07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 18, 2012

அறிவியல்

ஆயுதம்செய் வோம் நல்ல காகிதம் செய்வோம்;
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம்.
                                                                     - பாரதியார்


        அறிவியல் என்பது மனித அனுபவங்களின் தொகுப்பு ஆகும். இன்றைய நவீன உலகில் அறிவியல் வளர்ச்சி வியக்க வைக்கும் அளவில் முன்னேறியுள்ளது. அறிவியலின் மூலம் பல ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள் உருவாகின. மனிதகுலம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் பூமியில் அனைத்து உயிர்களும் வாழ வகைசெய்யும் முறையில் அறிவியல் முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வலைப்பூக்களில் அறிவியலைப் பற்றி நிறைய பதிவர்கள் எழுத முன்வரவேண்டும். ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழி பெயர்க்கலாம். பிறமொழியில் உள்ள சிறந்த நூல்களைத் தமிழ் மொழியில் எழுத அனைவரும் முன்வந்தால் சிறந்த கட்டுரைகள் நம் மாணவர்களுக்கு கிடைக்கும்.

           அறிவியல் கட்டுரைகள் கடல்போல் கிடைத்தாலும் சில பதிவுகளை நான் இன்று வலைச்சரத்தின்மூலம் பகிர்ந்துகொள்கிறேன்.அறிவியல் கவிதையுடன் முதலில் ஆரம்பிப்போம். Dreamer அவர்கள் தளத்தில் கேணிவனம் என்னும் அற்புதமான தொடர்கதை உள்ளது. செம இன்ட்ரஸ்டிங்க். மேலும் விருபா அறிவியல் புனை கதைகள் பற்றி அலசி ஆராய்ந்துள்ளார்.


    பாரதி இலக்கிய பயிலகத்தில் பாரதியின் அறிவியல் பார்வை பற்றி ஒரு நீண்ட கட்டுரை கண்டிப்பாக அனைவருக்கும் பயன்படும்.

       சங்ககாலத்திலும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என குணாதமிழ் அவர்கள் கூறுகிறார்கள். அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றினை படிப்பதே ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். மாணவன் தளத்தில் பெஞ்சமின் ஃபிராங்கிளின் வரலாற்றினையும் படித்துப்பாருங்கள்.

   செல்வராஜின் மானிடன் வலைப்பூவில் சூரியன் உலக சக்திகளின் மையம் என்ற கட்டுரையினை வாசியுங்கள். சூரியனின் மஹாசக்தி நமக்குப் புரியும். நாம்தான் உலகத்தில் பெரியவன் என்று நினைத்துக்கொண்டு காலம்கடத்துகிறோம். மனசாலியின் தளம் சென்றால் நம் எண்ணத்தினை நிறையவே மாற்றிக்கொள்வோம்.


     இன்றைய வானம் தளத்தில் பிரபஞ்ச ரகசியம் பற்றி அருமையான கட்டுரையும் அதில் ஆராய்ச்சி செய்து நோபல் பரிசு பெற்றவர்களைப்பற்றியும் அறியலாம். வானத்தினை எட்டிப் பிடிக்க கைக்கெட்டும் தூரம் வானம் வாசியுங்கள்.

       அப்பு சிவாவின் நட்சத்திரம் பற்றிய கட்டுரையில் நிறைய சுவாரஸ்யமான விசயங்களை அருமையாக விளக்கியுள்ளார். டிலீப் அவர்கள் வானியல் என்றால் என்ன என எளிமையாக விளக்குகிறார். சொ.ஞானசம்பந்தன் அவர்கள் வால்மீன்கள் என்பதனைப் பற்றி அரிய தகவல்களுடன் அழகுபடச் சொல்லியுள்ளார்.

       நிறைய வானியல் பற்றிய தளங்களாகப் பார்த்துவிட்டோம். ஜலீலா கமலின் ஆண்களுக்கு ஹீமோகுளோபின்  குறைவதால் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளையும் அறிந்துகொள்வோம். தமிழ்மகனின் கட்டுரையான தேசிய கடல்வாழ் உயிரின பூங்காவில் தீவுகளின் பெயர்கள், அமைவிடம் பற்றியும் சொல்லியுள்ளார்.

      விண்வெளி மனிதர்கள்படும் கஷ்டங்களை சுவாரஸ்யமாக பனித்துளி சங்கர் விளக்குகிறார். முகம்மது ஆஷிக் சுவாசிக்க 100% ஆக்ஸிஜன்  நல்லதா? என்ற பகுதியில் அதன் சாதக பாதகங்களை விளக்குகிறார்.

    தமிழ்நாடு விவசாயத்தில் மண்புழு உரத்தினைப் பற்றி சிறிய பகுதியாகவும், வீடியோவுடனும் சொல்லியுள்ளார்கள். மேலும் விஞ்ஞானம் பற்றி அறிந்து கொள்ள பல தளங்களின் இணைப்புடன் கூடிய  விஞ்ஞானக் குருவி  தளத்திற்கு செல்லுங்கள்.

தமிழ் :

          அறிவியலை மட்டும் பார்த்தால் போதுமா. நமது தாய்மொழியினைப் பற்றி கொஞ்சம் எனக்குப் பிடித்த சில தளங்களின் வரிசை.

   "என்றும் இளமை குன்றா மொழியே" எனப்போற்றும் கவிதைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் புலவர் சா ராமாநுசம் அவர்களின் அருமையான பாடல்.

    கிருஷ்ண பிரபுவின் தளத்தில்  புத்தகப் பட்டியலை பாருங்கள். நிறைய புத்தகங்களின் வரிசை.சேரலாதன் பாலசுப்பிரமணியன் தாமரை பூத்த தடாகம் என்ற புத்தகம் பற்றி பாருங்கள். தமிழ் புத்தகங்களின் விமர்சனத்தோடு அருமையான தளம்.

அறிமுகம் :

1.ஏஞ்சலினின் காகித பூக்கள் வலைப்பூ. நிறைய பொருட்களை எளிமையான முறையில் செய்வதனைப் பற்றி படங்களுடன் விளக்குகிறார்.

2.மதுமிதாவின் வலைப்பூ. மிகவும் அருமையான கவிதைகள், சிறுகதை, கதம்பம் எனக்கலக்குகிறார்.

        படங்கள் அனைத்தும் கூகுள் தேடலில் கிடைத்தவை. இம்புட்டு தூரம் வந்தாச்சு. மறந்திடாம தமிழ்மணத்தில் வாக்கும் உங்கள் அருமையான கருத்துக்களையும்  இடுங்கள்.  

23 comments:

  1. அறிவியல் முன்னேற்றம் ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதை மறுக்கமுடியாது. நீங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். மதுமிதாவின் கவிதை, கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி. சில அறிய தளங்களை அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
  3. புதிய தளங்கள் அறிந்தது மகிழ்ச்சி. அத்தனை அறிமுகவியலாளர்களிற்கும், தங்களிற்கும் மனமார்ந்த வாழ்த்தகள். பணி தொடரட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. A Beautiful collection. Thanks for sharing...

    ReplyDelete
  5. அருமைப்பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. adada....enakku piditha topic!! மிகுந்த நன்றி....பல தலைப்புகள் படித்தே ஆக வெண்டியவை... மிக்க மிக்க நன்றி விச்சு.

    ReplyDelete
  7. அனைவருக்கும் வாழ்த்துகள்.. நேரமிருப்பின் வாசிக்கிறேன்.

    ReplyDelete
  8. அறிவியல் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட் அறிவியல் சம்பந்தமாக எழுதும் நண்பர்களின் பதிவுகளை வலைச்சரத்தில் பகிர்ந்துகொண்டமைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்! எனது வலைத்தளத்தையும் அறிமுகபடுத்தி பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. வலைச்சர இவ்வார ஆசிரியராக இருந்து நிறைய அருமையான அறிவியல் மற்றும் தமிழ்ப்பதிவுகளை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ.விச்சு.

    ReplyDelete
  10. அறிவியல் முன்னேற்றம் இன்று
    எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதற்கு
    பரவியுள்ள வலைத் தளங்களேச்
    சான்றாகும்!
    தாங்கள் வலைச்சரத்தில்
    முதற்கண் அறிவியல் முன்னேற்றம்
    பற்றி அறிமுகம் செய்தது சிறப்பான
    ஒன்றாகும் வாழ்த்துக்கள்!
    மேலும் என்னையும்
    அறிமுகப்படித்தி அறிவித்தமைக்கு
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. அறிவியல் முன்னேற்றம் இன்று
    எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதற்கு
    பரவியுள்ள வலைத் தளங்களேச்
    சான்றாகும்!
    தாங்கள் வலைச்சரத்தில்
    முதற்கண் அறிவியல் முன்னேற்றம்
    பற்றி அறிமுகம் செய்தது சிறப்பான
    ஒன்றாகும் வாழ்த்துக்கள்!
    மேலும் என்னையும்
    அறிமுகப்படித்தி அறிவித்தமைக்கு
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி விச்சு.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ஒவ்வொரு பதிவும் பல அறிமுகங்களுடன் களைகட்ட தொடங்குகிறது அருமை .

    ReplyDelete
  14. ஒவ்வொரு பதிவும் பல அறிமுகங்களுடன் களைகட்ட தொடங்குகிறது அருமை .

    ReplyDelete
  15. அறிமுகங்கள் அருமை நண்பா.

    என் பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  16. அருமையான அறிமுகங்கள் சகோ. சில புதிய பதிவர்களையும் நான் தெரிந்துகொண்டேன். அழகாக வலைச்சரத்தில் பணியாற்றி பூர்த்தி செய்யப்போகிறீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. தங்களுடைய வலைப்பூக்களின் அறிமுகப்பதிவை தவறாமல் பார்வையிட்டு நான் இதுவரை அறியாத தளங்களாயின் அவற்றை பின்தொடருவேன். என்னைப்போன்ற பதிவர்களுக்கு பின்தொடர்ந்து புதிய தகவல்களை திரட்டுதல் முக்கியமான ஒன்று அதற்கு உதவும் வலைச்சரத்திற்கு ஒரு சல்யூட்.
    என் தளம் http://www.googlesri.com/

    ReplyDelete
  18. மிகச்சிறப்பான அறிவியல் தேடல் உங்களின் கடின பணி புரிகிறது இந்த தளங்கள் மிகப்பயனுள்ளவை உங்கள் அறிவியல் கட்டுரைக்கு நான் ரசிகன் உங்கள் அறிமுகங்கள் சோடை போகுமா?
    அதிக அறிவியல் கட்டுரைகளை நீங்கள் படைக்க வேண்டும்....!

    ReplyDelete
  19. மிக்க நன்றி வீச்சு

    ஆண்களுக்கு ஹிமோகுளோபின் முக்கியமான பதிவு.உஙக்ள் அறிமுகம் மூலம் என் பதிவு பல ஆண்களுக்கும் பயன் பட்டால் ரொமப் சந்தோஷம்

    ReplyDelete
  20. அறிவியலை அனைவரும் அறிந்திட வேண்டும்..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது