07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 12, 2011

கொக்கரக்கோ சௌம்யன் பொறுப்பேற்கிறார் - எச்சுமி என்ற லக்ஷ்மி விடை பெறுகிறார்

அன்பின் சக பதிவர்களே !


நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் வருகிறார் மயிலாடுதுறையைச் சார்ந்த சௌம்யன். இவர் கொக்கரக்கோ என்ற பதிவினில் எழுதி வருகிறார்.

இவர் அறிஞர் அண்ணா இயற்கை எய்திய 1969ம் ஆண்டு பிறந்ததால், அறிஞர் அண்ணா முதல் முதலில் எழுதிய கொக்கரக்கோ என்னும் சிறுகதைக்குப் பயன் படுத்திய புனைப்பெயரான சௌமியன் என்ற பெயரை இவருக்கு, இவரது பெற்றோர் இட்டனர். ஆனால் நட்பு வட்டம் இவரை சௌம்யன் என்றே அழைப்பதால் இவரும் சௌம்யன் என்ற பெயரையே இங்கு பயன் படுத்துகிறார். வேதியியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னையில் 18 மாதங்களும் அபுதாபியில் 42 மாதங்களும் பணியாற்றிய பின், தற்போது குறைந்த பட்சம் நூறு பேருக்காவது வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற வேட்கையில், ரமணாஸ் ஃபுட் புராடக்ட்ஸ் என்ற பெயரில், உணவுப்பொருட்கள் உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துதலை 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இல்லற வாழ்க்கை மனைவி மற்றும் மகனோடு இனிதே செல்கிறது.

நண்பர் சௌம்யனை வருக வருக - பொறுப்பினை இனிதே நிறைவேற்றுக என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற மும்பையைச் சார்ந்த சகோதரி லட்சுமி - தான் ஏற்ற பொறுப்பினை - கடும் உழைப்பினால், மன மகிழ்வுடன் நிறைவேற்றி, மன் நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பே இல்லாமல் பட்டறவினாலேயே பாடம் படித்தவர். அக்கால வழக்கப்படி, சிறு வயதிலேயே மணமுடித்தவர். மணமானவுடனேயே மும்பை சென்று, ஐம்பது ஆண்டுகளாக அங்கேயே வாழ்பவர். வட இந்திய மொழிகளில் சரளமாகப் பேச, எழுதக் கற்றவர். அறுபத்து நான்கு வயதிலும், இறையருளினால், ஆனந்தமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இவர் பதினோரு இடுகைகள் இட்டு, பல பதிவர்களையும், இடுகைகளையும் அறிமுகப்படுத்தி, ஏறத்தாழ முன்னூற்று ஐம்பது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகம் செய்ய இவரது அயராத உழைப்பு பெரிதும் உதவி இருக்கிறது.

அருமைச் சகோதரி லக்ஷ்மியினை, நன்றி கலந்த வாழ்த்துகளுடன், ஆசிரியப் பொறுப்பிலிருந்து விடுவிப்பதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் லக்ஷ்மி
நல்வாழ்த்துகள் சௌம்யன்

நட்புடன் சீனா

8 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வருக சௌமியன், நன்றி லட்சுமி அம்மா.

    ReplyDelete
  3. லக்ஷ்மி அவர்களுக்கு நன்றியும், செளம்யன் அவர்களுக்கு வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  4. நல்வரவு திரு சௌம்யன்.

    ReplyDelete
  5. சிறப்பான பணியினை செய்வெனச் செய்த லக்ஷ்மி அம்மாளுக்கு பாராட்டுக்களும்..
    தொடரப் போகும் நண்பர் சௌம்யனுக்கு வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  6. சிறப்பான பணிக்கு லக்ஷ்மி அம்மாவுக்கு பாராட்டுக்கள்.
    புது ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. லக்சுமி மேடம்.உங்க கடமைக்கு மிக்க நன்றி.

    செளம்யன் - All the best

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது