07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 12, 2011

வலைச்சரத்தில் என்னைப் பற்றிய அறிமுகம் !!!

வலைச்சர ஆசிரியர் பொறுப்பை என் சுய அறிமுகத்துடன் நிறைவு செய்கிறேன். இதோ என்னைப் பற்றி....
       நானும் உங்களில் ஒருத்திதான். நத்திங் டு ஸ்பெஷல். கடந்த 6- மாதங்களாகத் தான் பதிவு எழுதுகிறேன். எல்லோருமே  சொல்வது போல ரெண்டு மாசமா என் பதிவையும் படிக்க யாருமே வரலே.  ஃபாலோயரும் வரலே. ரெண்டுமாசம் ஈ ஓட்டினேன். பிறகு மத்தவங்க ப்ளாக்கெல்லாம் போயி படிச்சு கமென்ட்டும் போட்டு ஃபாலோயராகவும் இணைச் சுண்டேன். பிறகு ஒவ்வருவராக என் பக்கமும் வர ஆரம்பிச்சாங்க. 
        அப்புறம் கமெண்ட், ஃபாலோயர் பத்தியில்லாம் கவனம் செலுத்தாம, எனக்கு என்ன எழுதணும்னு தோனுதோ அதையெல்லாம் எழுத ஆரம்பிச்சேன். ஒரு 10 வருடங்களுக்கு முன்பு, மங்கையர் மலர், சினேகிதி, அவள் விகடன் என எல்லாத்துலயும் கதை கட்டுரையெல்லாம் எழுதிண்டு இருந்தேன். நிறைய பிரசுரமும் ஆகி இருக்கு. கம்ப்யூட்டர் பழக்கம் ஆனதில் இருந்து, பத்திரிக்கைக்கு எழுதும் விஷயமே நின்னு போச்சு. பதிவுகளில் எல்லா விஷயங்கள் பற்றியும் எழுதினேன்.
     எனக்கு வெளி விஷயங்க எல்லாம் அவ்வளவா தெரியாது. வீட்டில் நடப்பது, என் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மலரும் நினைவுகள் என்ற தலைப்பில் திறந்த புத்தகமாக விரித்து வைக்கிறேன். அது தவிர, கொஞ்சம் பிடித்த பாடல்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், பயணக் கட்டுரைகள் என்று வெரைட்டியாக எழுதறேன். 
   மொத்தம் ரெண்டு ப்ளாக் எழுதறேன். குறைஒன்றுமில்லை, தமிழ் விரும்பி  என்ற தலைப்புகளில் எழுதிண்டு இருக்கேன். குறை ஒன்றுமில்லையில் இதுவரை 50- பதிவுகளும், தமிழ் விரும்பியில்  34- பதிவுகளும் எழுதி இருக்கேன். கிட்டத்தட்ட 25 பதிவுகள் பாப்புலர் லிஸ்டில் வந்திருக்கு. ரெண்டிலுமாகச் சேர்த்து 200- ஃபாலோவர்ஸ் வரை இனைஞ்சிருக்காங்க. வலைச்சரத்திலும் இதுவரை என்னை 6-பேர்கள் அறிமுகப்படுத்தி இருக்காங்க. அதுவே பெரிய பெருமை. இப்ப ஆசிரியர் பொறுப்பையும் கொடுத்திருக்கீங்க. சந்தோஷத்துல தல  கால் புரியல்லே. 
       இதுல ஒரு வேடிக்கை என்னன்னா நான் பள்ளிக்கூடம்லாம் போயி படிச்சதே இல்லே. இன்னிக்கு ஆசிரியர் பொறுப்பு. என்ன வேடிக்கை இல்லியா? என் எழுத்தைப் படிக்கும் பெரும்பாலோர் நேர்ல உக்காந்து பேசுறது போலவே இருக்குன்னு சொல்வாங்க. அந்த எழுத்தை ரசிக்கவும் நிறையா பேரு இருக்காங்க. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. பதிவு எழுத ஆரம்பிச்ச பிறகு தான் நிறைய நல்ல , நல்ல நண்பர்களும் கிடைச்சிருக்காங்க. இதெல்லாம் எனக்கு பெரிய ப்ளஸ் பாயிண்ட்ஸ். 50-வருஷமா வடக்கேயே வசிப்பதால ஹிந்தி, மராட்டி நல்லா எழுத படிக்க பேச வருவது போல என் தமிழ் சரளமா இருக்காது. இது என்னோட மைனஸ் பாயிண்ட். இதுக்கும் மேல என்னைப் பத்தி எதுவும் சொல்ல இல்லே.
என்பதிவில் பாப்புலர் லிஸ்ட்டில் இருக்கும் பதிவிலிருந்து கொஞ்சம் கீழே.-----

தமிழ்விரும்பியில்  
m.p.to  m.s.    

குறை ஒன்றுமில்லையில்


    இந்த இடத்தில் ஒன்னு சொல்ல ஆசை. இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பைக் கொடுத்து பெருமைப்படுத்திய சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றியை தெரிவிச்சுக்கறேன். இந்தப்பணியை சிறப்பாக நடத்த உதவிய அன்பு நண்பருக்கும் நன்றிகள். அவரின் உதவி இல்லாமல் நான் இந்த வேலையை இவ்வளவு சிறப்பாகப் பண்ணியிருக்கவே முடியாது. அவர் பேரைச் சொல்லி அவரை தர்ம சங்கடதில் ஆழ்த்த விரும்பலை. அவருக்கும் அது பிடிக்காது. நான் யாரைச் சொல்கிறேன் என்பது அவருக்கும் புரியும், எனக்கும் தெரியும். நன்றி மறப்பது நன்றன்று. இல்லியா. அதனால அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை இங்கு சொல்லிக்கவிரும்பறேன். ஒரு வாரமாக என் பதிவுகளை பொறுமையாக படித்து பின்னூட்டமிட்டு என்ன உற்சாகப்படுத்திய என் அன்பு வாசக நண்பர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவிச்சுக்கறேன்.  
ம்ம்ம்... ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்.... என்கிட்டே சாட் பண்ணனும்னா இங்க வாங்க, நாம மீட் பண்ணலாம்.

37 comments:

  1. இந்த வாரம் முழுவதுமே அதிரடி அறிமுகங்களால் அசத்தியிருக்கீங்க..
    நன்றிகளும்,
    வாழ்த்துக்களும் அம்மா.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அம்மா.......

    :)

    ReplyDelete
  3. அருமையாக எழுதி முடிச்சுட்டீங்க. தங்களுக்கும், தங்களுக்கு உதவி செய்த அந்த நண்பருக்கும் என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    [பள்ளியில் சேர்ந்து படிக்காமலேயே ஆசிரியர் ஆகியிருக்கிறேன் என்று நீங்கள் சொல்லுவது நல்ல நகைச்சுவை உள்ளது.]

    ReplyDelete
  4. "50-வருஷமா வடக்கேயே வசிப்பதால ஹிந்தி, மராட்டி நல்லா எழுத படிக்க பேச வருவது போல என் தமிழ் சரளமா இருக்காது. இது என்னோட மைனஸ் பாயிண்ட். "

    அயயய்யோ இது மைனஸ் பாயிண்டா?

    இல்லை. இன்னிக்கு தமிழ்நாட்டிலே தமிழ் தெரியலன்னு சொல்லிகிறது ஒரு ஸ்டேடஸ் சிம்பள். பிளஸ் பாயிண்டு.
    தமிழ் பிடிக்கும் எனக்குத் தமிழ் நன்னாத் தெரியும் சொல்லிப்பாருங்க...உங்களை ஒரு வினோதப்பிராணியைப்பார்ப்பது போலப்பார்ப்பார்கள். தமிழ் நாட்டிலே அம்மாமாருகளுக்கு மம்மின்னு கூப்பிட்டாதான் கவுரமா நினைச்சுக்குவாங்க. அதே போல டாடியும்.

    வடக்கே இருந்ததனாலே தமிழர்களில் வாழ்க்கைச்சீரழிவு தெரியவில்லை போலும் !

    ReplyDelete
  5. அதிரடி அறிமுகங்கள்..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. வேடந்தாங்கல் கருன் நன்றி

    ReplyDelete
  7. இந்த ஒரு வாரமும் சிறப்பான அறிமுகங்கள் தந்து ஆசிரியர் பொறுப்பை கலக்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள் அம்மா. உங்கள் பதிவுகள் தொடரட்டும்.

    ReplyDelete
  8. சிம்மக்கல், நன்றிங்க.

    ReplyDelete
  9. இராஜராஜேஸ்வரி, நன்றிம்மா.

    ReplyDelete
  10. பல புதியவர்களை அறிமுகப் படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. //நானும் உங்களில் ஒருத்திதான். நத்திங் டு ஸ்பெஷல்.//

    நல்ல அறிமுகம்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. இந்த வாரம் முழுதும் புதுப்புது பதிவர்களை அறிமுகங்கள் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  13. //அவருக்கும் அது பிடிக்காது. நான் யாரைச் சொல்கிறேன் என்பது அவருக்கும் புரியும், எனக்கும் தெரியும்.//

    எனக்கும் தெரியும்.

    ReplyDelete
  14. ஒரு வாரமாய் வலைச்சர ஆசிரியர் பணியை செம்மையாய் செய்த உங்களுக்கு வாழ்த்துகள். என் வலைப்பூ மற்றும் என் மனைவியின் வலைப்பூ இரண்டையும் வலைச்சரத்தில் இந்த வாரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. சிறப்பான வாரம். நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  16. அசத்தியிருக்கீங்க.அம்மா
    நன்றிகளும்,வாழ்த்துக்களும்

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள் அம்மா..

    ReplyDelete
  18. உண்மையிலேயே குறைஒன்னும் இல்லாம முடிசிடிங்க சந்தோசம்

    ReplyDelete
  19. அன்பின்

    லக்ஷ்மி,

    அழகான மனத்தைத் தொடும் எழுத்துக்களால் ellaaraiyum மகிழச் செய்திருக்கிறீர்கள்.

    அதுவே உங்கள் பலம். இன்னும் நிறைய எழுதி எங்களைச் சந்தோஷப்படுத்தணும்.

    --
    அன்புடன்,
    ரேவதி.
    http://pukaippadapayanangal.blogspot.com

    ReplyDelete
  20. அன்பின்

    லக்ஷ்மி,

    அழகான மனத்தைத் தொடும் எழுத்துக்களால் ellaaraiyum மகிழச் செய்திருக்கிறீர்கள்.

    அதுவே உங்கள் பலம். இன்னும் நிறைய எழுதி எங்களைச் சந்தோஷப்படுத்தணும்.

    --
    அன்புடன்,
    ரேவதி.
    http://pukaippadapayanangal.blogspot.com

    ReplyDelete
  21. நான் ஆசிரியப்பொறுப்பிலிந்து போன
    பிறகும் கூட பின்னூட்டம் வந்துகிட்டே
    இருக்கு. சந்தோஷம். வெங்கட் நன்றி.

    ReplyDelete
  22. வல்லி சிம்ஹன் நன்றின்ங்க

    ReplyDelete
  23. நல்ல அறிமுகங்களுடன் சிறப்பாக செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது