வலைச்சரத்தில் என் முதல்நாள் ஆசிரியப்பணி..
வலைச்சரத்தில் என் முதல்நாள் ஆசிரியப்பணி..
வலைச்சரத்தின் அடுத்த முத்தாய் என்னையும் கோர்த்து அடுத்த ஒரு வாரத்திற்கு சரம் தொடுக்க அழைத்துள்ள (அ) குண்டுக்கட்டாய் மிரட்டி அள்ளிக்கொண்டுவந்துள்ள ஐயா சீனா அவர்களுக்கு நன்றிகள் பல..
நான் பதிவுலகிற்கு வந்ததே வெகு சமீபத்தில்தாம்.. அண்மையில் தான் ஒரு நண்பர் என்னை இங்கு அறிமுகப்படுத்தியதாய் நியாபகம்.. என்னை அறிமுகப்படுத்திய அந்த அறிமுகப்படுத்தலின் நியாபகம் மறையும்முன், என்னையே இப்போது வலைச்சர ஆசிரியராக்கி என் மூலம் பல புதிய வலைப்பூக்களை அறிமுகப்படுத்த வாய்ப்பளித்து என்னையும் ரவுடியாக்கிய சீனா அவர்களுக்கு உண்மையிலேயே மனதிடம் கொண்ட பெரியமனசுதான்..
நான் பிற சக வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் முன், முதலில் என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்வது நல்லது என நினைக்கிறேன்.. இல்லையேல், ஒருவாரம் கழித்து, இவ்வளவுநாள் இங்க கத்திட்டு இருந்தியே யார்நீ'னு நம்மாளுங்க கேட்டாலும் கேட்டுடுவாங்க.. ஆகவே ஒரு சிறு சுய அறிமுகம்..
இந்த சுரேஷ்'னு பேருவெச்சிருந்தாவே எங்க போனாலும் கொழப்பம்தான்.. எங்க திரும்பினாலும் மூணு நாலு சுரேஷுங்க இருப்பாங்க..
இங்கேயும் நம்ம சீனா ஐயா எனக்கு முன்னாடியே ரெண்டு சுரேஷ கொண்டாந்துட்டார்.. இப்போ மூனாவதா நானும் இங்க.. எல்லாரும் யார் யார் எந்த சுரேஷுன்னு தெளிவா நியாபகம் வெச்சுகிட்டு கும்முங்க..
நான் சுரேஷ், கோயமுத்தூரில் இருந்து "எழுதுவது எல்லாம் எழுத்தல்ல.." என்ற பெயரில் எழுதிவருகிறேன்..
(அதிக்கப்படியான வேலைப்பளு மற்றும் புதியவேலை தேடும் அவசரத்தில் கடந்த மாதத்தில் சரியாக எழுதமுடியவில்லை..)
கதை, கவிதைகளில் வேக வைக்க பருப்பு ஏதும் இல்லாததால் இப்போதைக்கு சொந்த அனுபவங்களின்மூலம் கொண்ட கருத்துக்களை எழுதிவருகிறேன்..
சேற்றில் முளைத்த செந்தாமரையாய், எனக்குள்ளும் ஒரு கதைக்கரு விழுந்தது..
அதனை கதையாய் வடித்ததில், பலபேர் படித்து ரெண்டுநாள் சோறு தண்ணி இறங்காமல் விக்கித்து நின்றனர்..
அவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க கதையின் தலைப்பு..
கொலைகாரன் குடும்பத்தார் (part 1)..
(அதில்வரும் கதாபாத்திரங்களும் கதையுமே ஒருவாறு உல்டாலங்கடியாய் இருப்பதால், கதையின் கடேசியில் இன்வெஸ்டிகேசன் தொடரும் என்று இருப்பதின் பொருள், கதை அவ்ளோதான்.. அடுத்த பகுதி இல்லை என்று எதிர்மறை பொருள்கொள்ளலாம்.. ஆகவே கதையின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கவேண்டியதில்லை..)
என் இடுகைகளில் சிறந்தது என்று நான் எதையும் பிரித்து கூற முடியாது..
அதற்கான காரணங்களில் ஒன்று.. அவை நான் எழுதியவை..
ரெண்டாவது.. ஒவ்வொரு இடுகையயுமே எழுதும்போது ஏதோ அந்த மாதத்திற்காக நிரப்படும் இடுகையாய் எண்ணாமல், ஒவ்வொரு இடுகையயுமே நான் எழுதும் முதல் இடுகையாய் நினைத்து மிக யோசித்து பொறுமையாய் முழு ஈடுபாட்டுடன் எழுதுவது..
முக்கியமாய் இந்த இரண்டுகாரணங்களால் எனது அனைத்து இடுகைகளுமே ஏதாவது ஒரு விதத்திலேனும் எனக்கு பிடித்தமான ஒன்றுதான்..
எனதெழுத்துக்களை தாங்கியுள்ள என் வலைப்பூவைகாண "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல"க்கு வாருங்கள்..
நாளைமுதல், கொண்ட கடமையை சிறப்பாய்ஆற்ற கூடஇருந்து நல்லவிதமாய் வழிநடத்தி உதவுங்கள் நண்பர்களே..
நாளை சந்திப்போம்.. நன்றி..
|
|
முதல் நாள் வலைச்சரம் ஆசரியர் சுரேஷுக்கு எனது வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஆரம்பமே அசத்தல்தான் கலக்குங்க!!
ReplyDeleteகாதிதிருக்கின்றோம் உங்கள் அசத்தலை படிக்க :-)
all the best friend
ReplyDeleteவலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க.
ReplyDeleteதம்பி சுரேஷ்... முதல் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅடுத்து வரும் நாட்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.
வாழ்த்துக்கள்...
ReplyDeletemuthalnal valthukkal
ReplyDeleteசுரேஷ் அண்ணே!
ReplyDeleteகல்லக்குறிங்க!
வணக்கம் வாத்தியாரே...வாழ்த்துக்கள் அறிமுகம் அருமை..இதே நடையில் தொடரட்டும் இப்பணி.....
ReplyDeleteமுதல் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவலைச்சரம் ஆசரியர் சுரேஷுக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteநிறைய புதிய அறிமுகங்கள் கொடுங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸு
வலைச்சரம் ஆசரியர் சுரேஷுக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்!!
ReplyDelete//"எழுதுவது எல்லாம் எழுத்தல்ல.."//
ReplyDeleteஅப்போ வேற எதெல்லாம் எழுத்து?
//வலைச்சரத்தில் என் முதல்நாள் ஆசிரியப்பணி.."//
ReplyDeleteஆசிரியர்ன்னா..? குச்சி வச்சி மெரட்டுவீங்களா..?
//सुREஷ் कुMAர் //
ReplyDeleteபேரக் கூட ஒழுங்கா எழுத மாட்டீங்களா?
//
ReplyDeleteRAMYA said...
முதல் நாள் வலைச்சரம் ஆசரியர் சுரேஷுக்கு எனது வாழ்த்துக்கள்!!
//
முதல்ஆளாய் வந்து அன்போடு வாழ்த்தியமைக்கு ரொம்ப நன்றி அக்கா..
//வலைச்சர ஆசிரியராக்கி என் மூலம் பல புதிய வலைப்பூக்களை அறிமுகப்படுத்த வாய்ப்பளித்து என்னையும் ரவுடியாக்கிய சீனா அவர்களுக்கு உண்மையிலேயே மனதிடம் கொண்ட பெரியமனசுதான்..
ReplyDelete//
ஆமாம்!
//
ReplyDeleteRAMYA said...
ஆரம்பமே அசத்தல்தான் கலக்குங்க!!
காதிதிருக்கின்றோம் உங்கள் அசத்தலை படிக்க :-)
//
நானும் காத்திருக்கிறேன்.. உங்களின் தொடர் ஆதரவிற்காக..
வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க. கலக்குங்க கலக்கிகிட்டே இருங்க!
ReplyDelete//
ReplyDeleteRangs said...
all the best friend
//
நெம்ப நன்றி Rangs..
இப்பதான் பதில் சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க போல!
ReplyDelete//
ReplyDeleteகுடந்தை அன்புமணி said...
வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க.
//
வாழ்த்துக்களுக்கு நன்றி குடந்தை அன்புமணி..
உங்களின் ஆதரவு இருக்கும்வரை தாராளமாக கலக்கலாம்..
தொடர்ந்து அனைத்து இடுகைகளுக்கும் வந்து ஆதரவு தாருங்கள்..
//உங்களின் ஆதரவு இருக்கும்வரை தாராளமாக கலக்கலாம்..//
ReplyDeleteஅவருதே போதுமா!அப்ப ஓக்கே!
வாங்கப்பா போலாம்!
//
ReplyDeleteஇராகவன் நைஜிரியா said...
தம்பி சுரேஷ்... முதல் நாள் வாழ்த்துகள்.
அடுத்து வரும் நாட்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.
//
நன்றி இராகவன் அண்ணா..
உங்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய இயன்ற அளவு முயல்கிறேன்..
//
ReplyDeleteலோகு said...
வாழ்த்துக்கள்...
//
நன்றி லோகு..
//
ReplyDeleteபுதுகைத் தென்றல் said...
muthalnal valthukkal
//
வாழ்த்துக்களுக்கு நன்றி புதுகைத் தென்றல்..
தொடர்ந்து அனைத்து இடுகைகளுக்கும் வந்து உற்சாகமூட்டுங்கள்..
//
ReplyDeleteவால்பையன் said...
சுரேஷ் அண்ணே!
கல்லக்குறிங்க!
//
வருகைக்கு நன்றி வால்பையன்..
ஆமா.. அண்ணனுக்கு நான் எப்போ அண்ணன் ஆனேன்..
//
ReplyDeleteதமிழரசி said...
வணக்கம் வாத்தியாரே...வாழ்த்துக்கள் அறிமுகம் அருமை..இதே நடையில் தொடரட்டும் இப்பணி.....
//
வாங்க அரசி..
வாழ்த்துக்களுக்கு நன்றி..
தொடர்ந்து உட்ச்சாகமூட்டுங்கள்..
வாழ்த்துக்கள் தல அசத்துங்க..
ReplyDelete//
ReplyDeleteநட்புடன் ஜமால் said...
முதல் நாள் வாழ்த்துகள்.
//
நன்றி ஜமால் அண்ணா..
வாரம் முழுதும் உங்களின் ஆதரவினை எதிர்பார்க்கிறேன்..
மறவாமல் வாருங்கள்..
//
ReplyDeleteஇயற்கை said...
வலைச்சரம் ஆசரியர் சுரேஷுக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்
//
வாழ்த்துக்களுக்கு நன்றி இயற்கை..
எல்லா இடுகைகளுக்கும் வந்து கன்னாபின்னாவென ஆதரவு தந்து அசத்துவீர்களென நம்புகிறேன்..
சரிதானே..
//
ReplyDeleteபாலா said...
நிறைய புதிய அறிமுகங்கள் கொடுங்கள்
வாழ்த்துக்கள் பாஸு
//
கண்டிப்பாக இயன்ற அளவிற்கு புதிய அறிமுகங்கள் கொடுக்கிறேன் பாலா..
வாழ்த்துக்களுக்கு நன்றி.. தொடர்ந்து வாருங்கள்..
//
ReplyDeleteMrs.Menagasathia said...
வலைச்சரம் ஆசரியர் சுரேஷுக்கு முதல் நாள் வாழ்த்துக்கள்!!
//
நன்றி Mrs.Menagasathia..
தொடர்ந்து அனைத்து இடுகைகளுக்கும் ஆதரவு தருவீர்களென நம்புகிறேன்.. நிறைவேற்றுவீர்களா..
//
ReplyDeleteஇயற்கை said...
//"எழுதுவது எல்லாம் எழுத்தல்ல.."//
அப்போ வேற எதெல்லாம் எழுத்து?
//
எழுதுவது எல்லாம் எழுத்தல்ல..
ஆனால் அவைதான் எழுத்து..
என்ன மகளே..
தெளிவா புரிஞ்சுதா..
//
ReplyDeleteஇயற்கை said...
//வலைச்சரத்தில் என் முதல்நாள் ஆசிரியப்பணி.."//
ஆசிரியர்ன்னா..? குச்சி வச்சி மெரட்டுவீங்களா..?
//
மகளே..
உங்கள மெரட்ட குச்சிஎல்லாம் தேவையா என்ன..
ஒரு சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி போதும்ல..
அதுவும் உங்க பர்ஸ்லையே வெச்சிருப்பிங்களே..
//
ReplyDeleteஇயற்கை said...
//सुREஷ் कुMAர் //
பேரக் கூட ஒழுங்கா எழுத மாட்டீங்களா?
//
இங்கன பல சுரேஷுங்க சுத்திட்டு இருக்காய்ங்க.. அவங்ககூட நம்மளையும்போட்டு குழப்பிக்ககூடாதுல.. அதான் இப்டி..
//
ReplyDeleteநாமக்கல் சிபி said...
//வலைச்சர ஆசிரியராக்கி என் மூலம் பல புதிய வலைப்பூக்களை அறிமுகப்படுத்த வாய்ப்பளித்து என்னையும் ரவுடியாக்கிய சீனா அவர்களுக்கு உண்மையிலேயே மனதிடம் கொண்ட பெரியமனசுதான்..
//
ஆமாம்!
//
வரும்போதே வில்லங்கத்தோடதான் வர்றதா..
//
ReplyDeleteநாமக்கல் சிபி said...
வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்க. கலக்குங்க கலக்கிகிட்டே இருங்க!
//
வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா..
கண்டிப்பாக உங்களின் ஆசியோடும் கலக்குறேன்.. கலக்குறேன்.. கலக்கிகிட்டே இருக்கேன்..
ஆனா.. ஒருவார காலத்திற்கு மட்டும்தான் இங்க கலக்க அனுமதி..
//
ReplyDeleteநாமக்கல் சிபி said...
இப்பதான் பதில் சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க போல!
//
முதலிலேயே நான் பதில் சொல்லுவேன்னு நீங்க எதிர்பார்ப்பிங்கனு நான் எதிர்பார்க்கலை..
//
ReplyDeleteகாதலுக்கு மரியாதை சிவகுமார் said...
//உங்களின் ஆதரவு இருக்கும்வரை தாராளமாக கலக்கலாம்..//
அவருதே போதுமா!அப்ப ஓக்கே!
வாங்கப்பா போலாம்!
//
அவரின் ஆதரவு மட்டும்னு சொல்லலியே காதலுக்கு மரியாதை சிவகுமார்..
//
ReplyDeleteசூரியன் said...
வாழ்த்துக்கள் தல அசத்துங்க..
//
வாழ்த்துக்களுக்கு நன்றி சூரியன்..
ஜமாய்ச்சிடலாம் விடுங்க.. ஆனா, தொடர்ந்து வாருங்கள்..
அன்பின் சுரேஷ்
ReplyDeleteநல்லா எழுதி இருக்கே - மொத இடுகைய - இப்படியே கண்டினீயு பண்ணு - பல அருமையான இடுகைகளை அறிமுகப் படுத்து ஆமாம்
நல்வாழ்த்துகள்
தம்பி சுரேசு - விதி முறைகளைப் படிக்கலையா - லேபிள் போடணுமே - போடு ஆமா
ReplyDelete//
ReplyDeletecheena (சீனா) said...
அன்பின் சுரேஷ்
நல்லா எழுதி இருக்கே - மொத இடுகைய - இப்படியே கண்டினீயு பண்ணு - பல அருமையான இடுகைகளை அறிமுகப் படுத்து ஆமாம்
நல்வாழ்த்துகள்
//
வாழ்த்துக்களுக்கு நன்றி சீனா..
சொல்லிபோட்டிங்கள்லோ.. பாருங்க.. முடிஞ்சவரைக்கும் சிறப்பா பண்றனுங்..
//
ReplyDeletecheena (சீனா) said...
தம்பி சுரேசு - விதி முறைகளைப் படிக்கலையா - லேபிள் போடணுமே - போடு ஆமா
//
விதிமுறைகளிலேயே லேபில் போடணும்னு இருக்கா..
நமக்கு எப்போமே இந்த விதிமுறைகள் படிச்சு பழக்கமே இல்லைங்க.. சரி இப்போ போட்டுடுறேன்..
வாத்யாரே வணக்கமுங்...வாழ்த்துக்கள்ங்...கலக்குங்....
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேஷ்
ReplyDelete/
ReplyDeleteஎழுதுவது எல்லாம் """"எழுத்தல்ல.."""""
/
அப்புறம்? ?
:)))))
வாத்யாரே, எங்க காணாம போயிட்டிங்க?
ReplyDelete//
ReplyDeleteமங்களூர் சிவா said...
/
எழுதுவது எல்லாம் """"எழுத்தல்ல.."""""
/
அப்புறம்? ?
:)))))
//
அது எழுதுபவர்களை பொறுத்தது..
//
ReplyDeleteகார்க்கி said...
வாத்யாரே, எங்க காணாம போயிட்டிங்க?
//
ஆபீஸ்ல அரியர் இருந்தது.. கிளியர் பண்ண போயிருந்தேன்..
கொஞ்சம் வேலை அதிகம் அதான்..
இன்னும் சற்று நேரத்தில் வந்திடுறேன்..
வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேஷ்.
ReplyDeleteநல்லா எழுதுங்க. படிக்க நாங்களாச்சு. :)
//
ReplyDeleteT.V.Radhakrishnan said...
வாழ்த்துகள்.
//
வாழ்த்துக்களுக்கு நன்றி T.V.Radhakrishnan..
தொடர்ந்து வாருங்கள்..
//
ReplyDeleteMãstän said...
வாழ்த்துக்கள் சுரேஷ்.
நல்லா எழுதுங்க. படிக்க நாங்களாச்சு. :)
//
சூப்பர்..
இப்டி ஒரு ஆள் கெடச்சா போதும்ல..
தகிரியமா எழுதுவோம்ல..
கண்டிப்பா எழுதுறேன்.. வந்து படிச்சு கருத்து சொல்லுங்க..
நன்றி Mãstän..