07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 24, 2014

வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் முதல் நாள்

நண்பர்கள் அனைவருக்கும் அன்புக்காலை வணக்கங்கள்...
ரொம்ப நாள் இல்ல இல்ல மாதங்கள் கழித்து உங்க எல்லோரையும் மீண்டும் சந்திப்பது சந்தோஷமா இருக்குப்பா.. வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க சொல்லி சீனா அண்ணா சொன்னப்ப அட மீண்டும் மூன்றாவது முறை எனக்கு இந்த வாய்ப்பா என்று சந்தோஷமாக இருந்தது. அதோடு குட்டியூண்டு பயமும்… அந்த பயத்தை எல்லாம் தூக்கிப்போட செய்து வலைச்சர ஆசிரியர் பொறுப்பை தந்த சீனா அண்ணாவுக்கும் உதவிய நண்பர் வெங்கட் நாகராஜுக்கும் மனமார்ந்த அன்பு நன்றிகள்.

கடந்த இரண்டு வாரமாக அசத்தலாக வலைச்சரத்தை தன் எழுத்துகளால் நிரப்பிக்கொண்டிருந்த வெங்கட்டுக்கு மனமார்ந்த அன்பு வாழ்த்துகள்.
இயந்திரம் போல் நாட்களை வேகமாக கடத்திக்கொண்டிருக்கும் நமக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள கிடைத்த இடம் தான் வலைப்பூ. நம் மனதில் தோன்றுவதை பகிரவும், நல்லதை சொல்லவும், பிறரின் படைப்புகளை படிக்கவும், திறமைகளை அறியவும் வலைப்பூவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.


நான் மஞ்சுபாஷிணி… என் கணவர் சம்பத்குமார்என் குழந்தைகள் விக்னேஷ்ராம்இபானேஷ்ராஜ்அம்மாதம்பி தீபக்ராஜேஷ் (குடும்பம்) எல்லோருடனும் குவைத்தில் வசிக்கிறேன். கதைகவிதைபாடல் எல்லாமே இஷ்டம் எனக்கு. மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ரசனை கண்டிப்பாக இருக்கும். ரசனை இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே முடியாது. இல்லைன்னா பிறந்து இத்தனை வருடங்கள் ஒவ்வொரு நொடியும் ஒரு அட்வென்ச்சர் போல் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாமல் நாம் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போமா??? அப்ப நான் சொன்னது சரி தானேப்பா?

என் தளத்தில் நான் என் படைப்புகள் பதிவதை விட பிறரின் படைப்புகள் வாசித்து நான் எப்படி உணர்கிறேன் அவர்கள் வரிகளை படித்து என்பதை என் கருத்தாய் சமர்ப்பிப்பதில் எனக்கு கூடுதல் விருப்பம்.

இன்னைக்கு முதல் நாள் என்பதால் என்னுடைய வலைப்பூவில் ஒரு சில பதிவுகள் மட்டுமே போட்டுடறேன்..
எனக்கு மிகவும் பிடித்த என் பதிவுகள்..
முதல் நாள் - மனம் கவர் பதிவர்கள்

தினமும் இவர் பதிவுகள் ஏதாவது இருக்கா என்று முதலில் ஓடி வந்து பார்ப்பேன். எளிய வரிகளில் மனதை நெகிழவைக்கும் கதைகள், குழந்தையில் இருந்து பெரியோர் வரை ரசிக்கும் ஜ்வல்யா கவிதைகள், அனுபவங்கள் இப்படி நிறைய எழுதுவார்... காற்றை மழையை நேசிப்பவர்... அம்மா என்று ஆத்மார்த்தமாய் சொல்லும் வரிகளில் பாசத்தை உணரலாம்... காற்று பற்றி மழை பற்றி எழுதிய வரிகள் வாசிக்கும்போதே மழையின் சாரலை, காற்றின் ஜில்லென்ற தன்மையை உணரலாம்.. ஒரு பக்க கதைகளில் அப்படியே நம்மை கட்டி நிற்க வைத்துவிடும் வரிகள். எழுத்தையே சுவாசமாக நேசிப்பவர்... வெள்ளையங்கிரி சென்று வந்த அனுபவம் வாசிக்கும்போதே மனம் சிலிர்க்கிறது. அந்த நாள் தேவதை2. தீதும் நன்றும் பிறர் தர வாரா
முதலில் நான் வலைப்பூவில் விமர்சனம் எழுதத் தொடங்கிய பதிவு ரமணி சாரின் பதிவு... அன்று தொடங்கிய பயணம்.... இன்று வரை... இடை இடையே காணாமலும் போகிறேன்... ரமணி சார் பதிவுகள் எப்போதுமே கருத்தை உள்ளடக்கி வரும் பகிர்வுகளாகவே வரும்.. 


ரிட்டையர் ஆகிவிட்டாலே அக்கடான்னு உட்கார்ந்துகிட்டு சீரியல் பார்க்கவும் கோயில்களுக்கு போகவும் அக்கம் பக்கத்து மனுஷா கிட்ட அரட்டை அடிக்கவும், இன்னும் ஒரு சிலருக்கோ என்ன செய்றது போர் அடிக்கறதேப்பா இந்த ரிட்டையர்மெண்ட் லைஃப் என்று அலுத்துக்கொள்வோர் மத்தியில் இதோ நிறைய போட்டிகள் வைத்து எல்லோர் எழுத்தையும் ஆக்டிவாக வைக்க இவர் வைத்த போட்டிகளே சாட்சி. அலுப்பே இல்லாமல் தொடரும் எழுத்துக்கு சொந்தக்காரர்.. 
அசால்டா வந்து அனாயசமா எழுதிட்டு போய்க்கிட்டே இருப்பார். அட இவரா எழுதினார்னு ஆச்சர்யமா இருக்கும்.. டைம் இருக்குமா எழுத?? தெரியாது... தமிழ் உச்சரிப்பும் எழுத்தின் வேகமும் அசத்த வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்.. கோபு அண்ணாவின் பிரம்மாண்ட பரிசுப்போட்டியை பற்றி இவருடைய எழுத்தில் வாசிப்பது சுவாரஸ்யம்..


தமிழ் மீது அதீதப்பற்று. எழுத்துகளை கவிதையாக்கி வரிகளில் செதுக்கும் அழகே அழகு.. உலகப்பயணம் சென்றுவிட்டு வந்து அதை கூட சுவாரஸ்ய வரிகளில் எழுதியவர். வரிகளில் தமிழ் வாசமும் பாசமும் இருக்கும். உடல்நலம் சரியில்லை என்றாலும் எழுத்து மட்டும் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.  கண்ணில் ஏற்பட்ட சிரமங்கள் குறைந்து சீக்கிரமே எழுத்துகள் தொடர்ந்திட வேண்டிக்கொள்கிறேன்.


சௌந்தர்ய தமிழ் எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.. திடீர் என்று என்னைப்போலவே காணாமல் போய் திரும்ப வந்து அசத்திக்கொண்டிருக்கும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். இவருடைய பதிவில் நான் நிறைய அழகு தமிழை வாசித்திருக்கிறேன். 


இவர் எழுத்துக்கு என்ன தான் வயசு ??  சுறுசுறுப்பான எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.. இவரின் எழுத்தை வாசிக்கும்போதே நம் உதடுகள் புன்னகைக்கும். துறுதுறு... சுறுசுறு.... 8. மின்னல் வரிகள்


சரித்திரமா, நகைச்சுவையா, திருப்பாவையா... எல்லாமே இவர் எழுத்தில் வாசிப்பது கூடுதல் சுவாரஸ்யம்.. ஏன்னா கேட்கறீங்க? எதிர்ல இருக்கிறவங்க கிட்ட பேசறமாதிரியே எழுதிடுவார் அசத்தலா... பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும் யார் மனதையும் புண்படுத்தாமல் எழுதி ரசிக்கவும் வைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர்...


அரசன் தந்த பரிசு

கிளி கிலி கிழி

கவிதை எழுதுவது எப்படி?


9. திண்டுக்கல் தனபாலன்


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவிலும் கருத்தையே முதன்மைப்படுத்தி பாட்டு வரிகளோடும் ரசிக்க வைக்கும் புதிய புதிய யுத்திகளோடும் எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர்.  பேச்சில் இருக்கும் மென்மை இவர் எழுத்திலும் இருப்பதை பார்க்கலாம்.  சொல்ல வந்த கருத்தை அழுத்தமாய் எழுதியதை வாசிக்கலாம்..

மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?

வயதான காலத்தில் நிம்மதியை தருவது எது?

மனிதனுக்கு மிகப்பெரிய தண்டனை எது?


10. எங்கள் பிளாக்

எங்கள் பிளாக்

நல்லவைகளை எங்கு கண்டாலும் கேட்டாலும் அதை சிரத்தையாக பகிர்வதில் மிகப்பெரிய பங்கு இந்த வலைப்பூ சொந்தக்காரர்களுக்கு உண்டு. இவர்கள் எழுத்தில் பாசிட்டிவ் செய்திகள் வாசிக்கலாம்.. ஊக்கமும் உற்சாகமும் தந்து எல்லோரையும் எழுத்துகளாலேயே பாராட்டும் எழுத்துக்கு சொந்தக்காரர்கள்.. பன்மையில சொல்றேன்னு தானே பார்க்கறீங்க... டீம் வர்க்பா... டீம் வர்க்...

அலுவலக அனுபவங்கள்: இப்படியும் நடப்பதுண்டு

கல்கி விகடன் துக்ளக் குமுதம் கங்கை அமரன் பொன்னியின் செல்வன் வெட்டி அரட்டை

ரெஹானா ஜப்பாரி

நாளை மீண்டும் என் மனம் கவர் பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன் நண்பர்களே !!74 comments:

 1. தங்களின் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.

  அழகான சுய அறிமுகம்...

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் உமையாள் காயத்ரி.. :)

   Delete
 2. என் தளத்தில் நான் என் படைப்புகள் பதிவதை விட பிறரின் படைப்புகள் வாசித்து நான் எப்படி உணர்கிறேன் அவர்கள் வரிகளை படித்து என்பதை என் கருத்தாய் சமர்ப்பிப்பதில் எனக்கு கூடுதல் விருப்பம்.

  தங்களைப் போன்ற பதிவர்கள் அரிதினும் அரிதானவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இரா.குணசீலன்.. :)

   Delete
 3. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமான பதிவர்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 4. சௌந்தர்யம்மாய் தொகுத்த வலைசரத்த்துக்கு இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இராஜராஜேஸ்வரி.. :)

   Delete
 5. ஹை... எங்க மன்ச்சூ மீண்டும் வலைச்சரத்தில... பாக்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல் நாளிலேயே மனசுக்குப் பிடிச்சவங்களை... அதில எனக்கும் ஓர் முக்கிய இடம் தந்திருப்பது.. கூடுதல் சந்தோஷம். மணம் வீசப் போகும் இந்த மனோரஞ்சித வாரத்துக்கு நல்வாழ்த்துகள்மா. தினம் அட்டென்டண்ஸ் போட்டுர்றேன்.

  ReplyDelete
  Replies
  1. எப்பவும்பா கணேஷா :) இதில் என்ன சந்தேகம் :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா.. :)

   Delete
 6. சிறப்பான பதிவுகள் ...வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அனுராதா பிரேம்.. :)

   Delete
 7. நன்றி மஞ்சுபாஷிணி - எங்கள் டீம் சார்பாக ....

  ReplyDelete
  Replies
  1. ஹை கௌதமன் சார் :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கௌதமன் சார் :)

   Delete
 8. MY DEAR MANJU,

  VANAKKAM. VERY GLAD TO SEE YOU AGAIN HERE AS VALAICHCHARA AASIRIYAR :)

  IT IS A HAT-TRICK FOR YOU ! :)))

  >>>>>

  ReplyDelete
 9. சௌந்தர்யம்மாய் தொகுத்த வலைசரத்த்துக்கு இனிய வாழ்த்துகள்.. :))))))

  MY DEAR MANJU,

  I AM UNABLE TO TYPE IN TAMIL.

  HENCE I BORROWED [ACTUALLY STOLEN] THE ABOVE TAMIL WORDS FROM SOMEONE.

  I STILL HOPE I HAVE THE RIGHT TO DO SO ! :)))))

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.. :)

   Delete

 10. //வை.கோபாலக்ருஷ்ணன்

  ரிட்டையர் ஆகிவிட்டாலே அக்கடான்னு உட்கார்ந்துகிட்டு சீரியல் பார்க்கவும் கோயில்களுக்கு போகவும் அக்கம் பக்கத்து மனுஷா கிட்ட அரட்டை அடிக்கவும், இன்னும் ஒரு சிலருக்கோ என்ன செய்றது போர் அடிக்கறதேப்பா இந்த ரிட்டையர்மெண்ட் லைஃப் என்று அலுத்துக்கொள்வோர் மத்தியில் இதோ நிறைய போட்டிகள் வைத்து எல்லோர் எழுத்தையும் ஆக்டிவாக வைக்க இவர் வைத்த போட்டிகளே சாட்சி. அலுப்பே இல்லாமல் தொடரும் எழுத்துக்கு சொந்தக்காரர்..

  ஆறாம் நாள் கொண்டாட்ட நிகழ்வு

  சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழா நன்றி அறிவிப்பு

  சிறுகதை விமர்சனப்போட்டிகள் நிறைவு விழா//

  VERY GLAD MANJU.

  VERY VERY HAPPY ......... HAPPY ........... HAPPY ! :))))))))))))))))))))))))))))

  Affectionately yours,

  G O P U

  ReplyDelete
 11. சிறந்த பதிவர்களுடன் என்னையும்இணைத்து
  அறிமுகம் செய்தது அதிகம் மகிழ்வளிக்கிறது
  மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவுகள் எப்போதுமே சிறப்பு ரமணி சார்.. விமர்சனம் எழுத பழகியதே உங்கள் வலைப்பூவில் தொடங்கியது தான் சார் என் பயணமே... இந்த நன்றியை என்றுமே நான் நினைவில் வைத்துக்கொள்வேன்.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்.. :)

   Delete
 12. புகழ்பெற்ற பதிவர்களை ஏற்கெனவே அறிந்தது போக மேலும் சில நல்லபதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி. அறிமுகவழியே பின்தொடர்வேன். நன்றி

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் முத்து நிலவன் சார்.. :)

   Delete
 13. நன்றி... நன்றி... நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தனபாலன் சார்.. :)

   Delete
 14. அன்பின் மஞ்சு - அருமையான துவக்கம் - அறிமுகங்கள் அனைத்துமே அருமை - அத்தனையையும் படித்து மகிழ்வேன் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. என் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்துள்ளீர்கள் அண்ணா.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.. :)

   Delete
 15. இனிய தொகுப்புடன் இந்த வாரம் மலர்கின்றது.
  அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் துரை செல்வராஜூ.. :)

   Delete
 16. அன்பின் மஞ்சு - ஆமாம் - லேபிள் போட வேண்டாமா ? மஞ்சு என்றோ மஞ்சு பாஷினி என்றோ லேபிள் இடுக.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அண்ணா போட்டுட்டேன் லேபிள்.. எதுக்கும் நீங்க செக் பண்ணிடுங்கோ..

   Delete
 17. சுருக்க சுய அறிமுகம். தொடர்ந்து நண்பர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டீர்கள். அதுதான் மஞ்சுபாஷிணி!

  நன்றி - 'எங்களை'க் குறிப்பிட்டதற்கு.

  வாழ்த்துகள் - எங்களுடன் இடம் பிடித்திருப்பவர்களுக்கு!

  ReplyDelete
  Replies
  1. எப்போதுமேப்பா.. :)

   மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஸ்ரீராம்.. :)

   Delete
 18. வணக்கமும் வாழ்த்துகளும் மஞ்சு.தகுதியானவரிடம் போய் சேரும் எதுவும் அழகுதான்.

  ReplyDelete
  Replies
  1. அட மஹா :) ரொம்ப சந்தோஷம்பா உங்களை வலையில் சந்திப்பது. அன்பு நன்றிகளும்பா..

   Delete
 19. பணி தொடரட்டும். இன்றைய அறிமுகங்கள் எல்லோரும் அறிந்தவர்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நிறைந்த மனதுடன் உறவுகள் என்று சொன்ன உங்கள் அன்புக்கு நிறைந்த அன்பு நன்றிகள்பா.

   Delete
 20. வணக்கம் மஞ்சு, வாழ்க வளமுடன். ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

  மனங்கவர்ந்த பதிவர்களை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.

  அனைவருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா... :)

   Delete
 21. முதல் மரியாதைக்கு நன்றி .
  உங்கள் பேரன்பிற்கும்..

  ReplyDelete
  Replies
  1. ரிஷபா.... நெகிழ்வான நன்றிகள்பா...

   Delete
 22. மகளே! நன்றி! கண்ணில் கோளாறு என்றாலும் மண்ணில் வாழும்வரை எழுதுவது நிற்காது ! உன் பணி சிறக்க வாழ்த்து!

  ReplyDelete
  Replies
  1. அப்பா ஹை :) கண்வலி சரியாச்சாப்பா? முடியாத சமயத்திலும் ஓடி வந்து வாழ்த்து போட்டிருக்கீங்களே... நிறைவான அன்பு நன்றிகள்பா....

   Delete
 23. அய் ...அக்கா. வாங்க வாங்க.. இந்த வார நாட்கள் எல்லாம் வசந்த நாட்கள் தான் எங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஹை சசி :) வலைக்கு வந்ததற்கே இத்தனை அன்பு வரவேற்பு தரும் உன் அன்புக்கு என்னுடைய அன்பு நன்றிகள் சசி.

   Delete
 24. என் தளத்தில் நான் என் படைப்புகள் பதிவதை விட பிறரின் படைப்புகள் வாசித்து நான் எப்படி உணர்கிறேன் அவர்கள் வரிகளை படித்து என்பதை என் கருத்தாய் சமர்ப்பிப்பதில் எனக்கு கூடுதல் விருப்பம்....

  இந்த மனநிலைதான் தங்களை பதிவர் மத்தியில் கருத்துரை இடுபவர்களில் முன்னிலையில் வைத்திருக்கிறது.

  வாழ்த்துக்கள் அக்கா...

  அறிமுகங்கள் அனைவரும் மிகப் பிரபலங்கள்...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையேப்பா.. என் மீது எல்லோரும் வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும் உணர்கிறேன். அன்பு நன்றிகள்பா..

   Delete
 25. மூத்த வலைப்பதிவர் திரு வை.கோபாலகிருஷ்ணன் (V.G.K) அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்தி.

  தி.தமிழ் இளங்கோSun Nov 23, 05:04:00 PM

  சதங்கா மற்றும் வெங்கட் நாகராஜ் இருவருக்கும் நல் வாழ்த்துக்கள்! இருவரது கட்டுரைகளையும் வலைச்சரத்தில் பார்வையிட மட்டுமே முடிந்தது. கருத்துரைகள் எழுத இயலாமல் போய்விட்டது. சகோதரி மஞ்சுபாஷினி சம்பத் குமார் அவர்களை மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களது வலைத்தளம் வழியே அறிமுகம். சிறந்த வலைப் பதிவர். சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  அனைவரிடமும் நட்புடன் இருக்கும் அன்பின் சீனா அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நெகிழ்வான அன்பு நன்றிக சார்..

   Delete
 26. சகோதரிக்கு மீண்டும் வாழ்த்துக்கள். இன்றைக்கு முதல்நாள் அறிமுகம் செய்த பதிவர்கள் அனைவருமே எனக்கு அறிமுகம் ஆனவர்கள்தாம். நன்றி.
  த.ம.7

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அன்புக்கு என்றென்றும் என் நிறைவான அன்பு நன்றிகள் சார்.

   Delete
 27. ஒரு எழுத்தாளன் பிறருடைய எழுத்துக்களை நேசிப்பது என்பது எல்லோருக்கும் வராது அது ஒருசில அபூர்வமானவர்களுக்கே அந்த மனது இருக்கும் அந்த உயர்ந்த மனதுடைய தங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் வெற்றிகரமாக இந்த வாரம் செல்லுமென இன்றே தெரிகிறது வாழ்த்துகள்
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

  ReplyDelete
  Replies
  1. நிறைவான அன்பு நன்றிகள்பா.. எல்லாம் அறிந்த ஜாம்பவான்கள் வளையவரும் வலையில் நான் துளி கூட இல்லைப்பா.. எல்லோர் எழுத்தும் வாசிக்கும் பாக்கியம் கிடைப்பதே எனக்கு நிறைவு...

   Delete
 28. வாழ்த்துக்கள் மஞ்சு :) அசத்துங்க இவ்வாரம் முழுதும் !
  அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  ReplyDelete
  Replies
  1. அஞ்சு :) வலையில் நான் வரவில்லை என்றாலும் நீங்கள் எனக்கு நிகழ்வுகளை எனக்கு பகிர்ந்துக்கொண்டே இருக்கிறீர்கள் என் பிறந்தநாள் வாழ்த்து உள்பட.. அற்புதம் தோழி... மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

   Delete
 29. வாழ்த்துக்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா !!

   Delete
 30. நல்ல அறிமுகங்கள் . கூடவே திருஷ்டிக்காக நானும்!! நேசத்துக்கு நன்றி மஞ்சு மேடம்!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா ஜீ... தன்னடக்கம் அவசியம் தான்.. ஆனால் அதுக்காக இப்படியா... இதுவும் ஒரு ரசனையாகவே எடுத்துக்கொள்கிறேன். சரி சரி ஒரு கிலோ பாதம் அல்வா வாங்கி கொடுங்க திருஷ்டி சுற்றிப்போட்டு சாப்பிட :) அன்பு நன்றிகள் சார்...

   Delete
  2. இப்படியும் த்ருஷ்டி சுத்தலாமா..

   Delete
  3. ஆஹா துரை :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)

   Delete
 31. ஓ! இதுக்கா!...
  எல்லோருக்கும் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வேதாம்மா :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்... கண்டுப்பிடிச்சிட்டீங்களா? உங்க வலை முகவரி எல்லாம் என்னிடம் ஏற்கனவே இருக்கு வேதாம்மா :) ச்ச்ச்சோ ச்சுவீத்து...

   Delete
 32. அன்பார்ந்த மஞ்சு
  வெகு நாட்களுக்குப் பின் வலைச்சரம்
  உங்கள் ஆசிரியர் வாரத்தில்
  ஜனரஞ்சக சரமாகி இருக்கிறது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரமணி சார் .. :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார் :)

   Delete
 33. மூன்றாவது அடெம்டா? ஓகே, ஜமாயுங்க.

  அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)

   Delete
 34. Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)

   Delete
 35. மிகவும் மனதிற்கினிய அறிமுகங்கள். எல்லோரும் நமதுனண்பர்களே!

  கலக்குங்கள் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சகோ :)

   Delete
 36. உங்கள் வலைச்சர ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள் மஞ்சு..இன்று இருவரைத் தவிர மற்றவர்கள் அறிந்தவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா :)

   Delete
 37. அன்பின் மஞ்சு

  அறிமுகம் அனைத்துமே அருமை - படித்து மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா :)

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது