07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, June 20, 2012

பஞ்ச பூதங்களும் முக வடிவாகும்...

வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

இன்றைய நமது அறிமுகமாக பஞ்ச பூதங்கள் போல் ஐவரைக்  கொணர்ந்திருக்கிறேன்.

முதலாவது வலைப் பதிவர் கவிதா அவர்கள். இவர் 2006 மார்ச் முதல் வலையுலகில் வலம் வருகிறார். இவர் எழுதிய கொலை செய்யப் போகிறேன் நான் ரசித்துப் படித்த பதிவு. மிகவும் சுவாரசியமாகவும் முடிவைக் கணிக்க முடியாதபடியும் இருந்தது.

இரண்டாமவர் பாச மலர் அவர்கள். இவர் எழுதிய நிச்சலனமற்ற பொழுதுகளில் என்கிற பதிவினைப் படிக்கும் போது புரியவில்லை எனினும், புரிந்தவுடன் ஆம் என அனைவரும் அங்கீகரிக்கும்படிக்கு இருந்தது.

மூன்றாவதாக, திரு.நேச மித்திரன் அவர்கள். பெண்ணாகப் பிறந்ததினாலோ என்னவோ, பெண்மையைப் போற்றினாலோ அல்லது பெண்மைக்கு ஆதரவாய்ப் பேசினாலோ மனம் அவர்களை நாடுகிறது. பெண்மை போற்றும் மத்தகம் இதோ.

அடுத்த வலையுலக நண்பர், சிவகுமாரன் அவர்கள். 'குடி'மகனைக் கணவனாகக் கொண்டால் நம் பெண்கள் வேண்டுமானால் அனுசரித்துப் போகலாம். ஆனால், இவரின் கவிதை நாயகி பாரதி கண்ட... இல்லையில்லை... இளங்கோ கண்ட புதுமைப்பெண். இவரின் புலம்பல் சிலம்பின் புலம்பலாய்.

ஐந்தாமவர், திரு. வை.கோபால கிருஷ்ணன் அவர்கள். இவ்வளவு நேரமும் எந்தப் பதிவைக் குறிப்பிடுவது எனத் தெரியாமல், அவரது பதிவிற்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். இவரது பதிவுகள் பலவற்றை ( நூற்றுக்கும் மேல் ) ஒரே இரவில் படித்து முடித்திருக்கிறேன்.

அடுத்த சில பதிவர்களுடன், அடுத்த முறை சந்திக்கிறேன்.

இன்றைய நாள் இனிய நாளாகட்டும்,
நுண்மதி.

28 comments:

  1. //ஐந்தாமவர்,

    திரு. வை.கோபால கிருஷ்ணன் அவர்கள்.

    இவ்வளவு நேரமும் எந்தப் பதிவைக் குறிப்பிடுவது எனத் தெரியாமல், அவரது பதிவிற்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறேன்.

    இவரது பதிவுகள் பலவற்றை
    ( நூற்றுக்கும் மேல் )
    ஒரே இரவில் படித்து முடித்திருக்கிறேன். //

    அன்புள்ள [நுண்மதி] கெளரி லக்ஷ்மி,

    தங்களின் இன்றைய அறிமுகங்களில் என் பெயரையும் இடம் பெறச்செய்துள்ளதற்கு என் நன்றிகள்.

    oooooooooooooo

    தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யும் பதிவர்களுக்கு, அவர்களின் சமீபத்திய [Latest] பதிவுகளுக்குச் சென்று, வலைச்சரத்தின் LINK கொடுத்து தகவல் தெரிவிக்கவும்.

    அப்போது தானே, அவர்களுக்கு இதுபற்றித் தெரியவரும்.

    நீங்கள் செய்ய வேண்டிய இந்த வேலையை இன்று ஒருநாள் மட்டும் நானே செய்து விட்டேன். நாளை முதல் தாங்களே சம்பந்தப் பட்டவர்களுக்குத் தகவல் தெரிவித்து விடவும்.

    ooooooooo

    நேற்று செவ்வாய்க்கிழமை ஏன் வலைச்சரப்பக்கமே வரவில்லை.
    ஏழு நாட்களில் இரண்டாம் நாளே விடுப்பா ? விடுமுறையா ? OK

    ooooooooo

    திங்கள்கிழமை உங்களுக்கு வலைச்சரத்திற்கு வந்திருந்த பின்னூட்டங்களுக்கு நீங்கள் ஏதாவது பதில் எழுதியிருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?

    தயவுசெய்து பதில் எழுதுங்கள்.

    oooooooooo

    பிரியமுள்ள
    vgk

    ReplyDelete
  2. மிக்க நன்றி நுண்மதி..அறிமுகத்துக்கு...

    மிக்க நன்றி திரு. வை. கோ அவர்களுக்கு...

    ReplyDelete
  3. எல்லோருக்கும் பிடித்தமான வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  4. நுண்மதி- கதையை படித்ததற்கும், அதை வலைச்சரத்தில் அறிமுகப்படித்தியதற்கும்.. ரொம்ப நன்றிங்க.

    உங்க பெயர் ரொம்ப நல்லா இருக்கு. :)

    ReplyDelete
  5. ஐந்தில் இருவர் புதியவர்கள்...
    அருமையான அறிமுகங்கள்...
    பின்னூட்டங்களுக்கு பதிலிடுவது...
    அறிமுகங்களுக்கு தெரிவித்து வலைச்சர வாசம் செய்ய வைப்பது...
    இன்னும் அறிமுகங்களை சேர்த்து பதிவை சற்றே பெரியதாக்குவது இன்னும் கொஞ்சம் ஐயா சொல்வது போல் மெனக்கெடுங்களேன். கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்துங்கள் சகோதரி... திரும்ப கேட்டாலும் சீனா ஐயா தரமாட்டார்.
    வாழ்த்துக்கள்... கலக்குங்கள்...

    ReplyDelete
  6. பாச மலர் / Paasa Malar said...
    //மிக்க நன்றி நுண்மதி..அறிமுகத்துக்கு...

    மிக்க நன்றி திரு. வை. கோ அவர்களுக்கு...//

    பாசமலரின் நன்றியில் பாசம் உள்ளது.
    அந்தப் பாசத்தின் நன்றிக்கு நன்றி.

    ReplyDelete
  7. விச்சு said...
    //எல்லோருக்கும் பிடித்தமான வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.//

    ஆஹா! இந்தக் கருத்தளித்துள்ள விச்சு சாரை எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

    நான் எல்லோருக்கும் பிடித்தமானவனா?

    கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி, சார்.

    ReplyDelete
  8. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  9. \\திண்டுக்கல் தனபாலன் said...
    முதல் மூன்று அறிமுகங்கள் புதியவை. அவர்கள் தளத்திற்கு செல்கிறேன். மிக்க நன்றி சகோதரி !\\

    நன்றி சகோதரரே...

    ReplyDelete
  10. \\தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யும் பதிவர்களுக்கு, அவர்களின் சமீபத்திய [Latest] பதிவுகளுக்குச் சென்று, வலைச்சரத்தின் LINK கொடுத்து தகவல் தெரிவிக்கவும்.

    அப்போது தானே, அவர்களுக்கு இதுபற்றித் தெரியவரும்.

    நீங்கள் செய்ய வேண்டிய இந்த வேலையை இன்று ஒருநாள் மட்டும் நானே செய்து விட்டேன். நாளை முதல் தாங்களே சம்பந்தப் பட்டவர்களுக்குத் தகவல் தெரிவித்து விடவும்.\\

    இனிமேல் செய்து விடுகிறேன் சார்.

    \\நேற்று செவ்வாய்க்கிழமை ஏன் வலைச்சரப்பக்கமே வரவில்லை.
    ஏழு நாட்களில் இரண்டாம் நாளே விடுப்பா ? விடுமுறையா ? OK

    ooooooooo

    திங்கள்கிழமை உங்களுக்கு வலைச்சரத்திற்கு வந்திருந்த பின்னூட்டங்களுக்கு நீங்கள் ஏதாவது பதில் எழுதியிருக்கலாமே! ஏன் அவ்வாறு செய்யவில்லை?

    தயவுசெய்து பதில் எழுதுங்கள்.\\

    மன்னிக்கணும் சார். கொஞ்சமே கொஞ்சம் அலுவலகப் பணிகளுக்கும், வீட்டுப் பொறுப்புகளுக்குமிடையே மாட்டிக் கொண்டு விட்டேன். அதனால் தான் விடுமுறை, தாமதம் எல்லாமே.

    ReplyDelete
  11. \\பாச மலர் / Paasa Malar said...
    மிக்க நன்றி நுண்மதி..அறிமுகத்துக்கு...

    மிக்க நன்றி திரு. வை. கோ அவர்களுக்கு...\\

    வருகைக்கு நன்றி தோழி...

    ReplyDelete
  12. \\கவிதை நாடன் said...
    அருமையான அறிமுகங்கள் எல்லாம் நல்லா இருக்கிறது \\

    நன்றி நண்பரே...

    ReplyDelete
  13. \\விச்சு said...
    எல்லோருக்கும் பிடித்தமான வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.\\

    உண்மைதான்... எனக்கும் அவரைப் பிடிக்கும்...

    ReplyDelete
  14. \\கவிதா | Kavitha said...
    நுண்மதி- கதையை படித்ததற்கும், அதை வலைச்சரத்தில் அறிமுகப்படித்தியதற்கும்.. ரொம்ப நன்றிங்க.\\

    கதையின் கருவின் மீதான உங்களின் பார்வை எனக்கும் பிடித்திருந்தது தோழி.

    \\உங்க பெயர் ரொம்ப நல்லா இருக்கு. :)\\

    நன்றி தோழி...

    ReplyDelete
  15. \\ வரலாற்று சுவடுகள் said...
    அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.!\\

    வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  16. எனக்கு நீங்கள் கூறிய தளங்கள் பல புதிது தான் நன்றி

    ReplyDelete
  17. புதிய அறிமுகங்களிற்கு வாழ்த்துடன் தங்களிற்கும் நல்வாழ்த்து சகோதரி. அறிதுகங்கள் நன்றாக உள்ளது. நேரமிருக்கும் போது செல்லலாம்இ நன்றி. நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  18. ஐந்தாமவர், திரு. வை.கோபால கிருஷ்ணன் அவர்கள். இவ்வளவு நேரமும் எந்தப் பதிவைக் குறிப்பிடுவது எனத் தெரியாமல், அவரது பதிவிற்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். இவரது பதிவுகள் பலவற்றை ( நூற்றுக்கும் மேல் ) ஒரே இரவில் படித்து முடித்திருக்கிறேன்.

    சிறப்பான அறிமுகம்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  19. இராஜராஜேஸ்வரி said...
    ஐந்தாமவர், திரு. வை.கோபால கிருஷ்ணன் அவர்கள். இவ்வளவு நேரமும் எந்தப் பதிவைக் குறிப்பிடுவது எனத் தெரியாமல், அவரது பதிவிற்கான இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். இவரது பதிவுகள் பலவற்றை ( நூற்றுக்கும் மேல் ) ஒரே இரவில் படித்து முடித்திருக்கிறேன்.

    //சிறப்பான அறிமுகம்..
    பாராட்டுக்கள்..//

    மிக்க மகிழ்ச்சி ...;)))))

    தங்களுக்கும்
    என் அன்பான
    நன்றிகள்.

    ReplyDelete
  20. \\Seeni said...
    vaazhthukkal!\\

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  21. \\PREM.S said...
    எனக்கு நீங்கள் கூறிய தளங்கள் பல புதிது தான் நன்றி\\

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  22. \\kovaikkavi said...
    புதிய அறிமுகங்களிற்கு வாழ்த்துடன் தங்களிற்கும் நல்வாழ்த்து சகோதரி. அறிதுகங்கள் நன்றாக உள்ளது. நேரமிருக்கும் போது செல்லலாம் நன்றி. நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.\\

    நன்றி தோழி.

    ReplyDelete
  23. \\இராஜராஜேஸ்வரி said...
    சிறப்பான அறிமுகம்.. பாராட்டுக்கள்..\\

    நன்றி தோழி.

    ReplyDelete
  24. தாமதமாய் வந்து நன்றி தெரிவிப்பதற்கு வருந்துகிறேன்.
    திரு வைகோ சார் அவர்களால் தான். எனக்குத் தெரியவந்தது.
    மீண்டும் நன்றிகள். இருவருக்கும்.

    ReplyDelete
  25. மிக்க நன்றிகள் நுண்மதி !

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது