07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 9, 2007

படிக்கலாம் வாங்க - 3

காமெடியா எழுதறதுங்கறது ஒரு பெரிய கலை. அறுக்க முடியாதவன் கையிலே 58 அறுவாள் இருக்கற மாதிரி மொக்கை, கும்மி என பல இருந்தும் படிக்க வர எல்லோரையும் சிரிக்க வைக்கறது ரொம்ப கஷ்டம்.

இவர் எழுத்தை பார்த்துதான் நானெல்லாம் பிளாக் ஆரம்பிச்சேன்னா நம்புவீங்களா? சும்மா இவரு சுத்தி சுத்தி ஜொள்ளு விட்ட கதையை தங்கமணி, ரங்கமணி எல்லோரையும் வைத்துக் கொண்டே சொன்னதைப் பார்த்துதான் நம்ம நாதாரித்தனத்தையும் எழுதுவோமேன்னு ஆரம்பிச்சதுதான் சவுண்ட் பார்ட்டி.

இன்னைக்கு பிளாக்ல டெவில் ஷோ எல்லொரும் நடத்துனாலும், கான்செப்ட் ரெடி பண்ணி கவுண்டரை களத்துல இறக்குனது நம்ம வெட்டிப்பயல்தான். வெட்டி ஆல் ரவுண்டரா இருந்தாலும் அவர் காமெடியா எழுதி பின்னூட்டக் கயமை இல்லாம கமெண்ட் அள்ளினதுதான் அதிகம்.

அப்புறம் இவர் கோழியோட சேர்ந்து பெங்களூருல அடிச்ச லூட்டிக்கு கோழி மானம் இந்நேரம் கடல் கடந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ன்னு கோபால் பல்பொடி மாதிரி வித்துட்டு இருக்கும்.

எங்க அருண் இப்படி எல்லாம் எழுதுவான்னு நான் நினைச்சதே இல்லை. பாரதிராஜா, வைரமுத்து வை எல்லாம் எகிறி குதிச்சி ஓட வைக்கிற மாதிரி நண்பனை ஊருக்கு அனுப்பிருக்கான் பாருங்க...

அரண்டவன் கண்ணுக்கு இருந்ததெல்லாம் பேயின்னு அருண் சொல்லும் சின்சினாட்டி மாமா கதையையும் படிங்க...


நம்ம பிளாக் மாப்பிள்ள அம்பி பார்ட்டிக்கு போன கதை தெரியுமா? இங்க படிங்க... அதே மாப்பிள்ள, நம்ம பிளாக் மக்கள் கிஃப்ட் குடுத்த வாசிங் மெசின்னுக்கு என்ன பில்டப்? என்ன பில்டப்?

போஸ்டர் ஒட்டுவது எப்படி? ன்னு இவர் பதிவை முதல் தடவை படிக்கும் போதே நினைச்சேன் இவர் விவகாரமான ஆள இருப்பாரோன்னு? பாரதிக்கும் பாரத மாதவுக்கும் என்ன பிரச்சனை என தலைப்பைப் பார்த்து தெரித்து ஓடி விட்டேன். அபி அப்பாவும் தேசியம், திராவிடம்ன்னு கிளம்பிட்டாரான்னு மனசெல்லாம் ஒரே கவலை. என்னதான் ஆனாலும் படிக்காம விடரது இல்லைன்னு படிச்சு முடிச்சதுக்கப்புறம் தான் தெரிஞ்சது பேசாம ஒடியே இருக்கலாம்ன்னு, வயித்து வலி வந்துடுச்சுங்க :-)

இன்னமும் நிறைய பேரு நல்லா எழுதறாங்க... நேரம் இருந்தால் இன்னொரு காமெடி தொகுப்புடன் வருகிறேன்...

5 comments:

 1. //மொக்கை, கும்மி என பல இருந்தும் படிக்க வர எல்லோரையும் சிரிக்க வைக்கறது ரொம்ப கஷ்டம்//
  கண்டிப்பாங்க காமெடியா எழுதறது எல்லாருக்கும் வராத விசயம். அதேபோல ப்ளாக் எழுதறவங்க நிறைய பேரு வேலைல நிறைய பிரச்னைகளை சந்திச்சுட்டு வந்து ப்ளாக் படிக்கும்போது அதிலயும் மீண்டும் பிரச்னைகளை பத்தியே எழுதியிருந்தா படிக்கறவங்க நொந்து போயிடு வாங்க. இந்த வார வலைசரம் நல்லா தொகுத்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. மிக்க நன்றிங்க! மிக்க நன்றி!

  ReplyDelete
 3. லிப்ஸ்டிக் தீட்டிய வாயையும் (அபி அப்பா), அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி என்று மனைவியை பூஜித்த அம்பியையும் மறக்க முடியுமா என்ன?
  ஆனாலும் காமடியைப் படித்து சிரிப்பார்கள், ஆனால் அவை எல்லாம் இலக்கியம் என்றெல்லாம் கொண்டாட மாட்டார்கள் :-(

  ReplyDelete
 4. ஸ்ஸ்ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே! தமிழ்ல நன்றினு ரொம்ப சின்ன வார்த்தையா போச்சே!

  @usha madam, ஏதோ அக நானூறு, புற நானூறு வரிசையில முக்கூடல் பள்ளுவும் இலக்கியமா வந்ததே! (அத நான் மனப்பாடம் பண்ண முடியாம பிட்டு எல்லாம் வேற அடிச்சேன்.
  அத மாதிரி காமடியும் ஒரு வகை இலக்கியம் தான்! :-)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது