07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, June 27, 2011

அடியேன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை ' ஆர்.வி.எஸ்.

self portrait

ஆசிரியர் என்றாலே ரொம்ப பயந்தவன் நான். அதுவும் நான் படித்த மீசை வைத்த அத்யாபக்(अथ्यापक) என்றால் 50% அடிஷனல் மரியாதையான பயம். நான் தக்ஷின பாரத ஹிந்தி பிரச்சார சபாவினர் வைத்த மத்திமா தேர்வில் கோட் அடிக்காமல் செகண்ட் கிளாசில் ஒரே முயற்சியில் தேறிய பண்டிட். சிலம்பம் சுற்றும் வாத்தியாரைக் கூட பவ்யமாக காலைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொள்வேன். குருவிற்கு ஒஸ்தி மரியாதை ஜாஸ்தி கொடுப்பவன். அவர்களிடம் மரியாதையை சரி சமமாக ஊற்றிக் கலந்த பயம் என் ரத்தத்தில் ஓடுகிறது. திருடன் கையில் சாவி கொடுப்பது போன்ற சீனா சாரின் அழைப்பை ஏற்று ஆசிரிய நாற்காலியை  அலங்கரிக்க(?!) (அ) அபகரிக்க (அ) அமர ஒத்துக் கொண்டேன். ஒரு வாரம் நான் உட்காரும் சீட்டில் யாரும் 'பின்' சொருகாமல் இருந்தால் மிக்க சந்தோஷப்படுவேன். 

சுயபுராணம், சுயதம்பட்டம், சுயவிளம்பரம், சுயசொரிதல் என்று சுயம் இருக்கும் எல்லாவற்றையும் முதல் நாள் இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று சொன்னார் சீனா. ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை. ஆனால் கடை விரித்துவிட்டேன். என்னுடன் பள்ளி, கல்லூரி படித்தவர்களுக்கு தெரியும். நான் ஒரு வாயரட்டை. பேச்சுப் பட்டறை. பாட, பேச, கெட்ட வார்த்தையால் திட்ட, சிரிக்க, சாப்பிட, கொறிக்க, குடிக்க, ஊத, உறிஞ்ச, முத்தமிட, கொட்டாவி விட, பிளந்து குறட்டை விட்டு தூங்க, சிலரை கடிக்க என்று வாயைப் படைத்த பரம்பொருள் எனக்கு மட்டும் முக்கால்வாசி நேரம் பேசுவதற்காக மெனக்கெட்டு செய்து அம்சமாக பொருத்திவிட்டான்.

நாளுக்கு நாள் கடியின் வீச்சு அதிகமானதால் தாங்கள் தப்பிப்பதற்காக சுயநலம் மிகுந்த நண்பர்கள் சிலர் என்னை எழுதத் தூண்டினார்கள். பொதுவெளியில் வலைப்பூ ஆரம்பிக்கும் போது இதுவரை நான் கடந்து வந்த தமிழாசிரியர்கள் கையில் பிரம்புடன் கண்ணில் முறைப்புடன் ஒருமுறை என் கண்முன்னே பரேட் நடத்தினார்கள். போதும். இத்தோடு நிறுத்திக்கொள்வோம். இனி எழுதிக் கொல்வோம். இதுவரை எழுதிக் கிழித்தவைகளை கொஞ்சம் பார்ப்போம்.

2007-ம் வருஷம் "ப்ளாக்ன்னா இன்னாபா?" என்பதற்காக அரசியல்வாதிகள் போல ஊர்ப்பெயரை முன்னால் சேர்த்து ஒரு வலைப்பூ பின்னி எனது திருமுகத்தை (பயந்துடுவீங்க! ஜாக்கிரதை!) மட்டும் ஏற்றி முதல் பதிவிட்டேன். பதிவுலகம் அப்போது லேசாக அதிர்ந்தது எனக்கு அப்பட்டமாக தெரிந்தது. அப்புறம் சுமார் மூன்று வருடம் தமிழில் நன்றாக எழுதப் படிக்க கற்றுக்கொண்டு 2010- பிப்பில் கச்சேரியை ஆரம்பித்தேன். "இப்போது நீ என்ன முத்தமிழறிஞரா?" என்று என் நெஞ்சுக்கு நேராக விரல் நீட்டுபவர்கள் சற்றே மன்னிக்க. பதிவுலகில் என்னுடைய வலைப்பூவின் பெயர் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதற்காக பெயர்க்காரணம் சொன்னேன். நிறைய குடும்பங்களில் உறவுகள் பிச்சுப்போட்டது போல உலகெங்கும் விரவியிருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்க இஷ்டமித்திர பந்துங்கள் எழுதினேன். என் மானசீக ஆசான் சுஜாதாவின் நினைவு தினத்தன்று ராஜனுக்கு ராஜன் இந்த ரெங்கராஜன் தான் என்று அஞ்சலி செலுத்தினேன். 

பரமசுகர் என்ற போலிச்சாமியார் பற்றி நானெழுதிய முதல் கதை இரண்டு பின்னூட்டங்களுடன் அமோக வரவேற்பை பெற்றது. மகளிர் தினம் ஒன்று வந்ததில் ஜிப்பா போடாத கவிப்பேரரசாக அவதாரம் எடுத்தேன். வலைக் கவிஞர்கள் வருத்தம் கொண்டனர். சொல்லனாத் துயர் அடைந்தனர். வாளென வீசிய எனது கவிதைப் பேனாவுக்கு ஒய்வு கொடுத்தேன். எஃப் டிவியின் கலைச்சேவை நிறுத்தியபோது பொது நிகழ்வுகள் பற்றி எழுதிப் பார்த்தேன். மீண்டும் இரண்டு பின்னூக்கங்கள் கிடைத்தது. லோக்கலில் ஆஞ்ஜூ கோயிலுக்கு போய்விட்டு வந்ததும் Fair & Lovely பூசிய ரயிலில் சென்று வந்ததும் சமகால பயண இலக்கியங்கள் ஆயின. சாமியாரைப் பற்றி கதை எழுதிய நான் வீடியோ 'பிட்டில்' வாத்து மேய்த்த நடிகையுடன் பின்னிக்கொண்ட ஆனந்தமயமானவருக்கு பத்து நெத்தியடி யோசனைகள் சொன்னேன். எல்லோரும் நீங்களே ஒரு ஆஸ்ரமம் அமைக்கும் அளவிற்கு திறன் படைத்தவர் என்று உளமார பாராட்டினார்கள். இரண்டு சிஷ்யர்கள் வீட்டு வாசல் கதவை தட்டினார்கள்.

ஜட்டி இல்லாமல் ரயில் பயணம் செய்த மக்களை பற்றி நான் எழுதியதை தேடிப் பிடித்து "நல்லாயிருக்கு" என்று யூத்ஃபுல் விகடனில் பிரசூரித்தார்கள். குஷ்பூவும் நானும் சேர்ந்து பார்த்த விண்ணைத் தாண்டி வருவாயா பற்றி நான் எழுதிய விமர்சனம் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு அச்சடித்து ஸ்பெஷலாக வழங்கப்பட்டது. கும்பமேளாவைப் பற்றி போர்ஃப்ஸ் பத்திரிகையில் அபிஷேக் ரகுநாத் எழுதியது என்னை வெகுவாகக் கவர அந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் இருந்து தமிழ்ப்'படுத்தினேன்'. கோடைக்கால சிறப்பு முகாம்கள் எதிலும் என் பிள்ளைகளை சேர்க்காமல் கொடைக்கானலுக்கும் மதுரைக்கும் சென்று மீனாட்சியின் அருள் பெற்று திரும்பியதை பற்றி பதிவிட்டிருந்தேன். 

உலக வலைப்பூக்களில் முதன் முறையாக கார்த்திக்கின் காதலிகள் என்று காதல் ரசம் சொட்டும் தொடர் எழுதி மக்கள் மீது மன்மத அம்பு போட்டேன். பால் தி ஆக்டோபஸ் ஆருடம் சொல்லிக் கலக்கிய காலத்தில் அதை ஒரு பிரத்யேக பேட்டி எடுத்தேன். மகாபாரதத்தில் வரும் நகுஷனைப் பற்றி சர்ப்ப..சர்ப்ப.. என்று எழுதி காப்பியம் படைத்தேன். ஆகஸ்ட்டில் சென்னையில் அடித்த பெருமழையில் பத்திரமாக நீந்திக் கரையேறி நான் இப்பெரு நகரத்தில் திரவியம் தேடுவதை பற்றி அங்கலாய்த்தேன். சினிமாவிற்குப் பெயர் வைக்க திணறுபவர்கள் இங்கே அணுகவும். போதாத காலமாகிய ஓரிரவில் மணியின் ராவணன் பார்த்துவிட்டு நான் பட்ட பாடு இங்கே.

மோகன்ஜி பதிவில் யானை ஜோக் ஒன்றிற்கு நானும் பத்மநாபனும் பின்னூட்டமிடப் போய் அது யானை மீது சத்தியம் என்ற பதிவாக மலர்ந்தது. வலையுலகில் பின்னூட்டங்களை திரட்டி பதிவிட்ட பெருமை என்னையே சாரும். (எழுத ஒன்னும் இல்லாமல் பதிவாகப் போட்டுவிட்டு பெருமை வேறு.. என்று யாரோ பேசுவது தெளிவாகக் கேட்கிறது) 2010 அக்டோபர் மாதத்தில் ஆரம்பித்தது ஊரைப் பற்றிய பதிவு. மன்னார்குடி டேஸ். இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தஞ்சைத் தரணியின் திண்ணைக் காற்றின் பெரும் சுகத்தை அனுபவித்தவனாதலால் திண்ணைக் கச்சேரி என்று ஒன்றை ஆரம்பித்து பல தரப்பட்ட விஷயங்களை வம்பளக்கிறேன்.

ரொம்ப நாட்களாக கவிதையை விட்டுவைத்த நான் திரும்பவும் பித்துப் பிடித்து ஆக்ரோஷமாக எழுதியது ஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை. மஹாபாரத கேரக்டர்கள் பற்றி கதைகள் எழுதலாம் என்று எண்ணியதில் விளைந்தவை யார் அந்த யோஜனகந்தி? மற்றும் பாகுகன்?.  காலை நேர நடைப்பயிற்சியின் போது பைரவர்களுடன் நட்பு பாராட்டிய பழக்கத்தில் எழுதியது நாய்கள் ஜாக்கிரதை!.

ஜி போட்டு எழுதினால் தனக்கு சம்மதமில்லை என்ற அப்பாஜிக்கு எதிராக மோகன்ஜி என்னை ஏவிவிட்டு முடிந்தவரை ஜகாரம் வைத்து எழுதச்  சொன்ன சிறுகதை ஜாலிலோ ஜிம்கானா. ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் பல மேலாண்மைப் பாடங்கள் எடுக்க வல்லது. ரஜினி - தி மானேஜ்மென்ட் குரு பதிவு அதன் விளைவே! கால் கடுக்க ஒரு ரிஷப்ஷனில் நின்றதால் ஒரு பதிவு, புதிய கார் வாங்கப் போகிறேன் என்று ஒன்று, சேப்பாயியாக வாங்கியபின் ஒன்று என்று கிறுக்கியிருக்கிறேன்.

அறிவியல் புனைவுக் கதைகள் எனக்கு மிகவும் விருப்பம். வாத்தியார் பேனாவால் புகட்டியது. சிலிகான் காதலி என்று ஒன்று ஒரு சிறு அறிபுனைவுத் தொடர் எழுதினேன். கிராமத்து தேவதை மற்றும் ஃபைனான்ஸ் கம்பெனி மாப்பிள்ளை என்று இரு காதல் குறுந் தொடர்கள் அப்புறம் ஒரு துணை நடிகையின் கதை என்ற க்ரைம் தொடர் என்று பல கதைகள் எழுதி பாடாய்ப்படுத்தினேன். ஆண்டவன் இப்பதிவுலகைக் காக்கட்டும்.

உப்புமா பற்றி எழுதிய துரித உணவுகளின் தலைவன் லேட்டஸ்ட் ஹிட். யாக்கை திரி  என்ற அறிபுனை கதைக் கூட பரவாயில்லை என்று பேசிக்கொண்டார்கள்.

என்னுடைய ஸ்கோர் போர்டு:

பார்வையாளர்கள்: 110650 + நாளையிலிருந்து வரப் போகிறவர்கள்
மொத்த பதிவுகள் : 364
பின்தொடர்பவர்கள்: 170
மொத்த பின்னூட்டங்கள்:  8000 + இனிமேல் வரப்போகும் அர்ச்சனைகள்

வால்மீகி ராமாயணத்தை விட ஆர்.வி.எஸ்ஸாயணம் பெரிதினும் பெரிது என்பதால் இத்தோடு எண்டு கார்டு போட்டுவிட்டேன். தப்பித்தீர்கள். ஆயுஷ்மான் பவ! நாளை முதல் நீங்கள் அறிமுகத்தில் விழிக்கப் போகிறீர்கள். நன்றி!

பட உதவி: http://www.saturdayeveningpost.com. நார்மன் ராக்வெல்லின் triple self portrait மிகவும் பிரசித்தி பெற்ற ஓவியம். என்னை நானே ஓவர் டோஸாக விளம்பரப்படுத்திக் கொன்றதால் ச்சே.. கொண்டதால் இது இந்தப் பதிவில்.

-

51 comments:

  1. வாழ்த்துக்கள் வாத்யாரே . கலக்கு நீ

    ReplyDelete
  2. சுய அறிமுகம் ஜோர். ஆரம்பிங்க உங்கள் கச்சேரியை...!!

    ReplyDelete
  3. அன்பின் ஆர் வி எஸ் - இவ்வளவு சுயம் இருக்குன்னு தெரியாமப் போச்சு - கலக்கறீங்க - ஆமா முக்காவாசி - மெனக்கெட்டுச் செய்து அம்சமா பொருத்தப்பட்ட வாயினாலே பேசிட்டு - கா வாசி திட்ட, குடிக்க, ஊத, உறிஞ்ச , முத்தமிடப் பயன்ப்டுத்துறீங்களோ ! நகைச்சுவை பின்னுறீங்க போங்க - பத்திரிகை உலகங்கிறதுனாலே புள்ளி விவரங்கள் - படத்தினைப் பற்றிய தகவல்னு முன் ஜாக்கிரத முத்தண்ணாவா இருக்கீங்க. நல்லதொரு ஆரம்பம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் ஆர்வி எஸ் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. வலைச்சர ஆசிரியராக உயர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் :) உங்களிடம் இருக்கும் நகைச்சுவை நடை அபாரமானது ..ஒரு வாரம் ஒரே அமர்க்களம் தான் :)

    ReplyDelete
  6. எனது பள்ளி நண்பன் ஆர்.வி.எஸ் அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும்.

    சவால் சிறுகதைப் போட்டியில் பரிசு வாங்கிய பதிவை மறந்து விட்டீர்களா ?
    சுட்ட வில்லைய... அந்த சுட்டி சுடப் பட்டு விட்டதோ ?

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் RVS. கலக்குங்கள்

    ReplyDelete
  8. ஆரம்பமே அசத்தலா இருக்கு ... சுயமே சுதந்திர எழுத்தா இருக்கு .... வலைச்சரத்தில் முத்துக்களை கோருங்கள் ...வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  9. இந்தவாரம் கலக்கப்போகும் ஆசிரியருக்கு வாழ்த்துகள் :-)

    ReplyDelete
  10. அமர்க்களமான கலக்கலான ஆரம்பத்திற்கு பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. வணக்கம்
    வந்தனம்
    வரணும்
    வழக்கம்போல்
    கலக்கணும்

    ReplyDelete
  12. அமர்க்களமான ஆரம்பம். கலக்குங்க புது ஆசிரியரே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அந்த யானைப் பட்டாளம் பின்னூட்டங்களுடன் தங்கள் த்ளத்தைவிட்டு தப்பிவந்து வாசகர்கள் மனதில் கொட்டமடித்துக் கொண்டிருக்கின்றனவே..

    ReplyDelete
  14. @எல் கே
    நன்றி தலீவா! ;-))

    ReplyDelete
  15. @ஸ்ரீராம்.
    கச்சேரி ஆரம்பிச்சாச்சு... (நல்லவேளை கூத்தை ஆரம்பியுங்க சொல்லலை.. ;-)) ;-))))

    ReplyDelete
  16. @cheena (சீனா) said...
    பிகில் ஊதுவேன்...
    பச்சத்தண்ணி குடிப்பேன்...

    லிஸ்ட இதுக்கு மேல இப்ப அப்டேட் பண்ண முடியலை.. அப்பாலிக்கா பண்றேன்...
    நன்றி சார்! ;-))

    ReplyDelete
  17. @HVL
    நன்றிங்க.. ;-))

    ReplyDelete
  18. @dr suneel krishnan
    டாக்டரே! கிளினிக்கில் பிசியா... நம்ம பக்கம் ரொம்ப நாளா ஆளையே காணோமே!
    பாராட்டுக்கு நன்றி. ;-))

    ReplyDelete
  19. @Madhavan Srinivasagopalan
    நண்பா நன்றி.. ;-)

    எனது வலைப்பூவில் பிள்ளையார் சுழி போல பரிசு வாங்கியதை போட்டுவைத்திருக்கிறேன். வருவோர்போவோருக்கு தெரியும். பரிசு வாங்கியதை சொல்ல கூச்சமாக இருந்தது.. வேறொன்னும் இல்லை.. ;-))

    ReplyDelete
  20. @மோகன் குமார்
    நன்றி நீடா. மோகன். ;-)))
    அன்புடன் மன்னை ஆர்.வி.எஸ்.

    ReplyDelete
  21. @பத்மநாபன்
    நன்றி பின்னூட்டங்களின் பெருமையே!!
    முடிந்த வரை சுவாரஸ்யமாக கோர்க்க முயலுகிறேன். இருந்தாலும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. நமது வேலை ஆணிக்கு வலைச்சரத்தைப் பற்றி தெரியுமா? முயலுகிறேன். நன்றி. ;-))

    ReplyDelete
  22. @அமைதிச்சாரல்
    நன்றிங்க சகோ. ;-))

    ReplyDelete
  23. @இராஜராஜேஸ்வரி
    இதெல்லாம் சொல்லுங்க.. நான் அறிமுகப் படுத்தறதுக்கு ஒருத்தரை விடாம எல்லாரையும் நீங்களே படுத்திட்டுப் போய்ட்டீங்க.. எம்பாடு திண்டாட்டமா இருக்கு..
    ;-)))))))))))
    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க மேடம்.. ;-))))

    ReplyDelete
  24. @A.R.ராஜகோபாலன்
    நன்றிகள் கோடி நண்பா! ;-))

    ReplyDelete
  25. @Lakshmi
    நன்றிங்க மேடம்! ;-))

    ReplyDelete
  26. தன்னடக்க சுய அறிமுகம் அழகு

    ReplyDelete
  27. @கவி அழகன்
    தன்னடக்கத்துடன் நன்றிங்க.. ;-))))

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள் RVS. கலக்குங்கள்.

    ReplyDelete
  29. சுய அறிமுகம், வர்ணனை எல்லாம் அசத்தல். எனினும், அந்தப் படமும், படம் சார்ந்த விபரமும்தான் இந்தப் பதிவுக்கே ஜொலிப்பு - சேலைக்குப் பல்லூ போல!! ;-)))))

    தொடர்ந்து பல்லூ வச்ச சேலையா.. ச்சே.. பலே பதிவுகளா அறிமுகப்படுத்தி கலக்க வாழ்த்துகள்!! :-)))))))

    ReplyDelete
  30. முன்னுரையே அருமை. பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள். கலக்குங்க!

    ReplyDelete
  31. valaichara asiriyaruku valthukkal

    ReplyDelete
  32. அந்தக் கால நாடகங்களில் ராஜபார்ட் அட்டகாசமாக எண்ட்ரி கொடுப்பார். அது மாதிரி ஆரம்பித்திருக்கிறீர்கள்.பல புதிய அறி முகங்களை எதிர் நோக்குகிறேன்!
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  33. சுய அறிமுகமே நெத்தியடி யா இருக்கே RVS சார். கலக்குங்க. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  34. இன்னும் கச்சேரிப் பதிவு,முன்னுரை முகவுரை பதிவு
    இப்பிடி லிஸ்ட்ல நிறைய விட்டுட்டீங்களே.

    சுயத்தை சொன்னாலும் சூப்பராதான் சொல்லிருக்கீங்க வாழ்த்துக்கள் ஆசிரியரே

    ***************

    நாற்காலில 'பின்' வைக்க கூடாதா? அப்பிடின்னா அரை ப்ளேடு,ஆணி இதெல்லாம் ஓக்கேவா?

    ReplyDelete
  35. அண்ணே வாங்க அண்ணே ... பிச்சு பெடல் எடுக்குறீங்க சுயமுகத்திலே யாராறு என்ன பாடு பட போறாங்களோ ... தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் தரிகிட தீம் ....

    ReplyDelete
  36. கலக்குங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. @சே.குமார்
    நன்றி குமார்! ;-)

    ReplyDelete
  38. @ஹுஸைனம்மா
    அம்மம்மா... நன்றிங்கம்மா... முடிந்தவரை முயற்சி பண்றேன்.. ;-)

    ReplyDelete
  39. @வை.கோபாலகிருஷ்ணன்
    கலக்குவதற்கு முயற்சி செய்கிறேன் சார்! ;-))

    ReplyDelete
  40. @புதுகைத் தென்றல்

    Thank you!! ;-)

    ReplyDelete
  41. @சென்னை பித்தன்
    சார் நான் கள்ளபார்ட்! பாராட்டுக்கு நன்றி. ;-))

    ReplyDelete
  42. @RAMVI
    நன்றிங்க மேடம்! ;-))

    ReplyDelete
  43. @raji
    என்னது அரைப்ளேடு, ஆணியா... ஏனிந்த கொலைவெறி? ;-))
    நன்றி ராஜி! ;-))

    ReplyDelete
  44. @தினேஷ்குமார்
    தம்பி... கடைசியில ஒரு மியூசிக் போட்டீங்க பாருங்க.. அது.... ரொம்ப சூப்பரு.. நன்றி.. ;-))

    ReplyDelete
  45. @r.v.saravanan
    நன்றிங்க சரவணன். ;-))

    ReplyDelete
  46. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  47. வாழ்த்துகள் வலைச்சர வாத்யாரே…

    மன்னை மைனரே… உங்க சீட்டில் ஆணி, பின் எல்லாம் போடல… வேணும்னா கொஞ்சம் பப்பிள் கம் போட்டுடறேன்… அந்த சீட்டில் ”பச்சக்” ஒட்டிக்கற மாதிரி… :)

    ReplyDelete
  48. @கோவை2தில்லி
    நன்றிங்க சகோ. ';-))

    ReplyDelete
  49. @வெங்கட் நாகராஜ்
    பச்சக்குன்னு ஒட்டிவிட்டுட்டீங்க தல.. ;-)))

    ReplyDelete
  50. அன்பு ஆர்.வீ.எஸ்! ஆரம்பமே களைகட்டிவிட்டது. இந்த வாரம் தீபாவளிதான்! கலக்குங்க... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. வணக்கம்.
    கலகலக்கட்டும் வாரம்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது