07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 15, 2011

வலைச்சரம் - ஃப்ரூட் மிக்ஸர்


நான் ஏற்கனவே சொல்லியிருந்த படி ஒவ்வொரு நாள் அறிமுகமும் எந்த வரைமுறைக்கும் உட்படாத வெவ்வேறு துறைகள், கோணங்கள் மற்றும் விதவிதமான சுவைகளின் கலவையாகத் தான் இருக்கும். இன்னொன்றையும் இங்கு சொல்லியாக வேண்டும், வலைச்சரத்தில் வலைத்தளங்களையும், பதிவுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றவுடன், யாருக்கும் அறிமுகமில்லாத, அல்லது மறந்து போயிருக்கும் பதிவர்களையும், பதிவுகளையும் மட்டுமே இங்கு பகிரவேண்டும் என்ற எந்த நியதிகளும் இல்லை என்றே நினைக்கின்றேன்.

அதனால் வலையுலகில் நன்கு பிரபலமான, அதிலும் என்னைக் கவர்ந்த சில பதிவர்களை, இன்றிலிருந்து மற்ற சிறப்பு வலைதளங்களோடு சேர்த்து அறிமுகம் செய்கிறேன் என்பதை விட பகிர்ந்துகொள்ள இருக்கின்றேன். அந்த வகையில் இன்றைய பகிர்தலில் இரண்டு பேர். ஒருவர் மிகப் பிரபலம், இன்னொருவர் மிகப் பிரபலமாக மாற உழைத்துக் கொண்டிருப்பவர்.

முதலாமவர் தமிழ் வலைப்பதிவர் உலகம் எப்படி படிப்படியாக வளர்ந்து வருகிறதோ, அப்படியே அதோடு சேர்ந்து வளர்ந்து கொண்டிருப்பவர். 2007 இல் வலையுலக வாசகனாக நான் உள்ளே நுழைந்தபோது இவருடைய பதிவு இன்று வந்துள்ளதா என்று தான் என்னுடைய கண்கள் முதலில் தேடும். சும்மா சொல்லக்கூடாது அப்படி ஒரு எழுத்து நடை. 

பலபேருடைய எழுத்துக்கு ரசிகனாக மட்டுமல்லாமல் அடிமையாகக் கூட இருந்திருக்கின்றேன். ஆனாலும் இந்தப் பதிவருடைய எழுத்தைப் படிக்கப் படிக்கதான் நாமும் எழுதினால் என்ன? என்ற எண்ணம் என்னுள் எழ ஆரம்பித்தது. (இதுக்காக அவர் மேல் நீங்க கோபப்படறது கொஞ்சம்கூட நியாமில்ல, சொல்லிட்டேன்! எதுவா இருந்தாலும் பின்னாடி பேசி தீத்துக்கலாம், அவர்ட்ட வச்சிக்கப்படாது புரியுதா? குட்!)

யாருடைய சாயலும் சட்டென்று சொல்லிவிட முடியாதபடிக்கு ஒரு எழுத்து நடை. ஒரு தனிப்பட்ட துறையில் மட்டுமே ஜாம்பவான் என்றெல்லாம் இல்லாமல் பல துறைகளுக்கும், கோணங்களுக்கும் அவருடைய பதிவுகள் சென்று வரும். எவ்வளவு சீரியஸான கட்டுரை என்றாலும் ஒரு இழை போன்ற நையாண்டி நடுவில் ஓடிக்கொண்டிருக்கும். கணிக்கமுடியாத பாதைகளில் பதிவு சென்று கொண்டிருக்கும். முடியும் வரையிலும் படிப்பவர்களிடம் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும். (இதுக்கு மேலயும் அவர் யாருன்னு சொல்லலன்னா எழுந்து போயிடுவிங்கன்னு தெரியுது - தோ.. இப்ப வர்றேன்!)

நம்ம "லக்கி லுக்" எனப்படும் "யுவ கிருஷ்ணா" தாங்க அந்த பதிவர்! "ஊரறஞ்ச அந்தணருக்கு பூணூல் எதுக்கு" ன்னு நீங்க கேட்க வர்றதுக்கு முன்னாடி முதல் இரண்டு பாராவையும் திரும்ப ஒரு தபா படிச்சிட்டு வந்துடுங்க! கடந்த ஒன்றரை வருடங்களில் பதிவுலகுக்கு வந்திருக்கும் பதிவர்களுக்கு இவருடைய சமகால கட்டுரைகள் அதுவும் பத்திரிகைகளில் ஒரு நியதிக்கு கட்டுப்பட்டு எழுதப்பட்டது மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் ஆரம்ப காலங்களில் தன் சொந்த தளங்களில் காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்த இவர் எழுத்துக்கள் அதிகம் பரிச்சயம் இல்லாமல் போயிருக்கலாம். மேலும் சமீப காலமாக தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் பகிரப்படாததால் சில புது பதிவர்கள் இவரது பதிவுகளை தவறவிட்டுக் கொண்டிருக்கலாம் அதனாலும், இவருடைய எழுத்து வசீகரத்தாலும் இன்றைய வலைச்சரத்தில் இந்த பிரபலத்தை அறிமுகம் செய்வதில் பெருமை அடைகின்றேன்.

இவருடைய மிகச் சிறந்த பதிவுகள், கட்டுரைகள் நிறைய இருந்தாலும், மிகச் சாதாரணமான விஷயங்களைப் பற்றி இவர் எழுதிய மூன்று பதிவுகளை மட்டும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் ." நண்பேண்டா!" என்ற இந்தப் பதிவில் சேர்ந்து முன்னேற விழைந்த மூன்று நண்பர்களின் சமகால நிலை வரை ஒருவித எதிர்பார்ப்போடும், த்ரில்லோடும் சொல்லியிருப்பார். பதிவுலகில் புதிதாக எழுத வந்திருப்பவர்கள் இந்த எழுத்து நடையையும், எங்கு ஆரம்பித்து எந்த இடத்தில் முடிக்கப்படுகிறது என்பதையும் அவதானித்தால் உபயோகமாக இருக்கும்.

அடுத்ததாக  "வாங்க 3க்கு போலாம்!". சன் டீவி உச்சாணிக் கொம்பில் இருந்த பொழுது எழுதப்பட்டது. அதன் சரிவை அத்தனை துல்லியமாக 'முன் நுகர்ந்து', சாமான்யர்களுக்கும் எளிதாகப் புரியும்படி சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கும். எங்குமே நேரடிச் சாடல் இருக்காது. அது முக்கியம்.

"சரோஜா தேவி!"..., தவறாக நினைக்க வேண்டாம். அவசியம் இந்தப் பதிவை சொல்லித்தான் ஆக வேண்டும் என்று ஆரம்பத்திலேயே தீர்மானித்து விட்டேன். இந்த விஷயத்தை இப்படிக் கூட எழுதலாமா? பலான விஷயம் என்று நினைப்பதை ஆபாசமின்றி எழுதலாமா? என்றால் முடியும் என்று நிரூபித்திருக்கின்றார். எழுத்துத் துறையில் பிரபலமாகி உயர வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவுலகிற்கு வந்துள்ள இளைஞர்கள், இந்த எழுத்து நடையை அவசியம் கற்றுணர வேண்டும். மிகவும் சீரியஸாக எழுதியிருப்பார். இதற்கு சிரிப்பதா? அல்லது சீரியஸாகவே இருக்க வேண்டுமா? என்று படிப்பவர்களுக்கு ஒரு குழப்பமே வந்துவிடும்! சமீபத்திய இவரது பதிவுகளில் நான் மிகவும் வியந்த ஒன்று இது. (மீண்டும் சொல்கிறேன் அதன் கண்டெண்ட்டுக்காக அல்ல, அதன் எழுத்து நடைக்காக)
அடுத்த பதிவர் ஒரு துறுதுறுப்பான இளைஞர் தான். இன்னும் கொஞ்சம் தன்னை செதுக்கிக் கொண்டால் வருங்கால "லக்கி" என்று கூட இவரைச் சொல்லலாம். எழுத்துத் திறமை இயற்கையாகவே இவரிடம் அமையப் பெற்றிருக்கிறது. ஆனாலும் மிக அதிகமாக சினிமா விமர்சனங்களே கண்ணுக்குத் தெரிவதால், முன்னுக்கு வர அந்தத் திரையைக் கிழித்துக் கொண்டு வெளியேற வேண்டும். ஏனெனில் யாரையும் பார்த்துத் தான் எழுத்து நடையை சீரமைக்க வேண்டும் என்ற அவசியமில்லாமல், மிக மிக அநாயாசமான எழுத்துத் திறமை இவரிடம் கொட்டிக் கிடக்கின்றது.

இவரைப் போன்றவர்கள் நிச்சயம் பத்திரிக்கைத் துறையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ, சிறந்த எழுத்தாளராக பரிமளிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அவருடைய திறமைக்கு சான்றாக  "தெரியலையே மச்சி... ஒரு குவார்ட்டர் சொல்லேன்...!" என்ற இந்தப் பதிவை சொல்லலாம். லக்கியைப் போன்றே தன் மனதிற்கு பட்டதையும், மற்றவர்கள் தவறாக நினைத்துவிடுவார்களோ என்ற பயமில்லாமல் சில உண்மைகளையும் பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து தன்னுடைய எழுத்து நடையால் படிப்பவர்களைக் கவர்ந்து விடுவார்...

ஹலோ..யெச்சூச்மீ..., யாருன்னு பேர சொல்லாமயே பதிவுக்கு லிங்க் எல்லாம் கொடுத்துட்டேன், ஒரு வார்த்தை கேட்கப்படாது? யார் அந்தப் பதிவர்னு ( போடா.. வெண்று! பதிவோடு லிங்க்க கொடுத்துட்டு பதிவர் பேர சஸ்பென்ஸா வச்சிருக்கறதா இன்னும் நெனப்பா..?! - இதுல கேள்வி வேற...!!)....(பொது வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜம்..!! உட்றா.. உட்றா... சுனா பானா!)

நானே சொல்லிடறேன். நம்ம தத்துபித்துவங்கள் "ஃபிலாசஃபி பிரபாகரன்" (ரொம்ப காத்து வாங்குது, எத்தன ஃ) தான் அந்த பதிவர். அவரோட "பிரபா ஒயின் ஷாப்" புக்கு ரெகுலர் கஸ்டமர் நான். அப்பப்ப கடைய மூடிடுறாரு.. கொஞ்சம் கஷ்டமா இருக்கு. பார்த்து கொஞ்சம் ரெகுலர் பண்ணுங்க தம்பி.

(ச்சே... அரசியல்ல பெரிய ரௌடின்னு ஃபார்ம் ஆயிருந்த என்ன, இந்த ரெண்டு பேரும் அந்த வண்டிலேருந்து கீழ இறக்கி விட்டுடுவாங்க போலிருக்கே?! கொஞ்சமா நம்ம இமேஜ பூஸ்ட்-அப் பண்ணிக்கிட்டாதான் பொழப்ப ஓட்ட முடியும்!)

நண்பர்களே இத்தோடு உங்கள விட்டுடுறதா இல்ல. நல்ல முக்கியமான துறை சார்ந்த லிங்க் ரெண்டு தர்றேன். இதையும் படிச்சு முடிக்கிறதுக்குள்ள இதை விட அதிக கலக்கலான அறிமுகங்களுடன் மீண்டும் சந்திக்கலாம்.

நம் தமிழ் வலை தளங்களில் பிரபலமான பதிவர் "ஓசை செல்லா" அவர்கள் 'ஓசையே இல்லாமல்' ஒரு மிகச் சிறந்த நல்ல காரியம் ஆரம்பித்து செய்து கொண்டிருக்கிறார். "விவசாயத்திற்கு" என்றே தமிழில் முதன் முதலாக ஒரு தளத்தை உருவாக்கி, அதை மிகவும் நன்றாகப் பராமரித்து, பயிர் செய்து, செழிப்பான விளைச்சலைத் தந்து கொண்டிருக்கின்றார். இணையத்தில் எழுத வந்து என்ன சாதித்தோம்? என்று தங்களுக்குள்ளாகவே கேட்டுக் கொண்டிருப்பவர்களும், ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலிருப்பவர்களும், தங்களுடைய ஒரு கையை மட்டுமல்ல அட்லீஸ்ட் ஒரு விரலையாவது அந்தப் பணியில் இணைத்துக் கொண்டால் மன திருப்திக்கு கேரண்டி நிச்சயம்!!

அந்த லிங்க் இது தான்:   "வேளாண்மை.காம்"  தமிழகத்தின் முதல் வேளாண்மை இணைய தளம்...ஆடி 18, 2009 முதல் தமிழக விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. என்ற அடை மொழியோடு இருக்கும் இந்த தளத்திற்குள் நுழைந்தால் அள்ள அள்ள குறையாத மகசூல் கிடைக்கும் விவசாயத்தைப் பற்றி.

இன்றைய நிறைவாக சுற்றுலா (இணைய)தளம் ஒன்றை இங்கு அறிமுகம் செய்கின்றேன். இதை ஒரு மாணவர் எழுதுவதாகத் தான் ப்ரொஃபைல் சொல்கிறது. தமிழக சுற்றுலா துறையும் இணைந்து செயல்படுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் நன்றாக இருக்கின்றது. இன்பச் சுற்றுலா மற்றும் ஆன்மீகச் சுற்றுலா இரண்டுக்குமே முக்கியத்துவம் அளித்து விரிவாகவும், படங்களுடனும், தெள்ளத் தெளிவாக புள்ளி விவரங்களுடன் தொகுத்திருக்கின்றார்கள். பல கோவில்களையும் அழகான படங்களுடன் சுற்றுலா முறையில் அறிமுகம் செய்துள்ளார்கள்.

அதன் லிங்க் இது தான்:   "தமிழக சுற்றுலா".  இதப் படிச்சிட்டு ஒரு சுத்து சுத்திட்டு வந்தீங்கன்னா அடுத்த அருமையான கலக்கலுடன் காத்திருப்பேன்.

9 comments:

  1. சரமாரியான அறிமுகங்கள்....

    ReplyDelete
  2. அன்பின் சௌம்யன் - அறிமுகங்கள் வித்தியாசமான அருமையான அறிமுகங்கள். கலக்குக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் சீனா சார்...,

    மனமார்ந்த நன்றிகள்-தங்கள் பாராட்டுகளுக்கு.

    ReplyDelete
  4. இன்னைக்கும் அசத்தியிருக்கீங்க...

    எல்லா இணைப்புகளையும் வாசித்து விடுகிறேன்.

    ReplyDelete
  5. இறுதியில் இருக்கின்ற இரண்டும் புதியது..அறிமுகத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. தேடிப்பிடித்து புதியவர்களை அறிமுகம்
    செய்திருக்கிங்க.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அருமையான அறிமுகங்கள். நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. என் தமிழக சுற்றுலா வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!!. சுற்றுலாத் துறைக்கும் இந்த வலைப்பதிவுக்கும் சம்பந்தமில்லை..

    நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது