07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, August 17, 2012

நாடோடியின் பார்வையில்_மருத்துவம்




வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

இன்று மனிதன் ஒவ்வொருவரும் தான் சம்பாதிக்கும் பணத்தில் கணிசமான தொகையை மருத்துவ உதவிக்குச் செலவு செய்கிறோம். நாளுக்கு நாள் புதிய நோய்களும் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கிறது. அதே போல் புதிய புதிய தொழிற்நுட்பத்துடன் மருத்துவ மனைகளும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சாதரணத் தலைவலைக்கு மருந்து வாங்க ஒரு மருத்துவ மனைக்குச் சென்றால் அவர்களின் மருத்துவ மனைகளில் உள்ள அனைத்து லேப் மெசின்களின் பரிசோதனைக்குப் பிறகு தான் மருத்துவரையே பார்க்க முடிகிறது. எல்லாப் பரிசோதனைகளையும் முடித்து மருத்துவரை பார்க்க சென்றால், அவரும் உங்களுக்கு "எல்லாம் நார்மலா இருக்கு" என்று சொல்லி ஒரு பெரிய மருந்து லிஸ்டை எழுதுவார். அதுவும் அந்த மருத்துவ மனையில் உள்ள மெடிக்கல் ஷாப்பிலேயே வாங்க வலியுறுத்தப்படும். எல்லாம் நார்மலா இருந்தா எதுக்குடா இந்தப் பெரிய லிஸ்டுனு கேட்டா? நம்மளை ஏதோ வேற்றுகிரக வாசி போலப் பார்ப்பார்கள்.

இன்றைய மக்கள் ஆங்கில மருத்துவ முறையால் எல்லா நோய்களையும் எந்த பக்க விளைவும் இல்லாமல் குணப்படுத்த முடியும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல என்பதை மனசாட்சி உள்ள டாக்டர்கள் ஒத்து கொள்வார்கள். உலகத்தில் உள்ள ஒவ்வொரு மருத்துவ முறைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. சில பெரிய‌ நோய்ளை கூட‌ சில மருத்துவ முறைகளால் எளிதில் குணப்படுத்த முடியும்.

முன்பெல்லாம் சிறுசிறு நோய்களுக்காக மருத்துவமனைகளுக்கு மக்கள் அதிகமாகப் போவது இல்லை. தனக்குத் தெரிந்த "கை வைத்திய" முறைகளை முயற்சி செய்து பார்த்துவிட்டுத் தான் மருத்துவமனைக்குச் செல்வார்கள். அந்தக் காலத்தில் உள்ள பெரியவர்களுக்குத் தனது உடல் நிலையைப் பற்றிய முழுமையான புரிதல் இருந்தது. இப்போது இருக்கும் நாம், நமது உடலைப் பற்றிய மற்றும் ஆரோக்கியம் குறித்த பார்வைகள் மிகக் குறைவு என்று தான் நினைக்கிறேன். உணவுப் பழக்கம் வழ்க்கம் மற்றும் உடற்பயிர்ச்சிக் குறித்த பார்வைகளும் குறைவு. இவைகளைப் பற்றி இணையங்கள் அதிகமான தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த அறிமுகப் பதிவில் மருத்துவச் சம்பந்தமான தளங்களைத் தொகுத்துள்ளேன்.

பதிவர் பெயர்: ஷஹி

புற்று நோய் பற்றிய முழுமையான தகவல்களை இந்த பதிவில் அறிய‌ முடியும். நீண்ட விரிவான கட்டுரை. இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் மிக அவசியம். நண்பர்கள் இந்த கட்டுரையை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

புற்றுநோய், அறிகுறி, சிகிச்சை , ஆறுதல் -நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: வேல்முருகன்

நோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்தால் நோய் முற்றிலும் குணமாகி விடும் என்பதை மறுபரிசீலனை செய்ய சொல்கிறது இந்த பதிவு. இவரின் மாற்றுப் பார்வையை நீங்களும் படிங்க.

ஹோமியோபதி பார்வையில் அறுவைச்சிகிச்சை நோய்கள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: Muruganandan M.K.

இது டாக்டர் முருகானந்தம் அவர்களின் தளம், இவரின் எழுத்து நடை அனைவராலும் புரியும் படி இருக்கும். நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். உங்களுக்கும் பயன்படும் இங்குச் சென்று பாருங்கள்.

மருந்துகளால் மாறாத இருமல்.

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: போளூர் தயாநிதி

"உணவே மருந்தாகும்" என்பது நம்முடைய முன்னோர்களின் கருத்து. இவர் சித்த மருத்துவம் என்ற தளத்தில் திப்பிலியின் மருத்துவ குணங்களை நமக்கு தருகிறார். நீங்களும் படித்து பாருங்க.

திப்பிலியின் மருத்துவக் குணங்கள்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: Dr.S.Natarajan

தமிழ் மருத்துவம் என்ற வலைத்தளத்தில் நீரழிவு நோய்க்கான உணவுமுறையை அட்டவணை போட்டு விரிவாக எழுதியிருக்கிறார். வேறு பல மருத்துவ பதிவுகளையும் எழுதியிருக்கிறார். நீங்களும் போய் படிங்க.

நீரிழிவு – உணவு முறை.

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: ஷேர்கான்

இந்திய மருத்துவம் என்ற தலைப்பில், நமது நாட்டில் உள்ள மருத்துவமுறைகளையும், அரசின் பங்களிப்பையும் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். கட்டுரையில் அவரின் உழைப்பு தெரிகிறது. கண்டிப்பா படிங்க.

இந்திய மருத்துவம்..

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: ஜ.ஹூசைன்

வெளிநாட்டில் வாழும் பலரும் முடி உதிர்வது பற்றி கேட்டதால் அதை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். தலைமுடியில் உள்ள மொத்த பிரச்சனைக்கும் தீர்வுகளை சொல்லியிருக்கிறார்.

வெளி நாட்டில் வாழும் பல சகோதரர்கள் முடி உதிர்வை தடுக்க

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: நா.சுரேஸ் குமார்

கிராமங்களில் "பாட்டி வைத்தியம்" அல்லது "கை வைத்தியம்" என்று சொல்லுவார்கள் அதைப்பற்றி விரிவாக எழுதி மூலிகைகளின் படங்களையும் தொகுத்திருக்கிறார். கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேன்டிய பதிவு.

தேவையான எளிய மூலிகை மருத்துவம் (Health Tips)

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

பதிவர் பெயர்: DR.SRIJITH

இவர் ஒரு அக்குபஞ்சர் டாக்டர். அக்கு பஞ்சர் மருத்துவ முறையை பற்றி ஐந்து பதிவுகளாக விரிவாக எழுதியுள்ளார். இப்போது தொடர்ந்து இவர் எழுதுவது இல்லை. அந்த பதிவுகளை படிக்க இங்க செல்லுங்க.

PIN விளைவுகள் 5 - அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு பார்வை

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X 

குறிப்பு: இன்று அறிமுக படுத்திய வலைத்தளங்கள் நண்பர்கள் சிலருக்கு அறிமுகமானவையாக இருக்கலாம். புதியவர்களுக்காக நான் தொகுத்துள்ளேன்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

மீண்டும் நாளை சந்திப்போம்.....

31 comments:

  1. ஏற்கனவே உங்களது இலவச நூல்கள் என்ற பதிவை புக்மார்க் செய்து வைத்திருந்தேன்! இப்போது ரெண்டாவது முறையாக உங்களது இந்த பதிவையும் புகமார்க் செய்யவச்சுடீங்களே!

    அருமையான பதிவு! இன்னொரு புக்மார்க் பதிவையும் எதிர்பார்கிறேன் :)

    ReplyDelete
  2. அனைவருக்கும் பயனுள்ள பதிவு.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவுகளை
    பதிவாக்கி கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அறியாத தளங்கள் பல... மிக்க நன்றி...

    அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...(TM 1)

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள பகிர்வு. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அனைவருக்கும் பயன்படும் தகவல்கள். சுட்டிய தலங்கள் சென்று படிக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  7. good
    nalvaalthu.
    Vetha. Elangathilakam.

    ReplyDelete
  8. நல்ல தகவல்கள் தரும் பக்கங்கள் அறிமுகம்...

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல்கள். அறிந்து கொண்டேன் . நன்றி நண்பரே .. தொடருங்கள்

    ReplyDelete
  11. மருத்துவப் பதிவுகள் பற்றிய நல்ல தொகுப்பு.
    எனது பதிவுகளையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
  12. பயனுள்ள அறிமுகங்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html




    ReplyDelete
  13. அனைத்துமே அறியாத தளங்கள்.ஆனாலும் மகிழ்வு தங்கள் பணி கண்டு.வாழ்த்துக்கள் சொந்தமே!இதுமுதல் அறிகிறேன் அவர்களை!

    இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!

    ReplyDelete
  14. பயனுள்ள சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  15. @வரலாற்று சுவடுகள் said...
    //ஏற்கனவே உங்களது இலவச நூல்கள் என்ற பதிவை புக்மார்க் செய்து வைத்திருந்தேன்! இப்போது ரெண்டாவது முறையாக உங்களது இந்த பதிவையும் புகமார்க் செய்யவச்சுடீங்களே!

    அருமையான பதிவு! இன்னொரு புக்மார்க் பதிவையும் எதிர்பார்கிறேன் :)//

    கண்டிப்பா எழுதுகிறேன் நண்பரே..

    தொடர்வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  16. @ Jaleela Kamal said...
    //அனைவருக்கும் பயனுள்ள பதிவு.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

    வாங்க சகோ.

    வாழ்த்துக்கு ரெம்ப நன்றி

    ReplyDelete
  17. @ Ramani said...
    //அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவுகளை
    பதிவாக்கி கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்//

    வாங்க ரமணி சார்.

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  18. @திண்டுக்கல் தனபாலன் said...
    //அறியாத தளங்கள் பல... மிக்க நன்றி...

    அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...(TM 1)//

    வாங்க தனபாலன்,

    உங்களுக்கு அறிமுகம் இல்லாத தளங்களை அறிய தந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே..

    ReplyDelete
  19. @Lakshmi said...
    //மிகவும் பயனுள்ள பகிர்வு. அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    வாங்க சகோ.

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  20. @ பட்டிகாட்டான் Jey said...
    //அனைவருக்கும் பயன்படும் தகவல்கள். சுட்டிய தலங்கள் சென்று படிக்கிறேன். நன்றி.//

    கண்டிப்பா படிங்க நண்பரே..

    வாழ்த்துக்கு ரெம்ப நன்றி.

    ReplyDelete
  21. @kovaikkavi said...
    //good
    nalvaalthu.
    Vetha. Elangathilakam.//

    வாங்க சகோ.

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  22. @ arul said...
    //arumayana arimugangal//

    வாங்க அருள்,

    வாழ்த்துக்கு ரெம்ப நன்றி.

    ReplyDelete
  23. @சே. குமார் said...
    //நல்ல தகவல்கள் தரும் பக்கங்கள் அறிமுகம்..//

    வாங்க குமார்.

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  24. @Ayesha Farook said...
    //பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

    வாங்க சகோ.

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி. எல்லா தளங்களையும் படியுங்கள்.

    ReplyDelete
  25. @Rasan said...
    //பயனுள்ள தகவல்கள். அறிந்து கொண்டேன் . நன்றி நண்பரே .. தொடருங்கள்//

    உங்களுக்கு பயனுள்ள தளங்களை அறிமுகம் செய்த்தில் எனக்கும் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  26. @Muruganandan M.K. said...
    //மருத்துவப் பதிவுகள் பற்றிய நல்ல தொகுப்பு.
    எனது பதிவுகளையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.//

    வாங்க டாக்டர் சார்.

    உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சியே..

    ReplyDelete
  27. @s suresh said...
    //பயனுள்ள அறிமுகங்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
    குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html//

    வாங்க சுரேஷ்,

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி. எல்லா தளங்களையும் படியுங்கள்.

    ReplyDelete
  28. @Athisaya said...
    //அனைத்துமே அறியாத தளங்கள்.ஆனாலும் மகிழ்வு தங்கள் பணி கண்டு.வாழ்த்துக்கள் சொந்தமே!இதுமுதல் அறிகிறேன் அவர்களை!//

    வாங்க சகோ,

    உங்களுக்கு அறிமுகம் இல்லாத தளங்களை அறிய தந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே..

    ReplyDelete
  29. @ இராஜராஜேஸ்வரி said...
    //பயனுள்ள சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//

    வாங்க சகோ,

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  30. மிக சிறந்த மருத்துவ குறிப்பு களுடன் எமது இடுகையும் தெரிவு செய்தமைக்கு பாராட்டுகளும் நன்றியும் .

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது