07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, January 13, 2009

அக்காமார்கள்

சென்ற பதிவின் தொடர்ச்சி..

1) தெரிந்த பெண்பதிவர்களில் முக்கியமானவர் இவர். ஈழப் போராட்டத்தைப் பற்றி தவறாக பேசினால் இவர் ஜெட்லீயாக மாறிவிடுவார். இவரின் இந்தத் தொடர் பதிவைப் படித்த பின் இவர் மேல் மதிப்பு கூடியது. பழகுவதற்கு இனிமையானவர். அன்பாக பேசினால் தூயா.. இல்லையேல் போயா.

2) வலையெழுத தொடங்கிய புதிதில் தினம் திருக்குறளும் அதன் உரையும் Sidebarல் போட்டேன்.அதன் பின் ஏனோ நிறுத்தி விட்டேன்.இவர் இங்கே எல்லாக் குறளுக்கும் உரையுடன் பதிவிடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள்

3) இவங்க நியூஸீலாந்துக்காரங்க. இப்போ ஆஸ்டிரேலியா போய்ட்டாங்க. ஜே.கே.ஆர். மன்றத்துல முக்கிய பொறுப்புல இருக்காங்க.பல வருஷமா எழுதறாங்க. இவங்க எழுதியதிலே எனக்கு பிடிச்சது மெளயியின் சாகசங்கள்தாங்க. படிச்சுப் பாருங்க.

4) இவங்க ரொம்ப முக்கியமான‌வங்க. ரொம்ப நல்லவங்க. ரொம்ப அன்பானவங்க. ரொம்ப நல்லா எழுதறவங்க. தாமிராவிற்கு போட்டியாளர்.என்ன,இவங்ககிட்ட டீ மட்டும் கேட்டுடாதீங்க. தங்கமணியான இவர் ஹஸ்பெண்டாலஜி பதிவு மூலம் பிரபலமானவர்.

5) கடைசியா ஒருத்தர் இருக்காங்க. அவரைப் பற்றி நான் சொல்லிதான் தெரியனும் இல்ல. ஜே.கே.ஆர் மன்றத்து தலைவி ராப் தான். அவங்களுக்கு சுட்டிக் கொடுத்து ஒன்னும் ஆகப் போறதில்ல.அதனால் தலைவிக்கு நான் எழுதிய கவுஜையோட முடித்துக் கொள்கிறேன்

வீர தீர கலைவாணி

எங்க குல மகாராணி

கும்மிசங்க யுவராணி

கருத்து காமாட்சி ராப்

பராக் பராக் பராக்..

ஆள் கொஞ்ச நாளா எங்கே போனாங்கனு தெரியல. தகவல் தெரிந்தவர்கள் உடனே இங்கே தொடர்பு கொள்ளவும்.

12 comments:

 1. //வீர தீர கலைவாணிஎங்க குல மகாராணிகும்மிசங்க யுவராணிகருத்து காமாட்சி ராப்பராக் பராக் பராக்.. ஆள் கொஞ்ச நாளா எங்கே போனாங்கனு தெரியல. தகவல் தெரிந்தவர்கள் உடனே இங்கே தொடர்பு கொள்ளவும்.//

  விரைவில் தனது சுற்றுப்பயணம் வெற்றிகரமாய் முடித்து ரசிகர்களை தனது கவுஜையின் மூலம் அலறியடித்து ஓடவைக்கும் முடிவில் இருக்கிறார் என்று தற்போதைய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

  ரசிகர்கள் அதுவரையாவது மயக்கம் போட்டு விழாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது... :-))

  ReplyDelete
 2. இவங்ககிட்ட டீ மட்டும் கேட்டுடாதீங்க.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 3. \\வீர தீர கலைவாணி

  எங்க குல மகாராணி

  கும்மிசங்க யுவராணி

  கருத்து காமாட்சி ராப்

  பராக் பராக் பராக்..
  \\

  சூப்பர் கார்க்கி, ராப் இல்லாம பதிவுலகமே டல் ஆன மாதிரி ஒரு பீலிங்

  ReplyDelete
 4. \\கருத்து காமாட்சி \\

  இது ரைமிங்கா வரல்லியே

  வீர தீர வித்யாவாணி
  எங்க குல மகாராணி
  கும்மி சங்க யுவராணி
  கருத்து கலைவாணி ராப்

  இது எப்படி இருக்கு?

  ReplyDelete
 5. @சென்ஷி,

  நல்ல செய்தி சொன்னதுக்கு நன்றி தல..

  **********************

  // புதுகைத் தென்றல் said...
  இவங்ககிட்ட டீ மட்டும் கேட்டுடாதீங்க.//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  டீ நல்லாயிருக்குங்க.. ஆனா அளவுதான்...

  ***************************

  //முரளிகண்ணன் said...
  \\கருத்து காமாட்சி \\

  இது ரைமிங்கா வரல்லியே

  வீர தீர வித்யாவாணி
  எங்க குல மகாராணி
  கும்மி சங்க யுவராணி
  கருத்து கலைவாணி ராப்

  இது எப்படி இருக்கு?//

  நான் ரைமிங்காத்தான் முடிச்சேன் தல.. ராப் தான் அவங்களுக்கு கருத்து காமாட்சி பட்டம் வேனுமுன்னு சொன்னாங்க‌

  ReplyDelete
 6. இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 7. உங்களுக்கும் வாழ்த்துகள் திகழ்மிளிர்

  ReplyDelete
 8. ராப்பக்காதான் கொஞ்ச நாளா காணோம். தேடிக்கண்டுபிடிக்கறவங்களுக்கு ஜேகே ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில ஏதாவது பதவி குடுக்கலாமா :)

  ReplyDelete
 9. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் உங்க அன்ப பார்த்து எதை எழுதுறதுன்னே தெரியலை...

  ReplyDelete
 10. \\வீர தீர கலைவாணி

  எங்க குல மகாராணி

  கும்மிசங்க யுவராணி

  கருத்து காமாட்சி ராப்

  பராக் பராக் பராக்..
  \\

  வேற மாதிரி ட்ரை பண்ணுங்கண்ணா...
  ரொம்ப போர் அடிக்குது...
  இல்லன்னா கவிதை மன்னி கிட்ட கேளுங்க எழுதிதருவாங்க...

  ReplyDelete
 11. // Thooya said...
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் உங்க அன்ப பார்த்து எதை எழுதுறதுன்னே தெரியலை.//

  ஹிஹிஹி..உண்மைய எழுதுங்க‌

  *****************

  //வேற மாதிரி ட்ரை பண்ணுங்கண்ணா...
  ரொம்ப போர் அடிக்குது...
  இல்லன்னா கவிதை மன்னி கிட்ட கேளுங்க எழுதிதருவாங்க.//

  இன்னா நக்கலா? தெரிஞ்சத தானே எழுத முடியும்?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது