07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, September 11, 2009

வலைச்சரத்தில் என் ஐந்தாம்நாள் ஆசிரியப்பணி..

ஐந்தாம்நாள் வணக்கங்கள் நண்பர்களே..

நான்குநாட்கள் வெற்றிகரமாய் உற்சாகமாய் எழுத ஆதரவுதந்து ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைதெறிவித்துகொண்டு ஐந்தாம்நாள் பணியை இனிதே தொடங்குகிறேன்..

இதுக்கு அப்புறம் என்னத்த எழுதினாலும் டெம்ப்ளேட் பின்னூட்டங்கள்தான் வருமென நினைக்கிறேன்..

அதுக்காக இப்டி சிக்கல்ல சிக்கவெச்ச சீனாவ நொந்துகிட்டு எழுதாம இருக்கமுடியுமா..

வழக்கம்போல இன்னைக்கும் எழுதிவெக்கிறேன்..
ஆனா நீங்க வழக்கத்துக்குமாறாக நல்லபுள்ளைங்களா இடுகைய முழுசா படிச்சுட்டு கருத்துசொல்லுங்க..

நேத்தாவது ஃபாலோவர் விட்ஜெட் இல்லாத வலைப்பூக்கள் 33.33 சதவிகிதம்..

இன்னைக்கு அறிமுகப்படுத்தப்போகும் வலைப்பூக்களில் 83.33 சதவிகிதம் வலைப்பூக்கள் ஃபாலோவர் விட்ஜெட் இல்லாத வலைப்பூக்களாக உள்ளன..

ஒரே ஒரு வலைப்பூ மட்டும் விதிவிலக்காக ஃபாலோவர் விட்ஜெட் கொண்டுள்ளது..இன்றைய படையலை குட்டிக்கதைகள் சொல்லும் வலைப்பூவுடன் தொடங்கலாம்..

இவர் தனது வலைப்பூவினை குட்டிகுட்டி கதைகள் சொல்வதற்காகவே கொண்டுள்ளார் போலும்..

இதற்காகவே வலைப்பூவிற்கு குட்டி கதைகள் என்று பெயரிட்டுள்ளார்..

இவரின் வலைப்பூ முகவரி http://tamil-kutti-kathaikal.blogspot.com/

இதுவரை இவரின் வலைப்பூவில் இடுகைகள் ஏதும் பின்னூட்டம் என்ற ஒன்றை கண்டதே இல்லை..

ஆனாலும் தளராமல் எழுத்தும் இவர், தனது வாசகர்கள் தொடர்ந்து இவரை தொடர ஃபாலோவர் விட்ஜெட்டும் கொடுக்கவில்லை..

நீங்கள் எப்போது சென்றாலும் தாராளமாய் மீ த ஃபஸ்ட்டேய் போடலாம்..

ஆனால் நம்மின் வருகை அவருக்கு பிடிக்குமா இல்லையா, வாசகர்களின் பின்னூட்டத்தை விரும்புகிறாரா இல்லையா என்பதே எனக்கு சந்தேகமாய் உள்ளது..

விருப்பமிருப்பின் முயற்சித்துபாருங்களேன்..

$$$$$$$$


அடுத்து பல அறிய புகைப்படங்களின் தொகுப்புகள், கலக்கல் கதைகள் என்ற பெயரில் சிலபல கதைகள், சில நகைச்சுவையான இடுகைகள் என்று நம்மை எப்போதும் ஒரு புன்சிரிப்புடனேயே தனது வலைப்பூவை வாசிக்கவைக்கிறார்..

இவரின் வலைப்பூவின் பெயர் கீ த ப் ப் ரி ய ன்..

வலைப்பூ முகவரி http://geethappriyan.blogspot.com/

கலக்கல் கதையில் இது தமிழனால் மட்டுமே முடியும் (கலக்கல் கதைகள்) என்ற கதையில் ஒரு தமிழனின் வாய்சாமார்த்தியம் பற்றி நகைச்சுவையாய் சொல்லியுள்ளார்..

இதுபோல் ஒவ்வொரு கலக்கல் கதையுமே பெயருக்கு ஏற்றாற்போல் கலக்கல்தான்..

பல இடுகைகளில் இவர் தொகுத்துள்ள படங்களும் மிக அருமை..

முன்பே கூறியதைபோல் இந்த வலைப்பூவிலும் ஃபாலோவர் விட்ஜெட் இல்லை.. இருப்பினும் அவரின் வலைப்பூ சென்று உற்சாகப்படுத்துங்கள்..

(அதற்கு முன், ஒழுங்கா இந்த ஐந்தாம்நாள் இடுகை முழுதும் படித்து என்னை உற்சாகப்படுத்துங்கள்..)

$$$$$$$$


அடுத்து, காலப்பறவை என்ற வலைப்பூவில் 2007'இலேயே எழுதத்தொடங்கிவிட்ட இவர் தற்போதுதான் ஏக்டிவாக எழுதிவருகிறார்..

இவரின் வலைப்பூ முகவரி http://stalinfelix.blogspot.com

அடுக்குமாடி குடியிருப்பில் அண்டைவீட்டாரின் செயல்பாடுகளை பற்றி தனது சொந்த அனுபவத்தினை எதிர் வீட்டுக்காரம்மா என்ற இடுகையில் பகிர்கிறார்..

இவர் ஆகஸ்ட்டு மாதத்தில் சொந்த அனுபவங்கள் சார்ந்த இடுகைகள் பல இட்டுள்ளார்..

ரம்பா ரசிகர்களுக்கு மட்டும் என்ற இடுகையில் ரம்பா'வின்விரிவான ஆனால் சுருக்கமான பயோடேட்டா, M.R.ராதாயணம் என்ற இடுகையில் M.R.ராதா'வின் வாழ்வினில் சில முக்கிய கணங்களை பகிரும் இடுகையொன்றும் இருப்பினும், பெரும்பாலான இடுகைகள் இவரின் சொந்த அனுபவங்களை பகிர்வனவாகவும், கவிதைகள் பல நிறைந்ததாகவும் உள்ளன.

அதனால் இவரின் வலைப்பூவை அனுபவம் என்ற பிரிவின்கீழ் சேர்க்கிறேன்..
பிழையிருந்தால் மன்னிக்கவும்..

$$$$$$$$


அடுத்து இந்த ஐந்தாம் நாள் இடுகையை படிக்காமலே களைத்துவிட்ட உள்ளங்களுக்காக சமையல் குறிப்புகளை அள்ளித்தரும் வலைப்பூ ஒன்றினை காண்போம்..

tamilvili என்றபெயரில் உள்ள இந்த வலைப்பூ கடந்த இரண்டு மாதங்களாக மட்டுமே எழுதப்பட்டுவரும், ஃபாலோவர் விட்ஜெட் கொண்டிராத ஒரு புதிய வலைப்பூவாகும்..

சமையல் குறிப்புகள் மட்டுமின்றி அழகு குறிப்புகளையும் வாரிவழங்குகிறது இந்த வலைப்பூ..

இவரின் வலைப்பூ முகவரி http://tamilvilihal.blogspot.com

இதற்குமேல் அங்குசென்று அழகுபடுத்திக்கொள்ளுங்கள்..

$$$$$$$$


நான் (நீங்களும் இருக்கலாம்) பெரும்பாலும் கேட்டறியாத வரலாற்று நிகழ்வுகள் பலவற்றை தேவியர் இல்லம். திருப்பூர். என்ற வலைப்பூவில் புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்கள் என்ற பெயரில் தொடரிடுகையாகேவே எழுதி வருகிறார்..

இவரின் வலைப்பூ முகவரி http://texlords.wordpress.com/

நக்கீரன் கோபாலின் இருண்ட பக்கங்கள்'இல் அவரைபோட்டு பயங்கரமாக பாராட்டிதள்ளியுள்ளார்..

இவர் Blog Archive விட்ஜெட் கொடுக்காததால் இந்த இடுகைஎன எதையும் தெரிவுசெய்து படிக்க இயலவில்லை..

எனினும், நமக்கு தெரியாத பல வரலாற்று நிகழ்வுகளின் செய்திகளை இவரின் வலைப்பூவில் பெறலாம்..

$$$$$$$$


அடுத்த வலைப்பூ நம்மை பின்னோக்கி அழைக்கிறது..

இவரின் இடுகைகள் பல வித்தியாசமாய் உள்ளது..

இவரின் வலைப்பூ முகவரி http://pinnokki.blogspot.com

காலத்தின் குரல் என்ற இடுகையில் கற்ப்பனையாக கால இயந்திரத்தில் பயணிக்கிறார் நண்பர்..

2 நாட்கள் முதல் 500 கோடி வருடங்கள் வரை என்ற இடுகையில் மனிதன் மறைந்து 2 நாட்களில் இருந்து, 500 கோடி வருடங்கள் வரை, உலகம் மாறும் விதங்களைப் பட்டியலிட்டுள்ள ஆலன் வைஸ்மேன் என்ற ஆங்கில அறிவியல் எழுத்தாளர் எழுதிய புத்தகத்தின் சாரத்தை படங்களுடன் பகிர்ந்துள்ளார்..

சிட்டு குருவி பிடிப்பது எப்படி ? – 4 எளிய முறைகள் என்ற இவரின் சமீபத்திய இடுகையில் தனக்கு சிட்டுக்குருவி பிடிப்பதில் சிறுவயதில் ஏற்பட்ட அனுபவங்களை அழகாக விவரித்துள்ளார்..


அங்கு ஃபாலோவராகவழிஇல்லை.. சென்று உற்சாகப்படுத்த இடுகைகள் உள்ளன.. சென்று வலைச்சரம் சார்பில் வாழ்த்திடுங்கள்..


அப்புறம், வழக்கம்போல பெரும்பாலான வலைச்சர நண்பர்களுக்கு நுனிப்புல்மேய இத்தகைய அறிமுகநடைபோதுமென நினைக்கிறேன்.. அப்படித்தானே..

சரி நண்பர்களே.. இன்றைய பணியை நல்லமுறையில் முடித்திருப்பேன் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்..

மீண்டும் நாளை சந்திப்போம்.. நன்றி..


32 comments:

 1. டெம்ப்ளேட் பின்னூட்டம் போட மனமில்லை - மீ த பர்ஸ்ட்டேய் போடவும் மனமில்லை - ஆற அமரப் படித்து அனைத்து இடுகைகளிலும் மறு மொழி இட்டு விட்டி பிறகு வர்குகிறேன் இங்கு - உன்னை மனம் வருத்தமடையச் செய்வதில் எனக்கு விருப்பமில்லை - வரட்டா

  ReplyDelete
 2. குருவி பிடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தாலும் விடா முயற்சி பாராட்டத்தக்கது. சுதந்திரப் பறவைகளைப் பார்க்கும் இன்பம் நீடிக்க நல்வாழ்த்துகள் - நல்ல நடை - அசைபோட்டு அனுபவித்து எழுதிய பதிவு சிட்டுக்குருவி பிடிப்பது எப்படி - அழகிய பதிவு

  இது பின்னோக்கி பதிவில் இன்று இடப்பட்ட நாலாவது மறுமொழி

  மகிழ்ச்சியா ??

  ReplyDelete
 3. ஆக்ஸ்டு 15ல் துவங்கி செப்டம்பர் 11 வரை 27 நாட்களில் பின்னோக்கி எழுதிய 13 இடுகைகளையும் படித்து மறு மொஐ இட்டுவிட்டேன். அருமையான பதிவு - இடுகைகள்.
  அறிகுமத்திர்Kஉ நன்றி சுரேஷ்

  ReplyDelete
 4. தேவியர் இல்லம் - திருப்பூர் சென்று வந்தேன் - ஜோதி கணேசன் எழுத்துகள் பிரமிக்க வைக்கின்றன. மாதிரிக்கு 4 இடுகைகள் படித்து மறு மொழி இட்டேன். மற்றவை பிறகு படிக்க வேண்டும்.

  ஒழுக்கத்தினால் பெயர் பெற்ற சிறந்த நடிகர் சிவகுமார் எழுதிய ராஜபாட்டை புத்த்கத்தினைப் பற்றி மூன்று இடுகைகள் எழுதியுள்ளார். அத்த்னையும் அருமை. சிவகுமாரைப் பர்றியும் - நூலைப்பற்றியும் நூல் அறிமுக விழாவினைப் பற்றியும் அழகுற எடுத்துரைத்த விதம் பாராட்டுக்குரியது.

  அன்பின் சுரேஷ் - அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete
 5. அன்பின் சுரேஷ்

  90 நிமிடங்கள் பயனுறப் படித்தேந் இன்னும் மற்ற தளங்களையும் சென்று பிறகு பார்க்கிறேன்

  நல்வாழ்த்துகள் சுரேஷ்

  ReplyDelete
 6. வணக்கம்.

  உங்களுடைய ஆசிர்வாதம் கலந்த பங்களிப்புக்கு.

  நீங்கள் சொன்ன தொழில் நுட்பம் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. புரியாத விஷயம்.

  இவர் Blog Archive விட்ஜெட் கொடுக்காததால் இந்த இடுகைஎன எதையும் தெரிவுசெய்து படிக்க இயலவில்லை..

  காரணம்/ நான் இரவில் அமெரிக்கனாக பகலில் ஐரோப்பியனாக இடைப்பட்ட நேரத்தில் தேவியர்களுக்கு அப்பாவாக இலவச நேரத்தில் கணவாக வாழ்ந்து கொண்டு இருக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்.

  மூன்று மாதங்கள் தான் ஆகின்றது இந்த பதிவு உலகத்திற்குள் வந்து. நேற்றுடன் 71 தலைப்புகள்.

  19 வருட திருப்பூர் அனுபவத்தில் அத்தனை லேகியத்தையும் உண்டும் செரிக்காத கருத்துகள் உள்ளே இருந்ததால் இப்போது காலை வேளையில் பறக்கும் பறவைகளை ரசிக்க முடிகிறது. கத்தும் குயிலின் இசை புரிகின்றது.

  உங்களின் கனிவான அறிமுகம் போல் வாய்ப்பு இருந்தால் அந்த தொழில் நுட்பம் என்ன? எப்படி? செயல்முறை? விளக்கினால் கந்த புராணம் படித்த புண்ணியம் கிடைக்குமே? காரணம் எனக்கே அந்த குறை மனதில் உண்டு. தீர்ப்பவர்கள் கிடைக்காததால் திண்டாடிக்கொண்டுருக்கின்றேன்.

  என்னை இந்த நிமிடம் வரைக்கும் வழிகாட்டியாய் வழிநடத்திக்கொண்டுருக்கும் துபாய் திரு சுந்தர் ராமன் ( அது ஒரு கனாக்காலம்) திரு நாகா ( நாகா தாட்ஸ்) அடுத்து நீங்கள். திரு நாகா தன்னுடைய சமீப இடுகையில் என்னைப் பற்றிய எழுதிய விமர்சனம் போல் உங்களின் வார்த்தைகளை படித்து இன்றைய பொழுது மட்டும் அல்ல வரும் பொழுதுகள் அத்தனையும் சாதிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதாக எடுத்துக் கொண்டு உள்ளேன்.

  மேலும் கடைசி தனிப்பட்ட மின் அஞ்சலில் திரு சுந்தர் ராமன் நிச்சயம் ஜெயிப்பீர்கள் என்றார். சொல்லி ஒரு வாரத்திற்குள் உங்கள் வருகை அமைந்து இருக்கிறது. பரவசம்.

  இந்த அதிகாலை நேரத்தில், ஒரே நேரத்தில் படித்ததும் இல்லாமல் தொடர்ச்சியான பதில் உரை இட்டுச்சென்றதுக்கும் தேவியர் இல்ல பூங்கொத்து.

  என்னுடைய பார்வையில் நக்கீரன் கோபால் அவர்களின் ஐந்து வருட அவஸ்த்தைகள், அதில் இருந்து மீண்டு வந்த விதம் தான் மிகுந்த ஆச்சரியம் அளித்தது. காரணம் அவஸ்த்தைகளை மட்டுமே வைத்து வாழ்ந்து கொண்டுருக்கும் இந்திய ஏற்றுமதியாளர்களில் தொடக்க நிலையில் இருப்பவன் என்ற முறையில் அந்த போராட்டம் கவர்ந்ததால் பதிவு செய்தேன்.

  மூன்று தேவியர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டுருக்கும் நான் அந்த மூன்று இறை அருளின் அத்தனை ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கட்டும். முன் எடுத்துச் சென்றமைக்கும் முயற்சியை பாராட்டிய சிந்தனைக்கும். வாழ்த்துக்கள்.

  வாருங்கள் தொடர்ச்சியாக. உங்களை போன்றவர்களால் என்னுடைய சமூக அக்கறை எந்நாளும் குறையாமல் இருக்கும்.

  நட்புடன் மற்றும் நன்றியுடன்
  ஜோதிஜி (ஜோதி கணேசன்)
  தேவியர் இல்லம். திருப்பூர்.

  பின்குறிப்பு துளசி என்பவர் ஆண் என்று நிணைத்துக்கொண்டுருந்தேன்? கோவையில் தான் இருக்கிறீர்களா திரு சுரேஷ் குமார்?

  http://texlords.wordpress.com http://texlordswordpress.blogspot.com/ texlords@gmail.com texlords@aol.in

  ReplyDelete
 7. என் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. உற்சாகமாக இருக்கிறது. பாலேயர்ஸ் பற்றி எனக்குத் தெரியவில்லை. அதைப்பற்றி படித்துவிட்டு, என் பதிவுகளில் இணைக்கிறேன். நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள மற்ற பதிவர்களைப் படித்துவிட்டு அவர்களுக்கு பின்னோட்டம் இடுகிறேன். நன்றி.

  ReplyDelete
 8. குட்டி கதைகள் - பதிவுகள் நன்றாக இருந்த்தது. பின்னோட்டங்கள் விட இயலவில்லை. restricted access இருக்கிறது.

  ReplyDelete
 9. அருமையான கடின உழைப்பு.. உங்களின் உழைப்பை மெச்சுகிறேன்..அனைத்தும் அறிமுகங்களும் அருமை

  ReplyDelete
 10. கீதப்ப்ரியன் வலைப்பூ அருமை. அனைத்துப் பதிவுகளையும் இப்பொழுதுதான் படித்தேன்.

  ReplyDelete
 11. ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

  தேவியர் இல்லம் நன்றாக் இருக்கும். அவர்கள் விட்ஜெட் கொடுக்கவில்லை என்றாலும், நமது டாஷ்போர்டில் நாம் அவர்களைச் சேர்க்கலாம். அதன் படி நான் சேர்த்துக் கொண்டு அவருடைய இடுகைகள் படிப்பது வழக்கம்.

  மற்றவர்களை இன்னும் படித்த மாதிரி ஞாபகம் இல்லை. படித்துவிட்டு பின் சொல்லுகின்றேன்.

  ReplyDelete
 12. குட் கலெக்சன்ஸ் சுரேஷ்

  ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. ஒருவர் பாலோயர் விட்கெட் கொடுக்கவில்லையென்றாலும் நம்மாள் அவரை தொடர்பு கொள்ள முடியும்!

  ReplyDelete
 15. பின்னோக்கியின் அறிமுகத்திற்கு நன்றி தல!

  ReplyDelete
 16. //
  பார்சா குமார‌ன் said...

  good indro
  //
  நன்றி பார்சா குமார‌ன்..

  ReplyDelete
 17. //
  cheena (சீனா) said...

  டெம்ப்ளேட் பின்னூட்டம் போட மனமில்லை - மீ த பர்ஸ்ட்டேய் போடவும் மனமில்லை - ஆற அமரப் படித்து அனைத்து இடுகைகளிலும் மறு மொழி இட்டு விட்டி பிறகு வர்குகிறேன் இங்கு - உன்னை மனம் வருத்தமடையச் செய்வதில் எனக்கு விருப்பமில்லை - வரட்டா
  //
  சீனா ஐயா.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..

  முதலில் இங்கு இடப்படும் இடுகையை முழுதாக படித்துவிட்டு பின்னூட்டலாமே என்றுதான் கேட்டேன்..

  அறிமுகப்படுத்தபட்டவர்களின் வலைப்பூக்களை பிறகு சென்று பொறுமையாககூட படிக்கலாம்..

  ஆனால் இங்கு இடப்படும் இடுகையை இடுகையிட்ட அதேநாளில் படிக்காமல் அடுத்தநாளா படிக்கமுடியும்..

  அதனால் முதலில் இங்கு இடப்படும் இடுகையை முழுதாய் படியுங்கள்..

  பிறகு அறிமுகப்படுத்தப்பட்டவர்களின் வலைப்பூக்களை நேரம் கிடைக்கும்போது பொறுமையாய் படிக்கலாம்..

  ReplyDelete
 18. //
  cheena (சீனா) said...

  ஆக்ஸ்டு 15ல் துவங்கி செப்டம்பர் 11 வரை 27 நாட்களில் பின்னோக்கி எழுதிய 13 இடுகைகளையும் படித்து மறு மொஐ இட்டுவிட்டேன். அருமையான பதிவு - இடுகைகள்.
  அறிகுமத்திர்Kஉ நன்றி சுரேஷ்
  //
  ஒரு சின்ன பையன் சொன்னத இவ்ளோ சீரியஸா எடுத்துகிட்டு இப்டி காலத்துல எறங்கிட்டிங்களே..

  இவ்ளோ அவசராமாவா அவ்ளோ இடுகையையும் படிக்கறது.. பொறுமையா நேரம் கிடைக்கும்போது போய்படிச்சா போதாதா..

  என்னோட வலைப்பூவில்கூடத்தான் படித்துவிட்டு வருகிறேன்னு ஒருமாசத்துக்கு முன்னாடி சொல்லிட்டு போனிங்க.. இன்னும் படிச்சுமுடிக்கலைபோல.. திரும்ப ஆளையே காணோம்..

  ReplyDelete
 19. //
  cheena (சீனா) said...

  தேவியர் இல்லம் - திருப்பூர் சென்று வந்தேன் - ஜோதி கணேசன் எழுத்துகள் பிரமிக்க வைக்கின்றன. மாதிரிக்கு 4 இடுகைகள் படித்து மறு மொழி இட்டேன். மற்றவை பிறகு படிக்க வேண்டும்.

  ஒழுக்கத்தினால் பெயர் பெற்ற சிறந்த நடிகர் சிவகுமார் எழுதிய ராஜபாட்டை புத்த்கத்தினைப் பற்றி மூன்று இடுகைகள் எழுதியுள்ளார். அத்த்னையும் அருமை. சிவகுமாரைப் பர்றியும் - நூலைப்பற்றியும் நூல் அறிமுக விழாவினைப் பற்றியும் அழகுற எடுத்துரைத்த விதம் பாராட்டுக்குரியது.

  அன்பின் சுரேஷ் - அறிமுகத்திற்கு நன்றி
  //
  உங்களின் பொறுப்புணர்ச்சி உண்மையில் எனக்கு பீதியை கிளப்புகிறது..

  ஆதரவிற்கு நெம்ப நன்றிங்கோவ்..

  ReplyDelete
 20. //
  Blogger ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

  வணக்கம்.

  உங்களுடைய ஆசிர்வாதம் கலந்த பங்களிப்புக்கு.
  .

  .
  .
  .
  .

  வாருங்கள் தொடர்ச்சியாக. உங்களை போன்றவர்களால் என்னுடைய சமூக அக்கறை எந்நாளும் குறையாமல் இருக்கும்.

  .
  .
  .
  .

  பின்குறிப்பு துளசி என்பவர் ஆண் என்று நிணைத்துக்கொண்டுருந்தேன்? கோவையில் தான் இருக்கிறீர்களா திரு சுரேஷ் குமார்?
  //

  நன்றி ஜோதிஜி. தேவியர் இல்லம்.

  ஆம் நான் கோயமுத்தூரில்தான் இருக்கிறேன்..

  ReplyDelete
 21. //
  பின்னோக்கி said...

  என் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. உற்சாகமாக இருக்கிறது. பாலேயர்ஸ் பற்றி எனக்குத் தெரியவில்லை. அதைப்பற்றி படித்துவிட்டு, என் பதிவுகளில் இணைக்கிறேன். நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள மற்ற பதிவர்களைப் படித்துவிட்டு அவர்களுக்கு பின்னோட்டம் இடுகிறேன். நன்றி.
  //
  நன்றியும் வாழ்த்துக்களும் பின்னோக்கி..

  ReplyDelete
 22. //
  இய‌ற்கை said...

  அருமையான கடின உழைப்பு.. உங்களின் உழைப்பை மெச்சுகிறேன்..அனைத்தும் அறிமுகங்களும் அருமை
  //
  கருத்துக்கு நன்றி மகளே..

  மீதமுள்ள இரண்டு நாட்களுக்கும் வந்து ஆதரவுதாருங்கள்..

  ReplyDelete
 23. //
  இராகவன் நைஜிரியா said...

  ஐந்தாம் நாள் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

  தேவியர் இல்லம் நன்றாக் இருக்கும். அவர்கள் விட்ஜெட் கொடுக்கவில்லை என்றாலும், நமது டாஷ்போர்டில் நாம் அவர்களைச் சேர்க்கலாம். அதன் படி நான் சேர்த்துக் கொண்டு அவருடைய இடுகைகள் படிப்பது வழக்கம்.

  மற்றவர்களை இன்னும் படித்த மாதிரி ஞாபகம் இல்லை. படித்துவிட்டு பின் சொல்லுகின்றேன்.
  //
  நன்றி ராகவன் அண்ணா..

  மீதமுள்ள இரண்டு நாட்களுக்கும் வந்து ஆதரவும் கருத்துக்களும் தாருங்கள்..

  ReplyDelete
 24. //
  பிரியமுடன்...வசந்த் said...

  குட் கலெக்சன்ஸ் சுரேஷ்

  ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்
  //
  வாழ்த்துக்களுக்கு நன்றி வசந்த்..

  ReplyDelete
 25. //
  வால்பையன் said...

  ஐந்தாம் நாள் வாழ்த்துக்கள்!
  //
  வாழ்த்துக்களுக்கு நன்றி வாலு..

  ReplyDelete
 26. //
  வால்பையன் said...

  ஒருவர் பாலோயர் விட்கெட் கொடுக்கவில்லையென்றாலும் நம்மாள் அவரை தொடர்பு கொள்ள முடியும்!
  //
  ஒஹ் அப்படியா..

  எப்படி.. ராகவன் அண்ணா சொன்ன முறையிலா.. இல்லை வேறு ஏதும் வழி உள்ளதா..

  ReplyDelete
 27. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 28. புதுப்பதிவர்களாய் பிடித்து அழகிய முறையில் அறிமுகம் செய்து இருக்கீங்க

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 29. //
  நட்புடன் ஜமால் said...

  ஐந்தாம் நாள் வாழ்த்துகள்.


  நட்புடன் ஜமால் said...

  புதுப்பதிவர்களாய் பிடித்து அழகிய முறையில் அறிமுகம் செய்து இருக்கீங்க

  வாழ்த்துகள்.
  //
  வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா..

  ReplyDelete
 30. நண்பர் சுரேஷ்,சீனா ஐயா,
  மிக்க நன்றிகள் என்னை அறிமுகம் செய்தமைக்கு,என்ன காலதாமதம் பாருங்கள் நன்றி கூற,
  எனக்கு இப்போது ஜோதிஜி மூலம் இந்த இடுகைக்கான சுட்டி கிடைத்தது.
  அப்போதே இதை பார்த்திருந்தால் மேலும் சிறப்பாய் எழுதியிருப்பேன்.
  மீண்டும் நன்றி,இனி வலைச்சரத்தை தொடர்ந்து நோக்குவேன்.ஜோதிஜிக்கும் மிக்க நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது