07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, August 18, 2012

நாடோடியின் பார்வையில்_இயற்கையும், விவசாயமும்


வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்,

இயற்கையும, விவசாயமும் ஒன்றையென்று தொடர்புடையது. இன்றைக்கு இந்த இரண்டும் வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது. காடுகள், ஏரிகள், குள்ங்களை அழித்து வானளாவியக் கட்டிடங்களைக் கட்டதொடங்கி விட்டோம். விவசாயம் செய்யும் நிலங்கள் பல ஆளும் அரசால் தொழிற்சாலைகளுக்குத் தாரை வார்க்கப்படுகிறது. இந்தியா "மிகப் பெரிய விவசாய நாடு" என்று ஏட்டில் உள்ளது கறிக்கு உதவாத சுரைக்காயகவே இருக்கிறது. இயற்கையால் நமக்குக் கிடைக்கும் பல வளங்களை நாம் அழித்து விட்டு, கனவு உலகில் மிதக்க தொடங்கிவிட்டோம். இயற்கையைப் பற்றியும், விவாசாயத்தைப் பற்றியும் சிறிதும் அறியாத ஒரு தலை முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நமது குழந்தைகளுக்கு இயற்கையின் அவசியத்தையும், , அவற்றைப் பாரமரிப்பது பற்றியும் சொல்லிக் கொடுப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை. இவற்றை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க நமக்கு இயற்கையைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் தகவல்கள் தெரிய வேண்டும்.

இயற்கையின் அழிவு, பல்லுயிர் பெருக்கம், ஓசோன் துளை, மரபணு விதை மாற்றக் காய்கறிகள் என்று எந்தத் தலைப்பில் நீங்கள் இணையத்தில் தேடினாலும் பல தகவல்களைக் கொடுக்கிறது. இன்றைக்கு நானும் இவைகளைப் பற்றி எழுதும் சில வலைத்தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: gandhimathikumar

இயற்கை விவசாயத்தையும், அதன் அவசியத்தையும் அனுபவ பூர்வமாக‌ விரிவாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறார். இவரது வலைத்தளத்தில் உள்ள எல்லா பதிவுகளையும் படிக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறேன்.

இயற்க்கை விவசாயம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: kothandaraman

"விவாசாயின் குரல்" என்ற வலைத்தளத்தில், நமது நாட்டின் வேளாண்மையை பற்றிய தகவல்களையும், அவலங்ளையும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பற்றி எழுதியிருக்கிறார்.

நமது நாட்டு வேளன்மையின் பரிதாப நிலையும் நாம் செய்ய வேண்டியதும்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: Thoppil Shuhaib

"கடலோரம்" என்ற வலைத்தளத்தில் விலகி செல்கிறது விவசாயம் என்ற தலைப்பில் தமிழகத்தில் விவசாய எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது என்ற புள்ளி விவரங்களுடன், நாம் உணவு பொருளுக்காக அண்டை மாநிலங்களை சாந்திருக்க வேண்டிய அவலத்தையும் நமக்கு அறிய தருகிறார்

விலகிச்செல்கிறது விவசாயத் தலைமுறை!

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: sindhu 

பிளாஸ்டிக் பை எதனால் தவிர்க்க வேண்டும் என்பதற்கு எழு காரணத்தை விளக்கியிருக்கிறார். இந்தப் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதன் தீமையை மக்களும் புரியத் தொடங்கியுள்ளன. அனைவரும் அவசியம் திஎஇந்து கொள்ள வேண்டிய பதிவு.

பூமியை காப்போம் பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம்

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

பதிவர் பெயர்: ஜானகிராமன்.

மனிதம் மட்டும் வாழ்வதற்கு இந்தப் பூமிப் படைக்கப்படவில்லை, எல்லா உயிரினங்களும் வாழ்த்தான். தாவரங்களும், பிற உயிரினங்களும் பூமியில் வாழ்ந்தால் மட்டுமே மனுதனும் வாழ இந்தப் பூமி ஏதுவாக அமையும் என்பதை விரிவாக எழுதியிருக்கிறார்.

மனிதனுக்கு மட்டுமா உலகம்?

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

அப்படியே நானும் இயற்கையை பற்றி எழுதிய சில பதிவுகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ப‌ல்லுயிர் பெருக்க‌ம்_ப‌யோடைவ‌ர்சிட்டி

---------- X ----------- X ---------- X ----------- X ---------- X ----------- X

குறிப்பு: இன்று அறிமுக படுத்திய வலைத்தளங்கள் நண்பர்கள் சிலருக்கு அறிமுகமானவையாக இருக்கலாம். புதியவர்களுக்காக நான் தொகுத்துள்ளேன்.

நல்வாழ்த்துக்களுடன்,
நாடோடி.

மீண்டும் நாளை சந்திப்போம்.....

24 comments:

  1. அருமையான பதிவு.. தொடர்ந்து கலக்குங்க!

    ReplyDelete
  2. நல்ல பதிவு.அறிந்து கொண்டேன் . பயனுள்ள தகவல்கள். பயோடைவர்சிட்டி பற்றி தங்கள் தளத்தில் படித்தேன் . அருமையான பதிவு. நன்றி நண்பரே..தொடருங்கள்.

    ReplyDelete
  3. புதிய தளங்கள்
    பயன்கள் அதிகம்
    பாராட்டுகள் உங்களுக்கு

    ReplyDelete
  4. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இயற்கையைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் தகவல்கள் அளிக்கும் தளங்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.. நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  6. இயற்கையைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் தகவல்கள் அளிக்கும் தளங்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.. நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  7. எனக்கு அனைத்தும் புதிய தளங்கள்...
    இதுவரை தெரியாமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறேன்...

    இன்று நீங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து தளங்களும் (மனிதனுக்கு முதுகுத் தண்டுப் போல) மிகவும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

    அனைத்து அறிமுகங்களுக்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல... (TM 1)

    ReplyDelete
  8. இயற்கையின் அறிமுகத்திற்கு
    இனிய வாழ்த்து அனைவருக்கும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  9. பயணுள்ள, வித்தியாசமான தலைப்பிலான பகிர்வுகள். மிகவும் நன்றி, விரும்பத்தகுந்த பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு.

    ReplyDelete
  10. புதிய தளங்கள் அறிமுகம் . நன்றி

    ReplyDelete
  11. @வரலாற்று சுவடுகள் said...
    //அருமையான பதிவு.. தொடர்ந்து கலக்குங்க!//

    வாங்க சகோ,

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி.

    ReplyDelete
  12. @Rasan said...
    //நல்ல பதிவு.அறிந்து கொண்டேன் . பயனுள்ள தகவல்கள். பயோடைவர்சிட்டி பற்றி தங்கள் தளத்தில் படித்தேன் . அருமையான பதிவு. நன்றி நண்பரே..தொடருங்கள்.//

    வாங்க சகோ,

    எனது தளத்தில் உள்ள பதிவை படித்து கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு ரெம்ப நன்றி.

    ReplyDelete
  13. @கோவை மு சரளா said...
    //புதிய தளங்கள்
    பயன்கள் அதிகம்
    பாராட்டுகள் உங்களுக்கு//


    வாங்க சகோ,

    உங்களுக்கு பயனுள்ள தளங்களை அறிமுகம் செய்த்தில் எனக்கும் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  14. @Lakshmi said...
    //அனைவருக்கும் வாழ்த்துகள்.//

    வாங்க சகோ,

    தொடர்வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  15. @இராஜராஜேஸ்வரி said...
    //இயற்கையைப் பற்றியும், விவசாயத்தைப் பற்றியும் தகவல்கள் அளிக்கும் தளங்களின் அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்.. நிறைவான நன்றிகள்..//

    வாங்க சகோ,

    உங்களுக்கு பயனுள்ள தளங்களை அறிமுகம் செய்த்தில் எனக்கும் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  16. @திண்டுக்கல் தனபாலன் said...
    //எனக்கு அனைத்தும் புதிய தளங்கள்...
    இதுவரை தெரியாமல் இருந்ததற்கு வருத்தப்படுகிறேன்...

    இன்று நீங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து தளங்களும் (மனிதனுக்கு முதுகுத் தண்டுப் போல) மிகவும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

    அனைத்து அறிமுகங்களுக்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல... (TM 1)//

    வாங்க தனபாலன்,

    உங்களின் நீண்ட கருத்துரைக்கு ரெம்ப நன்றி

    உங்களுக்கு உபயோகமான‌ தளங்களை அறிய தந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே..

    ReplyDelete
  17. @arul said...
    //nice list//

    வாங்க அருள்,

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி

    ReplyDelete
  18. @ kavithai (kovaikkavi) said...
    //இயற்கையின் அறிமுகத்திற்கு
    இனிய வாழ்த்து அனைவருக்கும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com//

    வாங்க சகோ,

    உங்களுக்கு பயனுள்ள தளங்களை அறிமுகம் செய்த்தில் எனக்கும் மகிழ்ச்சியே

    ReplyDelete
  19. @ஹுஸைனம்மா said...
    //பயணுள்ள, வித்தியாசமான தலைப்பிலான பகிர்வுகள். மிகவும் நன்றி, விரும்பத்தகுந்த பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு.//

    வாங்க சகோ,

    உங்களுக்கு வித்தியசமாக‌ பயனுள்ள தளங்களை அறிமுகம் செய்த்தில் எனக்கும் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  20. @Gnanam Sekar said...
    //புதிய தளங்கள் அறிமுகம் . நன்றி//

    வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரெம்ப நன்றி. எல்லா தளங்களையும் படியுங்கள்.

    ReplyDelete
  21. பகிர்வும் அறிமுகங்களும் அருமை சகோ.ஸ்டீபன்.

    ReplyDelete
  22. பயனுள்ள அறிமுகங்கள்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
    http://thalirssb.blogspot.in/2012/08/180.html
    பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

    ReplyDelete
  23. இந்தவாரத்தின் இனிய வலைச்சர ஆசிரியர் நாடோடி அவர்களே. தாங்கள் எனது வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி. தாங்கள் பகிர்ந்துகொண்ட மற்ற பதிவுகளையும் பார்வையிட்டேன். பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. அரிய, அற்புதமான தொகுப்பு.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது