07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 13, 2009

வலைச்சரத்தில் என் ஏழாம்நாள் ஆசிரியப்பணி..

ஏழாம்நாள் வணக்கங்கள் நண்பர்களே..

அதிகப்படியான வேலைப்பளுவின் காரணமாக நேற்று வலைச்சரத்தில் வலைப்பூக்களை விளக்கமாக அறிமுகப்படுத்த இயலவில்லை..

எனினும், நேற்று பணிக்கே வராமல் இருந்திருப்பதைவிட, வந்து என்னால் இயன்றவாறு சில வலைப்பூக்களை உங்களுக்கு அறிமுகப்படுத்திய திருப்தியோடு இன்று ஏழாம்நாள் பணியினை தொடங்குகிறேன்..

மேலும் கடந்த ஆறுநாட்களுக்கு இட்டபணியை திருப்திகரமாகவும், வெற்றிகரமாகவும், பல பதிவர்களுக்கு உபயோகமானதாகவும் செய்துமுடித்ததில் மிக்க மகிழ்ச்சியே..

இது என்னுடைய தனி முயற்சியால் மட்டும் சாத்தியபட்டிருக்காது.. வலைச்சரத்தில் எழுதிய கடந்த ஆறு நாட்களுக்கும் தவறாமல் வந்து பின்னூட்டம் மூலம் ஊக்கப்படுத்திய நண்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் அனைவரின் கூட்டு முயற்சியாலேயே இலக்கை அடைய முடிந்தது..

ஆரம்ப காலம் முதல் சிறுக சிறுக கிடைத்த நண்பர்கள் பலரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் இங்கு அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றிகள் சொல்ல விருப்பமிருப்பினும், தவறுதலாக யாருடைய பெயராவது விடுபட்டுவிட்டால் அதுவே அவர்களுக்கு பெரியதொரு வருத்தத்தை, மனக்குறையை உண்டுபண்ணிட வாய்ப்பாக அமைந்துவிடுமென்று எண்ணியதால், என் வலைப்பூவில் ஆதரவும் ஊக்கமும் தந்துகொண்டுள்ள நண்பர்களுக்கும், இந்த ஒருவார காலமும் ஒரு இடுகைக்கேனும் வந்து ஆதரவளித்து ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள் பலவற்றை தெரிவித்துக்கொள்கிறேன்..

என் ஆசிரியப்பணி இன்றோடு முடிவடைந்தாலும், வலைச்சரம் கடந்துசெல்லவேண்டிய தொலைவு இன்னும் எவ்வளவோ இருக்கின்றது..

பல புதிய பதிவர்களையும் அவர்களின் வலைப்பூக்களையும் பதிவுலகில் பலரும் அறியக்கொடுக்கும் பணியினை தொடர்ந்து பல ஆசிரியர்களைகொண்டு செம்மையாய் செய்விக்கும் ஐயா சீனா அவர்களின் பணி உண்மையில் அபாரமான பாராட்டத்தக்க செயல் / சேவை..

சீனா ஐயா'வின், வலைச்சரத்தின் சேவை என்னைபோன்ற புதிய பதிவர்கள் பலரையும் இந்த வலையுலகிற்கு அறிமுகப்படுத்த எப்போதும் தேவை என்பதில் ஐயமில்லை..

தொடர்ந்து உங்களின் பணி சிறப்பாய் அமைந்து செயல்பட வாழ்த்தி, உங்களின் சேவையில் என்னையும் ஒரு சிறு பொறுப்பினையேற்று உதவிட வாய்ப்பளித்த சீனா ஐயாவின் அன்புக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டு, எழுதத்தொடங்கிய முதல்நாள் முதல் இன்றுவரை அங்கும் இங்கும் ஆதரவளித்து ஊக்கப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மீண்டுமொருமுறை நன்றியினையும், அடுத்து வலைச்சர சேவையில் இணையவரும் ஆசிரியருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு வீடு திரும்புகிறேன்..

இனி மீண்டும் எப்போதும் எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.. வில் சந்திப்போம்..

நன்றி நண்பர்களே..21 comments:

 1. கொடுத்த வேலையை சிறப்பா செய்துவிட்டாய் சுரேஷ்....பணிச்சுமையிலும் இதில் முழுகவனம் செலுத்தி நல்ல பதிவர்களை இங்கு அடையாளம் காட்டியமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்..

  ReplyDelete
 2. ஆரம்ப காலம் முதல் சிறுக சிறுக கிடைத்த நண்பர்கள் பலரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் இங்கு அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு நன்றிகள் சொல்ல விருப்பமிருப்பினும், தவறுதலாக யாருடைய பெயராவது விடுபட்டுவிட்டால் அதுவே அவர்களுக்கு பெரியதொரு வருத்தத்தை, மனக்குறையை உண்டுபண்ணிட வாய்ப்பாக அமைந்துவிடுமென்று எண்ணியதால்,

  இதெல்லாம் உஷாரா இருப்பியே....

  ReplyDelete
 3. சீனா ஐயா'வின், வலைச்சரத்தின் சேவை என்னைபோன்ற புதிய பதிவர்கள் பலரையும் இந்த வலையுலகிற்கு அறிமுகப்படுத்த எப்போதும் தேவை என்பதில் ஐயமில்லை..

  உண்மை உண்மை இவர் சேவை எப்போது தேவை..ஆனால் இவர் பேச்சி நான் கா....ஏன்னா நான் வலை சர ஆசிரியரா இருந்தப்ப ஒரு கமெண்ட் கூட போடலை அதனால் தான்...

  ReplyDelete
 4. மிக அருமையாக புதியவர்களை அறிமுகம் செய்து வைத்திருந்தாய்.

  வாழ்த்துகள் சுரேஷ்.

  ReplyDelete
 5. இனி மீண்டும் எப்போதும் எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.. வில் சந்திப்போம்..

  அப்ப இங்க எழுதுயது எல்லாம் எழுத்து தானே..ஹிஹிஹி ஜோக்கு...சிரிப்பா...

  ReplyDelete
 6. அன்பின் சுரேஷ்

  எடுத்த பொறுப்பினை சிறப்பாக நிறைவேற்றி - பல பதிவர்களையும் இடுகைகளையும் அறிமுகப் படுத்திய விதம் பாராட்ட்டுக்குரியது. நன்றி கலந்த நல்வாழ்த்துகள் சுரேஷ்

  சற்றே ஓய்வெடுத்துக்கொள் - எழுதுவதெல்லாம் எழுத்தல்லவில் வருகிறேன் எனச் சொல்லிச் சென்றவன் வரவில்லை என வருந்தாதே - வந்து விடுகிறேன்

  ReplyDelete
 7. //உண்மை உண்மை இவர் சேவை எப்போது தேவை..ஆனால் இவர் பேச்சி நான் கா....ஏன்னா நான் வலை சர ஆசிரியரா இருந்தப்ப ஒரு கமெண்ட் கூட போடலை அதனால் தான்... //

  அன்பின் தமிழரசி

  என் சேவை எப்போது தேவை எனக்கேட்டிருப்பதில் தட்டச்சுப்பிழை இருக்கிறதென நினைக்கிறேன் ( எப்போதும் ).

  ஆனால் கா விட வேண்டாம் - பணிச்சுமை காரணமாக வராமல் இருந்திருப்பேன் - மற்றபடி ஒன்றும் இல்லை - மனம் வருந்த வேண்டாம்

  ReplyDelete
 8. அன்பின் தமிழரசி

  தாங்கள் ஆசிரியராக இருந்த பொழுது இடுகை வாரியாக கருத்துக் கூற பணிச்சுமை அனுமதிக்க வில்லை. அத்தனை இடுகளுக்கும் சேர்த்து ஒரு நன்றிய்ரை இடுகை இடப்பட்டது. பார்க்க வில்லையா ?

  கீழே அதனைக் கொடுத்திருக்கிறேன்

  கடந்த ஒரு வார காலமாக வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற தமிழரசி - ஏற்ற பொறுப்பினை அருமையாக நிறைவேற்றி மனமகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார். தவிர்க்க இயலாத காரணங்களினால் ஐந்தே ஐந்து இடுகைகள் இட்டு ஏறத்தாழ அறுநூறுக்கும் மேற்பட்ட மறுமொழிகள் பெற்று மனம் மகிழ்ந்தார். அவரது இடுகைகள் அனைத்தும் அருமையான இடுகைகள். விதி முறையின் படி ஏறத்தாழ முப்பத்து மூன்று பதிவர்களையும் நூறுக்கு மேற்பட்ட இடுகைகளுக்கான சுட்டிகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார். படங்கள் பலப்பல இட்டு படிப்பவர்களை பரவச்ப் படுத்தி விட்டார்.

  தமிழரசிக்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளைக் கூறி விடையளிக்கிறோம்.

  போதுமா தமிழரசி - மனம் மகிழ்ந்த்தா

  இனிமேல் எழுத்தோசைக்கு அடிக்கடி வருகிறேன்

  ReplyDelete
 9. ஆசிரியர் பணி சிறப்பாக செய்ததற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. செய்வதைத் திறம்படச்செய்த உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  ReplyDelete
 11. தங்கள் பணியை சிறப்பாய் செய்திட்டீர்கள் சுரெஷ் பாராட்டுக்கள் நண்பா

  ReplyDelete
 12. //
  தமிழரசி said...

  கொடுத்த வேலையை சிறப்பா செய்துவிட்டாய் சுரேஷ்....பணிச்சுமையிலும் இதில் முழுகவனம் செலுத்தி நல்ல பதிவர்களை இங்கு அடையாளம் காட்டியமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்..
  //
  வாழ்த்துக்களுக்கும் ஆதரவிற்கும் நன்றி அக்கா..

  ReplyDelete
 13. //
  தமிழரசி said...

  இதெல்லாம் உஷாரா இருப்பியே....
  //
  பின்ன..

  ReplyDelete
 14. //
  நட்புடன் ஜமால் said...

  மிக அருமையாக புதியவர்களை அறிமுகம் செய்து வைத்திருந்தாய்.

  வாழ்த்துகள் சுரேஷ்.
  //
  ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஜமால் அண்ணா..

  ReplyDelete
 15. //
  தமிழரசி said...

  இனி மீண்டும் எப்போதும் எழுதுவதெல்லாம் எழுத்தல்ல.. வில் சந்திப்போம்..

  அப்ப இங்க எழுதுயது எல்லாம் எழுத்து தானே..ஹிஹிஹி ஜோக்கு...சிரிப்பா...
  //
  எனக்கு தேவைதான்..

  இருந்தாலும் உங்களின் பாசத்துக்காக சிரிச்சாச்சு..

  ReplyDelete
 16. //
  cheena (சீனா) said...

  அன்பின் சுரேஷ்

  எடுத்த பொறுப்பினை சிறப்பாக நிறைவேற்றி - பல பதிவர்களையும் இடுகைகளையும் அறிமுகப் படுத்திய விதம் பாராட்ட்டுக்குரியது. நன்றி கலந்த நல்வாழ்த்துகள் சுரேஷ்

  சற்றே ஓய்வெடுத்துக்கொள் - எழுதுவதெல்லாம் எழுத்தல்லவில் வருகிறேன் எனச் சொல்லிச் சென்றவன் வரவில்லை என வருந்தாதே - வந்து விடுகிறேன்
  //
  வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் என்மேல் கொண்ட நம்பிக்கைக்கும் நன்றிகள் பல சீனா ஐயா..

  பாத்து கொஞ்சம் சீக்கிரம் அங்க வாங்க..

  ReplyDelete
 17. //
  cheena (சீனா) said...

  அன்பின் தமிழரசி

  ஆனால் கா விட வேண்டாம் - பணிச்சுமை காரணமாக வராமல் இருந்திருப்பேன் - மற்றபடி ஒன்றும் இல்லை - மனம் வருந்த வேண்டாம்
  //
  அதெல்லாம் முடியாது..
  அதெப்படி எங்க அக்கா உங்க அழைப்பை ஏற்று இங்க வந்து எழுதினா நீங்க வந்து கம்மென்ட் போடாம அம்போன்னு விட்ருவிங்களா..

  அவங்க மனம் வருந்தியே தீருவாங்க..

  இல்லைனா.. இன்னொரு வழி இருக்கு..இன்னொரு தடவ வலைச்சர ஆசிரியரா அக்காவ போட்ருங்க.. நீங்க செஞ்ச தப்புக்கு இதுதான் பரிகாரம்..

  ReplyDelete
 18. //
  இராகவன் நைஜிரியா said...

  ஆசிரியர் பணி சிறப்பாக செய்ததற்கு வாழ்த்துகள்.
  //
  நன்றி இராகவன் அண்ணா..

  ReplyDelete
 19. //
  S.A. நவாஸுதீன் said...

  செய்வதைத் திறம்படச்செய்த உங்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
  //
  வாழ்த்துக்களுக்கு நன்றி S.A. நவாஸுதீன்..

  ReplyDelete
 20. //
  பிரியமுடன்...வசந்த் said...

  தங்கள் பணியை சிறப்பாய் செய்திட்டீர்கள் சுரெஷ் பாராட்டுக்கள் நண்பா
  //
  பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றிகள் வசந்த்..

  ReplyDelete
 21. டேய் சுரேஷு

  //இல்லைனா.. இன்னொரு வழி இருக்கு..இன்னொரு தடவ வலைச்சர ஆசிரியரா அக்காவ போட்ருங்க.. நீங்க செஞ்ச தப்புக்கு இதுதான் பரிகாரம்.. //


  சிண்டு முடிஞ்சு விடாதே

  உங்கக்கா தமிழரசி ரெடின்னா நானும் ரெடி தான் - எப்ப எழுதறாங்கன்னு கேட்டுச் சொல்லு - ஒரு வாரம் கொடுத்துடுவோம்

  நான் காரண்டியா அத்தனை இடுகையையும் படிச்சுப் பதிலும் போடறேன் - சரியா

  அக்காவ்வ்வ்வ் - தமிழரசி - எந்த வாரம் எழுதறேம்மா ?? சொல்லு சொல்லு

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது