07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 7, 2011

வலைச்சரம் செவ்வாய் - லேடீஸ் ஸ்பெஷல்!!

மகளிர்மட்டும். வெரும் 33% மட்டுமில்லே. 25/25 பெண்களுக்குத்தான்.






1.அமைதிச்சாரல்:  அமைதிச்சாரல் என்னும் வலைப்பூவுக்கு ஓனர்.டிட்வாலா பிள்ளையார் பற்றி ஆன்மீகம் சொல்கிறார். பச்சைப்பயிரு சப்பாத்தியென்று ரெசிப்பியும் சொல்கிறார். வீட்டுத்தோட்டமும் போடச் சொல்லித் தருகிறார். ஏக் காவ் மெ எக் கிசான் ரகு தாத்தா என்று நகைச்சுவையிலும்  கலக்குகிறார். பல்சுவைக் கலைஞர் இவர் பதிவில்  எனக்குப் பிடித்தது பவளமல்லி.
 2.அப்பாவி தங்கமணி, அப்பாவிதங்கமணி எனும் வலைப்பூ இவரோடது. பாடம் படிக்கும் நேரம் என்று சைலன்ஸ் என்கிறார். அலை பாயுதே என்று கவிதையும் சொல்கிறார், ரஸ்க் சாப்பிடறதே ரிஸ்க் என்கிறார். ஜில்லுனு ஒரு காதல் என்று மெகா சீரியல் கதை முடிவே தெரியாமல் ஓட்டிண்டு இருக்கார். தப்பும் தவறும் என்ற பதிவு நல்லா இருக்கு.
 3.உப்புமடச்சந்தி, ஹேமாவின் வலைப்பூ. தொலைந்து போவோமா தூர தேசத்தில் என்கிறார். உதவுவோம்  என்று மனிதம் பேசுகிறார். தான் வந்த பாதையைத்திரும்பியும் பார்க்கிறார். தாய்தேசத்தின் சார்பில் நன்றியும் சொல்கிறார். ததரினா தாத்தா பதிவு எனக்குப் பிடித்தது சுவிஸ் பதிவு.
4.எனது ரசனை, ரசிக்கும் சீமாட்டியின் வலைப்பூ. ஜஸ்ட் லைக் ஹெவன் என்று ஆங்கில படத்தை விமர்சிக்கிரார்.ஹலோ மக்களே என்று அழைப்பு விடுக்கிறார்.பெயர் அளவில் செல்லப்பிரானிகள் படும் பாடுகளை சொல்கிறார். வாசித்ததில் பிடித்தது எனக்கும் பிடித்தது.
5.இனிய இல்லம்,  வலைப்பூ சிநேகிதி அவர்களுடையது.சின்னச் சின்னக் குழந்தைகளுக்கு பயனுள்ள பொழுது போக்குகள் சொல்கிறார்.கண்கள் கூந்தல் பராமறிப்பு பற்றியும், மணக்க, மண்க்க சமையல் குறிப்புகளும் சொல்கிறார். ஷாகி துக்ளா நல்லா இருக்கு.
6.என்சமையல் அறையில், வலைப்பூ கீதா ஆச்சல் அவர்களுடையது. பெயருக்கு ஏற்றமாதிரியே வித,விதமான சமையல் குறிப்புகள் மணக்கிறது .ஏவினிங்க் வாக் பற்றியும் சொல்லி இருக்கார். plant exchange பற்றிய பதிவு நல்லா இருக்கு.
7.என்பக்கம்,
அதிராவின் வலைப்பூ. கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்று சின்னவயது ஞாபகங்கள் சொல்கிறார். இவருக்கு பூனைன்ன ரொம்ப இஷ்டம் போல எல்லா பதிவிலும் ஒரு பூனைப் படமாவது இடம் பிடித்து விடுகிறது. பூஸ் ஆர் டி ஐயோ என்று ரேடியோ வுக்கு ச்பெல்லிங்க் சொல்லி அதிர வைக்கிறார். நான் இருக்கிரேன் என்கி அருமையிலும் அருமையான கண்ணதாசன் படைப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்,.
8.எல்லா புகழும் இறைவனுக்கே 
வலைப்பூவுக்கு ஓனர் ஸாதிகா. இனிமை நிறைந்த உலகம்  இருக்கு என்கிறார். லைஃப் டைம் ஹேப்பி டூர் பற்றியும் சொல்கிறார். செயற்கை தோட்டமும் சொல்லித் தருகிறார். அவரது முதல் கட்டுரை பற்றியும் சொல்கிறார். ஆவின் பால் பற்றியும் ஒரு பதிவு போட்டிருக்கார். அது நல்லா இருக்கு.
9.கனவுகளின்( அழகான) சுமைகள்., 
தர்ஷினியின் வலைப்பூ. முதல் முயற்சி பற்றி சொல்கிறார். கல்லூரிக் கனவும் சொல்கிறார். குட்டிசுவர் என்னும் தலைப்பில் ஒருபதிவும் இருக்கு. பெங்களூர் மலர் கண்காட்சி பற்றியும் சொல்கிறார். அந்தத்தின் ஆதி பற்றி கதை வடிவில் சொல்லி இருப்பது நல்லா இருக்கு.
10.கற்றலும் கேட்டலும்   ராஜி அவர்களின் வலைப்பூ. உணவே வா, உயிரே வா என்று தொடர்பதிவு எழுதுகிறார். மைத்ரீம் பஜதேன்னு காஞ்சி ஆச்சார்யாரினுடைய தத்துவங்கள் சொல்கிறார். உயிர் காத்த, உறவும் நட்பும் பற்றியும் சொல்கிறார்.. அலமேலுவின் அட்டகாசம்  சொல்லி சிரிக்க வைக்கிறார். திருக்குளந்தை என்று ஆன்மிகமும் சொல்கிறார்.  மாறாத நிமிடங்கள் என்று கவிதையும் சொல்கிறார். மைத்ரீம் பஜதே நல்லா இருக்கு.
11.கவிப்பக்கம் (new) 
விசிவாவின் வலைப்பூ. கவிசிவானதாவின் தனிமை, இனிமை, கொடுமை வாழ்வியல் போதனைகள் சொல்கிறார். புத்தியும் மனமும் பற்றி பேசுகிறார். முதல் முறை அழுகை- ஒரு எதிர்வினை பற்றியும் சொல்கிறார். இடுக் கண் வருங்கால் நகுக  என்கிறார். அடிக்கடி லீவு போட்டு விட்டு போய் விடுகிறார். புதுசு கண்ணா புதுசு நல்லா இருக்கு.
12.குட்டி சுவர்க்கம், 
ஆமினா-வின் வலைப்பூ. ரொம்ப நாட்களாக இவரைக் காணோம். தமிழ் நூலகம் பற்றி உபயோகமான பதிவு இருக்கு, அரபு நாடுகளில் வேலை வாய்ப்பு பற்றி சொல்கிறார். பூல் புலையா (bhool bulaiya) என்று சுற்றுலா பற்றி சொல்கிறார்.
          
உயிரே உனக்காக என்று கவிதை சொல்கிரார்.ஆத்தா கண்டு பிடிச்சுட்டேன் என்று ஜி. டாக் பற்றி சொல்கிரார். நல்லா இருக்கு.
13. கொஞ்ச்ம்வெட்டிப்பேச்சு  
சித்ராவின் வலைப்பூ. என் பெயர் சொல்லவா என்று தொடர் பதிவில் கேட்கிறார். அங்கிட்டு கலாசாரம், அங்கிட்டு அமரிக்கா என்கிறார்.  வசந்தகாலப்பறவைகள் பற்றியும் சொல்கிறார். அரசியல் பற்றியும் கொஞ்சமாகச்சொல்கிறார். பூசனிக்காய் ஆரோக்கியமும், புடலங்காய் அல்வாவும் என்று நகைச்சுவையும் சொல்கிறார். இது நல்லா இருக்கு.
14.கோவை 2 தில்லி,
கோவை 2 தில்லியின் வலைப்பூ. நிறைய மணக்க, மணக்க சமையல் குறிப்புகள், அவசரத்துக்குகைவைத்திய முறைகள் என்று சொல்லி இருக்கார். இப்ப டில்லி பூத்து குலுங்குதுன்னு சொல்றார். இது நல்லா இருக்கு.
16  சின்னு ரேஸ்ரி  
மாதேவியின் வலைப்பூ. இங்கும் நிறைய சமையல் குறிப்புகள் இருக்கு.சமையல் அறையில் ஜோக்ஸும் இருக்கு. கனவாகிப் போன பழங்கால அடுக்களைப் பாத்திரங்களையும் நினைவு கூறுகிறார்.  தேங்காய்த் துருவல் ரவா கிச்சடி   நல்லா இருக்கு.
17. திவ்யாம்மா,  
வலைப்பூ திவ்யாம்மாவுக்கு சொந்தமானது. பாரம்பர்ய முறைச் சமையல் பற்றி தெரிஞ்சுக்கனுமுன்னா, இவங்க கடலைப்பருப்பு வெல்ல போளி  பக்கம் வந்தா போதும். மணக்க, மணக்க, வாய்க்கு ருசியாக நல்ல குறிப்புகள் நிறையா கிடைக்கும். அதற்கு உண்டான பாத்திரத்தில் சமைத்தால் அதன் ருசியே தனி தான். .மிளகு குழம்பு நல்லா இருக்கு.
18. கோமு
வலைச்சரத்தின் ஓனர் கோமு. இவரின் வலைப்பூ சுற்றுலாவினால் நிரம்பி இருக்கு. மும்பை டு கோவா,  குக்ஜி&பேடா காட் வைஷ்னவி தேவி யாத்ரா பற்றி ஹிமாச்சல் பிரதேஷ் என்கிற தலைப்பில் அருமையான கட்டுரைகள் கொடுத்திருக்கார். ஆல்பம் இந்தியன் என்று இரண்டு சிறு கதைகளும் எழுதி இருக்கார். மெஹந்தி பார்ட்டி என்கிர தலைப்பில் ஒரு பதிவு மிகவும் நல்லா எழுதி இருக்கார்.
19..vanathy's, vanathi
யின் வலைப்பூ.  ஆச்சர்யங்களை தொடராகச் சொல்கிறார். மணக்க, மணக்க, ரெசிப்பியும் இருக்கு, பெண்ணெழுத்தையும் தொடர்பதிவாகச் சொல்கிறார். பூரணியின் முதல் ஓட்டு, சின்ன வாளியின் சாபம் என்று சிறுகதையும் சொல்கிறார். எம்ப்ராய்டரி, வாழ்த்து அட்டைகள் செய்கிறார்இரண்டு பெண்கள் நன்றாக இருக்கு.
20.
இந்திராவின் கிறுக்கல்கள் வலைப்பூவின் ஓனர் இந்திரா. அரிதாரக் கடவுள்கள் என்று சினிமா பேசுகிறார். மஞ்சள் நீராட்டு விழா என்னும் மடத்தனத்தைச் சாடுகிரார். பல்பு வாங்குவதே எனக்குப் பொழைப்பாப் போச்சு என்கிறார். அறிமுகப் பதிவர்களுக்கு சில டிப்சும் தரார். தேடிப் போய் வாங்கின பல்பு, கிளையுதிர் காலம் என்று கவிதையும் சொல்கிறார்.
21.முத்துச்சரம்
வலைப்பூவின் சொந்தக்காரர் ராமலஷ்மி.  விதை விருட்சமாகும். அன்னா ஹசாரேக்கு ஆதரவை தருவோம் என்கிறார். வடக்கு வாசல்இவள் புதியவள்கல்கி பத்திரிக்கைகளில் இவரின் படைப்புகள் வெளியாகி இருக்குன்றன. பக்,பக் புறாக்களும் கீச், கீச் மைனாக்களும் நல்லா இருக்கு.
22.வள்ளுவம்
வலைப்பூ goma வுடையது. திண்ணை பத்திரிக்கையில் எல்லாம் மாயான்னு கதையெல்லாம் எழுதி இருக்கார். கேட்டாலே சிலிர்க்கும் பாடலை ரசிக்கிறார். எது நிஜம் எது நிழல் என்ரு கேட்கிறார். இறைவன் ஏமா ந் ந் ந் ந் ந் தான் என்கிறார். இது நல்லா இருக்கு.
23.
ஹைக்கூ அதிர்வுகள் வலைப்பூவின் ஓனர் ஆனந்தி. இளையராஜா பற்றி சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறார். ஆண்களே உங்களுக்கான பதிவு என்கிறார். மக்கு, டுபுக்கு, ஆடிட்டர்கள் அரசுக்கு உடனடித் தேவை என்கிறார். இதுக்கு பேரு பக்தியா என்று கேட்கிறார். சொர்க்கம் போகணுமா மதுரைக்கு வரச் சொல்கிறார் இது நல்லா இருக்கு.
24. முத்துச்சிதறல் 
ம்னோ சாமினாதன் காய்கறிகள் வாங்குவதும் ஒரு கலை என்கிரார். பெயர்க் காரணம் தொடர் பதிவும் எழுதுகிறார். கற்பனையை விஞ்சும் நிகழ்கால உன்மைகள் சொல்கிறார். பிராயச்சித்தங்கள் நியாயங்கள் ஆவதில்லையாம். சேமியா பருப்பு உசிலும் இருக்கு. நம் உயிர் நம் கையில் நல்லா இருக்கு.
25.சமைத்து அசத்தலாம், 
ஆஸியா ஓமரின் வலைப்பூ, பெயருக்கேற்றார் போல் பூராவும் சமையல்தான். மணக்க, மணக்க ருசிகரமான ரெசிப்பிக்கள் நிறைய இருக்கு. அம்மா பிள்ளைனு ஒரு சிறு கதையும் எழுதி இருக்கார். குலாப்ஜாமுன்  ஈசி பீன்ஸ் பொரியல் நல்லாஇருக்கு.
மீண்டும்  நாளை சந்திப்போம். இப்போ விடை பெறுகிறேன்

51 comments:

  1. அட அடுத்து மகளிர் மட்டும்! :))))

    25 பதிவர்களில் சிலரை மட்டும் தெரியும். மற்றவர்களை சென்று பார்க்கிறேன்..

    தங்கமணியின் வலைப்பூவான கோவை2தில்லி-யையும் அறிமுகப்படுத்தியமைக்கு ஸ்பெஷல் நன்றி. :)

    ReplyDelete
  2. லேடீஸ் ஸ்பெஷல்

    அத்தனை அம்மணிகளுக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. 25 பேரை அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்......

    சில வலைப்பூக்கள் புதியவையாக தெரிகிறது....


    ஒரு அறிமுகத்திற்கும் அடுத்த அறிமுகத்திற்க்கு கொஞ்சம் இடைவெளி விட்டால் படிக்க வசதியாக இருக்கும்...

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள்
    அவற்றில் சிலபேர்
    நான் அறிந்த முகங்கள்
    இனி இவர்களும் அப்படியே
    நன்றி அறிமுகத்திற்கு

    ReplyDelete
  5. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    சின்னு ரேஸ்ரி அறிமுகத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வெங்கட் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. கவிதை வீதி சௌந்தர், நன்றிங்க.

    ReplyDelete
  8. ராஜ கோபாலன் வருகைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  9. அருமையான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஒரே பதிவில் 25 பேர் என்பது அதிகம்.. இதை பார்த்து மலைத்து போய் படிக்காமலே ஓடிடுவர் சிலர்.. அதே சமயம் உங்களது பதிவுகளில் ஆங்காங்கே பிரபல பதிவர்கள் பலர் தென்படுவதால் அப்படியே டெம்ப்ளேட் கமண்ட் மட்டும் போட்டுட்டு ஓடிட கூடும்.. பார்த்துகிடுங்கள்.. நன்றி..

    ReplyDelete
  11. சூப்பர் அறிமுகங்கள். என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி, ஆன்டி. நான் வேறு யாரோ லஷ்மி என்ற பெயரில் இருக்கிறாங்க போலன்னு நினைச்சுட்டு வந்தேன்.

    ReplyDelete
  12. லேடீஸ் ஸ்பெஷல் அறிமுகங்கள் அனைத்துமே அருமை. எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நல்ல அறிமுகம் செய்துள்ள லக்ஷ்மி அம்மா அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. லக்ஸ்மி அக்கா மிக்க மிக்க நன்றி. ஆயிரம் ஆயிரம் வலைப்பூக்கள் இருக்கும் இவ்வுலகில 25 இல ஒன்றாக என்னுடையதையும் பிடிச்சிருக்கு என அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    உண்மையில் நான் சும்மா சும்மா மனதில் தோன்றுவதை எழுதுவேன், அதனால, இதிலென்ன இருக்கு என நினைத்து எதிலும் இணைவதில்லை, ஆனா இப்படி அறிமுகப்படுத்தியிருப்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கு மியாவ்...மியாவ்....

    இது நீங்க புதிதாக ஆரம்பித்திருக்கும் வலைப்பூவோ?

    ReplyDelete
  14. நல்ல அறிமுகங்கள்... என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க

    ReplyDelete
  15. கூர்மதியான் உங்க யோசனையை
    கவனத்தில் கொள்கிரேன் நன்றி.

    ReplyDelete
  16. வானதி இங்க வந்ததும் இது நாந்தான்னு
    தெரிஞ்சுதா. நன்றி.

    ReplyDelete
  17. கோபால் சார் எல்லா இடதிலும் பின்னூட்டம்கொடுத்து என்னை உற்சாகப்படுத்தி வருகிரீர்கள். நன்றி.

    ReplyDelete
  18. லக்ஸ்மி அக்கா, கவனியுங்கோ.... 15ம் இலக்கத்தை மிஸ் பண்ணிட்டீங்க... 24 தான் இருக்கு, இலக்க ஒழுங்கை முடிந்தால் மாத்துங்கோ.

    ReplyDelete
  19. அதிரா, இது என் வலைப்பூ இல்லேம்மா
    ஒருவாரத்துக்கு இங்க ஆசிரியர் பொறுப்பு
    ஏத்துகிட்டிருக்கேன். நன்றி.

    ReplyDelete
  20. அப்பாவி தங்கமணி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  21. very nice. Today 100% ladies only ah.

    ReplyDelete
  22. லஷ்மி நன்றி .நீங்கள் தேர்ந்தெடுத்து வெளியிட்ட பதிவுகள் அனைத்தும் எனக்கும் பிடித்தவை.

    ReplyDelete
  23. நல்ல அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
  24. லேடீஸ் ஸ்பெஷல்!!" அசத்தல்....தெரியாத பல தோழியரை தெரிந்து கொண்டோம்...நன்றி அம்மா

    ReplyDelete
  25. லஷ்மிமா,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா?பகிர்வுக்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
    லஷ்மிமா,நான் எப்பவும் உங்களின் ரசிகை.வலைச்சரத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
    என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிமா.

    ReplyDelete
  26. என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  27. இவ்வளவு பெண்கள் எழுதுகிறோமா என்கிற அளவுக்கு சளைக்காத அறிமுகம் சபாஷ்.

    அநேகமாக என்னை அறிமுகம் செய்பவர்கள் குழந்தைநிலாவைத் தான் சொல்வார்கள்.ஒருசிலரோடு நீங்களும் உப்புமடச் சந்தியை எனக்கும் பிடித்த பதிவுகளோடு அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.
    நன்றி அம்மா !

    ReplyDelete
  28. பல பதிவர்கள் புதியவர்களாக இருக்கிறார்கள். பகிர்விற்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  29. மகிழ்ச்சியும் நன்றியும். அறிமுகமாகியிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. என்னை அறிமுகப் படுத்தியதற்கு நன்றிங்க. உங்களை பற்றி அவர் சொல்லி இருக்கார்.

    ReplyDelete
  31. அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி அம்மா.. அப்படி சொல்லலாம்ல??
    பதிவு எழுதி ஒன்றை வருஷத்துக்கு மேல ஆவுது... இனிமேல்ட்டு பதிவு எழுத முயற்சி பண்றேன்... இப்போதைக்கு பாலோ மீ ஆன் http://twitter.com/#!/swizram

    ReplyDelete
  32. ரேவா வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  33. ஆஸியா வருகைக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  34. திவ்யாமா(சௌம்யா) நன்றிம்மா.

    ReplyDelete
  35. ரசிக்கும் சீமாட்டி நன்றி.

    ReplyDelete
  36. என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிமா. மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. கோவை2தில்லி, வருகைக்கு நன்றி

    ReplyDelete
  38. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. இராஜராஜேஸ்வரி நன்றி.

    ReplyDelete
  40. அட, இத்தனைப் பெண்கள் நமக்கு முன்னோடியா இருக்கிறாங்களான்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு. பலருடைய அறிமுகம் இப்பதான் கிடைச்சிருக்கு. உங்கள் அரிய முயற்சிக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  41. வலைச்சரத்தில் அறிமுகம் செஞ்சதுக்கு ரொம்ப நன்றி லஷ்மிம்மா :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது