07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, November 18, 2014

[B] ப்ரஜ் பரிக்ரமா



பெரும்பாலும் தமிழகத்திலிருந்து வடக்கே சுற்றுப்பயணம் வரும் நபர்கள் ஆக்ராவில் தாஜ்மஹால் பார்க்கச் செல்லும் போது கிருஷ்ண ஜன்ம பூமியான மதுராவிற்கோ அல்லது விருந்தாவனத்திற்கோ செல்வதுண்டு.  ஒரு மணி நேரத்தில் மதுரா [அ] விருந்தாவனம் பார்த்துவிட்டு தில்லிக்குத் திரும்வி விடுவார்கள். ஆனால் பெரும்பாலும் வட இந்தியர்கள் இப்படி ஒரே நாளில் திரும்புவதில்லை.  கிருஷ்ண ஜன்ம பூமியான மதுரா மற்றும் அதன் சுற்றுப் புறங்கள் அனைத்துமே கிருஷ்ணர் வளர்ந்த இடங்கள் என அதனைப் போற்றி வருவார்கள். 

 படம்: இணையத்திலிருந்து

அப்படிப் பயணம் செய்பவர்களில் பலர் “[B]ப்ரஜ் பரிக்ரமாஎன்று வலம் வருவதுண்டு. திருவண்ணாமலை மற்றும் திருச்சி மலைக்கோட்டைகளில் பிரபலமான கிரிவலம் போன்றது தான் இந்த “[B]ப்ரஜ் பரிக்ரமா ஹிந்தியில் பரிக்ரமா என்றால் வலம் வருவது. இந்த பரிக்ரமாவின் மொத்த தொலைவு சௌராசி கோஸ் – அட முட்டைக்கோஸ் தெரியும் இது என்ன சௌராசி கோஸ் என்று நினைப்பவர்களுக்கான பதில் அடுத்த பத்தியில்!

சௌராசி [Chowraasi] என்றால் ஹிந்தி மொழியில் 84.  வட இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு அளவு சொல்கிறார்கள் – 1 முதல் 4 கிலோ மீட்டர் வரை!  இப்பகுதியில் ஒரு கோஸ் என்பது மூன்று கிலோ மீட்டர் – இந்த அளவில் அதாவது 252 கிலோ மீட்டர் தொலைவினை நடந்தே வலம் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எல்லா நாட்களிலும் பரிக்ரமா செய்தாலும் குறிப்பாக ஹோலி சமயத்தில் இங்கே பரிக்ரமா செய்பவர்கள் மிக அதிகம். 

 படம்: இணையத்திலிருந்து

இந்த பரிக்ரமா பாதையில் செல்லும்போது 12 வனங்கள், 24 உபவனங்கள் [தோப்புகள்], புனிதமான கோவர்த்தன கிரி, புண்ணிய நதியான யமுனை, மதுரா, மஹாவன், குசும் சரோவர், ராதாகுண்ட், [b]பர்சானா, நந்த்காவ்ன் என்று பல இடங்களைத் தாண்டிச் செல்கிறார்கள்.  242 கிலோ மீட்டர் தொலைவினை எத்தனை நாட்களில் நடந்து கடக்க முடியும்? கிட்ட்த்தட்ட 21 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஒரு சிலர் இந்த தொலைவினை வாகனங்களில் கடக்கிறார்கள் – இதற்கே ஏழு நாட்கள் எடுத்துக் கொள்வார்கள் – வழியில் இருக்கும் அனைத்து இடங்களையும், அங்கே இருக்கும் ஆலயங்களையும் தரிசித்து – கிருஷ்ண பரமாத்மா பிறந்து வளர்ந்த  இடங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்து முடிக்க இத்தனை நாட்கள் தேவையாக இருக்கிறது.

இதனை [ch]சார் [dh]தாம் யாத்ரா என்று சொல்பவர்களும் உண்டு – அதாவது கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் செல்வதைத் தான் [ch]சார் [dh]தாம் யாத்ரா என்று சொல்வார்கள்.  இந்த [B] ப்ரஜ் பரிக்ரமாவும் [ch]சார் [dh]தாம் யாத்ரா எனச் சொல்ல ஒரு காரணம் உண்டு – நந்தகோபாலும், யசோதா தேவியும் கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் பயணம் செய்ய வேண்டும் என விருப்பப் பட அவ்விடங்களை 84 கோஸ் என அழைக்கப்படும் இந்த  [B] ப்ரஜ் பரிக்ரமாவிற்குள் கிருஷ்ண பரமாத்மா அவர்களுக்காகவே தற்காலிகமாக கொண்டு வந்ததாகவும் நம்புகிறார்கள்.

இத்தனை கடுமையான பயணம் ஆக இருந்தாலும் மிகவும் சந்தோஷமாகவும் நம்பிக்கையாகவும் பயணிக்கிறார்கள்.  இந்த ப்ரஜ் பரிக்ரமா பற்றிய வேறு சில விஷயங்களை நாளைய பதிவில் பார்க்கலாம்!

36.   வலைப்பூ:  கலியுகம்

என்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை மற்றவர்க்கு ஏற்படும் சங்கடங்கள் சோதனைகளை எனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுபவன். பல கம்பனிகளை கடந்து தற்போது கடல் கடந்து பஹ்ரைனில் வேலை பார்த்துகொண்டிருக்கிறேன் எண்ணுவதெல்லாம் யாவரும் நலம்என்று தன்னைப் பற்றிச் சொல்லும் இவர் வலைப்பூ ஆரம்பித்தது ஜூலை 2010.  இது வரை எழுதிய பதிவுகள் 254.

அறிமுகப் பதிவு: கனா கண்டேன்

கனவொன்று கண்டேன்
நேற்று நள்ளிரவில்
உன் முகம் காண
ஆவலாய் விழிதனில்
வலைவீசினேன்
நின் தந்தையின்
முறுக்கு மீசை - மட்டும்
காட்சிக்கு இரையானது
ஏன் கனவிலும்
நின் முகம்கான
கடுந்தவம் மேற்கொள்ள
வேண்டுமோ நான்?

37.   வலைப்பூ:  புதுவைப் பிரபா

உங்கள் தமிழ்ப் பசிக்கு...  ஒன்றிரண்டு பருக்கைகள் தருபவன்என்று தனது பக்கத்தில் சொல்லும் புதுவைப் பிரபா வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது 2009. இதுவரை எழுதிய பதிவுகள் 76 மட்டுமே.....

அறிமுகப் பதிவு:      கனவு மெய்ப்படும்-சிறுகதை

மக்களின் பூர்வாங்க நீர்த்தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத ஏக்கத்தோடு சுழன்று கொண்டிருந்த உலக உருண்டையில் தான் இந்த கொடாத்தூர் கிராமமும் இருந்தது. இந்த கிராமத்தின் பெரும்பகுதி நிலங்கள் புல்பூண்டு கூட முளைக்க வக்கற்று வறண்டு கிடந்தது. தலைவிரித்தாடிய தண்ணீர் பிரச்சனை விவசாயிகளை வேறு வேலை செய்து பிழைத்துக் கொள்ள செய்தது. அதை கூட சமாளித்து விடலாம் என்று துணிந்தவர்களால், குடிநீருக்காக தினமும் மைல்கணக்கில் நடப்பதை சமாளிக்க முடியவில்லை. நீர் தேடி அலையும் வாழ்க்கை அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் விளைவு நகரம் நோக்கி நகர அவர்கள் எடுத்த முடிவு.

38.   வலைப்பூ:  செந்திலகம்

செதுக்க வந்த சிற்பியை சிதைக்க வந்த சண்டாளனாய் கருதி உதைக்கவரும் கற்களின் நடுவே உளியோடு நான்! என்று தனது அறிமுகத்தில் சொல்லும் புதுவை வெ. செந்தில் 2009-ஆம் ஆண்டே பதிவுகள் எழுதத் தொடங்கினாலும் இது வரை எழுதிய பதிவுகளின் எண்ணிக்கை பதினான்கு மட்டுமே...  இன்னும் எழுதலாமே செந்தில்..

அறிமுக வலைப்பதிவு: இன்றேனும் சொல்லிவிடு

உன் பார்வையில் பதுங்கியிருக்கும்
ஆயிரம் பொருள்களுக்குள்
அல்லாடுகிறேன் நான் !

உன் சிரிப்பில் சிக்கி
சிதரிவிடாமலிருக்க
சிரமப்படுகிறேன் நான் !

உன் வனப்பில்
மயங்கி விழுந்து
மூர்ச்சையாகிறேன் நான் !

போதுமடி அவஸ்தை
இன்றேனும் சொல்லிவிடு

39.   வலைப்பூ:  கற்பகக்கனிகள்

வலையுலகில் 2010 முதல் தடம்பதித்தவர். மூன்று வலைப்பூக்களுக்குச் சொந்தக்காரர். 2011-ஆம் ஆண்டில் மட்டும் 154 பதிவுகள், அதன் பிறகு வருடத்திற்கு ஒன்று தான்! கடைசியாக எழுதிய பதிவு இந்த வருடத்தின் ஜனவரியில். தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுப்போம்!

அறிமுகப் பதிவு: தற்கொலை

பிறக்கும்போதே
இறப்பும் நிச்சயமாகிறது ...
வாழ்வதற்காக மனிதர்கள் 
வயாகராவையும் காயகல்பத்தையும் 
தேடி அலைகிறார்கள் ...

சிலர் துயரங்களின் வேரறுக்க 
துணிவில்லாமல் 
மாய்க் கிறார்கள் மதிப்புமிக்க உயிரை ...

40.   வலைப்பூ:  இசை

இசையில் என் புரிதலுக்கான தேடல்களில் வழித்தடங்களை இங்கே பதிகிறேன் ஜீவா வெங்கடராமன்என்று இத்தளம் பற்றிய குறிப்பாகச் சொல்லி இருக்கிறார் இவர். பல நல்ல பாடல்களைக் கொண்டுள்ளது இத்தளம்.  சில காணொளிகள் மட்டும் உரிமைப் பிரச்சனைகள் காரணமாக பார்க்கமுடிவதில்லை.

அறிமுகப் பதிவு: சுதந்திரம்

நினைப்பதெல்லாம் நடந்தாவிடுகிறது? ஆனால் நடந்ததெல்லாம் என்னால், என்னாலேதான் என்கிற இறுமாப்பு மட்டும் அகலாமல் இருக்கிறது. அதுவே அடுத்த செயலையும், அதற்கடுத்த செயலையும் செய்யவதற்கு ஏதுவான உந்து சக்தியாய் வாழ்க்கை என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இதன் நடுநடுவே, நானா, நீயா போட்டிகள் ஆயிரம், பொறாமைச் சாட்டையடிகள் ஆயிரம். சொல்லாலும், செயலாலும் செய்யும் பிணக்குகள் ஆயிரம். தன் தரப்பை நியாயப்படுத்த நடத்தும் நிழல் யுத்தங்கள் ஆயிரம் ஆயிரம்.

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் இரண்டாம் நாளின் அறிமுகங்களைப் பார்த்தீர்களா?

தொடர்ந்து சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



இன்று எனது வலைப்பூவில் - அஹமதாபாத் நகரில் மதுரைத் தமிழன்!

28 comments:

  1. 252 கிலோ மீட்டர் தொலைவினை நடந்தே வலம் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.//

    உடல்பலத்தோடு மனபலம் மிக அவசியம் இவ்வளவு தூரம நடந்து செல்ல. அவர்கள் நம்பிக்கையும் அவர்களை வழி நடத்துகிறது என்பது உண்மை.

    இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நம்பிக்கையும் மனவலிமையும் தான் அவர்களை வழி நடத்துகிறது - உண்மை தானம்மா.... இப்படி பலரை இங்கே பார்க்க முடிகிறது.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

    ReplyDelete
  3. ‘மதுரா’வை சுற்றியுள்ள பகுதியை ‘பிரிஜ் பூமி’என்பார்கள் அங்கு பேசும் மொழி ‘பிரிஜ் பாஷை’ என்பார்கள். அந்த மொழியில் சொல்லும் ‘கோஸ்’ பற்றி தாங்கள் எழுதியதை படித்ததும் நான் சில நாட்கள் மதுராவிலும், கோசிகலான் என்ற ஊரிலும் இருந்தது நினைவுக்கு வருகிறது. இன்றைய அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கோசிகலான் - ஆக்ரா செல்லும் பாதையில் அமைந்த சிற்றூர்.... ப்ரஜ்வாசி என்று தானே தங்களை அழைத்துக் கொள்கிறார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      Delete
  4. தெரியாத ஒரு யாத்திரையை தெரிந்து கொள்ள முடிந்தது.
    அறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      Delete
  5. அறியாத யாத்திரை...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  6. நடராஜா யாத்திரை!! இது மஹாராஷ்ட்ராவில் மேற்கொள்ளப்படும் விட்டல் பெருமானுக்கு- வார்க்காரி போல இல்லையா? ஆனால் நல்ல யாத்திரை தான் மனம் மிகவும் திடப்படும்!

    அறிமுகங்கள் அனைத்துமே புதியவையாக இருக்கின்றன. மெதுவாசச் சென்று பார்க்க வேண்டும்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்1

    ReplyDelete
    Replies
    1. இங்கே இந்த மாதிரி நிறைய பரிக்ரமா உண்டு. சில விஷயங்களை மட்டும் பகிர்ந்து கொள்ள ஆசை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      Delete
  7. இந்த இடத்தை எல்லாம் எப்போது பார்ப்போம் என்று ஏக்கம் வருகிறது வெங்கட்!

    புதிய பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      ஒரு பயணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டால் போயிற்று! வாருங்கள் சேர்ந்தே செல்வோம்!

      Delete
  8. மதுராவை சுற்றி வந்தது போல் ஒரு கற்பனை தேரையே ஓட்டிவந்தேன் மிக்க மகிழ்ச்சி அண்ணா ... என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி முன்பு போல் வலையில் உலாவா சரியாக சமயம் கிடைப்பதில்லை தங்களைப் போல் ஊக்கம் தரும் பதிவர்கள் மத்தியில் இன்றும் உலாவுவது மெய்யே வேலை பளு கொஞ்சம் குறைந்துள்ளதால் வலையில் சுற்ற ஆரம்பித்துள்ளேன் எப்பொழுது மீனாகி சிக்கிக் கொள்வேன் என்பது அறியாமல்....

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தினேஷ்குமார்.

      உங்களை இங்கே அறிமுகம் செய்தததில் எனக்கும் மகிழ்ச்சி.

      Delete
  9. ப்ரஜ் பரிக்ரமா பற்றி அறிந்து கொண்டேன்! புதிய வலைப்பூக்களையும் கண்டுகொண்டேன்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      Delete
  10. கிருஷ்ண பரமாத்மா பிறந்து வளர்ந்த இடங்கள் அனைத்தையும் பார்த்து ரசித்து முடிக்க இத்தனை நாட்கள் தேவையாக இருக்கிறது//

    அவ்விடங்களைபற்றி விரிவான பயணக்கட்டுரை எழுதுங்களேன். நிறைய தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முடிந்த போது இவ்விடங்கள் பற்றி எழுதுகிறேன்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

      Delete
  11. விசயங்கள் அனைத்தும் வடநாட்டைச்சுற்றியே... செல்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. வட இந்தியாவில் 24 வருடங்களாக வாசம் நண்பரே. அதனால் இங்கே நிறைய பயணித்தது உண்டு. நமது ஊர் பற்றியும் எழுதுகிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      Delete
  12. மிக அருமை வெங்கட் சகோ. அக்ஷர்தாம் என்ற தங்கும் விடுதிகள் வைஷ்ணோதேவியில் பார்த்த ஞாபகம்.

    ப்ரஸ் பரிக்ரமா, சார் தாம் சௌராசி பற்றி எல்லாம் மிக அழகான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

    @ஸ்ரீராம் .. அடுத்த கோடை விடுமுறையில் கிளம்ப வேண்டியதுதான். உங்களுக்கு விடுமுறைகள் இருக்குமே.. அதை எல்லாம் என்ன செய்றீங்க. ப்லாகிலேயே கழிச்சிடுறீங்கன்னு நினைக்கிறேன். :) கட்டாயம் அடுத்து ஒரு ஆன்மீக யாத்திரை சென்றுவிட்டு வாருங்கள் ஸ்ரீராம். அங்கங்கே உள்ள உறவினர்கள்/நண்பர்கள் வீட்டில் தங்கிச் சென்றால் சிரமமாய் இருக்காது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன் ஜி!

      Delete
  13. ப்ரஜ் பரிக்ரமா.. தவறுதலாக டைப் அடித்து விட்டேன். அறிமுகங்களுக்கு நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. சில சமயங்களில் நேர்ந்து விடுவதுண்டு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.

      Delete
  14. ஆஹா.... காணாமல் போன தினேஷை வலைச்சரம் மூலம் மீட்டு வந்தேன்... மீண்டும் தாங்கள் அறிமுகம் செய்து கலியுகத்தை வலையில் நவயுகமாக வலம் வரச் செய்துள்ளீர்கள்...
    மற்றும் அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

    ReplyDelete
  16. சிறந்த பரிக்ரமா ---சிறந்த அறிமுகம். நிறைந்த தகவல்--ப்ரஷன்சா --பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேதுராமன் அனந்தகிருஷ்ணன் ஐயா.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது