07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 13, 2011

"வலைச்சரம்" - வலைப்பதிவனாகிய வாசகன்!!!

அன்பின் வலைச்சரம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த மூன்றரை ஆண்டுகாலமாய், தமிழ் இணைய பூங்காவில் ஒரு வாசகனாய் மட்டுமே வலம் வந்து கொண்டு, புற்களை மேய்ந்து கொண்டும், பூக்களை நுகர்ந்து கொண்டும், தென்றலை அனுபவித்துக் கொண்டும் இருந்த நான், கடந்த ஜனவரி முதல் சொந்தமாக ஒரு தளத்தை உரியதாக்கிக் கொண்டு, அதில் பூக்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றேன்.

தமிழ் இணையத்தில் உள்ள தோழமைகளைப் பற்றி, ஒரு வாசகனாக மூன்று வருட அறிமுகம் இருந்தாலும், உங்கள் அனைவரின் சக தோழனாக உலாவருவது கடந்த ஐந்தரை மாதங்களாக மட்டுமே. இந்த குறுகிய கால அனுபவத்திலேயே என்னை நம்பிக்கையுடன் அழைத்து "வலைச்சரத்தின்" ஒருவார காலத்திற்கு ஆசிரியர் பொறுப்பை வழங்கியிருக்கும் பொறுப்பாசிரியர், திரு. சீனா சார் அவர்களுக்கும், வலைச்சரக்குழுவில் அவர்களுடன் இணைந்து பணியாற்றும், கயல்விழி முத்துலட்சுமி, பொன்ஸ் பூர்ணா மற்றும் தமிழ் பிரியன் அவர்களுக்கும் என் நன்றியினை தெரிவித்துக் கொண்டு, இந்த முதல் இடுகையை தொடர்கிறேன்.

இதற்கு முன் ஆசிரியர் பொறுப்பு ஏற்றிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பதிவுகளையும், பதிவர்களையும் அறிமுகம் செய்வது வழக்கில் இருந்தது. ஆனால் சிலருக்கு சில துறைகளில் (தலைப்புகளில்) பெரிய ஆர்வம் இல்லாமல் இருக்கக் கூடும், அப்படிப்பட்டவர்கள் அந்த நாட்களில் வலைச்சரம் பக்கம் வராமல் கூட போவதற்கு வாய்ப்பிருக்கின்ற காரணத்தால், இந்த வார வலைச்சரத்தில் ஒவ்வொரு நாளும் கதம்பமாக பல்வேறு மலர்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை தான்!

ஆகவே நண்பர்களே, அனைவரும் தினம் தினம் வருக. அவரவர்க்கு பிடித்த மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை எடுத்து அணிந்து இன்புறுக!!

இன்று முதல் நாள், இது முதல் இடுகை. இதில் ஆசிரியரின் (அட! நான் தாங்க!!) சுயசொறிதல்... மன்னிக்கவும் சுயபுராணம் (தான்) எழுதணும்னு சொல்லியிருக்காங்க. வேற வழியே இல்ல, கொஞ்சம் பொருத்துகிட்டு எப்படியாவது இன்றைய பொழுத இதப்படிச்சி வீட்டு சாப்பாட்டோட ஓட்டிடுங்க. நாளைலேருந்து விதவிதமான உணவகங்களில் உண்டு மகிழலாம்!! 

"கொக்கரக்கோ" என்ற பெயரில் எனது வலை தளத்தை ஜனவரி 2011 இல் துவங்கி, இது வரையிலும் 35 பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கின்றேன். கழுகு குழுமத்திற்காக 6 பதிவுகள் வரையிலும் எழுதியிருக்கின்றேன். இதுவரையிலும் நான் எழுதியிருப்பதில் பெரும்பாலானவை. அரசியல் சார்ந்த பதிவுகளே.

எனக்கு ஆன்மீகம், அரசியல், சினிமா, இசை, தொழில்துறை ஆகிய துறைகளில் ஒன்றுக்கொன்று குறையாத அளவிற்கு ஈடுபாடும், விருப்பமும் அதிகம் என்றாலும், நான் எழுத ஆரம்பித்த நேரத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்ததால் அரசியல் பற்றிய இடுகைகளே அதிகம் எழுதுவதற்கு சந்தர்ப்பம் இயல்பாகவே அமைந்து விட்டது. அதனாலேயே அரசியல் பதிவர் என்ற முத்திரை என் மேல் விழுந்து, ஆன்மீகம், அனுபவம், பொதுவுடைமை பற்றி ஏதாவது ஓரிரு இடுகைகள் எழுதினாலும், ... ஒரு நமுட்டுச் சிரிப்புடன் வாசகர்கள் அவற்றைக் கடந்து செல்வதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

"உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலையெல்லாம்?!" னு கேட்கற மாதிரியே இருக்கு!! ஆனால் சும்மா சொல்லக் கூடாது, அரசியல் பதிவுகளுக்கு வாசகர்களின் அமோக ஆதரவைப் பார்க்கும் பொழுது ஒருவித போதையே தலைக்கேறுகிறது!

ஆனால் என்னுடைய மற்ற பன்முகத்(!) திறமைகளை எல்லாம் (கூல் டவுன்... கூல் டவுன்..! ஒரு வாரத்துக்கு பேயாம வாய மூடிட்டு இதெல்லாம் பொருத்துகிட்டு தான் இருக்கணும்!! புரியுதா?) வெளிப்படுத்த ஒரு சிறந்த வடிகாலாக இருப்பது "கழுகு" குழுமம் தான்.

சுயதொழில் செய்வது சம்பந்தமாக ஒரு தொடர் பதிவை அதில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். இதுவரையிலும் நான்கு பாகங்கள் வந்துள்ளது. அதை "இங்கு" சென்று படித்துவிட்டு ஒரு வாரம் கழித்து தொழில்முனைவோராவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். ஏன்னா? நீங்க பாட்டுக்கு உடனே தொழில் தொடங்க போயிட்டீங்கன்னா, ஒரு வாரத்துக்கு இங்க கடை காத்து வாங்கிட கூடாதுல்ல? அதான்!! 

அடுத்ததா, நான் எழுதினதுலயே எனக்கு பிடிச்சதுன்னு சொல்லமாட்டேன், ஆனா எனக்காகவே அல்லது என்னைப் போன்ற நடுத்தர/மேல்நடுத்தர வர்கத்தினர்களுக்காகவே ஒரு விழிப்புணர்வு வரமாதிரி எழுதியதுன்னு சொல்வேன். கொஞ்சம் காண்ட்ரவர்ஷியலாக கூட இருக்கும். சில சமயங்களில் ஒருவருடைய நீதி, இன்னொருவருடைய அநீதியாக ஆகிவிடுவது தவிர்க்க இயலாததாகிவிடுகிறது. அந்தப் பதிவு இது தான் "நடுத்தெரு வர்க்கமாகும் நடுத்தர வர்க்கம்".

இப்போ சமீபத்துல நான் எழுதின "பட்டணத்தி வீட்டு மீன் குழம்பு" என்ற சொந்த அனுபவமும், கற்பனையும் சரிபாதி கலந்து எழுதிய 'சிறுகதை' மாதிரியான பதிவு, ம்... இது நல்லா வந்துருக்கே, தீண்டாமை பற்றியெல்லாம் மெசேஜ் சொல்லிருக்கியேடா சௌமியா(!) என்று என் தோளை நானே தட்டிக் கொண்ட பதிவு.

அரசியல் பதிவராவே ஃபார்ம் ஆயிடுவோம் போலருக்கே, கொஞ்சம் ரூட்ட மாத்துன்னு சொல்லிக்கிட்டெ ஒரு ஆன்மீக பயணம் பற்றிய ஆன்மீகப் பதிவுதான் இந்த "ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக..!" பதிவு. பெருசா போணி ஆகாததுனால, பேக் டு பெவிலியன்னு, அரசியல் பக்கமே திரும்பிட்டேன்!

எனக்குத் தெரிந்தவரையிலும் கிட்டத்தட்ட எல்லா பதிவர்களுக்குமே ஒன்றிரண்டு சுயசொறிதல் பதிவு இருக்கத்தான் செய்கிறது. விதியை மீறக்கூடாதுன்னு (ம்க்கூம்.. ஃபாலோ பண்ண வேண்டிய விதிய எல்லாம் காத்துல பறக்க விட்டுங்க... ன்னு யாரோ என்னமோ சொல்றீங்க - ஆனா அது என் காதுல விழல!!) எழுத்துச் சித்தர் ரேஞ்சுக்கு உயர பறந்துகிட்டே "இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் கொக்கரக்கோ?" என்ற இந்தப் பதிவை எழுதினேன். ப்ளீஸ் படிச்சிடுங்களேன்!!

இலவச திட்டங்கள் பற்றி மக்களுக்கு, குறிப்பாக நடுத்தர/மேல் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு விழிப்புணர்வு தெளிவான பாதையில் வர வேண்டும் என்ற அவாவில், நிறைய புள்ளி விவரங்களோடு மூன்று பாகங்கள் கொண்ட இந்த தொடரை எழுதியிருக்கின்றேன். பலர் "இந்தப்" பதிவை படித்திருக்கலாம். படிக்காதவர்கள் அவசியம் ஒரு முறை படிக்க வேண்டுகிறேன்.

அரசியல் என்பது எத்தனை யதார்த்தமான, நடைமுறை நகைச்சுவையோடு கலந்து இருக்கின்றது என்பதற்கு இந்த இரண்டு பதிவுகளும் படித்தால் புரியவரும். 1. கருணாநிதியை திட்டினால் என்ன கிடைக்கும், 2. என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே...? இப்படிக்கு ராமதாஸ்

முடியல... வேணாம்.... வலிக்குது...... அழுதுடுவேன்.....!!! ஹலோ ஹலோ யார்ப்பா அது? அவ்ளோ தான் அவ்ளோ தான்! இதுக்கெல்லாமா அழுவாங்க? சின்னப்புள்ள தனமா இருக்கு?! எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் இந்த வீரபாகுங்குற மாதிரி ஸ்டடியா நிக்கணும்! புரியுதா? நாளைலேருந்து புதுசு புதுசா.. இடத்துக்கு எல்லாம் அண்ணன் அழைச்சிட்டு போறேன்.. சரியா? எங்க பை சொல்லுங்க பார்ப்போம்!!

24 comments:

  1. அன்பின் சௌம்யன் - லேபிள் சௌம்யன் என்றோ கொக்கரக்கோ என்றோ அனைத்து இடுகைகளுக்கும் இடுக. இவ்விடுகைக்கும் லேபிள் மாற்றுக. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. வணக்கம்.

    உங்கள் விமர்சனங்கள் கூர் ஈட்டி போலவே இருக்கும். நீங்க அறிமுகம் செய்ய வேண்டிய இடுகைகளும் அப்படியே இருக்க வேண்டும்.

    நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. உங்கள்பதிவில் கொஞ்சம் நகைச்சுவை எட்டி பார்க்கிறதே சௌம்யன் சார் உங்களுக்கு நகைச்சுவையும் வருமானு இப்போ தெரியுது..!!!

    முதல் பதிவே தூள் கிளப்புதே...!!! கலக்குங்க சௌம்யன் சார் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துகள். நீங்க திமுக அபிமானின்னு ஒரு பரவலான குற்றச்சாட்டு இருக்கே? அப்புறம் எப்படி அரசியல் விமர்சகர்னு ஒத்துக்க முடியும்? விமர்சனம் என்பது நடுவில் நின்று விவாதிப்பதல்லவா?

    ReplyDelete
  5. // ப்ளீஸ் படிச்சிடுங்களேன்!!//

    ...நீங்க இவ்ளோ கெஞ்சி கேட்டு படிக்கலன்னா நல்லா இருக்காது.. படிக்கிறேங்க!

    வலைச்சரத்திலும் வலம் வர வாழ்த்துக்கள்..! :)

    ReplyDelete
  6. வந்துட்டோம்ல. நல்லாதான் உங்களை
    அறிமுகம் செய்துகிட்டிருக்கிங்க.ஆசிரிய
    பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வணக்கம் சீனா சார், ஜோதிஜி, சௌந்தர், புதுகை அப்துல்லா & ஆனந்தி.

    @ஜோதிஜி...,
    நிச்சயமாக உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேரும் வகையில் முயற்சி செய்கின்றென். நன்றி.

    @சௌந்தர்...,
    நன்றி சௌந்தர்

    @அப்துல்லா...,
    ஆமாம் நீங்க அவர்தான?! //நீங்க திமுக அபிமானின்னு ஒரு பரவலான குற்றச்சாட்டு இருக்கே?// திமுக அபிமானியா இருக்கறது குற்றமா பாஸ்?

    //அரசியல் விமர்சகர்னு ஒத்துக்க முடியும்? விமர்சனம் என்பது நடுவில் நின்று விவாதிப்பதல்லவா//

    நானே "அரசியல் பதிவர்னு" முத்திரை குத்திட்டாங்கன்னு சொல்றேன், நீங்க என்னடான்னா? "அரசியல் விமர்சகர்னு" சொல்றதா.. போற போக்குல குண்டு போட்டுட்டு போறீங்களே?! இது நியாயமா?

    கடைசியா ஒன்ணு சொல்லிக்கிறேன். நான் நடுநிலைவாதி.., நடுநிலைவாதி..., நடுநிலைவாதிதாங்கோ...!

    @ஆனந்தி...,
    எதோ ஒரு காரண்த்துக்காக படிச்சா சரிதான்! நன்றி.

    ReplyDelete
  8. செளம்யன்....@ தரமான ஒரு வாரமாக இருக்கும் என்று தெரியும்.......உங்களோடு வருகிறேன்........தொடர்ந்து

    வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வணக்கம் சௌமியன்.... வருக....

    ReplyDelete
  10. // ஆமாம் நீங்க அவர்தான?! //

    எவர்தான?

    ReplyDelete
  11. அன்பின் சௌம்யன் - அத்த்னைஅ சுட்டிகளையும் சுட்டி, சென்று படித்து, ரசித்து, மறுமொழிகளும் இட்டு வந்தேன். அப்பாடா - ஒரு வேலை முடிந்தது. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  12. அண்ணே...

    தாரை தப்பட்டைகள் முழங்க...

    அடிச்சு பட்டியக் கிளப்புங்க...

    ReplyDelete
  13. நல்வாழ்த்துகள்.

    கலக்குங்க சௌம்யன் சார்.

    ReplyDelete
  14. அமேசிங்... சீனா சார். அனைத்தையும் படித்து, கருத்துரையும் போடுவது... நாங்கள்லாம் இன்னும் வளருனும்னு தெரியுது!

    ReplyDelete
  15. நன்றிகள்..,
    தேவா, சே.குமார், தமிழ்வாசி பிரகாஷ், லக்ஷ்மி அம்மா & சங்கவி.

    ReplyDelete
  16. தூங்குவோரை எழுப்பி விழிப்படையச்செய்யப் போகும் கோழியின் குரலுக்கு, அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. வாழ்த்துகள் கொக்க்கொரோகோ

    ReplyDelete
  19. THODAR VANDILA NAANUM PAYANIKKUREN... UNGALODU...

    ReplyDelete
  20. அறிமுகம் நன்று.
    நேற்று நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் இல்லீங்க சார்.

    ReplyDelete
  21. வாங்க மயிலாடுதுறையாரே, கதம்பமா கலக்குங்க...

    ReplyDelete
  22. வருக... வருக....

    தங்களின் வலைச்சர பொருப்புக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  23. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் இந்த வீரபாகுங்குற மாதிரி ஸ்டடியா நிக்கணும்! புரியுதா? நாளைலேருந்து புதுசு புதுசா.. இடத்துக்கு எல்லாம் அண்ணன் அழைச்சிட்டு போறேன்.. சரியா? எங்க பை சொல்லுங்க பார்ப்போம்!!//

    கூவின சேவலுக்கு சௌம்யமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. வணக்கம்..,
    என் ராஜபாட்டை ராஜா, ஊரான், ஜீவன் பென்னி, வை.கோபாலகிருஷ்ணன், ராஜராஜேஸ்வரி, கவிதைவீதி சௌந்தர், குணசேகரன் & நிஜாமுதீன்.

    அனைவரின் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது