07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 16, 2014

மனிதர்கள் பலவிதம்.....




வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை இரண்டாம் முறையாக ஏற்று, அதில் கடைசி நாளும் வந்துவிட்டது.  இந்த ஏழாம் நாளின் அறிமுகங்களைப் பார்ப்பதற்கு முன்னர் குஜராத்தில் நான் சந்தித்த மனிதர்களைப் பற்றிப் பார்க்கலாம்!



ஒவ்வொரு ஊரிலும் சில வித்தியாசமான பழக்க வழக்கங்களோடு மனிதர்களைச் சந்திக்க முடிகிறது. நமது ஊரிலிருந்து வித்தியாசம் கொண்ட உடைகளை அணிந்திருக்கும் மக்களைப் பார்க்க முடிகிறது.  குஜராத் மாநிலத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்திருக்கும் உடைகளும் வித்தியாசமாக இருந்தன – குறிப்பாக கிராமப்புற மனிதர்களின் உடைகள் – நகரத்தில் இருக்கும் மனிதர்களைப் போல் அல்லாது இன்னமும் தங்களது பாரம்பரிய உடைகளையே அணிந்திருக்கிறார்கள்.



பெரும்பாலான கிராமப்புற பெண்கள் புடவை தான் அணிகிறார்கள் – இன்னமும் சுடிதார் கூட இங்கே வந்து விடவில்லை!  திருமணம் ஆன பெண்கள் அனைவருமே வலப்புற முந்தானை வைத்து புடவை தான் கட்டிக் கொள்கிறார்கள்.  ஆண்கள் ஃப்ரில் வைத்த உடைகளும், காதில் கடுக்கண்களும் போட்டுக்கொண்டு, தலையில் பெரிய தலைப்பாகையுடன் காட்சி அளிக்கிறார்கள்  ஒரு சிலர் தலையில் ஓர் வெள்ளைத் தொப்பியும் அணிந்து செல்வதைப் பார்க்க முடிந்தது.



பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலிருந்தும் நிறைய வியாபாரிகள் இங்கே வந்து தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.  அஹமதாபாத் அருகில் இருக்கும் “டாகோர்எனும் சிற்றூருக்குச் சென்ற போது அங்கே இப்படி இரண்டு வியாபாரிகளைச் சந்தித்தேன்.  கைகளில் வளையல்கள் – அடுக்கடுக்காய் தோள் வரை அணிந்திருக்கும் இவர்கள் போன்றவர்களை பலமுறை பார்த்ததுண்டு. ஏன் இப்படி அணிந்து கொள்கிறார்கள் என்ற வினாவும் உண்டு.  இவர்களிடம் கேட்டுவிட்டேன்!

திருமணம் ஆன பெண்கள் இப்படி அணிந்து கொள்வது அவர்களது வழக்கம் என்றார்கள்.  உங்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளவா?என்று கேட்க, எடுத்துக் கொள்ளுங்கள் என மகிழ்ச்சியோடு சொன்னார்கள்.  எடுத்ததும் அவர்களுக்கே அவர்களது படங்களைக் காட்ட முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.  அருகே நின்றிருந்த பெண்ணுக்கும் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை.  ஆனாலும் மனதில் ஒரு கேள்வி இருந்தது அவருக்கும் – கேட்டும் விட்டார் – “இந்தப் புகைப்படங்கள் எடுத்து என்ன செய்வீர்கள்!

அவரிடம் பெரிதாக ஒன்றும் செய்துவிடப் போவதில்லை.  என்னுடைய சேமிப்பில் இருக்கும் என்று சொன்னேன். பயணக் கட்டுரைகள் எழுதும்போது பயன்படுத்துவேன் என்று சொன்னால் அவர்களுக்குப் புரியுமோ புரியாத என்று நினைத்துக் கொண்டேன். தன்னையும் புகைப்படம் எடுத்துக் காண்பிக்கச் சொன்ன அவரது வேண்டுகோளை நான் ஏற்றுக்கொண்டேன் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

குஜராத் மாநிலத்தில் நான் சந்தித்த, பார்த்த ஒரு சில விஷயங்களை மட்டும் இந்த வலைச்சர வாரத்தில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  விரிவான பயணக்கட்டுரைகள் மற்றும் புகைப்படங்களை எனது பக்கத்தில் விரைவில் வெளியிடுகிறேன். இந்த வாரத்தில் சொன்ன சில விஷயங்களை ரசித்தமைக்கு மனமார்ந்த நன்றி!

பயணம் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.  விதம் விதமான மனிதர்களை, அவர்களுடைய பழக்க வழக்கங்களை, பல்வேறு உடைகளை, உணவுப் பழக்கங்களை நமக்கு அறிமுகப் படுத்துகிறது. விதம் விதமான கலாச்சாரங்களையும், பல்வேறு ஊர்களைப் பார்ப்பதிலும் ஒரு மகிழ்ச்சி கிடைக்கத்தான் செய்கிறது.  ஆதலினால் தொடர்ந்து பயணம் செய்வோம்!

என்னுடைய வலைச்சர வாரத்தின் ஏழாம் நாளான இன்றைய அறிமுகங்களை இப்போது பார்க்கலாம்!

26.   வலைப்பூ:  மழைமேகம்

தாமிரபரணிக் கரையில் பிறந்து அமீரகத்துக் கடல் கரையில் வசிப்பவள் என்று தன்னைப் பற்றிய குறிப்பாகக் கொடுத்திருக்கும் சுபத்ரா மகளிர் குரல், குறிஞ்சி மலர்கள் மற்றும் மழைமேகம் எனும் மூன்று வலைப்பூக்களில் எழுதுகிறார். இந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்தது 2008 என்றாலும், இதுவரை 221 பதிவுகள் எழுதியிருக்கிறார்.

அறிமுகப் பதிவு: முக பாலீஷ்



Dermabrasion அப்படின்னா உங்களுக்கு என்னன்னு தெரியுமா? விஷயம் என்னன்னா, முகத்தில் நீண்டநாள் தழும்புகள், முகச் சுருக்கங்கள் மற்றும் பருத்தழும்புகளைப் போக்குவதற்காக, நம்ம வீட்டில் மொசைக் மற்றும் மார்பிளுக்குப் பாலீஷ் போடுவோமே அதுமாதிரி, மயக்க மருந்து அல்லது வலி தெரியாமலிருக்க மருந்து கொடுத்துட்டு, உப்புக்காகிதம், அதாங்க sand paper அல்லது அதுமாதிரியான ஏதாவது சொரசொரப்பான கருவியைக்கொண்டு முகத்தின் மேல்தோலைத் தேச்சு எடுத்துருவாங்களாம். தோலை உரிச்சு எடுத்தா எப்படியிருக்குமோ அப்படி ஆயிருமாம் முகம். அதாவது சிவந்த நிறத்தில் உள்தோல் தெரிய ஆரம்பிக்குமாம்.

அப்புறம்? பதிவில் படிங்களேன்!

27.   வலைப்பூ:  திருச்சி முரளி

2011-ஆம் வருடம் பதிவு எழுத ஆரம்பித்தாலும் இது வரை எழுதிய பதிவுகள் நூறுக்கும் கீழே. இன்னும் அதிக பதிவுகள் எழுதலாமே முரளி..

அறிமுகப் பதிவு: சங்கராபரண அடமானம்

தங்கத்தை அடகு வைக்கக் கேட்டிருக்கிறோம்! நிலத்தை அடமானம் வைக்கக் கேட்டிருக்கிறோம்!!

ஒரு ராகத்தை அடமானம் வைத்ததைக் கேள்விப்பட்டதுண்டா ?!

உண்டு என்று சொல்கிறார் திருச்சி முரளி – விஷயம் தெரிந்து கொள்ள மேலும் படியுங்களேன்!

28.   வலைப்பூ:  இடைவெளிகள்

இந்த வலைப்பதிவர் ஒரு நாடக எழுத்தாளர். அவரைப் பற்றி அவரே சொல்லி இருப்பது “இதுவரை இருபது நாடகங்கள் எழுதி மேடைகளில் அரங்கேற்றம் செய்திருக்கிறேன். நான் எழுதிய இடைவெளிகள்எனும் நாடகம் 116 மேடைகளில் நடிக்கப்பட்டு அது நூலாக வெளிவந்துள்ளது. எனது கதைகள் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், ராணி, தேவி, தினத்தந்தி குடும்பமலர், தினத்தந்தி ஞாயிறுமலர், பாக்யா, தங்கம், வெளிச்சம் உங்கள் கையில், முதற்சங்கு, அமுதம், சிறுமலர், தமிழ் மழை, போன்ற வார இதழ்களில் வெளிவந்திருக்கிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றிகொண்டே நேரம் கிடைக்கும் பொழுது எழுதி வருகிறேன். சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் ஒரு கிராமமான ஐரேனிபுரம் எனும் ஊர். பிறந்த மண்ணை பிரிந்தாலும் மண்ணின் பெயர் பெயரில் நிலைத்திருப்பதில் பெருமை கொள்கிறேன்.

அறிமுகப் பதிவு:      ஆசை

கல்கியில் வெளி வந்த அவரது கதை ஆசை அதை தனது வலைப்பூவிலும் பகிர்ந்திருக்கிறார். இணைய தளத்தில் www.vaangapazhakalam.com என்ற வெப்சைட்டை உலவ விட்டான் மனோகர். மறுநாளே மலைபோல் வந்து குவிந்தன மின்னஞ்சல்கள்.

நிறைய கடிதங்கள் பெண்களுடன் பழக ஆசை!என்று வந்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமானான் மனோகர்.

மேலே நடந்தது என்ன? படித்துப் பாருங்களேன்! நிச்சயம் நீங்கள் எதிர்பாராத ஒரு முடிவு இருக்கும்!

29.   வலைப்பூ: அருகுசருகு

குப்பன் சர்க்கரை எனும் நபரின் வலைப்பூ “அருகுசருகு நாட்டு நடப்பும் பொதுவான அறிவுரையும் என்று தளத்தின் முகப்பில் எழுதி இருக்கும் இவர் பல நீதிக்கதைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அறிமுகப் பதிவு: பேராசையின் விளைவு

தன்னுடைய கையிலிருந்ததை கீழேவைத்தால் வேறு குரங்கு ஏதாவது அதனை எடுத்து தின்றவிடுமோ என்ற பயத்தினால் கையிலியே வைத்து கொண்டு வாயிலிருந்ததை பசி எடுத்தும் தின்ன முடியாமல் தவித்தது. இரண்டு கைகளாலும் பழத்தை பிடித்து கொண்டிருந்ததால் மரத்தில் ஏறி இதைவிட வேறுநல்ல பழங்களை பறித்து தின்று பசியாற முடியாத நிலையில் இருந்தது.

பிறகு நடந்தது என்ன? அவரது பதிவினைப் படியுங்களேன்!


சென்னைவாசியான கலைவாணின் வலைப்பூ இது. 2007-ஆம் வருடமே பதிவுகள் எழுத ஆரம்பித்திருந்தாலும் வருடத்திற்கு ஒன்றிரண்டு பதிவுகள் மட்டுமே எழுதுகிறார். தொடர்ந்து எழுதுங்களேன் கலைவாணன்...

அறிமுகப் பதிவு: வந்தான் வருணன்

மழை வந்ததை எவ்வளவு அழகாய் கவிதையில் சொல்லி இருக்கிறார் பாருங்களேன்!

மின்னொளிப் பந்தங்கள் வழிகாட்ட
பேரிடிப் பறைகள் தாளங் கொட்ட
கருமுகிற் தேரிலேறியே
புலன் சேர்ந்து புண்ணியஞ் சேர்க்கத்
தவழ்ந்து வந்தான் !!
நிலன் நோக்கும் ஆவல் தாளாமல்
மேக தாரகைகளை விடுத்து
தான் மட்டும் தாழ்ந்து வந்தான் !!
மண்ணளக்கும் ஆசை மாளாமல்
மணிமணியாய்ச் சிதறி வந்தான் !!

என்ன நண்பர்களே, இன்றைய தலைப்பு சொல்லும் விஷயத்தினையும், இன்றைய அறிமுகப் பதிவுகளையும் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

இந்த வாரம் முழுவதும் என்னுடன் பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது பணிவான நன்றி.  வலைச்சரத்தில் ஆசிரியர் பணியினை எனக்கு அளித்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.  தொடர்ந்து என்னுடைய வலைத்தளத்தில் சந்திப்போம்.. சிந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 



எனது பக்கத்தில் இன்றைய பதிவு: QUILLING STUDS மோகம் - அதையும் படிக்கலாமே!
 

32 comments:

  1. அண்ணன் !
    நீங்கள் ஆசிரியராக பணியாற்றியமைக்கு முதலில் வாழ்த்துக்கள் .
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் எழுத்தை வாசித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி .

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      Delete
  2. மிக அருமையான பகிர்வு வெங்கட் சகோ.. குஜராத் பற்றியும் அழகாகச் சொல்லிச் சென்றுள்ளீர்கள். நானும் புகைப்படம் எடுத்தேன். ஆனால் காரில் பயணம் செய்யும்போது எடுத்ததால் இவ்வளவு க்ளாரிட்டி இல்லை :)

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களே.

      Delete
  3. பயணம் நமக்கு பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.//

    உண்மை. எத்தனைவகையான மனிதர்கள்! அவர்கள் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
    ஆதலினால் மகிழ்ச்சியாக தொடர்ந்து பயணம் செய்வோம்.

    பயண அனுபவம் இனிமை.

    இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      Delete
  4. ஒருவாரகாலம் சிறப்பாக பணியை செய்தமைக்கு வாழ்த்துக்கள்.புதிய பதிவர்கள் தளத்தை தொகுத்து கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      Delete
  5. தலையில் தலைப்பாகை எப்போதும் வித்திருப்பது இம்சையாக இருக்காதோ... ஆடு மேய்க்கக் கூட இவ்வளவு உடைகள் அணிந்து வர வேண்டுமா என்று தோன்றியது!

    புதிய புதிய அறிமுகங்களாகக் காட்டி அசத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  6. இந்த வாரம் முழுக்க நிறைய தகவல்களையும் புதிய வலைப்பதிவர்கள் பலரையும் அறிந்துகொள்ள முடிந்தது! மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      Delete
  7. வழக்கமான அறிமுகங்களாக இல்லாமல் அதிகம் அறிமுகப் படுத்தப் படாத ஆனால் தரமான பதிவுகளை அறிமுகப் படுத்தியதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன் ஜி!

      Delete
  8. புதிது புதிதாக தேடி வலைபூக்களை அறிமுகம் செய்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

      Delete
  9. சிறப்பாக வலைச்சர பணி செய்தமைக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      Delete
  10. சிறப்பாக இந்தவாரம் முழுவதும் வெற்றிகரமாக நடத்தி இருந்ததற்க்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      Delete
  11. நிறைய புதிய தளம் இவ்வாரத்தில் உங்கள் மூலம் அறிமுகம் நிறைவான பணி வாழ்த்துக்கள் அண்ணாச்சி இனி தங்களின் தளத்தில் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      Delete
  12. குஜாராத் பற்றி இன்னும் எழுதுங்கள் அனுபவம் வேறு அரசியல் கடந்து!நம்பிக்கைடயுடன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

      Delete
  13. குஜராத் பயணக் குறிப்புகள் சுவை!

    அறிமுகங்கள் பயனுள்ளதாய் அமைந்திருந்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  14. ஆசிரியப் பணியினை சிறப்பாய் நிறைவு செய்தமைக்கு வாழ்த்துகள்!

    தமிழ் மணம் வாக்கு 5.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  15. குஜராத் செய்திகளுடன் இந்த ஒரு வாரமும் ஆசிரியப் பணியை சிறப்பாக முடித்திட்ட தங்களுக்கு பாராட்டுக்கள். இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

      Delete
  16. அறிமுகம் செயப்பட்டுள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பதிவர்களின் பதிவுகளை ஆற அமர படிக்க இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது