதிலிருந்து ஒரு கல் எடுத்து தலைப்பக்கத்தில் வைப்பார். இப்படி எல்லா கற்களும் தலைப்பக்கம் வந்த பிறகு அங்கிருந்து மீண்டும் நமஸ்காரம்! இப்படி முழுப் பாதையையும் கடக்க எத்தனை நேரம் ஆகும் என்பதை உங்கள் கணக்கிற்கே விட்டு விடுகிறேன்!

இப்படிச் செய்யும் பக்தர்கள் பாதியில் எழுந்து எங்கும் போவதில்லை. அங்கேயே ஓய்வு எடுத்துக் கொள்கிறார்கள். உணவு போக வரும் இருக்கும் பக்தர்களோ, கிராம வாசிகளோ கொடுத்து விடுகிறார்கள். இயற்கை உபாதைகளை பக்கத்தில் இருக்கும் இடங்களில் தீர்த்துக் கொள்கிறார்கள். கடுமையான இந்த பரிக்ரமா செய்ய அவர்களுடைய இறைநம்பிக்கையும் “அவனதுஅருளும் தானே காரணமாக இருக்க முடியும்!

பரிக்ரமா பற்றிய வேறு சில விஷயங்களை நாளைக்குப் பார்க்கலாம்! இப்போது இன்றைய அறிமுகங்களைப் பார்க்கலாம்!

41.   வலைப்பூ:  சகோதரி

திருநங்கை கல்கி அவர்களின் வலைப்பூ இது. திருநங்கைகளின் உரிமைக்காகப் போராடும் கல்கி சுப்ரமணியம் தான் ஆரம்பித்த “சகோதரிநிறுவனம் பற்றியும் இங்கே பதிவிடுகிறார்.

அறிமுக வலைப்பதிவு: புன்னகை

திருநங்கைகளின் ஒவ்வொரு புன்னகையின் பின்னணியிலும் ஒவ்வொரு வலி உண்டு. வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் முழுமையைத் தேடும் முடிவுறாப் பயணம். நாளைய பொழுதின் கவலைகள் நாளை – இன்றைய பொழுதின் மகிழ்வே வாழ்க்கை. ஒவ்வொரு திருநங்கையிலும் இருக்கிறாள் – ஒரு தாய், ஒரு தோழி, ஒரு சகோதரி...... என்று நமக்குச் சொல்லும் அருமையான குறும்படம் காண இப்பதிவினைப் படியுங்களேன்!

42.   வலைப்பூ:  இதய சுவடுகள்

ஸ்ரீசந்த்ரா எனும் இப்பதிவர் வலையுலகில் அடியெடுத்து வைத்தது ஏப்ரல் 2014 என்றாலும் ஒரு வருடத்திற்குள்ளாகவே 187 பதிவுகள் எழுதி இருக்கிறார்.  தன்னைப் பற்றி இவ்வாறு சொல்கிறார் இவர் – படித்தது பி.காம் (B.Com.,) இளங்கலை வணிகவியல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு எம்.பி.ஏ (MBA)அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி மேலும், இலக்கியத்தில் ஆர்வம் உண்டு, ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் உண்டு கவிதை, கட்டுரைகளை என் அறிவுக்கு எட்டியவரை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.


இன்று பேஸ்புக், டுவிட்டர், வைபர், வாட்ஸ்அப் என்று பல வலைதளங்கள் இருந்தாலும் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை சுருங்கிவிட்டது. எவ்வளவு... மாற்றம்? மாறியது வலைதளம் மட்டுமல்ல நாமும் தான் இல்லையா..? நம்மையே நாம் மறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை இன்று வலைதளங்கள் விரிந்து கிடக்கிறது வார்த்தைகள் இன்றி. 

43.   வலைப்பூ:  நினைவுத் தூறல்கள்

கௌதமன் ராஜகோபால் என்பவர் எழுதும் வலைப்பூ இது. எழுத ஆரம்பித்தது 2009-ஆம் ஆண்டு என்றாலும் இதுவரை எழுதிய பதிவுகள் 57 மட்டுமே...

அறிமுகப் பதிவு: காதல்.... காதல்.... காதல்....

காதல், வெறும் வார்த்தையல்ல அது ஒரு பிரபஞ்சப் பேரியக்கம். ஒரு ஈர்ப்பு, ஒரு விசை, ஒரு சக்தி, இங்கு எல்லா இயக்கங்களும் ஒரு காதலுடன்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரபஞ்சமே காதலின் சக்தி. ஈர்ப்பில்லாமல் போனால் எந்த நட்சத்திரமும், எந்த ஒரு சூரியனும் தன்னிலை நின்று இயங்க வாய்ப்பில்லை. பிரபஞ்சம் சின்னாபின்னமாகிவிடும், எல்லாம் காதல் தான்.

44.   வலைப்பூ:  நோ பேப்பர் ப்ளாக்

பேப்பர் பயன்பாட்டை குறைத்து ஆன்லைனில் ஸ்டோர் பண்ணலாமே (ஒரு சமுதாய அக்கறை தான்.. வேற என்ன)என்று தனது வலைப்பூவின் முகப்பில் குறிப்பிட்டு இருக்கிறார் இவள்கல்யாணி. இவர் ஒரு ரேடியோ ஜாக்கி – ஹலோ எஃப்.எம்-ல் இவள் எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறாராம்.

அறிமுகப் பதிவு: நோ டென்ஷன்

சிலருக்கு எதுக்கெடுத்தாலும் பயங்கர கோபம் வரும், செமயா டென்ஷன் வரும். ஆனா ரொம்ப டென்ஷன் ஆறவங்களுக்கு மன அழுத்தம் தேடி தேடி வரும் அப்டின்னு ஆயுர்வேதத்தில் சொல்லி இருக்காங்க.  அப்படி மன அழுத்தம் கூடிகிட்டே இருந்துச்சு அப்டின்னா உடம்புல இருக்கிற ஹார்மோன்கள் ரொம்ப ரொம்ப பாதிக்கப்படும்.

45.   வலைப்பூ:  ஆடுமாடு

இது கிராமத்து சகதி. நீங்களும் முங்கலாம்.முங்கினால் உங்கள் முகம் காணலாம். இது தான் இவரது தளத்தின் முகப்பில் காணப்படும் வாசகம். பெயர் ஏக்நாத் ராஜ். கதை, சிறுகதை, கிராமத்து நினைவுகள் என நிறைய பதிவுகள் இவரது தளத்தில் காண முடிகிறது.

அறிமுகப் பதிவு: அம்மா இல்லாத ஊர்

ஒவ்வொரு முறை ஊரில் இறங்கி வீட்டுக்குள் கால் வைக்கும்போதும், வாசல் திண்ணையில் காத்திருந்து, 'ஏல, ஏம் இப்டி கரைஞ்சு போயிருக்கெ. ஒழுங்கா திங்க மாட்டியோ' என்று அன்போடு விசாரிக்கிற அம்மாவின் வார்த்தைகளில்- அது பொய் என்றாலும்- இருக்கிற உயிர், பெருநகரம் திரும்பிய போதும் மனதோடு அலைபாய்ந்துகொண்டிருக்கும் அடுத்த சந்திப்பு வரை.

என்ன நண்பர்களே, இன்றைய வலைச்சரத்தில் சொன்ன விஷயங்கள், மற்றும் அறிமுகத் தளங்கள் ஆகியவற்றைப் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் நாளை சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 



இன்று எனது பக்கத்தில்: கதையல்ல நிஜம் – மனச்சுரங்கத்திலிருந்து பதிவு.
 

28 comments:

  1. வணக்கம்
    ஐயா

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள் தொடருகிறேன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை):

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  2. தண்டவத் பரிக்ரமா மற்றும் சாதுக்களின் பரிக்ரமா பற்றிய விவரங்களுடன்
    தொகுக்கப்பட்ட பதிவு அருமை..
    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      Delete
  3. பரிக்ரமா - வியக்க வைத்தது...!

    இரு தளங்கள் புதியவை...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      Delete

  4. சாதுக்கள் செய்யும் ‘பரிக்ரமா’ பற்றிய தகவல் வியக்க வைத்தது. நீங்கள் அறிமுகம் செய்து வைக்கும் பதிவர்கள் அனைவரும் எனக்கு புதியவர்களே. அனைத்து பதிவையும் படிப்பேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      Delete
  5. இந்த முறை பற்றி வாசித்திருக்கின்றோம் என்றாலும் இந்த வார்த்தை இப்போதுதான் கற்றுக் கொண்டோம். அதுவும் சாதுக்கள் பரிக்ரமா மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.....இராமானுஜர் திருப்பதி மலையை முழங்காலில் நடந்து ஏறி பகவானைத் தரிசித்ததாக அவருடைய வாழ்க்கை வரலாறு சொல்கின்றது. அது போல காரைக்கால் அம்மையார் தலைகீழாக நடந்ததாகச் சொல்லப்படுவதும் உண்டு..தண்டத் பரிக்ரமா - தண்டம் இட்டு - விழுந்து கும்பிட்டு செய்வது போல....இதுவும் ஏதாவது பெயரில் வருமோ? வெங்கட் ஜி?

    நல்ல இடுகை.

    அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஹிந்தி/சமஸ்க்ருத மொழியில் ”தண்டம்” என்பதற்கு குச்சி [Stick] என்ற அர்த்தம் உண்டு. குச்சி போல கீழே கிடந்து நமஸ்கரிப்பதை இப்படி ”தண்டவத்” பரிக்ரமா என அழைக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      Delete
  6. ஒரு புதிய விஷயத்தை தெரிந்து கொள்ள முடிந்தது.
    இன்றைக்கு அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    சிறப்பாக தொகுத்து வழ்ங்குகிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      Delete
  7. //முழு பாதையையும் நமஸ்கரித்தபடியே – அதாவது ஒரு முறை நமஸ்கரித்து மீண்டும் எழுந்து மீண்டும் நமஸ்கரித்து இப்படியே தொடர்ந்து செல்வது சிலரது வழக்கம். இப்படி நமஸ்கரித்தபடியே செல்லும் பரிக்ரமாவினைத் தான் [DH]தண்டவத் பரிக்ரமா என்று அழைக்கிறார்கள்.//

    திருக்கைலை யாத்திரையின் போது திபெத்தியர்கள் மேற்குறிப்பிட்ட மாதிரியில் தான் கைலை மலையைப் பரிக்ரமா செய்வார்கள். இப்படி நடந்து போயே அவர்கள் மூன்று நாட்கள், நான்கு நாட்களில் முடித்தால் நமக்கெல்லாம் குதிரையின் மேல் மூன்று நாட்கள் ஆகும். நடுவில் இரண்டாம் நாள் கொஞ்சம் நடக்க வேண்டித் தான் இருக்கும். மலை ஏற வேண்டும். ஹை ஆல்டிட்யூட் பகுதி அது. தரதரனு இழுத்துட்டுப் போவாங்க. எங்களால் முடியலை. இரண்டாம் நாளே தார்ஷன் என்னும் காம்புக்குத் திரும்பிட்டோம். :(

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான். சர்வ சாதாரணமாக அவர்கள் கடந்து போகும்போது நமக்கு ஆச்சரியம் தான்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      Delete
  8. ஒரு நமஸ்காரம் செய்து செல்வதே கடினம் என்ற நிலையில் ஒவ்வொரு அடிக்கும் 108 நமஸ்காரம் செய்து செல்வது பிரமிக்க வைக்கிறது.

    வழக்கபோல எல்லோரும் புதிய அறிமுகங்கள்.

    ReplyDelete
    Replies
    1. 108 [அ] 1008 என்று செய்வதை இவர்கள் மோக்ஷ பரிக்ரமா என்றும் சொல்கிறார்கள்! எவ்வளவு கடினம் என யோசிக்கும்போதே மலைப்பாக இருக்கிறதே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  9. புதிய அறிமுகங்கள்! இதுவரை நான் அறியாதவர்! நன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      Delete
  10. தண்டவத் பரிக்ரமா! நினைத்தாலே மெய் சிலிர்க்கிறது! அறிமுகப்பதிவர்கள் அசத்துகிறார்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      Delete
  11. புதுமையான விசயத்தை அறியத்தன்தமைக்கு நன்றி நண்பரே,,,

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர் ஜி!

      Delete
  12. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாதவன் நம்பி.

      Delete
  13. Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  14. Arumaiyana pathivu. Valaisarathil arimugapaduthiyatharku nandrigal

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீ சந்த்ரா.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது