07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 27, 2007

ஒரு சோம்பேறியின் ஒரு வாரம் .........

இந்த வார வலைச்சரத்திற்கு ஆசிரியராக என்னை ஆக்கிய வலைச்சரப் பொறுப்பாளர்களுக்கு என் நன்றி.


மதுரை மல்லிகைச்சரத்திற்கு மக்களிடையே ஒரு தனிச்சிறப்பு உண்டு. மதுரை மல்லிகைப் பூவிற்கென்று தனிச்சிறப்பு உண்டோ என்னவோ, ஆனால் மதுரைப் பூக்காரர்கள் பூ கட்டும் வித்தைக்குத் தனி மரியாதை உண்டு என்றே நினைக்கிறேன். ஒன்றோடு ஒன்றாக, அடர்த்தியாக, நெருக்கமாகக் கட்டும் விதத்தில் அந்த மல்லிகைச் சரத்திற்கே ஒரு தனி அழகு வந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். மலர்ச்சரம் கட்டும் கரங்களும், அந்தக் கரங்களில் நளினமாக இழையூடும் நாருக்கும்தான் அந்தப் பெருமை.


இதுவரை வலைச்சரத்தின் ஆசிரியராக இருந்து சென்ற சிலர் தங்களை வலைச்சரத்தின் பூக்களைக் கட்டும் நார் என உருவகப்படுத்திக் கொண்டார்கள். நானோ மல்லிகைச் சரத்தின் அழகே அந்த நாரினால்தானே வருகிறது என்கிறேன். சிதறிக்கிடக்கும் மலர்களை முறைப்படுத்தி அழகூட்டும் நார் என்றால் அது எவ்வளவு சிறப்பிடம் பெருகிறது! ஆனால் இந்த வார வலைச்சரத்தின் ஆசியரியனாக இருக்க வாய்ப்பளிக்கப்பட்ட நான் அந்த நார் செய்யும் நல்ல வேலையை என் திருப்திக்குச் செய்ய முடியாமல் போய்விடும் என்று தெரிந்தே ஆரம்பிக்கிறேன். என்னைப் பற்றிச் சொல்லும்போது //ஒரே வார்த்தையில் சொல்லணும்னா முழுச்சோம்பேறி. 'நாளை' என்பதில் அப்படி ஒரு நம்பிக்கை// என்று சொன்னது மாதிரி கடைசி வரை வேற ஆணி புடுங்கிட்டு இருந்திட்டு, இப்போ கடைசி நேரத்தில என்ன பண்ணப் போறோமோன்னு பேய் முழி முழிச்சிக்கிட்டு இருக்கேன்.


நானும் பதிவுலகத்துக்கு வந்து ஆகிப் போச்சு ரெண்டே கால் வருஷத்துக்கு மேலேயே. எழுதி ஒண்ணும் சாதிக்கலைன்னாலும் நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. அதென்னமோ தெரியலை; இந்த பதிவர் சந்திப்பு அப்டின்னாலே மனசு கிடஞ்சு அடிச்சிக்கிது. கலந்துகிட்டா ஏதோ நம்ம வீட்டு கல்யாணக் கூட்டத்தில இருந்த மாதிரி ஒரு நிறைவு மனசெல்லாம் படர்ந்திருது. கடைசியா சென்னைப் பதிவர் பட்டறையில் கலந்து கிட்டப்போ ரொம்ப திருப்தியா இருந்துது. சந்திக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்ட காசியைப் பார்த்தது நடந்தது. கூட்டத்துக்குள்ள அங்கேயும் இங்கேயுமா நடந்திக்கிட்டு இருந்தது, அங்க இங்கன்னு தெரிஞ்ச முகங்கள், பெயரைமட்டும் தெரிந்து வைத்திருந்து முதல் முறையா பார்க்கும் முகங்கள், பார்த்த புகைப்படங்களில் இருந்து ஒவ்வொரு முகமும் எவ்வளவு வேறுபட்டு இருக்குன்னு ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்த முகங்கள் – ரொம்ப மகிழ்ச்சியான, நிறைவான தருணங்கள். இந்த உறவின் விந்தை புரியவில்லை. ஏதோ ஒரு ஈர்ப்பு. எப்படி? ஏன்? Feathers of the same flock என்ற நினைப்பில் வருகிற உறவா? Fraternity, comradery – இப்படி ஏதோ ஒன்று … !


அறுபதாண்டுகளில் இல்லாமல் இந்த 29 மாதங்களில் என்னுள் பல மாற்றங்கள், தெளிவுகள் நிறையவே ஏற்பட்டுள்ளன. அதற்காகவே தமிழ்ப் பதிவுகளுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒரு தனி மனிதனிடம் இப்படி மாற்றங்களை ஏற்படுத்தும் வலிவு இந்தத் தமிழ்ப் பதிவுகளுக்கு இருக்கிறதென்பதே வலையுலகத்தின் பெருமை. இந்த ஆளுமை விரிந்தால் எத்தனை மனங்களில் மாற்றங்கள் ஏற்படும்? என் அடிப்படைக் கருத்துக்கள் மாறாமல் இருக்கலாம்; ஆனால் பதிவுலகத்தில் இறங்கிய பிறகு நம் கருத்துக்கு ஒத்துவரும் பதிவுகளைப் படிக்கும்போது நம் கருத்துக்களிலேயே நமக்கு மேலும் ஒரு தெளிவு பிறக்கின்றது. ஒரு சிறு எடுத்துக்காட்டு: காஷ்மீர் பிரச்சனை பற்றி எனக்கென ஒரு கருத்து வைத்திருந்தேன். அதை சில சமயங்களில் வெளியிட்ட போது கிடைத்த எதிர்வினையால் நமது கருத்து தவறுதானோ, பெரும்பான்மை சொல்வதுதான் சரியோ என்ற நினைப்போடு இருந்தபோது தமிழ் சசியின் காஷ்மீர் பற்றிய கட்டுரைகள் புதிய விளக்கங்களை, விளங்கல்களைத் தந்தன. நாம் நினைத்ததும் சரியான கோணம்தான் என்று அந்தக் கட்டுரைகள் தெளிவித்தன.


நம் கருத்துக்களுக்கு எதிர்மறையான கருத்துக்கள் வரும்போது அவைகளை ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ இப்படி ஒரு பார்வை இருக்கிறது என்பது தெரிய வருகிறது. நம் கருத்துக்கு ஒத்துப் போகும் கருத்துக்களைப் படிக்கும்போதோ, இன்னும் கொஞ்சம் தெளிவும், மேலும் மேலும் விவரங்களும் கிடைக்கின்றன. எப்படிப் பார்த்தாலும் வாசிப்பில் லாபம்தான். ஒத்தக் கருத்துக்களால் நம் கருத்துக்கள் பலம் பெறுவதும், எதிர்க்கருத்துக்களாலும் நம் கருத்துக்கள் பலம் பெறுவதுமே நடக்கின்றன.

எதிர்க்கருத்து நம்மை மாற்றுவதும் அவ்வப்போது நிகழும் சாத்தியக்கூறும் கொஞ்சம் உண்டுதான். ஆனாலும் நாம் நமது கருத்துக்களில் மேலும் மேலும் வலுவடைவதே என்னப் பொறுத்தவரை நடந்துள்ளது. எதிர்க்கும் ஒரு கருத்துக்கு மேலும் மேலும் வளம் சேர்த்துள்ளேன். அதைப் போலவே என் கருத்துக்கு ஆதரவாகவும் புதிய புதிய பார்வைகள் கிடைத்துள்ளன. எப்படியோ, கருத்தாக்கங்களுக்கு நம் பதிவருலகம் மிகவும் துணைபுரிவதை மறுக்க முடியாது.


நமது கருத்துக்களுக்கு இத்தனை வலிவு இருப்பதால்தான் நாம் எழுதும் எழுத்துக்களை அனாதைகளாக விட்டு விடாமல் அவைகளுக்கு ஒரு ‘இனிஷியல்’ போடவேண்டுமென்னும் கருத்தில் நான் முதலில் இருந்தே உறுதியாக உள்ளேன் – பலரும் எதிர்க்கருத்துக்கள் கொண்டிருந்தாலும்.


பதிவுலகத்தில் நான் பயணித்துள்ள தூரத்தையும், அதைப் பற்றிய என் கருத்துக்களையும் இவ்வார வலைச்சர ஆசிரியராக உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

இனியும் வருவேன் …

15 comments:

 1. முன்னோட்டம் அருமை !

  ReplyDelete
 2. முதன்முறையாக வலைச்சரத்தில் இந்த வாரம் ஒரு இளைஞர் ஆசிரியராக இருப்பது குறித்து மகிழ்ச்சி!

  ReplyDelete
 3. வருக வருக பேராசிரியரே.... சிறப்பானதொரு வாரமாக இருக்கும் என்பதை முன்னறிவிக்கிறது இந்தப் பதிவு

  ReplyDelete
 4. உங்களின் வலைச்சர தொகுப்பாசிரியர் வாரம் சிறப்பாக அமையட்டும்.

  ReplyDelete
 5. ஆஹா............ பேராசிரியர் வந்துருக்காரு. வாங்க வாங்க.

  மதுரை மல்லி ஏன் நெருக்கமா இருக்குன்னா.......? அங்கே பூக்களை எண்ணிக்கையிலே விக்கறாங்க.
  100, 200ன்னு வாங்கிக்கறோம். ஆனா பட்டணத்துலே? முழக்கணக்குன்னாதான் மீட்டருக்குப் பத்துப்பூவு:-)))))


  மண்டபத்துலே யார் சொல்றதையும் கேக்காதீங்க தருமி. இது உங்க க்ரவுண்டு. அடிச்சு ஆடுங்க.
  வாழ்த்து(க்)கள். (முதல் இண்டர் நேஷனல் மாநாட்டை மறந்துருக்க மாட்டீங்கதானே? )

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் தருமி ஐயா..:) வரவேற்கின்றோம் :)

  ReplyDelete
 7. மதுரையின் உறுதியான நாரில் நெருக்கமான மல்லிகை மாலையை எதிர்நோக்கி வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 8. டெல்ஃபின்,
  அப்டின்றீங்க... ரொம்ப தப்பு இல்லாம எழுதியிருக்கிறேன் அப்டின்றதை சொல்லியிருக்கீங்கன்னு நினக்கிறேன்.

  நன்றி

  கோவி.க.,
  மிக்க நன்றி

  ReplyDelete
 9. லக்கிலுக்,
  இப்படியா கால வார்ரது ?!!

  நம்ம எல்லாம் என்ன அப்படியா பழகியிருக்கோம்?  முத்துக்குமரன்,
  திடீர்னு ஆளே காணாம போய்ட்டீங்க .. என்ன ஆச்சு?

  கல்வெட்டு,
  மிக்க நன்றி.

  ReplyDelete
 10. துளசி,
  //(முதல் இண்டர் நேஷனல் மாநாட்டை மறந்துருக்க மாட்டீங்கதானே? ) //

  என்ன இப்படி கேட்டுட்டீங்க .. மெனுகார்டை வச்சி நீங்களும், கோபாலும் அடிச்ச ஜோக்கு, பூர்வ ஜன்மத் தொடர்புன்னு சொல்லுவாங்களே, அதுமாதிரி டக்குன்னு பழகுனது .. எல்லாம் மறக்க முடியுங்களா?

  மறுபடி எப்ப?

  ReplyDelete
 11. தூயா,
  மிக்க நன்றி.


  மஞ்சூர்ராஜா,
  'நார்' ரொம்ப நஞ்சுபோன நார் ... அதான் சொல்லியிருந்தேன்.

  நார் எப்படியிருந்தா என்ன, வலைச்சரம் தன்னிலே அழகுதான். கெடுக்காம நான் இருந்துட்டா சரிதான்.

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் தருமி ஐயா

  ReplyDelete
 13. வாங்க தருமி சார்! வந்து நல்ல பதிவா எடுத்து குடுங்க!

  ReplyDelete
 14. அருமையான முன்னோட்டம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. சார் நீங்க சோபேறியா?
  அப்ப என்னையெல்லாம் எதுல சேர்ப்பது?
  அனுபவம் மிக்க முதியவரான ;)[அய்யோ வலை அனுபவத்தில் முதிய என்று கொள்க] உங்க வாரம் நிச்சயம் சிறப்பாக அமையும்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது