07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, June 27, 2014

கடல் கடந்தும் வளரும் தமிழ்! 2

வணக்கம் நண்பர்களே!
நேற்றைய பதிவின் தொடக்கம் தான் இது. கடல்கடந்து வாழும் தமிழர்கள் தமிழின் வளர்ச்சிக்கு செய்திடும் பங்கினை எண்ணி எனக்கு எப்பவும் அவர்கள் மீது மிகுந்த ஒரு மரியாதை உண்டு. அதன் தொடர்ச்சியாக இன்று ஆண்குயில்கள்!!

என்றுமுள செந்தமிழன் கம்பன் பெயரில் இயங்கும் கம்பன் கழகம் பாரதிதாசன் அவர்களின் வெண்பாவின் வகைகள் பற்றிய பதிவு உதாரணக்கவிதையோடு
மடக்கு அணி வெண்பா! - பகுதி 2

யாழ்பாவாணன் ஐயா அவர்கள் யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் என்று அழைத்து தமிழில் கவிதைகள் எப்படி எழுத வேண்டும். அன்றாடம் செயல்களைக் கூட எப்படி கவியாக்க முடியும் என்று எல்லாம் வழிகாட்டுகிறார்
உன் சமையலறையில் கட்டுரையா? / கவிதையா?

அதிரடியான அரசியல் பதிவுகள், அடிதடினா பூரிக்கட்டை, கருத்துரை இடுவதில் தனி ஸ்டைல் இப்படி அனைத்திலும் தனித்து இயங்கும் அவர்கள் உண்மைகள் வலைப்பக்க மதுரைத்தமிழன் சொல்லாற்றல் அனைவரையும் சிந்திக்கவும் பல நேரம் சிரிக்கவும் வைக்கும்
அவர்கள் உண்மைகள்

பணியின் காரணமாக அயல்நாட்டில் இருந்தாலும் வலையுலகில் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி என நடத்திக் கலக்கி வரும் இளைஞர் சிறகடிக்கும் நினைவுகளில் நீந்தி வருகிறார் என்ன தான் சொல்கிறார்னு பார்த்து வருவோமா!
சிறகடிக்கும் நினைவலைகள்-6

தஞ்சையில் பிறந்து குவைத் பணி செய்து வரும் துரை செல்வராஜ் ஐயா அவர்களின் ஆன்மிகப்பதிவுகள் அசர வைக்கும். குழந்தை மனம் கொண்ட ஒரு நல்லவரின் எண்ணங்களில் கண்ணதாசனின் நினைவலைகள்
தஞ்சையம்பதி

படித்தது ஆங்கிலவழிக்கல்வி, பணி புரிவது ஆஸ்திரேலியா. ஆனாலும் தமிழில் கலக்கி வரும் பதிவர், குழந்தைகளுக்கு தமிழ்க் கற்றுக் கொடுக்கும் ஆசான் உண்மையானவன் சொக்கன் சுப்பிரமணியன் அவர்களின் தமிழும் நானும் பதிவு
தமிழும் நானும்

மதுரைத்தமிழன் கொழுத்திப் போட்ட பத்து கேள்விகளுக்கு திரு.நாஞ்சில் மனோ அவர்களின் பதில்கள்
பத்து கேள்வியும் ஈசியா இருக்கே பரிசில் கிடைக்குமா ?

மனசு பேசுகிறது சே.குமார் அனைத்து விடயங்களையும் அலசிப்பார்ப்பவர் அப்படிப்பட்டவரின் மனதை நெகிழ வைக்கும் பதிவு
மன்னித்துவிடு பாலச்சந்திரன்

சீனியின் கவிதை இவரின் பெயரைப் போலவே இனிக்கும். வெளிநாட்டு வாழ்க்கைப் பற்றிக் கூறும் இவரது குட்டிக்கவிதை எதார்த்தம்
வினோதமான சிறை!
59 comments:

 1. வலைச்சர அறிமுகங்கள் எல்லாம் நான் தொடரும் தளங்கள் அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரர் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 2. தொடரட்டும் பணி ஐயா!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றீங்க சகோதரர்

   Delete
 3. வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றீங்க சகோதரர்

   Delete
 4. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...
  என்னையும் இவர்களுடன் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 5. வணக்கம்
  சகோதரன்.

  வித்தியாசமான தலைப்பில் பதிவர்களை அறிமுகம் செய்கின்றீர்கள்.. பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றீங்க சகோதரர்

   Delete
 6. வணக்கம்
  சகோதரன்

  என்னுடைய வலைப்பூவையும் அறிமும் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன-

  ReplyDelete
  Replies
  1. நன்றி என்பது நமக்குள் தேவையா சகோதரரே!

   Delete
 7. வணக்கம்
  எல்லாத்தளங்களும் தொடரும் தளங்கள்தான்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றீங்க சகோதரர்

   Delete
 8. ஆஹா! சகோ சொல்ல ஒண்ணுமே இல்லை.,நான் சொல்ல நினைகிறதை தம்பி அப்படியே சொல்லும்போது நான் சொல்ல என்ன இருக்கு ! நண்பர்களுக்கும், சகோக்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அக்கா எள்ளு என்றால் தம்பி எண்ணையாய் இருக்கிறார் என்று சொல்லுகிறீர்களா?

   Delete
  2. தம்பியின் எண்ணங்கள் அக்காவின் எண்ணங்களோடு ஒத்துப்போவதில் வியப்பில்லை என்றாலும் நீங்கள் இப்படி கூறியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி அக்கா. மிக்க நன்றியும் கூட..

   Delete
  3. மதுரைத்தமிழனுக்கு
   தம்பி அப்படி இருந்தால் தானே சமத்து. நாங்க எல்லாம் ரொம்ப சமத்துப் பிள்ளைங்கோ...

   Delete
 9. சகோ..!!

  என்னையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
  Replies
  1. நன்றியும் மகிழ்ச்சியும் சகோ. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி..

   Delete
 10. இளவரசர் பாண்டியனின் அவர்களால் என் தளம் அறிமுகப்படுத்தப்பட்டதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு நான் அறிமுகப்படுத்தபட்டு இருக்கிறேன் என்பதை திண்டுக்கல் தனபாலனின் வாரிசான ரூபன் எனக்கு தகவல் தந்தார் அவருக்கு எனது நன்றிகள்


  ///அதிரடியான அரசியல் பதிவுகள், ///
  தலைவர்கள் சொல்வதை செய்ததை நான் எழுதுகிறேன் அதனால் இந்த அதிரடி பதிவுகளுக்கு சொந்தகார்கள் நமது தலைவர்கள்தான் நான் இல்லை என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன்

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலனின் வாரிசான ரூபன் அவர்களே எனக்கும் தகவல் தந்தார். அவர்களுக்கு மிக்க நன்றி.

   Delete
  2. மதுரைத் தமிழா நாங்கள் DD யை குரு என்றும் அவருக்குத் தப்பாத சிஷ்யன் ரூபன் என்று சொல்ல நினைத்தோம்....தாங்கல் அருமையாக வாரிசு என்று சொல்லிவிட்டீர்கள்!ஹாஹ்ஹ்ஹாஆ...

   உண்மையே!...எங்களுக்கும் தம்பி ரூபன் தான் சொன்னார்! எங்கள் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று! எங்களுக்கு கொஞ்சம் சந்தேகம்....ஆச்சரியம் உண்மையா இருக்குமோ இல்லை தம்பி வேறு தளத்தைக் கண்டு குழம்பி தெரிவித்தாரோ என்று!...ஆனால் உண்மைதான்!..நம்மளையும் சொல்லும் அளவுக்கு இருக்கோன்னு....

   Delete
  3. மதுரைத்தமிழனின் வலைத்தளத்தில் அறிமுகம் செய்ததில் ரொம்ப மகிழ்ச்சி எனக்கு. தங்களைப் போன்றோரின் நட்பு எப்பவும் என்னோடு துணை நிற்கட்டும். ஆம் ஐயா டி டி சகோவும் ரூபன் சகோவும் அறிமுகச் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதில் தேனியை விட சுறுசுறுப்பானவர்கள். அவர்களுக்கும் நன்றிகள்...

   Delete
 11. அன்பின் பாண்டியன்..

  இன்று அறிமுகமாகியுள்ள அனைத்து நண்பர்களுக்கும்
  அன்பின் நல்வாழ்த்துக்கள்..

  இன்றைய வலைச்சரத்தில் நண்பர்கள் பலருடன் - நமது தளத்தையும் அறிமுகம் செய்வித்தமைக்கு நன்றி.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த நன்றிகள் ஐயா. தொடரட்டும் நம் நட்பு. நன்றி..

   Delete
 12. "அன்றாடம் செயல்களைக் கூட எப்படி கவியாக்க முடியும் என்று எல்லாம் வழிகாட்டுகிறார்" என எனது தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.

  யாப்பிலக்கணம் தொடங்கி, இடையில் புதுக்கவிதைக்காரரையும் இணைக்கிறேன். விரைவில் யாப்பிலக்கணம் தொடரும்.

  அதற்கிடையில்
  உன் முதலிரவுப் படுக்கையறையில் நாடகமா? கவிதையா?
  உன் கழிவறையில் முணுமுணுப்பது பாட்டா? கவிதையா?
  போன்ற தலைப்பிலான பதிவுகளைப் பதிந்த பின் தெரிவிக்கிறேன்.

  அறிஞர் அருணா செல்வம் அவர்களின் பின் அறிஞர் அ.பாண்டியன் அவர்கள் வலைச்சரமூடாக எனது தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார்.
  எல்லோருக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தமிழ்ப்பணிக்கு முதலில் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா. தங்கள் தளத்தை அறிமுகம் செய்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி..

   Delete
 13. இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்த அன்பின் ரூபன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..

  ReplyDelete
  Replies
  1. எனது நன்றிகளும் உரித்தாகட்டும்..

   Delete
 14. புதிய கோணத்தில் சிறந்த அறிமுகங்கள்

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த நன்றிகள் ஐயா. தொடரட்டும் நம் நட்பு. நன்றி..

   Delete
 15. கடல்கட்ந்தும் தமிழ் பேசும் குயில்களை அருமையாக அறிமுகம் செய்தமைக்குப் பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிகள் அம்மா. பாராட்டியமைக்கும் நன்றி,,,

   Delete
 16. கடல் கடந்தும் வளரும் தமிழில்
  தமிழ் வளர்க்கும் இன்றைய அறிமுகப் பதிவர்கள்
  அத்தனை பேருக்கும் உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள் சகோதரி

   Delete
 17. அத்தனை அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். அறிமுகம் செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள் சகோதரி

   Delete
 18. இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள் சகோதரி

   Delete
 19. இன்றைய அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சீனி வெளிநாட்டில் வசிப்பவர் என்று இன்றுதான் அறிந்து கொ்ண்டேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த நன்றிகள் சகோதரர். தொடரட்டும் நம் நட்பு. நன்றி..

   Delete
 20. தாமதாமாக வந்தமைக்கு மன்னிக்கவும்.
  என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரா.

  அறிமுகபடுத்திய உங்களுக்கும், அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ. எப்ப வந்தால் என்ன! மன்னிப்பு எல்லாம் எதற்கு! தங்கள் தளத்தை அறிமுகம் செய்ததில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி..

   Delete
 21. இந்த தகவலை சொன்ன சகோதரர் ரூபன் மற்றும் இராஜராஜேஸ்வரி அம்மா அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. எனது நன்றிகளும் அவர்களுக்கு..

   Delete
 22. இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறாகத் தாங்கள் தேடி கண்டுபிடித்து எங்களிடம் அறிமுகப்படுத்துவதற்கு பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த நன்றிகள் ஐயா. தொடரட்டும் நம் நட்பு. நன்றி..

   Delete

 23. வணக்கம்!

  கடல்கடந்த கன்னல் தமிழ்காக்கும் என்னுள்
  உடல்கலந்து ஓங்கும் உவப்பு! - சுடராய்
  உயிரொளிா்ந்து சொல்கின்றேன் பாண்டியனே! உன்றன்
  உயவறிந்து போற்றும் உலகு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. கவியால் கருத்துரை தந்து சிறப்பித்தமைக்கு மிகுந்த நன்றிகள் ஐயா. தொடரட்டும் நம் நட்பு. நன்றி..

   Delete
 24. அறிமுகத்துக்கு மிக்க நன்றி நண்பரே....அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  நண்பன் ரூபனுக்கு மிகவும் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த நன்றிகள் ஐயா. தொடரட்டும் நம் நட்பு. நன்றி.. ரூபன் அவர்களுக்கு எனது நன்றிகளும்..

   Delete
 25. கடல் கடந்த குயில்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
  வித்தியாசமான அறிமுகங்கள் தரும் பாண்டியனுக்கும் என் மனார்ந்த வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள் சகோதரி

   Delete
 26. தாயகம் கடந்தும் தமிழில் நீந்தி, மூழ்கி முத்துக்கள் குவித்து, விளையாடும் அனைத்து அறிமுக அன்பர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

  எத்தனை வளைத்தளங்கள்! வாசிக்க!

  மிக்க நன்றி பாண்டியன் தம்பி!

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த நன்றிகள் ஐயா. தொடரட்டும் நம் நட்பு. நன்றி..

   Delete
 27. அனைத்து அறிமுகங்களும் அருமை. வாழ்த்துக்கள். உங்களுக்கும் அவர்களுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. மிகுந்த நன்றிகள் . தொடரட்டும் நம் நட்பு. நன்றி சகோ..

   Delete
 28. வித்தியாசமான தலைப்பில் அறிமுகங்கள் .
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   மிகுந்த நன்றிகள் . தொடரட்டும் நம் நட்பு. நன்றி..

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது