07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 29, 2014

தொடர்கிறது தொடரும் நட்புகள்

வலை உறவுகளுக்கு வணக்கம்!!

அன்பு நண்பர்களுக்கு உலக வலைப்பதிவர் நாள் வாழ்த்துகள் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார் வலையுலக மூத்த பதிவர் ஐயா சென்னைபித்தன் அவர்கள்
பதிவர் நாள் வாழ்த்து!

  உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் என்று அழகிய கருத்தை எடுத்தியம்பும் திருமதி பக்கங்கள் கோமதி அம்மா அவர்களின் பதிவு இறைவன் படைப்பில் அதிசயங்கள்

அன்பான குணம் கொண்டவர், குழந்தைகள் வளர்ப்பு பற்றி அதிகம் பகிர்ந்து கொள்வார். வல்லமை, மின்னூல் என சுறுசுறுப்பாக இருக்கும் ரஞ்சனி நாராயணன் அம்மா அவர்களின் பதிவு உங்களின் பார்வைக்கு எங்க ஊரு… திருக்கண்ணபுரம்

கவிதையில் கெட்டிக்காரர், அன்றாட வாழ்வின் விடயங்களைக் கவியாய் தந்து சிந்தனைகளைக் கிளறி விடுபவர், மனிதநேயம் கொண்ட பண்பாளர் திரு. கவியாழி கண்ணதாசன் அவர்களின் பதிவை அறிமுகம் செய்வதில் பெருமிதம் கொள்கிறேன் உண்மை வாழ்வு...

தென்றல் சசிகலா சகோதரி அவர்களின் கவிதைகள் கிராம மணம் கமழும் வார்த்தைகளெல்லாம் எப்படி பிடிக்கிறார் என்பதே வியப்பாக இருக்கும். ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு பதிவு

பத்திரிக்கைகளில் எழுதி வரும் வேலூர் உஷா அன்பரசு அவர்களின் எழுத்தில் சமுதாய மாற்றத்திற்கான வித்து அடங்கி இருக்கும். திறமைகளைப் பாராட்ட எப்பவும் தயங்க மாட்டார். அவரின் இளகிய குணமும் பாராட்டத்தக்கது திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?

என்னுயிர் ஓசை கேட்க வாருங்கள் என அழைக்கும் அன்பு சகோதரர் சீராளன் அவர்களின் கவிதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். கருத்துரையிலும் கூட கவிதை மழையில் நனைய வைக்கும் ஆற்றல் கொண்டவர் பேசும் நினைவுகள்

சென்னையில் வசிக்கும் ஸ்கூல் பையன் அவர்கள் தனது பயணம் பற்றிய அனுபவத்தைக் குறிப்பிடும் அழகான பதிவு பயணம்!

முத்துச்சிதறல் எனும் வலைப்பக்கம் மூலம் தொடர்ந்து எழுதி வரும் சகோதரி மனோ சாமிநாதன் அவர்களின் படைப்புகளிலிருந்து உங்கள் பார்வைக்காக ஒன்று அன்பிற்கேது எல்லை?

பல மேடைகளை அலங்கரித்து வரும் ஆரணி பேச்சாளர் திருமதி. பவித்ரா நந்தகுமார் அவர்களின் பேச்சுக்களை நீங்களும் காண வேண்டுமா

அன்மையில் வலைப்பக்கம் தொடங்கி எழுதி வரும் குப்பு சுந்தரம் அவர்களின் அவ்வையும் பாரதியும் பதிவு அவ்வையும் பாரதியும்!

எழுதுகிறேன் அதனால் நான் இருக்கிறேன் எனும் எண்ணம் கொண்ட காரிகன் அவர்களின் பதிவு இசை விரும்பிகள் XVII - சுவர்களைத் தாண்டி....

எம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன் எனும் வாசகத்தோடு எழுதி வரும் நண்பர் மகேந்திரன் அவர்களின் பதிவு

என்னை பற்றி சொல்றதுக்கு எதுவும் இல்லையென்றாலும் உலகமே என்னை திரும்பி பாக்குற மாதிரி கனவு காணும் உங்களில் ஒருவன் என கூறும் கத்திவாக்கம் NSK அவர்களின் பதிவு பயண அனுபவம்


23 comments:

 1. உங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறேன். இன்றைய பதிவர்களைப் பார்த்தேன். அறிமுகத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வருகை தந்து ஊக்குவித்தமைக்கு அன்பான நன்றிகள் ஐயா. தொடர்வோம் நன்றி..

   Delete
 2. நல்ல பதிவர்களை எமக்கு அறியவைத்த நண்பருக்கு நன்றிகள் பல...

  ReplyDelete
  Replies
  1. உமக்கும் நன்றிகள் சகோதரரே..

   Delete
 3. அருமையான தொகுப்பு... அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதருக்கு இந்த தம்பியின் அன்பு நன்றிகள்.

   Delete
 4. இன்றைய வலைச்சரத்தில் என் பதிவையும் சேர்த்துக் கொண்டதில் நன்றி பாண்டியன்.
  இன்று இடம் பெற்ற நட்புகளுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. முதலிலேயே அறிமுகம் செய்திருக்க வேண்டும். தாமதத்திற்கு மன்னிக்கவும் அம்மா. தங்கள் பதிவை பகிர்ந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. தொடர்வோம் அம்மா. கருத்துக்கு நன்றிகள்...

   Delete
 5. என் பதிவு வலைச்சரத்தில் வந்து இருப்பதை முதலில் வந்து செய்தி சொல்லி வாழ்த்தும் சொன்ன Dr. திரு. ஜம்புலிங்கம் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முதல் செய்தி சொல்லி வாழ்த்திய ஐயா அவர்களுக்கு எனது நன்றிகளும் உரித்தாகட்டும். நன்றி..

   Delete
 6. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
  இது எனது நன்றியுரை. இந்த இளையவனையும் ஒரு பொருட்டாக எண்ணி அழைத்து வலைச்சர ஆசிரியர் பொறுப்பு கொடுத்த வலைச்சர நிறுவனர் சீனா ஐயா அவர்களுக்கும், வலைச்சர பொறுப்பாசிரியர்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். என் பதிவிற்கு கருத்திட்டு ஊக்கப்படுத்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தஙகளின் உற்சாகமூட்டும் கருத்துரைகள் தொடரட்டும். இங்கே கருத்திட்டு மகிழ்ந்த அனைத்து உள்ளங்களையும் எனது தளத்திற்கு அழைக்கிறேன். புதிய வலைச்சர ஆசிரியருக்கு என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! நன்றி!! நன்றி!!!

  திருமண வேலை காரணமாக சரியாக வலைச்சரத்தோடு இணைய முடியவில்லை. அதற்கு அனைவரும் மன்னிக்க வேண்டும். எல்லா தளங்களையும் அறிமுகப்படுத்தவே ஆசை. காலமின்மை காரணமாகவே மற்றவர்களை அறிமுகம் செய்ய முடியவில்லை. மற்றொரு வாய்ப்பில் இந்த குறை நிவர்த்திச் செய்யப்படும்.

  அன்புடன்
  அ.பாண்டியன்,
  மணப்பாறை,
  வலைப்பக்கம் ; http://pandianpandi.blogspot.com/
  அலைபேசி: 9698621766.

  ReplyDelete
 7. பாண்டியன்,

  என் வலைப் பக்கத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. எழுதுகிறேன் அதானால் நான் இருக்கிறேன் என்ற என் வார்த்தைகளை யாரும் அவ்வளவாக கவனிக்கவில்லையே என்ற எண்ணம் எனக்கிருந்தது.இப்போது இல்லை. அதற்கு உபரியாக இன்னொரு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப மகிழ்ச்சி ஐயா. நான் உங்கள் தளத்திற்கு முதல் முறையாக வரும் போதே கவனித்து விட்டேன். நண்பர்களுடன் பகிர வாய்ப்பு கொடுத்த வலைச்சர நண்பர்களுக்கு நன்றிகள்..

   Delete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. இன்றைய வலைச்சரத்தில் மேலும் அருமையான தளங்களை அறிமுகம் செய்து விடை பெறும் அன்பின் பாண்டியன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் இனிய நன்றிகள். தொடர்வோம்...

   Delete
 10. பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாண்டியரே ! வலைச்சர ஆசிரியர் பதவியை திறம்படவே செய்துள்ளீர்கள். மேலும் சிறப்பாக செய்யும் ஆற்றல் தங்களுக்குண்டு என்று அனைவருக்குமே அறிவர் கல்யாண வேலையிலும் கடமை தவறாது ஆற்றிய தொண்டு மிகவும் சிறப்பே...! நன்றி பாண்டியா! திருமண வாழ்த்துக்கள்.....!.
  இருமனங்கள் ஒரு சேர
  இன்பங்கள் பல சூழ
  நன்மக்கள் நலம் பாட
  நாடெல்லாம் புகழ் பாட வாழ்க பல்லாண்டு.....!

  ReplyDelete
 11. மிகச் சிறந்த அறிமுகங்கள்

  ReplyDelete
 12. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. அன்புள்ள பாண்டியன்,
  டாக்டர் திரு ஜம்புலிங்கம் அவர்கள் என் வலைத்தளத்தில் 'பாண்டியன்' மூலம் என் வலைத்தளத்திற்கு வந்ததாக எழுதியிருந்தார். 'கடைசி பெஞ்ச்' என்ற பெயரில் எழுதுபவர் என்று நினைத்தேன்.
  இன்றுதான் இங்கு வந்து பார்த்து உங்களால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்.
  சில காரணங்களால் இணைய உலகத்தில் வலம் வர முடியவில்லை.
  அறிமுகத்திற்கு நன்றி! திருமண வாழ்த்துகளுடன் உங்கள் எழுத்துலகப் பயணத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete

 14. வணக்கம் பாண்டியன் !

  என்வலையும் இங்கே எழில்பூக்க வைத்ததற்கு
  நன்றிபல சொன்னேன் நயந்து .!

  இனிய திருமண வாழ்த்துக்கள் பாண்டியன் !

  வல்லோர்கள் வாழ்த்தில் வளம்பெறட்டும் ஈருள்ள
  இல்லினிமை என்றும் இனித்து !


  நெஞ்சார வாழ்த்துகிறேன்
  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 15. இன்றுதான் அறிமுகம் கண்டேன்;மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன்.என்னையும் அறிமுகப் படுத்திப் பெருமைப் படுத்தி விட்டீர்கள்.நன்றி,நன்றி,நன்றி

  ReplyDelete
 16. கருத்தெல்லாம் அப்புர்ம் பார்ப்போம். எனக்கு ஏ.................பத்திரிக்கை வக்கெல..............................

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது